Author: admin

தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி 21032018

தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி 21032018

தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி. (21.03.2018) தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் ! நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் மதியம் 12.30 மணிக்கு தொடங்கி சந்தோஸ் குமார்.மடத்துக்குளம் மோகன். கரைக்குடி முத்து உரைக்கு பின் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி அவர்கள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும். ஹைட்ரோகார்ப்பன். மீதேன். TNPSC தேர்வு நிலைபாடுகள் போன்றனவகளை விரிவாக உரையாற்றினர் இறுதியாக மாவட்ட செயலாளர் பரமசிவம் நன்றியுரையுடன் முடிந்து. அடுத்து 3.30 மணிக்கு தருமபுரி பூங்கா அருகில் உள்ள பிரபாகரன் சர் கிள் பகுதியில் மாவட்ட தலைவர் வேணுகோபல் தலைமையில் தொடங்கி திமுக தோழர் பச்சியப்பன்.ஆரூர் பகுதி தி வி க தோழர் பெருமாள் அவர்கள் இன்றைய இளைஞர்களின் கல்வி வேலைவாய்ப்பு எவ்வாறு எல்லாம் பதிக்கப்பட்டு உள்ளது TNPSC தேர்வில் வெளி மாநிலத்தவர்களை ‘ தவிர்க கோரியும் விரிவாக உரையாற்றிய...

“ஆசிஃபாவும் தேசத்துரோகியா?” கண்டன ஆர்ப்பாட்டம் ! சென்னை 20042018

“ஆசிஃபாவும் தேசத்துரோகியா?” கண்டன ஆர்ப்பாட்டம் ! சென்னை 20042018

“ஆசிஃபாவும் தேசத்துரோகியா?” பச்சிளங் குழந்தைகளையும் சீரழிக்கும் மதவெறியைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ! கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில்….. 20.04.2018 மாலை 3 மணிக்கு ஆட்சியாளர் அலுவலகம் அருகில், சென்னை கண்டன உரை : #தெகலான்_பாகவி SDPI #குணங்குடி_அனிஃபா மனிதநேய மக்கள் கட்சி #திருமுருகன்_காந்தி மே 17 இயக்கம் #செந்தில் சேவ் தமிழ் #டைசன் தமிழர் விடியல் கட்சி திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

எச் சிலையை  நீ உடைத்தாய் தெரியுமா? –  -நா.முத்துநிலவன்

எச் சிலையை நீ உடைத்தாய் தெரியுமா? – -நா.முத்துநிலவன்

தலையை எடுத்த தறுதலையே! தாழ்ந்து கிடந்த தலைமுறை தலையெ டுக்கச் செய்தவரின் தலையை எடுப்ப தாரடா?! சிலையை உடைத்து போட்டுவிட்டால் சிந்தை உடைந்து போகுமோ?! அலையை உடைக்கப் பார்க்கிறாய் அறிவில் லாத மூடனே! எச்சிலையே! எச் சிலையை நீஉடைத்தாய் தெரியுமா? இச்சகத்துள் ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்ச மில்லை என்றெதிர்த்த அவரை உடைக்க முடியுமா? எச்சில் துப்பும் நாய்களால் இமயச் சிகரம் சரியுமா? எந்தத் தலையை நீஉடைத்தாய் எண்ணிப் பார்க்கத் தெரியுமா? அந்தத் தலையின் சிந்தனையின் ஆழம் உனக்குப் புரியுமா? நொந்து கிடந்த மக்களுக்கு சொந்த வரலாற்றினை முந்தித் தந்து மான உணர்வை மூட்டிச் சென்ற நெருப்படா! உரிமை உடமை பொதுமையாக உழைத்த பெரியார் அவர்! வறுமை யாக அடிமையாக வருணமாகி வீழ்ந்தவரை உரிமைப் போரில் வந்து சேர உணர வைத்த பெருமைக்கு உரியார், அவர் தான்பெரியார்! உணர் வறியா மூடனே! மாறி மாறி வேட மிட்டும் மறத்தமிழர் நாட்டினை...

வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

கவிஞர் வைரமுத்து “Indian Movement some aspects of dissent, protest & reform” என்ற அரிய ஆய்வு நூலில் இருந்து, ஆண்டாள் பற்றி கூறிய கருத்துகளை வைத்து, அவருக்கு எதிராக பல அருவருக்கத்தக்க செயல்களை சங் பரிவார் அமைப்புகள் செய்தன. தமிழ்நாட்டின் கருத்துரிமை மரபுக்கு சவால் விடும் விதமாக எச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசினார். இதற்கு எதிர்வினையாக, சென்னை மாவட்ட திவிக, ஆண்டாளை பற்றிய கருத்தரங்கத்தை நடத்தியது. இக்கருத்தரங்கத்தில், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் சென்னை மாவட்ட செயலாளரும், சீரிய சிந்தனையாளருமான தோழர் வாலாஜா வல்லவன், ஆண்டாளை குறித்து பேசினர். அவர் பேசியவை கட்டுரையாக “நிமிர்வோம்” இதழில் வெளியிடப்பட்டுள்ளது. தேவரடியார் மரபு எப்போது உருவானது? அதில் சோழர் ஆட்சியின் பங்கு என்ன? உடன்கட்டை ஏறுதல் தமிழ்நாட்டில் இருந்ததா? நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் என்ன சொல்லியிருக்கிறார்? ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பல அரிய வரலாற்று கருத்துகள் கட்டுரையில்...

இந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள் – ச.சிவலிங்கம்

இந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள் – ச.சிவலிங்கம்

  கர்நாடக அரசு லிங்காயத்து சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அவர்கள் இந்துக்கள் அல்ல என்று அரசாணை வெளியிட்டு இருக்கிறது. லிங்காயத்து சமூகத்தின் வரலாற்றுப் பின்னணியை விளக்குகிறது இக்கட்டுரை. கர்நாடகத்தில் லிங்காயத்தைத் தனிமதமாக அறிவிக்கக் கோரும் போராட்டங்களும் கன்னடக் கொடிக்கான போராட்டங்களும் விவாத மையங் களானதோடு 2018 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் காரணிகளாகவும் உருவெடுத்திருக்கின்றன. அடுத்தடுத்த தேர்தல் வெற்றிகளினூடே கர்நாடகத்தையும் கைப்பற்றி விடலாம் என்ற பாஜகவின் கணக்குக்குப் பெரும் தடைகளாக இப்போது உருவெடுத்திருக்கின்றன இந்த இரு பிரச்சினைகளும். குறிப்பாக ‘லிங்காயத் தனி மதம்’ எனும் விவகாரம் இந்துத்துவ அரசியல் கணக்குகளுக்கும் நீண்ட காலச் சவாலாக மாறியிருக்கிறது. கி.பி. 12-ம் நூற்றாண்டில் வட கர்நாடகத்தில் உருவான வசனக்காரர்களின் இயக்கம் (பக்தி இயக்கம்) சமூகப் பண்பாட்டுத் தளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அனைத்து அதிகாரங்களும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டம் அது. வசனக்காரர்களின் இயக்கம் அதைக் கேள்விக்கு உட்படுத்தியதோடு மட்டும் நில்லாமல்,...

