எச் இராஜாவை வளைக்கும் சட்டப்பிரிவுகள்
ராஜாவை வளைக்கும் சட்டப் பிரிவுகள்! பெரியார் சிலை பற்றி பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சமூக வலைதலத்தில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ராஜாவின் பதிவைத் தொடர்ந்தே திருப்பத்தூரில் பெரியார் சிலை தாக்கப்பட்டது. எனவே தமிழகத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டு, நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் செயல்படும் ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயரட்சகன் புகார் அளித்தார். அதன் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், வழக்குபதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுபற்றி ஜெயரட்சகன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் வழக்கறிஞர் துரை அருணிடம் பேசினோம். “பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஹெச்.ராஜா தொடர்ந்து இரு தரப்பினருக்கிடையில் பகைமையை மூட்டும் வகையில் பேசிவருகிறார். சமூக...
