வேலூரில் “தலைநிமிர்ந்தோம் இவர்களால்” பொதுக்கூட்டம் ! 24122017

வேலூரில் “தலைநிமிர்ந்தோம் இவர்களால்” பொதுக்கூட்டம் !

24.12.2017 மாலை வேலூரில் காஞ்சி மக்கள் மன்றம் சார்பாக “தலைநிமிர்ந்தோம் இவர்களால்” என்ற தலைப்பில் தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு வேலூர் மாவட்டத்தை சார்ந்த தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின் மக்கள் மன்றம் ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் SDPI, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆவணப்பட இயக்குனர் போன்றவர்களுடன் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் பொதுக் கூட்டத்தில் பெரியாரின் நினைவு நாளை நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார்.

26166269_2057687914515098_7195778259389164710_n

You may also like...