கழகம் எடுத்த பெரியார் நினைவு நாள்

பேராவூரணி : பேராவூரணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திரு வேங்கடம் தலைமையில் ஒன்றியப் பொறுப்பாளர் சீனி. கண்ணன், தமிழக மக்கள் புரட்சிக் கழக பரப்புரைச்  செயலாளர் ஆறு நீலகண்டன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மெய்ச்சுடர் நா.வெங் கடேசன், த.ம.பு.க. இரா மதியழகன், ஆயில் மதியழகன், தி.வி.க நகர அமைப்பாளர் தா. கலைச்செல்வன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க  தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். காதல் திருமணம் செய்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

குமரி : பெரியாரின் 44ஆவது, நினைவு நாளை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம். சார்பாக 24-12-2017 ஞாயிறு காலை 9.00மணிக்கு தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.  நீதிஅரசர் (பெ.தொ.க தலைவர்)  தலைமை தாங்கினார். கேரளாபுரம் முருகன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி, நில மீட்பு இயக்கம். மாநில துணைச் செயலாளர்), சத்தியதாஸ் (வி.சி.க,நி.மீ.இ, குமரி மே.மா.செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். போஸ் (மார்க்சிய சிந்தனை மய்யம், குமரி மாவட்டம்) பிரசாத் (தீண்டாமை ஒழிப்பு முன்னனி), செல்வி மேரி (பெ.தொ.க.) மற்றும் கழகத் தோழர்கள் அனீஸ், விஸ்ணு, மஞ்சு குமார், இராஜேஸ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு வீரவணக்க முழக்கங்களை முழங்கினர்.

திண்டுக்கல் :  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மாவட்ட அமைப்பாளர் மருதமுத்து, சென்னை துரை அருண் (வழக்குரைஞர்), திண்டுக்கல் செல்வராஜ், பழனி, துரை மணப்பாறை ஒன்றியப் பொறுப்பாளர்  வீ. தனபால் மணப்பாறை கார்த்திகேயன். கும்மம்பட்டி கணேசன், கரூர் மோகன்தாஸ், பெரியார் பிஞ்சுகள் தமிழரசி, மணப்பாறை தேன்மொழி பிரவின், கரூர் பவதாரினி. திண்டுக்கல் தபெதிக கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து நினைவு நாளில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மணப்பாறை : திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஒன்றிய பொறுப்பாளர் தனபால், கார்த்திகேயேன், அறிவுச்செல்வன் பெரியார் பிஞ்சுகள் தேன்மொழி, பிரவின். திராவிடர்கழகம் சார்பாக இரும்பொறை பிச்சை, திருமால், சேகர், சிஎம்ஸ் இரமேசு, திமுக.சார்பாக துரைகாசிநாதன், பூக்கடை முருகேசன், பசுலுதின், செயாலானி,  விசிக. சார்பாக மதனகோபால், சீ.இரா ஆனந்தன், ஆதி தமிழர் பேரவை சார்பாக ஆதிசக்தி, கண்னன், ஆதி திராவிடர்  நலப்பேரவை. சார்பாக ஆதி பெரு பழனியப்பன், மணிவண்னன் ஆகியோர் கலந்து கொண்டு அய்யா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சேலம் மேற்கு : 24.12.17  காலை 9.30 மணியள வில் சேலம் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கோனூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்த ராசு தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். பின்னர் 11.00 மணியளவில் மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் மாவட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் .சூரியகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வரும் செயலவைக் கூட்டத்தில் கழக வளர்ச்சி நிதி அளிப்பது, பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ் களுக்கு சந்தா ஒப்படைப்பது குறித்து விவாதிக்கப் பட்டது. மேட்டுர் நகர செயலாளர் தோழர் சுரேசுகுமார் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.

சென்னை : சென்னையில் டிசம்.24 காலை 10 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் சென்னை சிம்சன் பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து தோழர்கள் வீரவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து, தியாகராயர் நகர் பகுதியில் இளந்தமிழகம் செந்தில், இளந்தமிழகம் அமைப்பைச் சார்ந்த தோழர்கள் மற்றும் கழகத் தோழர்கள் இணைந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஜாதி மறுப்பு உறுதிமொழி எடுத்தனர்.

பின்பு ஆலந்தூர், மந்தைவெளி, இராயப்பேட்டை பகுதிகளில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி ஜாதி மறுப்பு உறுதிமொழி எடுத்தனர்.

இதில் தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்ட அமைப்பாளர் பிரகாசு, வடசென்னை மாவட்டத் தலைவர் ஏசுகுமார், மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் (குனுடு), தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், இணையத்தளப் பொறுப்பாளர் விஜயகுமார், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

நாமக்கல் : பெரியாரின் 44ஆவது நினைவு நாளையொட்டி ( 26. 12. 2017) திராவிடர் விடுதலைக் கழகம் நாமக்கல் மாவட்டம் சார்பாக, திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் போன்ற பகுதிகளில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் நகரங்கள் சார்பாக, திருச்செங்கோட்டில் அமைந் துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி, திருச்செங்கோடு நகர ஒன்றிய அமைப்பாளர் சதீஷ், பள்ளிபாளையம் நகர செய லாளர் பிரகாஷ் மற்றும் திருச்செங்கோடு, பள்ளி பாளையம் நகர தோழர்கள் கலந்து கொண்டனர்.

ராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, பாரதிதாசன் சாலையில் உள்ள கழக அலுவலகம் முன் பெரியார் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில், சுமதி  இராசிபுரம், பாலு.வி.  தலைவர் நகர வளர்ச்சி மன்றம், தி.மு.க, ஜோதிபாசு. நகர செயலாளர்,  ம.தி.மு.க, மணிமாறன்,  நகரசெயலாளர் சி.பி.ஐ, மகேந்திரன், இரா. வழக்கறிஞரணி மா.செயலாளர், வி.சி.க. நீலவானத்து நிலவன், ஆ. மா. துணை செயலாளர், வி.சி.க, கண்ணன், மா.தலைவர், ஆதித் தமிழர் பேரவை, பெருமாள் மா.செயலாளர் தூய்மை தொழிலாளர் சங்கம், குபேர்தாஸ்-தலைவர் கோல்டன் நற்பணி சங்கம் மற்றும் நகர தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியாரின் பதாகைக்கு மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்தினர். மேலும், குமாரபாளையம் நகரம் சார்பாக, கத்தேரி, சமத்துவபுரத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்டத் தலைவர் சாமிநாதன், தண்டபாணி, கேப்டன் அண்ணாதுரை, கலைமதி போன்ற நகர தோழர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் :  விழுப்புரம் மாவட்டம் நயினார் பாளையம் கிராமத்தில்  பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு  24-12-2017 அன்று அவரின் கொள்கை களுக்கு மதிப்பளிக்கும் விதமாக பெரியாரின் முழு உருவ சிலைக்கு  மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒரு இசுலாமியராக இருந்தும் பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட க.அசன்,பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட புலவர் கு.அண்டிரன், ஆசிரியர். அங்கமுத்து, ஆ.நாகராசன், ந.சகாதேவன், ந.வெற்றிவேல், க.மதியழகன், சுப்ராயபிள்ளை, சேரன், இராச்சந்திரன், தண்டபானி, செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர்.

பெரியார் முழக்கம் 28122017 இதழ்

You may also like...