பெண்களே சடலத்தை சுமந்தனர்: கழகத் தோழர் செந்தில் தந்தை இராமலிங்கம் முடிவெய்தினார்

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயல்வீரர் செந்தில் (எப்.டி.எல்.) அவர்களின்  தந்தை இரா. இராமலிங்கம் (73) கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மே 5ஆம் தேதி காலை முடிவெய்தினார். முடிவெய்திய இரா. இராமலிங்கம், தீவிரமான தி.மு.க. தொண்டர். அவரது விருப்பப்படி தி.மு.க. கொடி போர்த்தப்பட்டு எவ்வித மூடச் சடங்குகளுமின்றி இறுதி நிகழ்ச்சிகள் நடந்தன. சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து மின்சார இடுகாடு வரை, பெண்களே உடலை சுமந்து வந்தனர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் ஏராளமாக திரண்டு வந்து இறுதி வணக்கம் செலுத்தியதோடு இறுதி நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தனர்.

பெரியார் முழக்கம் 11052017 இதழ்

You may also like...