மத்திய ஆட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். குழுக்கள்

மத்திய ஆட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். குழுக்கள்

மோடி ஆட்சியின் அனைத்து  செயல் பாடுகளையும் கண்காணித்து வழி நடத்து வதற்கு ஆர்.எஸ்.எஸ். தனித்தனியான குழுக்களை அமைத்துள்ளது. சிக்சா ஸான்ஸ்கிருதி உதன் நியாஸ் (ssun) கல்வி மற்றும் கலாச்சார முன்னேற்றத் திற்கான அறக்கட்டளை – ஆர்.எஸ்.எஸ். இன் கிளை அமைப்பு. இந்தியா வின் தற்போதைய கல்விக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் 2007ஆம் ஆண்டு முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியரான தயானந்த் பத்ரா என்பவரால் நிறுவப்பட்டது. பாடத் திட்டங்கள், கல்விக் கொள்கைகள் மற்றும் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனை காவி மயமாக்குவதே இதன் வேலை. இதன் உறுப்பினர்கள் குழு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து புதிய கல்விக் கொள்கையில் இந்து தேசியத்தை புகுத்துவது தொடர்பான கருத்துகளை முன் வைத்தது. இவர்கள் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று பிழைகளையும் சுட்டிக் காட்டி யுள்ளார்களாம். அதனை புதிய...

அம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்

அம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்

காவிப் பிடியில் அதிகார மய்யங்கள் தமிழ்நாட்டில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் தம்ம சூரிய நாராயண சாஸ்திரி என்ற பார்ப்பனரை பூனேயிலிருந்து இறக்குமதி செய்துள்ளனர். துணைவேந்தர் தேர்வுக் குழு பட்டியலிலே இடம் பெறாத ஒருவர் முறைகேடாக ஆளுநரால் நியமிக் கப்பட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பிடிக்குள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளில் 20 சதவீதம்கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் 80 சதவீதம் ‘வாய் வீச்சு’களாகவே இருக்கிறது என்றும் ஆட்சியை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைமை அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதாக ‘பிரண்ட் லைன்’ ஏடு எழுதியிருக்கிறது. ‘தாராள மயம்’ என்ற கொள்கையில் காங்கிரஸ் ஆட்சிக்கும் மோடி ஆட்சிக்கும் வேறுபாடு இல்லை என்றாலும் பன்னாட்டுச் சுரண்டலுக்கு கதவு திறக்கும் இந்த கொள்கைகளில் இரு கட்சிகளுக்குள்ளும் வேறுபாடு இருப்பதாக கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. இதே மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றிய...

சமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி

சமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி

அண்மையில் முடிவெய்திய உச்சநீதிமன்ற நீதிபதி இரத்தினவேல் பாண்டியன், திராவிட இயக்க அடையாளத்தில் உயர்ந்து, சமூகநீதிக்கான வரலாற்றுச் சிறப்பு கொண்ட தீர்ப்புகளை வழங்கியவர். சமூகநீதி வரலாற்றில் எத்தனையோ நீதிபதிகளின் பங்களிப்பு இருந்திருக்கிறது ஆனால் இரண்டு தமிழ் நீதிபதிகளுடைய பங்களிப்பை அத்தனை எளிதில் தவிர்த்துவிட இயலாது. நீதிக்கட்சி காலம் தொட்டு நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டு அரசாணையை  (கம்யூனல் ஜீ.ஓ ) எதிர்த்து செண்பகம் துரைராஜன் மற்றும் சீனிவாசன் என்ற இருவர் தனித்தனியே தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது ( இந்த வழக்கில் தான் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த அல்லாடி கிருஷ்ணசாமி, சீனிவாசனுக்கு ஆதரவாக ஆஜரானார், நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்த பெரியார் பெரும் கிளர்ச்சி நடத்தி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டதிருத்தத்தை மேற்கொள்ள வைத்தார்) செண்பகம் துரைராஜன் வழக்கில் ஐந்து நீதிபதிகளை கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இடஒதுக்கீட்டு அரசாணை செல்லாது என்று தீர்ப்பளித்தது.....

உயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்?

உயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்?

2011 மே மாதம் 4-ஆம் தேதி, ஐஐடி சென்னையில் எம்டெக் மாணவன் நிதின் குமார் ரெட்டி விடுதியில் தற்கொலை செய்து கொண்டதும், அதன்பின் இது குறித்து நடந்த போராட்டங்களும், விவாதங்களும் அனைத்து முதலாளித்துவ ஊடகங்களாலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இரண்டாமாண்டின் இறுதியில் முடிக்கப்படவேண்டிய பிராஜெக்ட்டை அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலே. 2008-ல் சிஃபி வெளியிட்ட செய்தியில் 2005-2008 ஆம் ஆண்டிற்குள் ‘கல்விசார் நிர்பந்தத்தால்’ ஐஐடி கான்பூரில் மட்டுமே ஏழு தற்கொலைகள் நடந்ததாகக் கூறுகிறது.  2008-ல்  நடந்த ரித்திகா தோய சாட்டர்ஜி என்ற எம்டெக் மாணவியின் தற்கொலை யின் போதே ஐஐடி நிர்வாகத்தின் ரகசியத் தன்மை வாய்ந்த மாணவர் தர மதிப்பீட்டு முறை (Grading system) மற்றும் மாணவர் குறை தீர்க்கும் அமைப்பின் (grievance forum) கேவலமான நிலை குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது. கல்விசார் நிர்பந்தங்களினால் நடக்கும் தற்கொலைகளுக்கு இணையாக ஐஐடிக் களில் நடக்கும் சாதிய ஒடுக்குமுறையாலும் ஏழை தலித் மாணவர்கள்...

‘இராமன்’நேர்மையின் உருவமா? பெரியார்

‘இராமன்’நேர்மையின் உருவமா? பெரியார்

இராமன் தன்மையைச் சற்று ஆராய்வோம். கைகேயியை மணம் செய்து கொள்ளும்போதே, தசரதன் நாட்டைக் கைகேயிக்கு சுல்கமாகக் கொடுத்து விட்டதும், அதனால் நாடு பரதனுக்குச் சொந்தமாக வேண்டியது என்பதும், இராமனுக்கு நன்றாய்த் தெரியும். நாட்டைக் கைப்பற்றவே இராமன் தகப்பனுக்கும் கைகேயிக்கும் குடிகளுக்கும் நல்லபிள்ளையாக நடந்து வந்திருக்கிறான். பரதன் ஊரில் இல்லாத சமயத்தில், பட்டாபிஷேகம் செய்ய தசரதன் செய்யும் சூழ்ச்சிகளுக்கெல்லாம் சம்மதித்து முடிசூட்டிக் கொள்ள முனைகிறான். இலட்சுமணன் பொறாமைப்பட்டு ஏதாவது கெடுதி செய்துவிடுவானோ என்று கருதி, இலட்சுமணனை ஏய்க்க, இலட்சுமணா, உனக்காகத்தான் நான் முடிசூட்டிக் கொள்ளு கிறேன், நீதான் நாட்டை ஆளப்போகிறாய் என்று தாஜா செய்கிறான். பட்டாபிஷேகம் நடக்குமோ நடக்காதோ என்ற ஒவ்வொரு நேரமும் கவலைப் பட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். நாடு உனக்கு இல்லை. நீ காட்டுக்குப் போகவேண்டும் என்று தசரதன் சொன்னவுடன் மனதுக்குள் துக்கப்படு கிறான். நாட்டை இழந்து, சுகத்தை இழந்து, நல்ல மாமிசப் பட்சணங்களை இழந்து, காட்டிற்குச் சென்று காய்கறிகளைப் புசிக்க...

