நீட் எதிர்ப்புக் கருத்தரங்கம் – மதுரை 23122017
23-12-2017 வெள்ளிக் கிழமை, மாலை 6-00 மணியளவில், மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள இராமசுப்பு அரங்கத்தில், மதுரை மாவட்ட நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பாக நீட் எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
முதல் அரங்கமாய் நடைபெற்றக் கல்வியாளர் அரங்கம், நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பின், ஒருங்கிணைப்பாளர் தோழர் ரபீக் ராஜா (இளந்தமிழகம்) தலைமை வகித்தார்.
குடியாத்தம் அரசுக் கலைக் கல்லூரி, முன்னாள் முதல்வரும், கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமாகிய முனைவர் ப.சிவக்குமார், மதுரைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தமிழ்நாடு – புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் செயலாளருமாகிய முனைவர் முரளி, கல்வியாளர் பர்வதவர்த்தினி ஆகியோர் உரையாற்றினர்.
அடுத்து நடைபெற்ற அரசியல் அரங்கிற்கு, தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் முகிலரசன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனியமுதன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம். செரீப், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் மீ.த. பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.
குறிஞ்சியர் விடுதலை இயக்கத்தின் தோழர் ஆனந்தி தீர்மானங்களை முன்மொழிந்தார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையோடு கருத்தரங்கம் நிறைவு பெற்றது.