Category: திவிக

தலைமைக் கழகத்தில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் கூடியது

தலைமைக் கழகத்தில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் கூடியது

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவல கத்தில் 04.03.2018 மாலை 6 மணிக்கு “நிமிர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு கலந்துரையாடல் கூட்டம் இரா.உமாபதி (தென் சென்னை மாவட்டச் செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத் தார். ‘நிமிர்வோம்’ ஏப்ரல் மற்றும் மே மாத இதழ்களைப் பற்றிய தங்களுடைய கருத்துகளை தோழர்கள் ஜெயபிரகாஷ், எட்வின் பிரபாகரன், ராஜீ, சங்கீதா, ரவிபாரதி ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். ஒவ்வொரு தோழரும் ஒரு கட்டுரையை மய்யப் பொருளாக எடுத்துக் கொண்டு அதன் உள்ளடக்கத்தோடு தங்கள் கருத்துகளையும் இணைத்து சிறப்பாக உரையாற்றினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் “திராவிடம் தமிழ்த் தேசியம்” என்ற தலைப்பில் விரிவாகப் பேசினார். தோழர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கி சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம்: கழகம் ஆதரவு

சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம்: கழகம் ஆதரவு

காஞ்சிபுரம் – திருவள்ளூரில் புதிய சட்டக் கல்லூரி திறப்பதை காரணம் காட்டி 126 ஆண்டு காலம் பாரம்பரிய மிக்க சென்னை பிராட்வே பகுதியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை மூடுவதற்கு முயற்சிக்கும் அரசைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டக் கல்லூரி மாணவர்களின் இந்த உள்ளிருப்பு போராட்டத்திற்கு 03.03.2018 காலை திராவிடர் விடுதலைக் கழகத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் இராஉமாபதி, வழக்கறிஞர் திருமூர்த்தி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி சிவா ஆகியோர் நேரில் சென்று மாணவர்களின் போராட்டத்திற்கு கழக ஆதரவை தெரிவித்தனர். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

நீட்டை இரத்து செய்ய உலகத் தமிழ் அமைப்பு வலியுறுத்தல்

நீட்டை இரத்து செய்ய உலகத் தமிழ் அமைப்பு வலியுறுத்தல்

உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் உலகத் தமிழ் அமைப்பு நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தியுள்ளது. மார்ச் 4ஆம் தேதி செய்தியாளர்களிடம் அமைப்பு சார்பில் பேசிய அதன் தலைவர் முனைவர் வை.க. தேவ்டென்னசி நீட் தேர்வு முறையினால் உருவாகும் பாதிப்புகளை விளக்கினார். நீதியரசர் அரி. பரந்தாமன் பேசுகையில், “ஆந்திராவில் நீட்டை நீக்கக் கோரி அம்மாநில அரசே முழு நாள் அடைப்பு நடத்தியதையும், அதைத் தொடர்ந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபுவை மோடியும், அமீத்ஷாவும் பேச்சு நடத்த அழைத்துள்ளதையும் சுட்டிக் காட்டி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் சோம்பிக் கிடக்கிறார்கள்?அவையில் கொந்தளித்திருக்க வேண்டாமா” என்று கேட்டார். கழக சார்பில் தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி கலந்து கொண்டார். தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவவனர் வேல் முருகன், தியாகு, மருத்துவர் ரவிந்திரநாத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

கொளத்தூர் படிப்பகத்தில் பெண்கள் சந்திப்பு

கொளத்தூர் படிப்பகத்தில் பெண்கள் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கொளத்தூர் படிப்பகத்தில் 24.2.2018 ஞாயிறு அன்று பெண்கள் சந்திப்பு காயத்ரி தலைமையில் நடந்தது. கொளத்தூர் மேட்டூர் நங்கவள்ளி காவலாண்டியூர் திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண் டனர். கூட்டத்தில் சர்வதேச பெண்கள் தின வரலாறு குறித்தும் பெண்கள் தின விழா நடத்துவது குறித்தும் கலந்துரையாடப் பட்டது. இயக்கப் பணிகளில் பெண் களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்தும் பேசப்பட்ட து   தோழர்கள் சூரிய குமார் டைகர் பாலன் நங்கவள்ளி கிருஷ்ணன் கொளத்தூர் பரத் , ஆனந்த் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களைச் செய்தனர்.தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி கலந்து கொண்டார். தோழர்கள் அனிதா, சுதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பெரியார் முழக்கம் 01032018 இதழ்

தலைமைக் கழகத்தில்  ஜாதி – தாலி மறுப்பு மணவிழா

தலைமைக் கழகத்தில் ஜாதி – தாலி மறுப்பு மணவிழா

சென்னை திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையத்தில் 26.2.2018 பகல் 12 மணியளவில் ஜாதி-தாலி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த விழா சிறப்புடன் நடைபெற்றது. சென்னை எம்.கணேசன்-மீனாட்சி ஆகியோரின் மகன் ஜி. இராமகிருஷ்ணன், சென்னை சைதாப்பேட்டை ஜே.ஏ.பார்த்திபன்-ஜூலி ஆகியோரின் மகள் பி.நிவேதா ஆகியோரின் மணவிழாவை உறுதி ஏற்புக் கூறி பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நடத்தி வைத்தார். தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், செயலாளர் இரா. உமாபதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார், வடசென்னை மாவட்டச் செயலாளர் செந்தில், உள்ளிட்ட தோழர்களும் நண்பர்களும் திரண்டிருந்தனர். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 01032018 இதழ்

சுகாதாரக் கேடு: மயிலைப் பகுதி தோழர்கள் புகார் மனு

சுகாதாரக் கேடு: மயிலைப் பகுதி தோழர்கள் புகார் மனு

சென்னை மயிலாப்பூர் குடிசை மாற்று வாரியம் பகுதி பிள்ளையார் தெருவில் பல மாதங்களாக சாக்கடை நீர் வெளியேறி பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு, பல்வேறு நோய்கள் போன்றவைகளுக்கு அவதிக்குள்ளாகி வருகிறது. இந்த அடிப்படை பிரச்சனையை உடனடியாக தீர்வு காண கோரி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற் பொறியாளரிடம் 05.02.2018 அன்று மயிலாப்பூர் பகுதி தலைவர் இராவணன் மயிலாப்பூர் தோழர்களுடன் கோரிக்கை மனுவை அளித்தார். உடனடி தீர்வு காணா விடில் பகுதி மக்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். பெரியார் முழக்கம் 01032018 இதழ்

கோவையில் கழக சார்பில் மார்ச் 18இல் பாரூக் நினைவேந்தல்

கோவையில் கழக சார்பில் மார்ச் 18இல் பாரூக் நினைவேந்தல்

கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் பிப்.11 அன்று தோழர் கலை அலுவலகத்தில் நடைபெற்றது. மதவெறிக்கு பலியான ஃபாரூக் நினைவு நாளை மார்ச் 18 அன்று காலை பாரூக் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வீரவணக்கம் செலுத்தி, அன்று கருத்தரங்கமும் குருதிக் கொடையும் வழங்க முடிவு செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு, விஜயக்குமார் (இணைய தள பொறுப்பாளர்), ரகுபதி, ஸ்டாலின், ராஜா, திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் முத்து, மாநகர அமைப்பாளர் ஜெயந்த், விஜயகுமார், உசேன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 01032018 இதழ்

