ஈரோட்டில் மாட்டிறைச்சி உணவுடன் கழகக் கூட்டம்

பா.ஜ.க. மோடி பாசிச அரசின், மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை செய்த சட்டத்தைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக கண்டனக் கூட்டம் 28 .05.2017 அன்று, ஈரோடு சேனாதிபதி பாளையத்தில் மாலை 6 மணியளவில் நடந்தது. ரங்கம்பாளையம் கிருஷ்ணன் தலைமையேற்க, கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிவா சடையன் (திருச்செங்கோடு) செல்லப்பன் (மாவட்டத் தலைவர் ஈரோடு தெற்கு) சாமிநாதன் (நாமக்கல் மாவட்டத் தலைவர்) சரவணன் (நாமக்கல் மாவட்டச் செயலாளர்)  வெங்கட்,  ப.இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்) ஆகியோர் கண்டன உரையாற்ற வீரா கார்த்திக் (அறிவியல் மன்றம்) நிறைவுரையாற்ற, கமலக்கண்ணன் நன்றியுரையுடன் முடிந்தது. பங்கு பெற்றோர் சித்தோடு பிரபு , பிரபாகரன், யாழ் எழிலன், சென்னிமலை இசைக்கதிர்,  இனியன், பாரதி, சத்தியராஜ், திருமுருகன், மணிமேகலை, புனிதா, பேபி, மோகன் (புலி) பாண்டியன் (சுயமரியாதை சமத்துவக் கழகம்) இளங்கோ, தமிழ்செல்வன், மாதேஷ், கவிப்பிரியா, சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 08062017 இதழ்

You may also like...