தலைமைக் கழகத்தில் ‘நிமிர்வோம்’ 7ஆவது வாசகர் வட்டம்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 7ஆவது சந்திப்பு தலைமை அலுவலகத்தில் 21.10.2018 மாலை 6 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வை எட்வின் பிரபாகரன் ஒருங்கிணைத்தார்.

கடந்த மார்ச், ஏப்ரல் மாத இதழ்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பாஸ்கர் ‘டார்வினின் பரிணாமக் கோட்பாடு’ என்ற தலைப்பிலும், செந்தில்குமார் (குனுடு) ‘ஆர்.எஸ்.எஸ். பிடியில் அம்பேத்கர் பல்கலைக் கழகம்’ என்ற தலைப்பிலும், ஜெயபிரகாஷ் ‘தமிழ் சினிமாவில் சாதிய ஊடுறுவல்கள்’ என்ற தலைப்பிலும் தங்களது பார்வையையும், கருத்துகளையும் சிறப்பாக எடுத்துரைத்தனர். இமானுவேல் துரை ‘நிமிர்வோம் இதழைக் குறித்தும் அதன் தேவையை குறித்தும்’ பேசினார்.

இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இதழ்களைக் குறித்து தோழர்களின் கருத்துகளுக்கும், வெளியிடப்படும் கட்டுரைகளின் நோக்கத்தைக் குறித்தும் சிறப்பாக கருத்துரையாற்றி கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற “சீரடி சாய்பாபாவின் பின்னணி என்ன?” என்ற கட்டுரையைக் விளக்கியும் உரையாற்றினார்.  வாசகர் வட்டத்தில் மே 17 இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பெரியார் முழக்கம் 25102018 இதழ்

You may also like...