கார்ப்பரேட் வங்கிக் கொள்ளைகளுக்கு வழியமைப்பது யார்?

கார்ப்பரேட் வங்கிக் கொள்ளைகளுக்கு வழியமைப்பது யார்?

கார்ப்பரேட் ஊழல் – வங்கிகளின் மோசடிக்கு அடிப்படையான காரணம் இந்த மோசடிகளை அரங்கேற்றுவதற்கு தகுந்த கொள்கைகளை பார்ப்பன அதிகார வர்க்கம் உருவாக்கி வைத்திருப்பதுதான். ஊழல் என்பவை தனிநபர்கள் சார்ந்த விசயம் மட்டுமல்ல, அரசின் கொள்கை களிலேயே அதற்கான வித்து ஒளிந்திருக்கிறது. தொலைதொடர்புத் துறையையே உதாரணத் திற்கு எடுத்துக் கொண்டால் இந்தத் துறையில் ‘புரட்சி நடந்திருப்பதாக’ சொல்லப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில், இத்துறையின் பல்வேறு கொள்கைகளை தனியார் லாபத்திற்கு ஏற்ப திருத்தி, புகுத்தியிருப்பதை கண்டுகொள்ள முடியும். யாரோ சில அரசியல்வாதிகளின் எண்ணப் போக்கால் நடைபெற்ற மாற்றங்கள் அல்ல அவை. 1999 வாஜ்பாய் ஆட்சியிலேயே தொலைத் தொடர்புத் துறை கொள்கையில் மாற்றங்கள் புகுத்தப்பட்டன. பிறகு டாட்டா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இந்தத் துறையில் கால்வைத்தன. சர்வதேச அழைப்பு களை இந்தியாவிற்குள்ளேயே செய்யப் பட்டதாக மாற்றி முறைகேடு செய்யப்பட்ட செய்தி 2004 ஆம் ஆண்டு வெளிவந்தது. பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் ரூ.1300 கோடி வரை...

உடல் இயக்கமில்லை; மூளை மட்டும் இயங்கியது! போப்பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி

வாழும் ஐன்ஸ்டைன் எனப் போற்றப்பட்ட ஸ்டீவன் ஹாக்கிங் 76 ஆண்டு வாழ்வை முடித்துக் கொண்டார். 20 வயதிலிருந்து இயற்கையுடன், மருத்துவ அறிவியலுடன் மிக நீண்ட போரை மனத் துணிவுடன் நடத்திவிட்டார். ஆம், அவர் சிறுவனாக இருந்தபோதே அவர் ஷூ லேஸைக் கட்டுவதற்கு மிகவும் கடினப்படுவதைப் பார்த்த அவர் தந்தை, மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். பல மருத்துவச் சிகிச்சைகளுக்குப் பிறகு, அவருக்கு நரம்பியல் இயக்க நோய் பாதிப்பு ஏற்பட் டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, அவர் முழு உடல் இயக்கமுமே செயலற்றுப் போனது. அப்போது ஹாக்கிங் மருத்துவர்களிடம் கேட்கிறார், செயலற்றுப் போனது எனது உடல் இயக்கம் மட்டுந்தானா? மூளை இயக்கமுமா? மூளைக்கு ஒரு சிக்கலும் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். இதைக் கேட்டதும் மகிழ்கிறார் ஹாக்கிங்! என் அறிவுத் தேடலுக்கு உடல் இயக்கம் வேண்டாமே, மூளை இயக்கம் போதுமே. அப்படியானால், நான் எவ்வளவு கொடுத்து வைத்த மனிதன் என மகிழ் கிறார். உடல் இயக்க...

நீட்:தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது  முனைவர் கலையரசன்

நீட்:தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது முனைவர் கலையரசன்

“அனைவரையும் உள்ளடக்கிய சமூகக் கொள்கைகள் தமிழகத்தில் படிப்படியாக உருப்பெற்று வலுப்பெற்றுள்ளன என்பது குறைந்த அளவிலேயே அறியப்பட்டுள்ளது. ஆனால், இதன் முக்கியத்துவம் எந்த அளவிலும் குறைவானதல்ல. இதர பல மாநிலங்களைப் போல அல்லாமல், தமிழ்நாடு உயிரோட்டமுள்ள, திறன்மிகு சுகாதார மையங்களைக் கொண்டிருக்கிறது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இலவசமாக இங்கே சுகாதாரச் சேவைகளைப் பெற முடியும்.” – அமர்த்தியா சென் (An Uncertain Glory: India and its Contradictions நூலிலிருந்து) தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கையில் நடைபெறும் ஊழல்களைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) இந்த நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான அளவுகோலாக நிர்ணயிக்க முயற்சி செய்துவருகிறது. எனினும், கல்வி மற்றும் சமூக நீதிக்குத் தீங்கிழைக்கும் என்பதால், இந்தத் தேர்வு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. நாடு முழுவதற்கும் இது பொருந்தும் என்றாலும் தமிழ்நாட்டுக்கு...

தமிழர் பண்பாட்டில்-வைதீக ஊடுறுவல் வரலாற்று ஆதாரங்களை முன் வைத்து ஒரு விரிவான அலசல் – முரசொலி மாறன்

வைதீகப் பார்ப்பனிய ஊடுறுவலுக்கு முன்பான தமிழ் வாழ்வியலையும் மன்னரின் ஆட்சியில் பார்ப்பனியம் ஊடுறுவித் தன்னை சமூக நிலவுடைமை அதிகாரமாக்கிக் கொண்டதையும் வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறது இந்த சிறப்பான கட்டுரை. ஆரியர் வருகைக்கு முன்னர் தமிழ்நாட்டில் சாதி முறை கிடையாது – என்பதில் இரு கருத்துகள் கிடையாது. வர்ணாஸ்ரம தர்மப்படி வட இந்தியாவில் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் – என்று நான்கு வர்ணங்களாக மக்கள் பிரிக்கப்பட்டிருந்தனர். இதுதான் வர்ணாஸ்ரம தர்மம் – அல்லது சதுர் வர்ணம் – என்று குறிப்பிடப்படுவதாகும்! சமுதாய வட்டத்திற்கு வெளியே தீண்டத்தகாதார் வைக்கப்பட்டிருந்தனர். பிராமணர்கள் பிர்மாவின் நெற்றியிலிருந்தும், க்ஷத்திரியர்கள் புஜங்களிலிருந்தும், வைசியர்கள் தொடையிலிருந்தும், சூத்திரர்கள் பாதங்களிலிருந்தும் பிறந்ததாகக் கூறுகிறது மனு ஸ்மிருதி. சூத்திரர்கள் என்போர் யார்? “சண்டையில் வென்று சிறையாகப் பிடித்துக் கொணரப்பட்டவன், அன்புடன் ஊழியஞ் செய்பவன், தன் வேசி மகன், விலைக்குக் கொள்ளப்பட்டவன், ஒருவனாற் கெடுக்கப்பட்டவன், குல வழியே தொன்றுதொட்டு ஊழியஞ் செய்பவன், குற்றத்திற்காக வேலை...

