இந்திய அளவிலான வில்வித்தை – கழக மாணவர்கள் சாதனை

மேட்டூர் 7 ஸ்டார் ஆர்ச்சரி கிளப் மாணவர்கள் சாதனை

இந்திய ஊரக விளையாடுக் குழுமம் நடத்திய தேசிய (இந்திய) அளவிலான வில்வித்தைப் போட்டி, ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள கேள்காண் விளையாட்டரங்கில், 2017 டிசம்பர் 25,26 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

அதில் தமிழ்நாட்டு அணியை சார்பாக கலந்துகொண்ட, சேலம் மாவட்டம், காவலாண்டியூரைச் சேர்ந்த மாணவன் மா. இ.எழிலரசு 14 வயதுக்குட்பட்டோருக்கான ரீ கர்வ் வில் அம்பு பிரிவில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார். இவர் கழகத் தோழர் காவை இளவரசன் – மாதவி இணையரின் மகன் ஆவார்.

இந்தியன் ரவுண்ட் பிரிவில் க.ப.வளவன் இந்திய முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் பெற்றார். இவர் கழகத் தோழர் கொளத்தூர் கபிலன் புகைப்பட நிலையம் விஜயகுமார் – கலைச்செல்வி ஆகியோரின் மகன் ஆவார்.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான காம்பவுண்ட் பிரிவில் தோழர் கொளத்தூர் குமார் – தமிழரசி இணையரின் மகன் த.கு.இனியன் இந்திய அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

இந்திய அளவில் முதலிடம் பெற்று தமிழகத்துக்கும், சேலம் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களையும், இவர்களுக்குப் பயிற்சி வழங்கிய பயிற்சியாளர் திரு,ஆர்.கேசவன் அவர்களையும் மேட்டூர் செவென் ஸ்டார் ஆர்ச்சரி கிளப்பின் தலைவர் வழக்குரைஞர் ஐ.கே சதாசிவம், செயலாளர் அ.குமார் ஆகியோர் பாராட்டினர்.

img-20180101-wa0011

You may also like...