மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்குடன் நடந்த ஃபாரூக் நினைவு நாள் மேடையில் புரட்சிகர சுயமரியாதைத் திருமணம்
கோவையில் அண்ணாமலை அரங்கில் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாரூக் மதவெறியர்களால் படுகொலை செய்யப் பட்டார். இதைக் கண்டித்து மனிதநேய அமைப்புகள் மற்றும் திராவிட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். ஃபாரூக் படுகொலையைக் கண்டித்து ஆண்டுதோறும் நினைவேந்தல் கூட்டங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. நிகழ்வின் தொடக்கத்தில் இணையதள பொறுப்பாளர் விஜய்குமார் சமூக ஊடகங்களில் மதவெறி பற்றியும், கழகப் பகுத்தறிவு பரப்புரைக்கு சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் டுவிட்டர் பயன்பாடு பற்றியும் பயிற்சி அளித்தார். இந்தக் கூட்டத்தில் ‘மதங்களை மறப்போம், மனிதத்தை விதைப்போம்’ என தலைவர்கள் பேசினர். அதேபோல, மதங்களால் நடைபெறும் படு கொலைகள் தடுக்கப்படவேண்டும், மத அடிப்படை வாதங்கள் மாற வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது. திருப்பூர் முகில்ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, மேட்டுப்பாளையம்...