தென் மாநிலங்களில் கூட்டாட்சியை நோக்கி…

‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்று தமிழ்நாட்டில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் வீதிதோறும் ஒலித்த உரிமை முழக்கம். இப்போது களத்தில் மக்களின் குரலாக தென் மாநில ஆட்சிகளின் பிரகடனமாகும் வரலாற்றுப் போக்கு உருவாகியிருக்கிறது. இந்தியத் துணைகண்டத்தில் அடைப்பட்டுக் கிடக்கும் தேசிய இனங்களின் தனித்தன்மைகளை அழித்து உருவாகும் ஒற்றை இந்திய அமைப்புதான் பார்ப்பனிய இந்துத்துவ கலாச்சாரத் திணிப்பை செயல்படுத்துவதற்கான தளம் என்ற பா.ஜ.க. சங்பரிவாரங்களின் இலக்கும் – ஒரே உரிமம், ஒரே அனுமதியுடன் பரந்த சந்தையை பெறும் வாய்ப்புள்ள ஒற்றை இந்தியாவே பன்னாட்டு பெரும் முதலாளிகளின் பெரு விருப்பம் என்ற இலாபவேட்டை இலக்கும் இணைந்து நிற்கும் சூழலில் தென்மாநிலங்களின் உரிமைக் குரல் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,14ஆவது நிதி ஆணையம், தென் மாநில வளர்ச்சிகளை முடக்கும் நிதி ஒதுக்கீடு கொள்கைகளை சுட்டிக்காட்டி முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். ஆந்திர முதல்வரும் தெலுங்கானா முதல்வரும் நடுவண் அரசின் புறக்கணிப்பைக்...

“கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” – பரப்புரைப் பயணம்.

“கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” – பரப்புரைப் பயணம்.

“கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” – பரப்புரைப் பயணம். ‘தூத்துக்குடியிலிருந்து கீழப்பாவூர் வரை’ தூத்துக்குடி- திருநெல்வேலி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” எனும் தலைப்பில் தமிழக மாணவர்களின் உரிமை மீட்பு பரப்புரை பயணம் மாநில பரப்புரை செயலாளர் தோழர்.பால்.பிரபாகரன் அவர்களின் தலைமையில் தூத்துக்குடியிலிருந்து கீழப்பாவூர் வரை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல்14,15 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறது.… See more

இராசிபுரத்தில்  “ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம் ” கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு.

இராசிபுரத்தில் “ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம் ” கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு.

இராசிபுரத்தில் “ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம் ” கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு. இராசிபுரத்தில் திராவிடர்விடுதலைக்கழகத்தின் சார்பில் ஞாயிறு 08.04.18 அன்று”ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. தோழர் வசந்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தோழர் சுமதி மதிவதனி அவர்கள்கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக திமுகவின் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தோழர் வி.பாலு அவர்கள் கலந்து கொண்டார். கருத்துரையாக திரைப்பட துணை இயக்குநர் தோழர் கலைமதி, தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தோழர் வீரா.கார்த்திக், திவிகவின் தலைமைக் கழக பேச்சாளர் தோழர் கோபி.வேலுச்சாமி ஆகியோர் பேசினர். தோழர் ஈரோடு மணிமேகலை அவர்கள் நன்றியுரையாற்றினார்.ஏராளமான கழகத்தோழர்கள் ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

“தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாட்டிற்கான ஆரம்ப பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்.

“தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாட்டிற்கான ஆரம்ப பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்.

“தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாட்டிற்கான ஆரம்ப பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம். 30.04.2018 அன்று “தோழர்.பத்ரி நாராயணன்” அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாளில் இராயப்பேட்டை வி.எம்.தெருவில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கான சுவர் விளம்பர பணியில் கழகத்தோழர்கள். நிலம் பாழ்,நீர் மறுப்பு,நீட் திணிப்பு இவற்றிற்க்கெதிராக “தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாடு நடைபெறவுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

சென்னையில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

சென்னையில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

சென்னையில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக… டாக்டர்.அம்பேத்கர் பிறந்த நாளான 14.04.2018 அன்று காலை 8 மணிக்கு சேத்துபட்டு பகுதியில் அமைந்துள்ள டாக்டர்.அம்பேத்கர் உருவச்சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து திருவான்மீயூர், பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு, அம்பேத்கர் மணிமண்டபம், மயிலாப்பூர், இராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள டாக்டர்.அம்பேத்கர் திருஉருவச்சிலை, படங்களுக்கு மாலை அணிவித்து, முழக்கங்களோடு மரியாதை செலுத்தப்பட்டது. கழகத் தோழர்கள் பலரும் வந்திருந்து மரியாதை செலுத்தினர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

சேலத்தில்  புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

சேலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

சேலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விழுப்புரத்தில்  புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

விழுப்புரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

விழுப்புரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகம் விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காஞ்சிபுரத்தில்  புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

காஞ்சிபுரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

காஞ்சிபுரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மதுரையில்  புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

மதுரையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

மதுரையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகம் மதுரை மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மாமேதை அம்பேத்கர் பிறந்த நாளில் சாதி ஒழிப்பு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைப்புகள் தமிழ்த்தேச_மக்கள்_முன்னணி திவிக தபெதிக நாணல்_நண்பர்கள் குறிஞ்சியர்_விடுதலை_இயக்கம் இளந்தமிழகம்

கோவையில்  புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

கோவையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

கோவையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகம் கோவை மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

திருச்செங்கோட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

திருச்செங்கோட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

திருச்செங்கோட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. கழகத்தோழர்களால் கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாள் விழா 14.04.2018 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அருகே நடைபெற்றது. கழக பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கவிஞர் தோழர் கனல் மதி அவர்களின் வாசிப்பில் கழகத்தின் ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ ஏற்பு கழகத் தோழர்கள் ஏற்க்கப்பட்டது. இந்நிகழ்வின் இடையே பெரியார் பிஞ்சுகள் யாழினி, முத்தமிழ் ஆகியோரின் பிறந்த நாள் அவ்விடத்திலேயே கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு,மாநில அறிவியல் மன்ற தலைவர் தோழர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா,மாநகர பொறுப்பாளர் மாதவன், மாணவர்...

காரைக்காலில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! 17042018

காரைக்காலில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! 17042018

காரைக்காலில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி சார்பில்…… கழகத்தலைவர் கலந்து கொண்டு கருத்துரையாற்றுகிறார். தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். நாள் : 17.04.2018 செவ்வாய்க்கிழமை. நேரம் : மாலை 4.00 மணி இடம் : இரயிலடி,புதிய பேருந்து நிலையம் அருகில், காரைக்கால்.

திருப்பூரில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! 22042018

திருப்பூரில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! 22042018

திருப்பூரில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். நாள் : 22.04.2018 ஞாயிறு நேரம் : மாலை 5.00 மணி இடம் : ரங்கநாதபுரம்,ஜீவா நகர்,திருப்பூர். தலைமைக்கழக பேச்சாளர் ‘கோபி வேலுச்சாமி’ அவர்களும் சிறப்புரையாற்றுகிறார். ”காவை இளவரசன்”அவர்களின் ‘மந்திரமா?தந்திரமா?’அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.

