தூத்துக்குடியில் ‘திராவிடம் அறிவோம்’ விவாத நிகழ்வு

17.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “திராவிடம் அறிவோம்” என்ற பெயரில் புதிய தோழர்களுக்கான கேள்வி- பதில் நிகழ்வு நடைபெற்றது.

இயக்கத்தில் இணைய விரும்பும் தோழர்கள், தோழமை இயக்க தோழர்கள் பெரியார், அம்பேத்கர், திராவிடம், சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்த அய்ய வினாக்களுக்கு விடைதேடும் நிகழ்வாக நடைபெற்றது.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் தோழர்களின் அய்ய வினாக்களுக்கு விடையளித்தார். புதிய தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மிகச்சிறப்பான, ஆக்கப்பூர்வமான நிகழ்வாக இது அமைந்தது.

பெரியார் முழக்கம் 28022019 இதழ்

You may also like...