சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் பெரியார் நினைவு நாளை முன்னிட்டு பெரியாரின் கனவாக இருந்த அனைத்து சாதி யினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகம் சார்பாக (23-12-2017) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் க.இராமர், செ.வே.ராஜேஷ், பூ.ஆ. இளையரசன், க.மதியழகன், ந.அய்யனார் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக இராஜேந்திரன், தமிழ்ச் சங்கம் சார்பாக கவிஞர் முருகேசன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
பெரியார் முழக்கம் 11012018 இதழ்