கழகக் கொடி தேவைப்படுவோருக்கு

கழகக் கொடி தேவைப்படுவோருக்கு

திராவிடர் விடுதலைக் கழகக் கொடி தேவைப்படும் தோழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 7299230363 – கொடி அளவு : 3 ஒ 2    விலை: ரூ.80/= (ரூபாய் எண்பது மட்டும்) பெரியார் முழக்கம் 19042018 இதழ்

கடலூரில் கழகக் கலந்துரையாடல்

கடலூரில் கழகக் கலந்துரையாடல்

15.04.2018 அன்று கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பாக  கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகில் பேரளையூர் கிராமத்தில் ஆசிரியர் அறிவழகனின் மிகச் சிறப்பான ஒருங்கிணைப்பில் கடலூர் மாவட்ட செயலாளர் நட.பாரதிதாசன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர்  பூ.ஆ.இளையராசன் சிதம்பரம் நகர செயலாளர், மதன்குமார்  ஆகியோர் கலந்து கொண்டு அமைப்பு குறித்தும், பெரியார் அம்பேத்கர் குறித்தும் சிறப்பான கருத்துக்களை முன் வைத்தனர். நேமம், வண்ணான்குடிகாடு, கருவேப்பிலங்குறிச்சி, பேரளையூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 20 புதிய தோழர்கள் அமைப்பில் இணைந்தனர். மாவட்ட, ஒன்றிய கிளைக் கழக, மாணவர் கழகப் பொறுப்புகள் நியமனம் பற்றியும், கழகத் தலைவரை அழைத்து பொதுக் கூட்டம் நடத்துவது பற்றியும், புரட்சிப் பெரியார் முழக்கம் மற்றும் நிமிர்வோம் சந்தா சேர்ப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.  முத்து நன்றியுரை கூறிய பின் கூட்டம் முடிவு பெற்றது. பெரியார் முழக்கம் 19042018 இதழ்

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

திருப்பூர் : மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாள் விழா 14.04.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அருகே நடைபெற்றது. கழக பொருளாளர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில் புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கவிஞர் கனல் மதி வாசிப்பில் கழகத் தின் ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ ஏற்பு கழகத் தோழர்களால் ஏற்கப்பட்டது. நிகழ்வின் இடையே பெரியார் பிஞ்சுகள் யாழினி, முத்தமிழ் ஆகி யோரின் பிறந்த நாள் அவ்விடத் திலேயே கேக் வெட்டி கொண்டாடப் பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு, மாநில அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர பொறுப்பாளர் மாதவன், மாணவர் கழக தேன்மொழி, இணைய தள...

பட்டியல் இன மக்களின் பாதுகாப்புச் சட்டத்தை சிதைத்த உச்சநீதிமன்றம்

பட்டியல் இன மக்களின் பாதுகாப்புச் சட்டத்தை சிதைத்த உச்சநீதிமன்றம்

வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ததும் இதே அமர்வுதான்! பட்டியலினப் பாதுகாப்புச் சட்டத்தைத் தளர்வுறச் செய்த உச்சநீதிமன்றத்தைக் கண்டித்து ஏப்.12, 2018இல் சென்னையில் மருத்துவர் எழிலன் தலைமையில் இளைஞர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆர்ப்பாட்டத்தில் நிகழ்த்திய உரை: பட்டியல் இன மக்களுக்கும் பழங்குடி யினருக்கும் ஒரே பாதுகாப்புக் கவசமாக இருந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிட்டது உச்சநீதிமன்றம். சட்டம் முறை கேடாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற காரணத்தைக் கூறி சட்டம் தந்த பாதுகாப்புப் பிரிவுகளை தகர்த்து, உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வே சட்டத்தை மாற்றி எழுதிவிட்டது. மக்கள் பிரதிநிதிகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை இரண்டு பார்ப்பன நீதிபதிகள் தங்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப மாற்றி எழுதிக் கொள்ள முடிகிறது. கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு துரோகத்தை...

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நிலமோசடி : ரூ. 300 கோடியை சுருட்டிய ‘ஆன்மிகவாதி’  ராம்தேவ்!

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நிலமோசடி : ரூ. 300 கோடியை சுருட்டிய ‘ஆன்மிகவாதி’ ராம்தேவ்!

சாமியார் ராம்தேவ், ‘பதஞ்சலி’ என்ற தனது நிறு வனத்தின் மூலம் தரமற்ற பொருட்களை வியாபாரம் செய்து, நாட்டின் முக்கியமான பெருங் கோடீஸ்வரர்களில் ஒருவராக மாறியிருக்கிறார். குறிப்பாக, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, அவரது ‘பதஞ்சலி’ நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற் றுள்ளது. கடந்த 2016-17ஆம் ஆண்டில் மட்டும் ‘பதஞ்சலி’ பொருட்கள் மூலம் சாமியார் ராம்தேவ் ரூ. 9 ஆயிரம் கோடியை வாரிக் குவித்துள்ளார். இந்நிலை யில், நிலமோசடி மூலம் ரூ. 300 கோடி அளவிற்கு, மக்கள் பணத்தை, ராம்தேவ் விழுங்கி யிருப்பது தெரிய வந்துள்ளது. 2013இல் பாஜக ஆட்சிக்கு வரும் முன்புவரை, ஒரு ஆண்டு முழு வதுமே 1000 கோடிக்குத்தான் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் வர்த்தகம் செய்து வந்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் மட்டும் 950 கோடி ரூபாய் அளவிற்கு அந்த நிறுவனம் இலாபம் கண்டது. மொத்தமாக அந்த வருட இறுதியில் 2 ஆயிரத்து...

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தளர்த்தாதே! கோவையில் சாலை மறியல்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தளர்த்தாதே! கோவையில் சாலை மறியல்

எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெறக்கோரி கோவை சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்றது. 10.04.2018 அன்று  நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச்செயலாளர் சிவஞானம் தலைமை வகித்தார். திராவிடர் விடுதலைக் கழக மாநகரத் தலைவர் நேருதாஸ், தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஆறுச்சாமி, ஆதித்தமிழர் கட்சி மாநிலத் தலைவர் வெண்மணி, ஆதித் தமிழர் பேரவை மாநில பொதுச் செயலாளர் நாகராஜ், தமிழ்ப் புலிகள் கட்சிப் பொதுச் செயலாளர் இளவேனில், சமூக நீதிக்கட்சி மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம் உள்பட 90-க்கும் மேற்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை குண்டு கட்டாகத் தூக்கி கைது செய்தனர். பெரியார்...

அய்.பி.எல். போட்டிக்கு எதிராகக் கழகம் மறியல்

அய்.பி.எல். போட்டிக்கு எதிராகக் கழகம் மறியல்

சென்னை சேப்பாக்கம் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என வலியுறுத்தி 10.04.2018 அன்று மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் சாலை மறியலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டத் தோழர்கள் ஈடுபட்டனர். பெரியார் முழக்கம் 19042018 இதழ்

நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டம்

நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டம்

தமிழர்  வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பாக   10.4.2018  அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத  மத்திய அரசைக் கண்டித்து  நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், மே-17 இயக்கம், காஞ்சி மக்கள் மன்றம், மக்கள் அதிகாரம், த.மு.மு.க, தமிழ்தேசியப் பேரியக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, விவசாய சங்கங்கள் உள்ளிட்ட  கட்சிகள் மற்றும் இயக்கங்களின் சார்பாக 50ஆயிரத்திற்கும் மேலான வர்கள் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழகம்  சார்பாக புதுச் சேரியில் இருந்து லோகு. அய்யப்பன் தலைமையில் 100-க்கும் மேலான தோழர்களும், பெரியார் சிந்தனை மய்யம் சார்பில் தீனாவும் தோழர்களும் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தோழர்கள் ந.வெற்றிவேல், க.இராமர், க.மதியழகன் உட்பட 30-க்கும் மேலான தோழர்களும் ஆத்தூரி லிருந்து  மகேந்திரன், இராமு  உட்பட பல்வேறு பகுதிகளில்  இருந்தும் 300-க்கும்...

