சேலம் மேற்கு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மேட்டூர் 07012018

07.01.18 அன்று காலை 11.00 மணிக்கு மேட்டூர் தாய் தமிழ் தொடக்கப் பள்ளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சேலம் மேற்கு மாவட்ட கழகத் தலைவர் கு.சூரிய குமார் செயலாளர் சி.கோவிந்தரா சு ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு தேர்வுகளில் தமிழகத்திற்கு இழைத்து வரும் துரோகம், தமிழக நீதிமன்ற தீர்ப்புகளின் அவல நிலை, இன்றைய சமூக அவலங்களில் நமது கடமைகள் நாம் ஆற்றவேண்டிய பங்களிப்புகள் குறித்து கழகத் தலைவர் பேசினார். மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், கிளைக் கழக பொறுப்பாளர்கள் கழக வளர்ச்சி செயல் திட்டங்கள் குறித்து தங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள்.

பள்ளிக் கல்லூரி மாணவர்களிடம் பறிபோகும் வேலைவாய்ப்புகள், மீட்கப்பட வேண்டிய நமது உரிமை கள் குறித்து துண்டறிக்கைகள் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்ய முடிவெடுக்ககப்பட்டது. கழகத் தலைவரிடம் பெரியார் முழக்கம் ஆன்டு சந்தா 500 சந்தாவும், அய்ந்தாண்டு சந்தா ஒன்றும், கழக கட்டமைப்பு நிதி ரூ.65000 வழங்கப்பட்டது. மேட்டூர் நகர செயலாளர் தோழர் சுரேசுகுமார் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.

img_20180107_125146

You may also like...