வேலூரில் பெரியார் நினைவு நாள்: மக்கள் மன்றம் எழுச்சியுடன் நடத்தியது

காஞ்சி மக்கள் மன்றம் பெரியார் நினைவு நாளை டிசம்பர் 24 அன்று வேலூரில் எழுச்சியுடன் நடத்தியது. பெரியார் பூங்கா அருகில் மாலை 5 மணியளவில் மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்வுகள் தொடங்கின. மக்கள் மன்ற தோழர்கள் கோபி வரவேற்புரையாற்ற சதீஷ் தலைமை தாங்கினார். நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரை நிகழ்த்தினார். விடுதலை சிறுத்தைகள் மாநில அமைப்புச் செயலாளர் நீலசந்திரகுமார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஷாஜஹான், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் சிங்கராயர், எஸ்.டி.பி.அய். மாநில பொறுப்பாளர் ஜி.எஸ். இக்பால், கண் மருத்துவர் தி.ச. முகமது சயி, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் செல்வராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் சுதாகர், ஆவணப்பட இயக்குனர் பாலா, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் சிவா, மக்கள் மன்றம் தோழர்கள் அபிநயா, திலகவதி ஆகியோர் கலை நிகழ்ச்சிகளுக்கு இடையிடையே உரையாற்றினர்.

நிகழ்ச்சிகளை மகேஷ் ஒருங் கிணைத்தார். மேடையில் ‘தலை நிமிர்ந்தோம் இவர்களால்’ என்ற முழக்கம் எழுதப்பட்டு, பெரியார் அம்பேத்கர் படங்கள் வரையப்பட் டிருந்தன. 5 மணி நேரம் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மக்கள் கலையாமல், கொட்டும் பனியில் கருத்துகளைக் கேட்டனர்.

பெரியார் முழக்கம் 28122017 இதழ்

You may also like...