‘வன்புணர்ச்சி’ குற்றவாளிகளான பார்ப்பனர்களின் மிரட்டலுக்கு பணியாது உறுதியுடன் செயல்பட்ட காவல்துறை பெண் அதிகாரி

‘வன்புணர்ச்சி’ குற்றவாளிகளான பார்ப்பனர்களின் மிரட்டலுக்கு பணியாது உறுதியுடன் செயல்பட்ட காவல்துறை பெண் அதிகாரி

ஆசிஃபா வன்புணர்வு கொலை வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் ஒரே பெண் அதிகாரியான திருமதி. ஷ்வேதாம்பரி ஷர்மா  பேட்டியின் ஒரு பகுதி. “குற்றவாளிகளில் பெரும்பாலோர் ‘பிராமணர்’களாக இருக்கிறார்கள். நாமெல்லாம் ஒரே ஜாதியைச் சார்ந்தவர்கள், ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள்… ஒரு முஸ்லிம் பெண்ணின் வன்புணர்வுக் கொலையில் நமது ‘பிராமணர்’களை குற்றவாளிகளாகக் காட்டக் கூடாதென பல வழிகளில் எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள்.  ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில் நான் அவர்களிடம் சொன்னேன்…  “எனக்கு மதமில்லை, என்னுடைய ஒரே மதம் எனது போலீஸ் யூனிபார்ம் தான்” என்று.  அவர்களது எல்லா தந்திரங்களும் எங்களிடம்  எடுபடாததால், அவர்களது குடும்பத்தார்களும், ஆதரவாளர்களும் மிரட்டவும் அச்சுறுத்தவும் செய்தார்கள்.  கம்புகளை எடுத்து வந்தார்கள். பயங்கரமாக கோஷமிட்டார்கள். மூவர்ணக் கொடியோடு ஊர்வலங்கள் நடத்தினார்கள்.  பல கிராமங்களுக்கான சாலைகளை அடைத்தார்கள்.  கடைசியில் நீதிமன்றத்தையும் மறித்தார்கள்.  ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வரும்போதெல்லாம் வழக்கறிஞர்கள் கும்பலாக  கோஷமிட்டு மிரட்டி அச்சுறுத்தினார்கள்.  நீதிமன்றத்திற்கு வெளியேயும் அச்சுறுத்தும் கும்பல்கள்...

‘கதுவா’ கொடூரம்:  அய்.நா. பொதுச்செயலாளர் கண்டனம்

‘கதுவா’ கொடூரம்: அய்.நா. பொதுச்செயலாளர் கண்டனம்

கதுவா, பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலக முன் வந்திருப்பதற்குக் காரணம், பிரச்சினை அய்.நா. மன்றம் வரை எதிரொலித்தது தான். “கதுவாவில் 8 வயது சிறுமி, 8 பேர் கொண்ட கும்பலால் பாலுறவு வன்முறைக்கு உள்ளாகிய சம்பவம் கொடூரமானது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி, நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது” என்று அய்.நா.வின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் கூறி யுள்ளார். கதுவா கொடூரம் இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகிவிட்டது. அய்.நா. பொதுச் செயலாளர் தெரிவித்த இந்த கருத்து குறித்து, அவரது அதிகாரபூர்வ பேச்சாளர் டுஜாரிக்கிடம் செய்தியாளர் கேட்டனர். குற்றவாளிகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அய்.நா.வின் பொதுச் செயலாளர் கண்டனத்துக்குப் பிறகுதான் பா.ஜ.க. இறங்கி வந்து அமைச்சர்களை பதவி விலகச் செய்திருக்கிறது. பெரியார் முழக்கம் 19042018 இதழ்

சர்வதேசமே கண்டிக்கும் சங்பரிவார் மதவெறி கோயிலுக்குள் சிறுமியின் கோரக் கொலை

சர்வதேசமே கண்டிக்கும் சங்பரிவார் மதவெறி கோயிலுக்குள் சிறுமியின் கோரக் கொலை

ஜம்மு மாநிலத்தில் கோயிலுக்குள் அசீஃபா எனும் எட்டு வயது சிறுமி பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது. ஜம்மு காஷ்மீரிலுள்ள கதுவாவில் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கிறாள் எட்டு வயது சிறுமி (ஆசிஃபா). கிராமத்தின் மையத்தில் உள்ள ஒரு கோயிலில் ஒரு வாரம் அடைத்து வைத்து, தொடர்ந்து மயக்க மருந்து கொடுத்து வன்புணர்ச்சி செய்திருக்கிறார்கள். அதில் காவலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு காவல் துறையினரும் துணை நின்றிருக்கிறார்கள். காஷ்மீரத்தின் குளிர்காலத் தலைநகரான ஜம்முவிலிருந்து 88 கி.மீ. தொலைவில் உள்ள கதுவாவுக்கு  அருகே ரசனா கிராமத்தைச் சேர்ந்தவள் அந்தக் குழந்தை. அவளது வளர்ப்புத் தந்தை முகமது யூசுப் புஜ்வாலா, பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆடு, மாடு, குதிரை மேய்க்கும் நாடோடி சமூகம் இது. மதத்தால் இஸ்லாமியர். இந்தச் சமூகத்தினரை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில், ஜம்முவில் பெரும்பான்மையாக வசிப்பவர்களில் ஒரு தரப்பினர் தொடர்ந்து...

குழந்தைகள் பழகு முகாம் – 2018 : 5 நாட்கள்

குழந்தைகள் பழகு முகாம் – 2018 : 5 நாட்கள்

முன் பதிவு ஆரம்பம் வரும் 2018 மே மாதம் கோடைக்கால பள்ளி விடுமுறையில் தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ‘குழந்தைகள் பழகு முகாம்’ (5 நாட்கள்) நடைபெற உள்ளது. குழந்தைகள் பழகு முகாமில் – கற்பனைத் திறன் வளர்த்தல், படைப்பாற்றல் பெருக்குதல், குழு உரையாடல், கதை உருவாக்கல், ஓவியப் பயிற்சி, கவிதை புனைதல், கட்டுரை வரைதல், அறிவியல் சார்ந்த விளையாட்டுகள் – உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். தேதி, இடம், கட்டணம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும். கோடையில் கொண்டாடுவோம்! பள்ளி விடுமுறையை பயனுள்ள தாக்குவோம் ! 10 வயது முதல் 15 வயது முடிய உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். முன் பதிவு அவசியம். பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள : ஆசிரியர் சிவகாமி தலைவர் தமிழ்நாடு அறிவியல் மன்றம் அலைபேசி எண் : 87785 43882 வாட்ஸ் அப் எண் : 99437 48175 பெரியார் முழக்கம் 12042018 இதழ்