சென்னையில் காதலர் தினம்

சென்னையில் காதலர் தினம்

உலக காதலர் தினமான 14.02.2018  அன்று இந்து மக்கள் கட்சி அமைப்பினர் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காதலர் தினத்தை கொண்டாடக் கூடாது என சென்னை கடற்கரையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த இருப்பதாக இருந்த அறிவிப்பையடுத்து, சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் இரண்யா, பகுத்தறிவாளன், யுவராஜ், பிரபாகரன், காவை கனி, மா.தேன்ராஜ் போன்றோர் சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் காதலர்களுக்கு சாக்லெட், துண்டறிக்கை வழங்கி காதலர் தினத்தை வரவேற்றனர். பெரியார் முழக்கம் 01032018 இதழ்

மார்ச் 12இல் பெரியாரிய பெண்கள் மாநாடு-திருப்பூர்

மார்ச் 12இல் பெரியாரிய பெண்கள் மாநாடு-திருப்பூர்

2018க்கான திருப்பூர் திவிக செயல் திட்டம் குறித்து விவாதிக்க மாவட்ட கலந்துரையாடல் வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் 11/2/2018 மாலை 5 மணிக்கு மாநகர் அமைப் பாளர் முத்து தலைமையில் நடந்தது. நிகழ்வில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, மாவட்ட செயலாளர் நீதிராசன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி உள்ளிட்ட 15 தோழர்கள் கலந்து கொண்டனர் கழக செயல்பாடுகளை 2018 ஆம் வருடம் மக்களிடம் எவ்வாறு எடுத்து செல்வது, தமிழ்நாடு மாணவர் கழகம் கட்டமைப்பை வலுப்படுத்துவது போன்ற செயல் திட்டங்கள் வகுக்கப் பட்டன. கருணாநிதி 10 இளைஞர்களுக்கு பறையடிக்கப் பயிற்சித் தர முன் வந்தார். மார்ச் 12இல் பெரியாரிய பெண்கள் மாநாடு சிறப்புடன் நடந்தேற ஆலோசனைக் குழு அமைக்கப் பட்டது. இராயபுரத்தில் சிறப்பாக மாநாட்டை நடத்துவது எனவும் பெரியார்சிலை முதல் மாநாட்டு திடல் வரை அணிவகுப்பு ஊர்வலம் செல்லவும் முடிவெடுக்கப்பட்டது. தோழர் பார்வதி நன்றியுரையுடன் 7:30 மணிக்கு கலந்துரையாடல்...

வடசென்னை மாவட்ட  கலந்துரையாடல்

வடசென்னை மாவட்ட கலந்துரையாடல்

வடசென்னை மாவட்ட  திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 25.02.2018  அன்று மாலை 6  மணியளவில் பெரம்பூரில் நடை பெற்றது. கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட செயலாளர் இரா. செந்தில் குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஏசு குமார் முன்னிலை வகிக்க,  நா.பாஸ்கர், நாகேந்திரன் , ராஜீ, சங்கீதா, சங்கவி , தினேஷ், இரமேசு, பிரசாந்த், மோகன்ராஜ், சதிசு, சரவணன், தீபக், இளவரசன், சாரதி, செல்வம் என அனைத்துத் தோழர்களும் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர். ஏப்ரலில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. டாக்டர் அம்பேத்கரின் இட ஒதுக்கீடு சட்டங்களால் கிடைத்த பலன்களை சிறு நூலாக பத்தாயிரம் பிரதிகள் தயாரித்து மக்களிடமும் கல்லூரி மாணவர்களிடமும் பிரச்சாரமாக கொண்டு சேர்ப்பதென முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வட சென்னையில் தெருமுனைக் கூட்டங்கள், கருத்தரங்குகள், பரப்புரைப் பயணம் நடத்துவதென முடிவு செய்யப் பட்டது. நா. பாஸ்கர் நன்றி கூறினார் ....

விழுப்புரம் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்  விழுப்புரம் மாவட்ட கடுவனூர் கிராமத்தில் 11-02-2017 அன்று நடத்தப் பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர். மா.குப்புசாமி தலைமை வகித்தார். கடந்த  2017  மே 21 முதல்  11-02-2018 வரை இயக்கம் சார்பாக மாவட்ட அளவில் நடத்தப்பட்ட  செயல் பாடுகள் குறித்தும் – போராட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மற்றும் ‘நிமிர்வோம்’ சந்தா சேர்பது சார்பாகவும் பேசப்பட்டன. வருகின்ற ஏப்ரல் 14- அன்று அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டும் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் பிறந்த நாள் நினைவாகவும் கழம் சார்பாக பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஒரு வார அளவில் தமிழகத்தின் தனித்தன்மையை காப்போம் என்ற தலைப்பில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 01032018 இதழ்

களப்பணியில் கழகத் தோழர்கள் தூத்துக்குடி மாணவர்களிடம் வரவேற்பைப் பெற்ற கழக துண்டறிக்கை

களப்பணியில் கழகத் தோழர்கள் தூத்துக்குடி மாணவர்களிடம் வரவேற்பைப் பெற்ற கழக துண்டறிக்கை

தூத்துக்குடி மாவட்ட மாணவர் கழகம் சார்பாக 21.02.2018 அன்று  “மாணவர்களே! இருள் சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்” எனும் தலைப்பில் தமிழக மாணவர்கள் எவ்வாறு இந்துத்துவ மோடி அரசால் பாதிக்கப்படுகிறார்கள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாமான அரசுப் பணிகள் எவ்வாறு பிறருக்கு தாரைவார்க்கப்படு கின்றன, நமக்கான வேலை வாய்ப்பு தேர்வுகளில் வெளி மாநில மாணவர்கள் பெரும்பான்மையாக பங்கெடுக்கும் அளவிற்கு கதவைத் திறந்து விட்டுருக்கிற பா.ஜ.க. எடுபிடி அரசான தமிழக அரசின் நய வஞ்சகத்தை துண்டறிக்கையாக தயார் செய்து அதை தூத்துக்குடியில் அமைந்துள்ள கல்லூரி மாணவர் களிடம் பரப்பி விழிப்புணர்வை உண்டாக்கும் முயற்சியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. பல மாணவர்கள் இந்த துண்டறிக்கையை படித்துவிட்டு தங்களுக்குத் தோன்றிய சந்தேகங்களை தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் கண்ணதாசன், மாவட்ட செயலாளர் பிரபாகரன் போன்றவர்களிடம் கேட்டு அறிந்த...

அரசே! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடு! விழுப்புரத்தில் தலைவிரித்தாடும்  ஜாதி வன்கொடுமை

அரசே! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடு! விழுப்புரத்தில் தலைவிரித்தாடும் ஜாதி வன்கொடுமை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்துக் குட்பட்ட கிராமங்களில் தலித் குடும்பங்கள் மீதான கொலை வெறித் தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல்கள், ஜாதி ஆதிக்கச் சக்திகளால் தொடர்ந்து நடப்பது அதிகரித்து வருகிறது. வழக்கம்போல காவல்துறை தலித் மக்கள் மீதான தாக்குதல் என்றால் அலட்சியம் காட்டுவது போலவே இதிலும் செயல்பட்டு வருகிறது. தற்போது திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்த தலித் குடும்பத்தைச் சார்ந்த ஆராயி (4), அவரது மகள் தனம் (15), மகன் சமையன் (10) ஆகியோர் மீது மர்ம நபர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுவன் சமையன் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்துவிட்டார். உயிருக்குப் போராடிய நிலை யில் ஆராயியையும் அவரது மகள் தனத்தையும் முதலில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்து, அங்கு பிராணவாயு (ஆக்ஸிஜன்) இல்லாததால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

