தலைமைக் கழகத்தில் “நிமிர்வோம்” வாசகர் வட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாத இதழான “நிமிர்வோம்” இதழ் குறித்து வாசகர் வட்டம் (31.12.2017) மாலை 6 மணிக்கு தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் தலைமையில் திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டத்தினை வே.இராமசாமி ஒருங்கிணைத்தார். பிப்ரவரி மற்றும் மார்ச் 2017 இதழ்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தோழர்கள் ஜெயபிரகாஷ், எட்வின் பிரபாகரன், பிரகாஷ், மதன்குமார், வே.இராமசாமி இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் குறித்து தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். சிறப்புரையாற்ற – மார்க்சிய  – பெரியாரிய ஆய்வாளர் க.காமராசன் “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூல் குறித்து விரிவாகப் பேசினார். தன் ஆழமான கருத்துகளையும், நூலின் சிறப்புகளை குறித்து தோழர்களிடம் தெளிவான விளக்கத்தை கொடுத்தார். மா.தேன்ராஜ் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 11012018 இதழ்

You may also like...