இராசிபுரத்தில் தெருமுனைக் கூட்டம்; கருத்தரங்கம்

இராசிபுரத்தில் தெருமுனைக் கூட்டம்; கருத்தரங்கம்

8.4.2018 காலை 10 மணிக்கு இராசிபுரம் பழைய பேருந்து நிலையம், லயன்ஸ் கிளப் ஹாலில் ‘ஆரியம்-திராவிடம்-தமிழ் தேசியம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சுமதி மதிவதனி தலைமை வகித்தார். பிடல் சேகுவேரா முன்னிலையில் திருப்பூர் முத்துலட்சுமி வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் வி. பாலு, கலைமதி (திரைப்பட துணை இயக்குனர்), வீரா. கார்த்திக் (தமிழ்நாடு அறிவியல் மன்றம், மாவட்டச் செயலாளர், ஈரோடு வடக்கு), கோபி. வேலுச்சாமி (தலைமைக் கழகப் பேச்சாளர்) ஆகியோர் கருத்துரையாற்றினர். இறுதியாக மணிமேகலை நன்றி கூறினார். மாலை 6:30 மணியளவில் இராசிபுரம் பழைய கதர்க் கடை அருகே கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் இரா.பிடல் சேகுவேரா, வி. பாலு  (தி.மு.க) ஆகியோர் உரைக்குப் பின் கோபி.வேலுச்சாமி,  கலைமதி (துணைஇயக்குனர், திரைப்படத்துறை) சிறப்புரையாற்றினர். திருப்பூர் சாரதி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 12042018 இதழ்

தருமபுரியில் கழகப் பரப்புரைப் பயணம்

தருமபுரியில் கழகப் பரப்புரைப் பயணம்

20.03.2018 காலை 10.30 மணிக்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பரப்புரைப் பயணம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் ஜிரிஸி இசைக் குழுவின் பறை முழக்கத்துடன் துவங்கியது. நிகழ்வின் நோக்கத்தைத் தொடக்க வுரையாக மாவட்ட அமைப்பாளர் சந்தோசுக்குமார் விளக்கினார். அடுத்து மடத்துக்குளம் மோகன் மந்திரமல்ல. தந்திரமே என்று அறிவியல் விளக்க  நிகழ்ச்சியுடன் பல்வேறு கருத்துகளை தொகுத்து வழங்கினார். கல்வி வேலை வாய்ப்பில் பறி போகும் உரிமைகள் பற்றி ஆரூர் பெருமாள் உரையாற்றினார். அடுத்து பொருளாளர் திருப்பூர் துரைசாமி – விவசாயிகளின் பறிபோகும் உரிமைகள் பற்றிய உரைக்குப் பின் தருமபுரி மாவட்ட செயலாளர் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது. மதிய உணவு சந்தோசு குமாரின் தொழிலகத்தில் வழங்கப் பட்டது. பி.அக்ரகாரம் பகுதியில்  சந்தோஸ் குமார் (மாவட்ட அமைப்பாளர்) தொடக்கவுரையாற்றினார். கொளத் தூர் பகுதி மாணவர் அமைப்பாளர் சந்தோஸ் கல்வி வேலை வாய்ப்புகள் பற்றி உரையாற்றினார், ஆருர் பெருமாள் உரையைத் தொடர்ந்து, இறுதியாக காரைக்குடி முத்து விரிவாக...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (9) ஞான சம்பந்தனின் ‘அனல்-புனல்வாத’ மோசடிகள்

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (9) ஞான சம்பந்தனின் ‘அனல்-புனல்வாத’ மோசடிகள்

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) சைவத்தைப் பரப்பிய அப்பர், சம்பந்தர் ஆகியோர் குறித்த உண்மை வரலாறுகள் குழப்பம் நிறைந்தவை. தேவாரத்தில் உள்ள சில பாடல்கள்  பெரிய புராணம் கூறும் சில சம்பவங்கள், சமணர்களின் கிராமங்களில் வழங்கப்பட்ட வாய்மொழிக் கதைகள்தான் இவர்களைப் பற்றி பேசுகின்றன. புத்தர்களையும், சமணர்களையும் கடுமையாகத் தாக்கி அழிப்பது குறித்து தேவாரம், பெரிய புராணம் நூல்கள் பேசுகின்றன.  இதில் சைவமும் வைதீகமும் கைகோர்த்து நின்றிருக்கின்றன. ‘அப்பரும் சம்பந்தரும்’ என்ற அரிய ஆராய்ச்சி நூலை தமிழறிஞர் அ. பொன்னம்பலனார் எழுதினார். 1944இல் ‘குடிஅரசு’ பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டது. சமணம் தழைத்தோங்கி வைதிகம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த காலத்தில் சோழ நாடான சீர்காழியில்...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (8) மனுநீதி கொன்ற சோழனா? மனுநீதி கொண்ட சோழனா?

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (8) மனுநீதி கொன்ற சோழனா? மனுநீதி கொண்ட சோழனா?

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) ஆண்டாள் – தேவதாசி மரபு என்று ஆய்வாளர் கூறிய கருத்தைக்கூட  பேசினால் அது இந்துமத அவமதிப்பு என்று கூப்பாடு போடுகிறவர்களுக்கு அவாளின் வேதம் ஒன்றையே பதிலாக எடுத்துக் காட்டலாம். “வேஸ்யா தரிசனம் புண்யம் ஸ்பர்சனம் பாப நாஸம் சம்பனம் சர்வதீர்த்தா னாம் மைதுனம் மோஷ சாதனம்” – என்பது ஒரு சுலோகம். வேசிகளைப் பார்த்தால் புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவம் போய்விடும்; முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்குச் சமமான புண்ணியம்; உடலுறவு கொண்டால் மோட்சத்தை அடையும் வழி – இதுவே மேற்குறிப்பிட்ட சுலோகத்தின் பொருள். இந்த சுலோகங்களைத் தடை செய்ய வேண்டும் என்று சொன்னால்கூட...

வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறதா?

வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறதா?

1989ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யக் கூடிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வடமாநிலங்களில் கடும்  கொந்தளிப்பை உருவாக்கியது. (இது குறித்து விரிவான கட்டுரை, கடந்த வாரம் வெளி வந்த ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிட்டுள்ளது.) தமிழ்நாட்டில் கொழுந்துவிட்டு எரியும் காவிரி நீர் உரிமை, நியுட்ரினோ, ‘ஸ்டெர்லைட்’ போராட்டங்களால் இப்பிரச்சினை தமிழகத்தில் இன்னும் தீவிரப்படவில்லை. 2016ஆம் ஆண்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பட்டியலினப் பிரிவினர் தொடர்பாக 7.7 சதவீத வழக்குகளிலும், 11.1 சதவீதம் பழங்குடியினர் தொடர்பான வழக்குகளிலும் தண்டிக்கப்பட் டுள்ளனர். தென் மாநிலங்களிலே தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்து வருகிறது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வின் கட்டுரை ஒன்று சுட்டிக்காட்டினாலும், இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் முறையாக நடத்தப்படுவது இல்லை என்பதே உண்மை. பாட்டாளி மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் போன்ற ஜாதி சங்கங்கள் இந்தச் சட்டத்தையே நீக்கிட...

நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பது ஏன்?

நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பது ஏன்?

