கழக ஏட்டுக்கு 500 சந்தாக்கள் வழிகாட்டுகிறது சேலம் (மேற்கு) மாவட்டம்
சேலம் தலைமைச் செயலவையில் சேலம் மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் ஜி.பி. கோவிந்தராஜ், கொளத்தூர் சூரி உறுதி கூறியவாறு, சேலம் மேற்கு மாவட்டக் கழகம், ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு 500 சந்தாக்களை உடனடியாக சேர்த்து அதற்கான கட்டணத்தையும் அனுப்பி வைத்துள்ளது. ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு எப்போதுமே கூடுதல் சந்தாக்களை சேகரித்து, ஏட்டின் உயிர்ப்புச் சக்தியாகத் திகழும் மேட்டூர் பகுதி மீண்டும் தனது கடமையை சிறப்பாக செய்து முடித்துள்ளது. இது முதற் கட்டம். தொடர்ந்து சந்தா சேர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன என்று கழகப் பொறுப்பாளர் ஜி.பி.கோவிந்தராஜ் கூறியுள்ளார். மேட்டூர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் இந்த செயல்பாட்டை ஏனைய மாவட்டக் கழகங்களும் செயல்படுத்துமா?
பெரியார் முழக்கம் 11012018 இதழ்