கோபி, கோவையில் பெரியார் நினைவு நாள்

பெரியார் நினைவுநாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கோபி பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு அறிவியல் மன்ற தோழர் கற்பகம் மற்றும் மணிமொழி ஆகியோர் மாலை அணிவித்தனர். நிகழ்வில் மாநில வெளியீட்டு செயலர் இராம.இளங்கோவன்,நிவாஸ், அருளானந்தம், சுப்பிரமணி, ரகுநாதன் மற்றும் அறிவியல் மன்ற தோழர்கள் ஆசைத்தம்பி, விசயசங்கர், மாணவர் கழக தோழர் அறிவுமதி, பெரியார் பிஞ்சு அறிவுக்கனல், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட பொறுப்பாளர்கள் யுவராஜ், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை : கோவை நகரில் திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் 44ஆவது நினைவுநாளை மிகச்சிறப்பாக நடத்தியது. மாவட்ட தலைவர் நேருதாசு தலைமையில் சிலைக்கு மாலையிட்டு, பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நன்றி உணர்வுடன்  முழக்கமிட்டனர்.  மாணவர் கழகப் பொறுப்பாளர் வைதீஸ்வரி உறுதிமொழியை முன்மொழிய அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்களும் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 11012018 இதழ்

You may also like...