இந்தத் திட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள்? என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் கூறியதாவது: இரண்டு காரணங்களுக்காக இந்தத் திட்டத்தை எதிர்க்கிறோம். முதலில், இந்தத் திட்டத்துக்கு தேர்வு செய்த இடம் மேற்கு தொடர்ச்சி மலை என்பதால், இந்தியாவின் பிரதான ஆறுகள்  மேற்கு தொடர்ச்சி மலையில்தான் உற்பத்தியா கின்றன. இதில் 2 கிலோ மீட்டர் அளவுக்கு சுரங்கம் தோண்ட உள்ளனர். அதற்கு 6 இலட்சம் டன் பாறைகளை வெடி வைத்து தகர்க்க உள்ளனர். இது சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இத்திட்டத்துக்கு தேர்வு செய்துள்ள இடத்துக்கு அருகாமையில் முல்லைப் பெரியாறு, இடுக்கி உள்பட 12 அணைகள் உள்ளன. பாறைகள் தகர்க்கப்படும்போது, அணைகள் சேதமடையும் அபாயம் உள்ளது. இத்திட்டம் பற்றி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் நடத்த வேண்டும். ஆனால், இந்த ஆய்வுக்கூடம் அமைக்க கட்டிட கட்டுமானம் என்ற பெயரில் விண்ணப்பித்து அனுமதி...

‘பக்தி’ எங்கே போகிறது?

‘பக்தி’ எங்கே போகிறது?

வடபழனி சிவன் கோயிலில் ஆகமவிதிகளின் படி அர்ச்சகராகப் பணியாற்றும் ஒரு ‘பிராமண’ இளைஞர் மனைவியைக் கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ளார். கோவை மேட்டுப்பாளையத்தில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 2 பேர் மரணமடைந் தார்கள்; 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பழனி கோயிலில் முருகன் நவபாஷாண சிலையை மறைத்து தங்கத்தால் செய்து வைக்கப்பட்ட சிலையில் தங்கத்தைத் திருடி யதாக சிலை செய்த ஸ்தபதியும் அற நிலையத் துறை அதிகாரியும் கைது செய்யப்பட் டுள்ளனர். திருத்தணி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 ஊர் களில் கோயில்களுக்கு தங்கத்தில் தேர் செய்ததில் மோசடிகள் நடந்தது அம்பலமாகி யுள்ளது. இவை இவ்வாராய்ச்சி செய்திகள். உண்மையில் கடவுள் என்பது சிலை தான் என்ற உண்மை அர்ச்சகருக்கும் சிலை செய் பவருக் கும் கோயிலை நிர்வகிப்பவர்களுக்கும் தெரிந் திருக்கிறது. அதனால்தான் இவ்வளவு மோசடிகள். பாவம்; அப்பாவி மக்களுக்குத்தான் புரிய வில்லை; தன் பெயரால் வழங்கப்படும் பிரசாதத்தில் நச்சுத்தன்மை இருக்கிறது என்பது அந்தக்...

சூரிய நாராயணாவிலிருந்து சூரப்பா வரை சமூகநீதிக்கு சவால் விடுகிறார்கள்

சூரிய நாராயணாவிலிருந்து சூரப்பா வரை சமூகநீதிக்கு சவால் விடுகிறார்கள்

தமிழ்நாட்டில் அம்பேத்கர் பெயரில் செயல் படும் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூர்ய நாராயண சாஸ்திரி என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரை ஆந்திரா மாநிலத்திலிருந்து தமிழக ஆளுநர் இறக்குமதி செய்தார். தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் வந்தன. அதற்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கருநாடகத்திலிருந்து சூரப்பா எனும் பேராசிரியரை துணைவேந்தராக ஆளுநர் இறக்குமதி செய்துள்ளார். தமிழ்நாட்டில் பல்கலைக் கழகத் துணைவேந்தராகக் கூடிய தகுதி பெற்றவர்களே இல்லை என்பதுபோல தமிழகத்தின் தனித்துவமான ‘சமூகநீதி’ தத்துவத்துக்கே சவால் விடுவதாக அமைந்துள்ளது ஆளுநரின் இந்த நடவடிக்கை. தமிழ்நாடு கலை மற்றும் நுண்கலைப் பல்கலைக் கழகத்துக்கு கேரளாவைச் சார்ந்த பரிமளாதேவி என்ற ஒரு  பெண் துணை வேந்தராக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் சார்பில் செய்தியாளர்களிடம் பேசி வரும் அமைச்சர் ஜெயக்குமார், துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உண்டு என்று கூறி, ‘சரணாகதி’ அமைச்சரவையாகவே இருக்க விரும்புவதை வெளிப்படுத்திவிட்டார். இதற்கு மாறாக சட்ட அமைச்சராக இருக்கும் சி.வி. சண்முகம், இந்த நியமனங்கள் குறித்து...

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

அய்.பி.எல். சுவர் விளம்பரம் : கழகத் தோழர்கள் அழித்தனர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் தோழர்கள் மற்றும் மந்தவெளி விசாலாட்சி தோட்டம் பகுதி தோழர்கள் இணைந்து 05.04.2018 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்து அதன் மேல் “ஐபிஎல் வேண்டாம்” – “காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்” என்று எழுதி எதிர்ப்பைத் தெரிவித்தனர். மந்தவெளி இரயில் நிலையம் முற்றுகை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சார்ந்த மக்கள் இணைந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து 06.04.2018 காலை 11 மணிக்கு மந்தவெளி இரயில் நிலையத்தை கண்டன முழக்கத்தோடு முற்றுகை யிட்டனர். மந்தவெளி இரயில் தடத்தில் இறங்கி கண்டன முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மந்தவெளி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். விழுப்புரத்தில் அஞ்சலகம்...

சிபிஎஸ்இ வினாத்தாள் முன்கூட்டி வெளியானதில் ‘ஏ.பி.வி.பி.’யினர் கைது

சிபிஎஸ்இ வினாத்தாள் முன்கூட்டி வெளியானதில் ‘ஏ.பி.வி.பி.’யினர் கைது

சி.பி.எஸ்.இ. பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானதைத் தொடர்ந்து 2 பாடங்களுக்கு மட்டும் மறுதேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், மறுதேர்வுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் இப்பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். உச்சநீதிமன்றமும் மாணவர்களின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.சி.பி.எஸ்.இ. பன்னிரண்டாம் வகுப்பு பொருளாதாரப் பாடத்திற்கும்,பத்தாம் வகுப்பு கணிதப்பாடத்திற்கும் முன்கூட்டியே வினாத் தாள்கள் வெளியாகின. இது பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவ்விவ காரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ‘ஏபிவிபி’யின் ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டச் செயலாளரும், பயிற்சி நிலையம் நடத்தி வருபவருமான சதீஸ்குமார் பாண்டே, ஏபிவிபி-யின் மற்றொரு நிர்வாகியான பங்கத்சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனால் வினாத்தாள் வெளியான தற்கு மத்திய பாஜக அரசே முழுக்காரணம் என்பது உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில், மத்திய பாஜக அரசு, தங்களின் தவறை மறைத்து, மறுதேர்வு நடத்துவதன் மூலம் பிரச்சனையைச் சமாளிக்க முயற்சிக் கிறது. ஆனால், சிபிஎஸ்இ-யின் மறுதேர்வு முடிவுக்கு எதிராக...