திருப்பூர் இலட்சுமிநாதன் முடிவெய்தினார்

திருப்பூர் இலட்சுமிநாதன் முடிவெய்தினார்

திருப்பூரில் பெரியாரைப் பேணிய குடும்பம் தோழர் அருணாசலம் அவர்களின் மகள் இலட்சுமி நாதன் (93) பிப்ரவரி 9, மாலை 3 மணிக்கு பெரியார் காலனியில் உள்ள அவரின் இல்லத்தில் இயற்கை எய்தினார். கடல் கடந்து இலங்கை சென்று தன் உழைப்பால் ஜவுளி வியாபாரத்தை கொழும்பு மற்றும் மதுரையில் நிறுவிய அருணாசலம் , இளவயது முதல்கொண்டே பெரியாரிய கொள்கையில் நாட்டம் கொண்டு குடிஅரசு பத்திரிக்கையை தொடர்ச்சியாக படித்து தன் குடும்பத்தார் அனைவரையும் பெரியாரிய வாழ்க்கை முறைக்கு  திருப்பினார். மூத்த மகனின் சுயமரியாதை திருமணத்தை திருப்பூரில் தந்தை பெரியாரைக் கொண்டு மிக சிறப்பாக நடத்தினார். அவரின் இரு மகள்களில் ஒருவரான இலட்சுமி நாதன், பெரியார் திருப்பூர் வரும்போதெல்லாம் அவருக்கு பிடித்தமான பிரியாணி செய்து பெரியாருக்குக் கொடுத்து உபசரிப்பார். 1945 மதுரை சுயமரியாதை மாநாட்டில் குடும்ப சகிதம் கருப்பாடை அணிந்து கலந்துகொண்டு  கொள்கைத் தூணாய் இருந்தவர். சுயமரியாதை வாழ்வின் அங்கமாய் தன் இரு மகன்களுக்கும் இரணியன்,...

கழகம் எடுத்த  தமிழர் திருநாள் எழுச்சி

கழகம் எடுத்த தமிழர் திருநாள் எழுச்சி

கடலூர் : கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பாக 2018ஆம் ஆண்டு தமிழர் திருநாளை முன்னிட்டு  மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் ஓட்டப் பந்தயம், கோ-கோ போன்ற எண்ணற்ற போட்டிகள், காவல் துறையின் எதிர்ப்பை மீறி, ஒலிபெருக்கி அனுமதி மறுத்த போதும் அதை பொருட்படுத்தாது நடத்தியே தீருவோம் என்று நமது தோழர்களும், கிராம பொதுமக்களும், தீர்மானம் போட்டு சிறப்பாக நடத்தி முடித்தனர். 16.01.2018 அன்று இரவு பரிசளிப்பு விழா நடைபெற்று விழா இனிதே முடிவுற்றது. விழாவை முன்னின்று மிகச் சிறப்பாக நடத்திய திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நட. பாரதிதாசன் (மாவட்டச் செயலாளர்), நட. பாபு அம்பேத்கர், பாலமுருகன் சிலம்பரசன், மற்றும் தமிழ்நாடு  மாணவர் கழகத் தோழர்கள் பாலாஜி, தினேஷ், மோகன், மணிகண்டன் ஆகியோர் முன்னின்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். பேராவூரணி :  போராட்டப் பண்பே தமிழர்களின்...

கொளத்தூர் கழக செயல் வீரர் டைகர் பாலன் இல்ல மண விழா

கொளத்தூர் கழக செயல் வீரர் டைகர் பாலன் இல்ல மண விழா

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர், புலிகள் மின்கலப் பணி மையம் டைகர் பாலு – ஜோதிமணி இணையரின் மகள் ஜோ.பா. ஓவியா – கோபிச் செட்டிப்பாளையம் குணசேகரன்- உமா இணையரின் மகன் கோ.கு.முகிலன் ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை இணையேற்பு விழா, 14-2-2014 அன்று காலை 11-00 மணிக்கு, கொளத்தூர் எஸ்.எஸ்.மகால் திருமண மண்டபத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடந்தேறியது. சேலம் மாவட்ட தி.வி.க. தலைவர் கொளத்தூர் சூரியகுமார் வரவேற்புரை ஆற்றினார். தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி, வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த உறுதிமொழிகளைக் கூறச்செய்து நிகழ்த்திவைத்தார். த.பெ.தி.க. அமைப்புச் செயலாளர் கோவை. வெ. ஆறுச்சாமி, தி.வி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கோபி கலைக் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் (ஓய்வு) பேராசிரியர் செ.சு. பழனிசாமி, கோபி மாவட்ட தி.க. தலைவர் யோகானந்தம், திண்டுக்கல் சம்பத், தூத்துக்குடி பால் பிரபாகரன், கோபி ம.தி.மு.க....

மேட்டூரில் காதலர் நாளில் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

மேட்டூரில் காதலர் நாளில் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

உலக காதலர் தின நாளில் இந்து மற்றும் இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள் காதலர்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக காதலர்களை கண்டால் நாங்கள் தாலி கட்ட சொல்லுவோம் என்று அறிக்கை விட்டிருந்தனர்.  அதனால்  14.02.2018 அன்று தோழர்கள் திராவிடன் பரத் (கொளத்தூர்), கண்ணன், சந்திரசேகர் (நங்கவள்ளி) ஆகியோர் ஒருங்கிணைப்பில் மேட்டூர் அணைப் பூங்காவில் காதலர்கள் வரவேற்பு பதாகையுடன் நின்று பூங்காவிக்கு வந்த காதலர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் மலர், இனிப்பு மற்றும்  விழிப்புணர்வு துண்டறிக்கை ஆகியவை விநியோகித்தனர். நிகழ்வில் வைரவேல் மாரியப்பன் (நாமக்கல்  மாவட்ட  அமைப்பாளர்), கிருட்டிணன் (சேலம் மாவட்ட அமைப்பாளர்), முகில்ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர்) உள்ளிட்ட 30 தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 22022018 இதழ்

மேட்டூரில் அண்ணா – காந்தி நினைவு நாள் கூட்டம்

மேட்டூரில் அண்ணா – காந்தி நினைவு நாள் கூட்டம்

மேட்டூரில் 5.2.2018 திங்கள் மாலை 6 மணிக்கு மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் பறைமுழக்கத்துடன் கூட்டம் தொங்கியது. அதனைத் தொடர்ந்து பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 7 மணிக்கு நடைபெற்ற வீதி நாடகத்தில் சாமியார்களின் மோசடிகளை விளக்கியும், ‘ஆண்டாள்’ குறித்த கதைப் பற்றிய விழிப்புணர்வு நாடகமும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து மேட்டூர் நகரத் தலைவர் செ. மார்ட்டின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு, ம.தி.மு.க. சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் அ.ஆனந்தராஜ், மேற்கு மாவட்டச் செயலாளர் ந. மகேந்திரவர்மன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் அ. சக்திவேல் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஆ. வந்தியத்தேவன், ‘பகுத்தறிவாளர்கள் பார்வையில் அறிஞர் அண்ணா’ என்னும் தலைப்பில் சிறப்புரை யாற்றினார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘திராவிடர் இயக்கப் பார்வையில் காந்தியடிகள்’ என்னும் தலைப்பில்...

குமாரப்பாளையத்தில் ஆரியம்-திராவிடம்- தமிழ்த் தேசியம் கருத்தரங்கம்!

குமாரப்பாளையத்தில் ஆரியம்-திராவிடம்- தமிழ்த் தேசியம் கருத்தரங்கம்!

நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் ஆரியம்-திராவிடம்-தமிழ்த்தேசியம் குறித்த கருத்தரங்கம் மற்றும் விவாத நிகழ்ச்சி குமாரபாளையம் சி.எஸ்.அய். பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (11.02.2018) மதியம்  2.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலளார் மு.சரவணன், மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் மற்றும் மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி முன்னிலை வகித்தனர். திருச்செங்கோடு பகுதித் தோழர் கவுதமன் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் கிருஷ்ணன் துவக்கவுரையாற்றினார். இதையடுத்து குமாரபாளையம் பகுதி தோழர் கலைமதி ஆரியம்-திராவிடம்-தமிழ்த் தேசியம் பற்றி விரிவாகவும், வரலாற்று ரீதியாகவும் விளக்கவுரை யாற்றினார். பின்னர் தோழர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்விற்கு பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தோழர்கள் வந்திருந்தனர். இறுதியாக குமாரபாளையம் பகுதி நகர செயலாளர் தண்டபாணி நன்றியுரையாற்றினார். பெரியார் முழக்கம் 22022018 இதழ்

வேட்டைக்காரன் புதூரில் காந்தியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்

வேட்டைக்காரன் புதூரில் காந்தியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்

ஆனைமலை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வேட்டைக்காரன் புதூரில் காந்தி படுகொலை நாள் கண்டன பொதுக்கூட்டம் 07.02.2018 மாலை 6 மணிக்கு நடைபெற்றது நிகழ்வின் தொடக்கமாக ரோஜா கலைக் குழுவின் பறை இசை முழக்கத்துடன் தொடங்கி, மா.ப.கண்ணையன் பாடல்கள் முழங்க, காவை.இளவரசனின் மந்திரமல்ல…தந்திரமே! நடைபெற்றது. நிகழ்ச்சியின் தலைமையேற்று சோ.மணி மொழி, வரவேற்புரை இரா.ஆனந்த், தொடக்கவுரையாக சிவகாமி, வே.வெள்ளிங்கிரி, மடத்துக்குளம் மோகன், கா.சு.நாகராசு (த.தி.க), கழகப் பொருளாளர் துரைசாமி, நிறைவுரையாக கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். நன்றி உரை வினோதினி. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோழர்கள் வே.அரிதாசு, அப்பாதுரை, மணி, சிவா, குமார், சபரிகிரி, விவேக், முருகேசன், கணேசன், கஜா சிறப்பாக செய்தனர். நிகழ்ச்சியில் தென்னை மரத் தொழிலாளர்கள் கருப்புசாமி, திராவிடர் கழகத் தோழர்கள், த.பெ.தி.க. தோழர்கள், தி.வி.க. தோழர்கள், வி.சி.க தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த சிறிய கிராமத்தில் 2000 ரூபாய்க்கு கழக நூல்கள் விற்பனை ஆயின. பெரியார் முழக்கம்...

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை-கைது

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை-கைது

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி முன்னிலையில் பாரி சிவக்குமார் (மாணவர் கழக அமைப்பாளர்)  தலைமையில் நடந்தது. 21.01.18 அன்று மாலை 3 மணிக்கு, சென்னை பனகல் மாளிகை முன்பு டெல்லியில் மர்ம மரணம் அடைந்த திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் சரத் பிரபு மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டியும், வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் தொடர் படுகொலையைக் கண்டித்தும், தோரட் பரிந்துரைகளை அமுல்படுத்தக் கோரியும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களின் குறைகளைக் கேட்க பேராசிரியர் தகுதியுள்ள தனி அலுவலர் நியமிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச்  சென்ற கழக அமைப்பினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் சைதை மாநகர தொடக்கப் பள்ளியில் அடைக்கப்பட்டு, மாலை விடுதலை செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம் 22022018 இதழ்

ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது தலைநகரில் கழகம் எடுத்த ‘காதலர் நாள்’

ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது தலைநகரில் கழகம் எடுத்த ‘காதலர் நாள்’

தென் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் 11.2.2018 மாலை 4 மணியளவில் சென்னை அம்பேத்கர் நினைவு மண்டபத்தில் காதலர் நாள், ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது. காஞ்சி மக்கள் மன்றத்  தோழர்களும், ம.க.இ.க. தோழர் காமராசும் ஜாதி ஒழிப்புப் பாடல்களைப் பாடினர். தோழர்கள் ஜெயநேசன், ரவிபாரதி கவிதைகளை வாசித்தனர். தொடர்ந்து, ‘எது தேவை? வாழ்வியல் காதலா? தெய்வீகக் காதலா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. வே. மதிமாறன் நடுவராக இருந்தார். ‘வாழ்வியல் காதலே’ என்ற அணியில் திலகவதி, சுபா ஆகியோரும், ‘தெய்வீகக் காதலே’ என்ற அணியில் மேட்டூர் பரத், சென்னை யுவராஜ் ஆகியோரும் பேசினர். வே. மதிமாறன் தனது உரையில், ‘தெய்வீகக் காதல் கூட ஒரு பெண் ஆண் கடவுளை நினைத்து உருகி, அவனுக் காகவே அர்ப்பணித்துக் கொண்டவளாக இருப்பதற்கே அனுமதிக்கிறதே தவிர, ஒரு ஆண், பெண் கடவுளுக்காக உருகி, உருகி,...

திருப்பூரில் ‘நிமிர்வோம்’ நூல் விற்பனை அரங்கிற்குப் பேராதரவு

திருப்பூர் மாவட்ட  கழகம் சார்பாக திருப்பூரில் நடந்த புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’, புத்தக நிலையம் அரங்கு எண்.94 செயல்பட்டது. பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை இளைய சமூகத்தினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்குடன் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. 11 நாட்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் அரங்கின் முதல் நாள் விற்பனையைக் கழகப் பொருளாளர் சு. துரை சாமி, அறிவியல் மன்ற அமைப் பாளர் வீ. சிவகாமி,  தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புத்தகத் திருவிழாவின் ஆயத்தப் பணிகளான அரங்கு வடிவமைத்தல், புத்தகங்களைத் தருவித்தல் போன்ற பணிகளில் கழக மாவட்டத் தலைவர் முகில் இராசு, இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், ஆசிரியர் சிவகாமி, மாவட்ட அமைப்பாளர் முத்து, சத்தியமூர்த்தி, சூரி ஆகியோர் கவனித்தனர். அரங்கின் விற்பனையை மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, சரசு, பார்வதி, வே. இராமசாமி ஆகியோர். காலை முதல் மாலை வரை புத்தக நிலையத்தின் விற்பனையையும், அரங்கிற்கு வருவோரிடம் கொள்கை...

