திராவிடர் விடுதலைக் கழக கிளைக் கழக துவக்க விழா

நாமக்கல் மாவட்டம்,  திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கருவேப்பம்பட்டி, குதிரைப்பள்ளம் பகுதியில் 07.05.2017 ஞாயிற்றுக் கிழமையன்று  மாலை5.00 மணிக்கு கிளைக்கழக துவக்கவிழா நிகழ்வும் பெரியாரின் கொள்கை விளக்க தெருமுனைப் பிரச்சாரமும் நடைபெற்றது. நிகழ்வின் முன்னதாக அப்பகுதியில் கழகத்தின் கொடியை தலைமைக் கழகப் பேச்சாளர் தோழர் கா.சு வேலுச்சாமி ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து பெரியாரின் கொள்கை விளக்க தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் காவை இளவரசனின் “மந்திரமா தந்திரமா” அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தலைமைக் கழகப்  பேச்சாளர்  கா.சு.வேலுச்சாமி, பெரியாரின் கொள்கைகளை விளக்கி சிறப்பான உரை நிகழ்த்தினார். இந்நிகழ்விற்கு கழகத்தோழர் மணி தலைமை தாங்கினார், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல், மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வை அப்பகுதியைச் சார்ந்த தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கொங்கு அமைப்புகளின் ஜாதி ஆதிக்கம் நிறைந்த இப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்நிகழ்வை அப் பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பெரியாரின் கருத்துக்களை கேட்டனர்.

img-20170508-wa0037

You may also like...