ஜீயர் மீது வழக்கு பதியக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ஜீயர் மீது வழக்கு பதியக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

கொளத்தூரில் ‘ஆண்டாள் ஆய்வுக்குரியவளே’ என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடத்த திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டிருந்த நிகழ்ச்சியில் ‘சோடா பாட்டில் வீசுவோம்’ என்று வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய சடகோப ராமனுஜன் மீது வழக்குப் பதியக் கோரி நாமக்கல் மாவட்ட திவிக சார்பில் திருச்செங்கோடு நகர காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவின் மீது திருச்செங்கோடு துணை கண்காணிப் பாளர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பிறகும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் சார்பில் சடகோப ராமனுஜன் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் பிப்ரவரி 13ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. பெரியார் முழக்கம் 15022018 இதழ்

சென்னை கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு அகில இந்திய தேர்வுகள் தமிழகத்தை வடவர் மயமாக்குகின்றன

சென்னை கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு அகில இந்திய தேர்வுகள் தமிழகத்தை வடவர் மயமாக்குகின்றன

வட சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் சார்பில் 10.2.2018 சனி மாலை 6 மணியளவில் சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரில், ‘வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’ எனும் தலைப்பில் பொதுக் கூட்டம் நடந்தது. காவை இளவரசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தினார். தொடர்ந்து பெ. முத்துக்குமார்  தலைமையில் பொதுக் கூட்டம் தொடங்கியது. ‘கடலோர மக்கள் களம்’ அமைப்பின் தலைவர் தோம. ஜான்சன், தமிழ் தேசியக் கட்சித் தலைவர் ஆ.கி. ஜோசப் கென்னடி, வழக்கறிஞர் துரை. அருண் ஆகியோர் உரையைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினர். விடுதலை இராசேந்திரன் தனது உரையில், தமிழர்களையும் தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் வஞ்சிப்பது நடுவண் அரசும், பார்ப்பனர்கள் உயிர்ப்புடன் இப்போதும் பாதுகாத்துவரும் பாசிசத் தத்துவமான பார்ப்பனியமும் தான் என்று எடுத்துரைத்து வைரமுத்துவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஆண்டாள் சர்ச்சை, தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த சங்கராச்சாரி, திராவிட ஆட்சிகளை வீழ்த்த...

கூட்ட மேடையில் தமிழர் 
‘பீப்’ பகோடா

கூட்ட மேடையில் தமிழர் 
‘பீப்’ பகோடா

திருவொற்றியூர் பொதுக் கூட்ட மேடையில் ஒரு மேஜை மீது ஸ்டவ் அடுப்பும், அதற்கு மேல் எண்ணெய் சட்டியும் வைக்கப்பட்டு, கீழே அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட் டிருந்தது. மோடியின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் “தமிழர் பீப் பகோடா  இங்கு விற்பனைக்குக் கிடைக்கும். உரிமையாளர் ஜெயா, எம்.ஏ., எம்.பி.எல்., பி.எச்டி.” என்று எழுதப்பட் டிருந்தது. பகோடா விற்று நாளொன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கும் இளைஞர்கள்கூட எங்கள் ஆட்சியின் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பயன் பெற்றவர்கள்தான் என்று பிரதமர் மோடி, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியை கிண்டல் செய்து, இந்தக் காட்சியை மேடையில் தோழர்கள் அரங் கேற்றியிருந்தனர். கூட்டத்தினர் இதை மிகவும் பாராட்டி இரசித்தார்கள். பெரியார் முழக்கம் 15022018 இதழ்

பெரியார் பல்கலைக்கழகத்தில் மதயாத்திரைக்கு வரவேற்பா?

பெரியார் பல்கலைக்கழகத்தில் மதயாத்திரைக்கு வரவேற்பா?

கழகம் கருப்புக் கொடி; தோழர்கள் கைதுசேலம் பெரியார் பல்கலைக்கழகம், பா.ஜ.க.வின் மதவாத யாத்திரைக்கு அனுமதித்து, மாணவர்களைப் பயன்படுத்தியதற்கு கழகத் தோழர்கள் கருப்புக் கொடிக் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சுவாமி விவேகானந்தரின் மேலை நாட்டுச் சீடரான நிவேதிதை 150ஆவது பிறந்தநாள் ரத யாத்திரையை பெரியார் பல்கலைக் கழகம் வரவேற்கும் நிகழ்ச்சிக்கு, திராவிடர் விடுதலைக் கழம் எதிர்ப்பு தெரிவித்து 10-02-2018 மாலை 3 மணிக்கு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. போராட் டத்தில் ஈடுபட்ட  42 தோழர்கள் கைதானார்கள். சுவாமி விவேகானந்தரின் மேலை நாட்டுச் சீடரான நிவேதிதை 150 வது பிறந்து நாள் விழா, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ராமகிருஷ்ணா மடம் சார்பில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நிவேதிதை 150 வது ரத யாத்திரை கடந்த 22ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றி எதிர் வரும் 22-ம் தேதி ரத யாத்திரை முடிவடைகிறது. பா.ஜ.க. பின்னணியோடு இது நடக்கிறது. இந்த நிலையில்...

கொளத்தூரில் மாட்டுக்கறி விருந்துடன் கழகம் நடத்திய ‘இந்துமதப் பெருமைகள்’ ஆய்வரங்கம்!

கொளத்தூரில் காவல்துறை, ஆண்டாள் ஆய்வரங் கத்துக்கு தடைபோட்டது; உடனே ‘ஆண்டாள் அருள்வாக்கு மகிமை’ என்ற தலைப்பில் கழகம், ஆய்வரங்கை பெயர் மாற்றி நடத்தி முடித்தது. இது குறித்த செய்தி விவரம்: 03.02.2018 அன்று கொளத்தூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த “ஆண்டாள் ஆய்வுக்குரியவளே” எனும் கருத்தரங்கிற்கு காவல்துறை தடை விதித்தது. மறுப்பு அறிவிப்பினை நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர்கள் சேலம் மாவட்ட அமைப்பளர் நங்கவள்ளி கிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் வீட்டுக் கதவுகளில் வருவாய்த்துறை அலுவர்கள் முன்னிலை யில்  31.01.2018 அன்று ஒட்டினர். இதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருந்ததாவது: இது ஒரு நீண்ட வேண்டுகோள், சற்று பொறுமையுடன் முழுமையாக படியுங்கள் ! வரும் 03.02.2018, சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சேலம் மாவட்டம், கொளத்தூர் பெரியார் படிப்பகம் அல்லது லட்சுமி திருமண...

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ! சேலம் 10022018

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ! சேலம் 10022018

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ! சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவிகளின் ரதயாத்திரைக்கு வரவேற்பு அளித்து விழா நடத்துவதைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இன்று மதியம் 2.00 மணிக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாள் : 10.02.2018 சனிக்கிழமை. நேரம் : மதியம் 2.00 மணி. இடம் : கருப்பூர்,சேலம். சகோதரி நிவேதிதை 150 ரதயாத்திரை – 2018 எனும் பெயரில் மதவெறி காவிகள் கல்வி நிலையங்களில் நுழைவதை அனுமதிக்கலாமா?ஏற்கனவே விவேகனந்தர் பெயரை வைத்துக்கொண்டு கல்வி நிலையங்களுக்குள் நுழைந்த இந்துத்துவவாதிகள் இப்போது விவேகானந்தரின் சீடர் நிவேதிதா பெயரை கையில் எடுத்திருக்கிறார்கள்.இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்க்கு மற்ற மதத்தவருக்கு இப்படி வாய்ப்புகளை இவர்கள் வழங்குவார்களா? கல்வி நிலையமா?காவி நிலையமா?அதுவும் தந்தை பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் ரதயாத்திரை மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஜ.கவின் மாநில செயலாளர் வானதி சீனிவாசன் போன்ற காவிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை நடத்துவதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.மத சார்பின்மையை...

கொளத்தூர் நோக்கி புனித யாத்திரை சென்ற திருப்பூர் மாவட்ட கழகம்

கொளத்தூரில் 3/2/18 அன்று நடக்கவிருந்த “ஆண்டாள் ஆய்வுக்குரியவளே” என்ற கருத்தரங்கை காவல்துறை தடை விதித்த காரணத்தால் கழக தலைவர் “ஶ்ரீமத் சடகோவ இராமானுஜ ஜீயரின் அருள்வாக்கு” என்ற தலைப்பில் ஆன்மீக உபன்யாசம் செய்ய திட்டமிட்டார் அதை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட திவிக “சோடா பாட்டில் புகழ்” ஜீயரின் அருள்வாக்கை கேட்க புனித யாத்திரையை அன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் கிளம்பினர் வண்டியில் யாத்திரையின் நோக்கத்தை குறிக்கும் வகையில் பேனர் கட்டி, பெரியார் பிஞ்சுகள் நாமம், செந்தூரம் இட்டு கையில் ஜீயரின் வன்முறை பேச்சை குறிக்கும் வகையில் காவி நிற முக்கோண கொடியில் சோடா பாட்டில் ஜீயர் பெயரோடு கொடியில் அச்சிட்டு யாத்திரை கிளம்பினர் ஆண்டாளின் பக்தர்களாக கொளத்தூரில் முன்வரிசையில் அமர்ந்து வேத உபன்யாசங்களையும் ஆன்மீக சொற்பொழிவையும் கண்டு கேட்டு ஆண்டாளின் திருவருளை பெற்றனர் நிகழ்வில் மதியம் கோமாதா பிரியாணி பூஜை செய்து உண்டு மகிழ்வுடன் ஊர் திரும்பினர்

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு விளக்கப் பொதுக்கூட்டம் திருவெற்றியூர் 10022018

திருவெற்றியூர் பெரியார் நகரில் … வரும் சனியன்று ( 10 : 02 : 2018 ) மாலை 5 : 30 மணியளவில் …. ” வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு ” விளக்கப் பொதுக்கூட்டம் பெரியாரின் உழைப்பால் பலன்பெற்ற சிலர் புறக்கணித்தாலும், பலர் தான் பெற்ற பலன் உணர்ந்து கிள்ளியாவது தருகிறார்கள் . ஆனால் இன்னமும் விடியல் கிடைக்காமல் வர்ணத்தாலும், வர்க்கத்தாலும் ஒடுக்கப்பட்ட வீதிக்கடை மக்கள் … தலைவன் பெரியாரின் கூட்டம் என்றவுடன் அள்ளித் தருகிறது. அவர்களின் கண்களில் தேங்கி நிற்கும் விடியல் வேட்கைக்கு இந்த கருஞ்சட்டை கூட்டம் பணி செய்து கிடப்பதையே பதிலாய் தரும் … மக்களிடையே நாம் செய்தியோடு நிற்கையில் தான் உணர்கிறோம் . எங்கள் மகத்தான தலைவர் பெரியாரின் உழைப்பையும், அது நமக்கு பெற்றுத் தரும் மரியாதையும், நம்பிக்கையையும். வாருங்கள் தோழர்களே … சூழ்ந்து வரும் மத இருளை, பெரியார் ஒளி கொண்டு விலக்குவோம் … திராவிடர்...

ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா சென்னை 11022018

ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா சென்னை 11022018

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்…. ஜாதி_மறுப்பு_இணையோருக்கு_பாராட்டு_விழா….. நாள் : 11.02.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு…. இடம் : டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபம், அடையாறு, சென்னை சிறப்புரை : #தோழர்_விடுதலை_இராசேந்திரன் பொதுச் செயலாளர்.,திவிக #பேராசிரியர்_சரசுவதி #எழுத்தாளர்_மதிமாறன் கவிதை, பாடல், வாழ்த்துரை,பட்டிமன்றம்,கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்…. #ஆணவக்_கொலைகள்_சாகட்டும்…. #ஜாதி_மறுப்பு_திருமணங்கள்_வாழட்டும் ஜாதி மறுப்பு இணையர்கள் முன்பதிவு அவசியம்

“ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை” தமிழை மறுக்கும் வேதமரபுகள் – கருத்தரங்கம் 30012018

“ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை” தமிழை மறுக்கும் வேதமரபுகள் – கருத்தரங்கம் 30012018

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக 30.01.2018 அன்று நடைபெற்ற “ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை” #தமிழை_மறுக்கும்_வேதமரபுகள்கருத்தரங்கம் இராயப்பேட்டை, விஜய் திருமண மண்டபத்தில் தோழர்.அன்புதனசேகரன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் ஒருங்கிணைத்தார். தொடக்கமாக தோழர்.சுகுமார் (தென்சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) வரவேற்புரையாற்றினார். அதை தொடர்ந்து தோழர்.வாலஜாவல்லவன் (மார்ச்சிய பெரியாரிய கட்சி) அவர்கள் பல்வேறு வரலாற்று ஆய்வுகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் ஆண்டாள் பற்றிய தனது ஆய்வுகளையும், தமிழை மறுக்கும் வேதமரபுகள் பற்றியும், சங்கராச்சாரியின் வரலாறுகளையும் பல்வேறு கருத்துகளையும் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ச்சியாக முனைவர்.தோழர்.சுந்தரவள்ளி அவர்கள் பல்வேறு கருத்துகளை கூறி சிறப்புரையாற்றினார். இறுதியாக தோழர்.ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

திருப்பூர் புத்தகத் திருவிழாவில்  ‘நிமிர்வோம்’ நிலையம்

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’ நிலையம்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புத்தகத் திருவிழாவில் கழக மாத இதழான ‘நிமிர்வோம்’ புத்தக நிலையம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழா  ஜனவரி 25 முதல் பிப் 4 வரை நடக்கும் இந்நிகழ்வில்அரங்கு எண் 94இல்  திராவிடர் விடுதலைக் கழகப் புத்தகங்கள் மற்றும் பெரியாரிய அம்பேத்கரிய புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ – வார ஏடு, ‘நிமிர்வோம்’ மாத இதழுக்கு சந்தாக்கள் சேர்க்கப்படுகின்றன. திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் பங்கேற்கும் முதல் புத்தக திருவிழா இது என்பதோடு கழக வெளியீடுகள் மட்டுமின்றி பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கருப்பு பிரதிகள், அங்குசம் பதிப்பகம் மற்றும் கலப்பை ஆகிய பதிப்பங்களிலிருந்தும் பல்வேறு சமூக சீர்திருத்த புத்தகங்களும் வாசகர்களுக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் மிகப் பெரிய ஆதரவு கழக மாத இதழான ‘நிமிர்வோம்’ இதழுக்கு இந்த புத்தக கண்காட்சியில் கிடைத்துள்ளது. 4 நாட்களுக்குள்...

 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’  முக்கிய அறிவிப்பு

 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முக்கிய அறிவிப்பு

  டிசம்பர் (2017) மாதத்தோடு சந்தா முடிவடைந்த வாசகர்களுக்குப் பிப்ரவரியிலிருந்து இதழ் அனுப்புவது நிறுத்தப்படும். தோழர்கள் சந்தாவைப் புதுப்பிக்க வேண்டுகிறோம். – நிர்வாகி ஆண்டுக்கட்டணம் ரூ.200   ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’  வங்கிக் கணக்கு கரூர் வைஸ்யா வங்கி, அடையாறு கிளை, ‘கரண்ட்’ அக்கவுண்ட். எண் : 1257115000002041  – கைளஉ மஎடெ0001257 ஆண்டுக்கட்டணம்  ரூ.200 தொடர்புக்கு: ஆசிரியர், 29, பத்திரிகையாளர் குடியிருப்பு,  திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41. &9841489896   பெரியார் முழக்கம் 02022018 இதழ்

‘சோடா பாட்டில்’ வீச்சுப் பேச்சுக்கு ஜீயர் மீது காவல்துறையில் புகார்

‘சோடா பாட்டில்’ வீச்சுப் பேச்சுக்கு ஜீயர் மீது காவல்துறையில் புகார்

‘ஆண்டாள் ஆய்வுக்குரியவளே’ என்ற தலைப்பில் கொளத்தூரில் வரும் 03.02.2018 அன்று நடைபெறவிருக்கும் கருத்தரங்கில் சடகோப ராமானுஜ ஜீயர் என்பவர் சென்று சோடா பாட்டில் வீசுவோம், எதற்கும் துணிவோம் எனவும் நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கும் போது நான் சொல்வது போல் செய்யுங்கள். இந்தக் கால சாமியார் எல்லாம் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் தேவைப்பட்டால் நாங்களும் கண்ணாடி விடுவோம். எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிவிடுவோம் என்று வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறார். அதனை மேடையில் இருப்பவர்களும் ஆமோதித்து கைதட்டுகிறார்கள். நான் சொன்னபடி செய்வீர்களா என அரங்கில் இருந்தவர்களைப் பார்த்து கேட்கிறார், அனைவரும் செய்வோம் என முழங்குகிறார்கள். எனவே சடகோப ராமானுஜ ஜீயர், மேடையில் இருந்தவர்கள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் ஆகியோர் மீது வன்முறையை தூண்டுதல், கலவரத்தை ஏற்படுத்தும் உள் நோக்கத்துடனும் கூட்டுச் சதியிலும் ஈடுபட்டதற்காக வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 27.01.2018 மாலை...

மத்திய கல்வி நிறுவனங்களில் மரணித்த மாணவர்களுக்கு  நீதி கேட்கும் பொதுக் கூட்டம்

மத்திய கல்வி நிறுவனங்களில் மரணித்த மாணவர்களுக்கு நீதி கேட்கும் பொதுக் கூட்டம்

மத்திய கல்வி நிறுவனங்களில் மரணித்த மாணவர்களுக்கு நீதி கேட்கும் பொதுக் கூட்டம் நாள்     :                 6.2.2018 வெள்ளிக்கிழமை நேரம்                   :                 மாலை 5.00 மணி இடம் :                 நெல்லுக்குத்தி மண்டபம் அருகில், திருச்செங்கோடு சிறப்புரை  : ஆசிரியர் சிவகாமி டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் (பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்) கொளத்தூர் மணி (தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) ஒருங்கிணைப்பு : தமிழ்நாடு மாணவர்க் கழகம், நாமக்கல் மாவட்டம் பெரியார் முழக்கம் 02022018 இதழ்

சரத்பிரபுவுக்கு திருப்பூரில் இரங்கல்

சரத்பிரபுவுக்கு திருப்பூரில் இரங்கல்

படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் சரத்பிரபு உடல் பிரத பரிசோதனை முடிந்து தில்லியிலிருந்து 18.1.2018 இரவு 11 மணிக்கு திருப்பூரில் அவரின் இல்லத்தை வந்தடைந்தது.  மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு, வடசென்னை மாவட்ட  செயலாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட கழகத் தோழர்கள் 10 பேர் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர் காலை 7 மணிக்கு இடுவம்பாளையம் இடுகாடு சென்று இறுதியஞ்சலி செலுத்த திட்டமிட்டு தமிழ்நாடு மாணவர் கழக தோழர்களோடு மருத்துவர் சரத்பிரபு அவர்களின் இல்லத்தில் ஒன்றுகூடினர். அங்கிருந்து 3 கிலோமீட்டர் வரை இறுதி ஊர்வலம் நடந்தது. இந்த மரணம் தற்கொலை அல்ல, திட்டமிட்ட படுகொலையே என்பதை வலியுறுத்தி முழக்கமிட்டு இதன் மீதான மேற்கட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று வலியிறுத்தினர். தமிழ்ப் புலிகள் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, இளந்தமிழகம், அம்பேத்கர் தேசிய இயக்கம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட தோழர்களை காவல் துறை கைது செய்து இரவு எட்டு மணிக்கு...

தலைமைக் கழகக் கட்டமைப்பு நிதி

தலைமைக் கழகக் கட்டமைப்பு நிதி

கோபி இளங்கோவன்           –                 ரூ.1,00,000/- சென்னை கு. அன்பு தனசேகர்        –                 ரூ.1,00,000/- மேட்டூர் மார்டின்     –                 ரூ.50,000/- மேட்டூர் சம்பத்           –                 ரூ.50,000/- மயிலாடுதுறை இளையராசா      –                 ரூ.20,000/- மயிலாடுதுறை மகேஷ்    –                 ரூ.10,000/- சேலம் மேச்சேரி சூரி (எஸ். எஸ். சில்க்ஸ்)              –                 ரூ.10,000/- சூரிய குமார் (கொளத்தூர்)                 –                 ரூ.10,000/- வேணுகோபால்        –                 ரூ.10,000/- காவை சசி      –                 ரூ.10,000/- நல்லதம்பி மெடிக்கல்ஸ்                   –                 ரூ.10,000/- கோவிந்தராஜ்             –                 ரூ.5,000/- காவை இளவரசன்                   –                 ரூ.5,000/- விஜி    –                 ரூ.5,000/- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் வளர்ச்சி நிதி திராவிடர் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினர், திருவரங்கம்டாக்டர்...

விஜயேந்திரன்-எச். ராஜா பார்ப்பனத் திமிர் காஞ்சி சங்கர மடம் முற்றுகை

சமஸ்கிருத விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்த காஞ்சி விஜயேந்திரன், நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த எச். ராஜா மன்னிப்புக் கேட்கக் கோரி தமிழகம் முழுதும் கழகத்தினரும், இன உணர்வாளர்களும் முற்றுகை ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சேலம்: சேலம் மாவட்ட தி.வி.க. சார்பில் 25.1.18 மாலை 4.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அவமரியாதை செய்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தைக் கண்டித்தும், திருவள்ளுவர் சிலை முன் மன்னிப்பு கேட்கக் கோரியும்   சேலம் சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விஜயேந் திரன், எச்.ராஜா செயலுக்கு எதிரான முழங்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர்கள் சக்திவேல், டேவிட், சூரியகுமார், ஏற்காடு பெருமாள், மேட்டூர் தேன்மொழி, இளம்பிள்ளை வசந்தி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது. கொளத்தூர், காவலாண்டியூர்,  மேட்டூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஏற்காடு ஆகிய பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து...

கழக சார்பில் தமிழர் திருநாள் விழாக்கள்

கழக சார்பில் தமிழர் திருநாள் விழாக்கள்

திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பல்வேறு பகுதிகளில் கழகத் தோழர்கள் தமிழர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு விழாக்களை எழுச்சியுடன் நடத்தினர். சென்னையில் கழகம் நடத்தும் 18ஆம் ஆண்டு பொங்கல் விழா வழக்க மான உற்சாகம், கலை நிகழ்வுகளுடன் ஜன.12ஆம் தேதி இராயப்பேட்டை ‘பத்ரி நாராயணன்’ படிப்பகம் எதிரே வி.எம். சாலையில் நடந்தது. அதிர்வு குழுவினர் பறை இசை பழந்தமிழர்க் கலை நிகழ்வுகள், கிராமியப் பாடல்கள், ஜாதி ஒழிப்புப் பாடல் களோடு சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினர். அதைத் தொடர்ந்து ‘அருண் டிரம்ஸ்’ குழுவினரின் கானா மற்றும் திரையிசை நிகழ்ச்சி நடந்தது. பெரியார், அம்பேத்கர் பாடல்களும், நீட் எதிர்ப்பு, அனிதாவுக்கு வீர வணக்கம் செலுத்தும் கானா பாடல் களும் பாடப்பட்டன. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் என்று அனைத்துக் கட்சிகளையும் கழகத் தோழர்கள் ஒருங்கிணைத்து இந்த விழாவை நடத்தி வருகிறார்கள். பகுதி வாழ் குழந்தைகள், சிறுவர்கள், வெவ்வேறு வேடங்களில் பங்கேற்றுப் பேசும் மாற்றுடைப்...

திருப்பூரில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

திருப்பூரில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

கழக சார்பில் திருப்பூரில் ஜன.14 அன்று காலை 8 மணி முதல் மாலை வரை, வீரபாண்டிப் பிரிவு பெரியார் திடலில் கோலாகலமாக கொண் டாடப்பட்டது. அனைவருக்கும் பொங்கல் வழங்கி நிகழ்ச்சிகள் தொடங்கின. ஆடிட்டர் பழனிச்சாமி பொங்கல் வழங்கி தொடங்கி வைத்தார். 9 மணியளவில் சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை அமுதம் இரா. கணேசன் தொடங்கி வைத்தார். கழகப் பொருளாளர் சு. துரைசாமி தலைமையில் பரிசளிப்பு விழா பொங்கல் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைப்பு களைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்று உரையாற்றினர். பங்கேற்றோர் : முகில்ராசு (மாவட்டத் தலைவர்), மு. ரவிச்சந்திரன் (மாவட்ட பொருளாளர்), சு. நீதிராசன் (மாவட்ட செயலாளர்), க. அகிலன் (மாவட்ட அமைப்பாளர்), வி. தனபால் (மாநகர தலைவர்), சி. மாதவன் (மாநகர செயலாளர், த.சங்கிதா (மாவட்ட அமைப்பாளர்), மா. இராம சாமி (தெற்கு பகுதி செயலாளர்), அ.க. கருணாநிதி (வடக்குப் பகுதி செயலாளர்), சு. முத்துக்குமார்...

ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா சென்னை 11022018

ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா சென்னை 11022018

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்…. ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா….. நாள் : 11.02.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு…. இடம் : டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபம், அடையாறு, சென்னை சிறப்புரை : தோழர் விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர்.,திவிக பேராசிரியர்.சரசுவதி எழுத்தாளர்.மதிமாறன் கவிதை, பாடல், வாழ்த்துரை,பட்டிமன்றம்,கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்…. ஆணவக் கொலைகள் சாகட்டும்…. ஜாதி மறுப்பு திருமணங்கள் வாழட்டும் ஜாதி மறுப்பு இணையர்கள் முன்பதிவுக்கு… தொடர்புக்கு : 7299230363/8056460580

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரன் திமிர் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேட்டூர் 26012018

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரன் திமிர் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேட்டூர் 26012018

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அவமதிப்பு செய்த காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதி விஜயேந்திரன் திமிர் போக்கை கண்டித்து திருவள்ளுவர் சிலை முன்பு மன்னிப்பு கேட்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம். நாள்: 26-01-2018 மாலை 4.00 மணி இடம்: மேட்டூர் பேருந்து நிலையம்      எதிரில், தலைமை: தோழர் கு.சூரியகுமார், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் தி.வி.க. முன்னிலை: தோழர் செ.மார்ட்டின், மேட்டூர் நகர தலைவர் தோழர் காவை ஈசுவரன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் கண்டன உரை: தோழர் அ.சக்திவேல், செயற்குழு உறுப்பினர் தி.வி.க. தோழர் டைகர் பாலன், மாவட்ட அமைப்பாளர் தி.வி.க. ஏற்பாடு: திராவிடர் விடுதலைக் கழகம், சேலம் மேற்கு மாவட்டம்.

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் சேலம் 25012018

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் சேலம் 25012018

சேலம் மாவட்ட தி.வி.க. சார்பில் இன்று மாலை 4.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் தமிழ் தாய் வாழ்த்து பாடலை அவமரியாதை செய்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தை கண்டித்தும், திருவள்ளுவர் சிலை முன் மன்னிப்பு கேட்கக்கோரியும்   சேலம் சங்கர மடம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விஜயேந்திரன் செயலுக்கு எதிரான முழங்கங்கள் எழுப்பப்பட்டது. தோழர்கள் சக்திவேல், டேவிட், சூரியகுமார், ஏற்காடு பெருமாள், மேட்டூர் தேன்மொழி, இளம்பிள்ளை வசந்தி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது. கொளத்தூர், காவலாண்டியூர்,  மேட்டூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஏற்காடு ஆகிய பகுதியை சேர்ந்த தோழர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாடு திருச்சி 25012018

இன்று (25.01.2018) பிற்பகல் 3 மணிக்கு திருச்சியில். ‘தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாடு !’ ஜனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாளில்… கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். நாள் : 25.01.2018 வியாழக்கிழமை. நேரம் : பிற்பகல் 3 மணி இடம் : டி.எம்.எஸ்.எஸ். அரங்கம்,ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி அருகில்,தொடர்வண்டி சந்திப்பு,திருச்சி. தோழமை அமைப்புகளின் தலைவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள் ! நிகழ்ச்சி ஏற்பாடு : சி.பி.எம்.எல்.(மக்கள் விடுதலை).

விஜயேந்திரர் உருவ பொம்மை எரிப்பு பள்ளிபாளையம் 25012018

விஜயேந்திரர் உருவ பொம்மை எரிப்பு பள்ளிபாளையம் 25012018

திவிக சார்பில் நாளை உருவ பொம்மை எரிப்பு… தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தாத, தமிழை நீசபாஷை என்கிற பார்ப்பன கும்பலின் குட்டித்தலைவன் விஜயேந்திரன் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது…! நேரம்:மாலை-4.00 மணி, இடம்:பள்ளிபாளையம். நாமக்கல் மாவட்டம்.   செய்தி – வைரவேல்

காஞ்சி சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் !

          காஞ்சி சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் ! நாளை (25.01.2018) திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் காஞ்சி மக்கள் மன்றம் ஒருங்கிணைந்து…. #காஞ்சி_சங்கர_மடம்_முற்றுகைப்_போராட்டம்… நாளை (25.01.2018) காலை 10 மணிக்கு… இடம்: பெரியார் சிலை எதிரில், சங்கர மடம், காஞ்சிபுரம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல் பார்ப்பனியத் திமிரோடு தமிழ்த் தாய் வாழ்த்தை இழிவுபடுத்திய விஜயேந்திர சரஸ்வதியை கண்டித்து.. தமிழையும், தமிழர்களையும் அவமதித்தற்காக விஜயேந்திர சரஸ்வதி மற்றும் எச்.ராஜா ஆகிய இருவரும் திருவள்ளுவர் சிலை முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற முழக்கத்தோடு… #முற்றுகைப்_போராட்டம்… பார்ப்பனீய கொட்டத்தை அடக்க தோழர்களே அணிதிரள்வீர்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

பொய் வழக்கும்,போராட்டமும்’ – நூல் அறிமுகவிழா ! சேலம் 28012018

‘பொய் வழக்கும்,போராட்டமும்’ – நூல் அறிமுகவிழா ! நாள் : 28.01.2018.ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 05.30 மணி. இடம் : ஹோட்டல் வசந்தம்,புதிய பேருந்து நிலையம் எதிரில்,சேலம். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும் தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு நூல் திறனாய்வுச் சிறப்புரையாற்றுகிறார்கள்.