Category: திவிக

நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்

நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்

இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரைக்கு வந்த மோடியை தமிழகமே எதிர்த்து நின்றது. உள்ளுக்குள் பொறுமியவாறு சடங்குத்தனமாக உரையாற்றி விட்டு பறந்தார் மோடி. நேரில் வந்தால் மட்டும் என்றில்லை ‘நேரலை’யில் வந்தாலும் அதே சம்பவம்தான் என்பதை செய்து காட்டியிருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள். “தேர்வு கால பதற்றத்தை கையாள்வது எப்படி’’ என்பது மோடியின் நிகழ்ச்சிகளுள் ஒன்று. இந்தியில் இதற்குப் பெயர் “பரிக்ஷா பே சர்ச்சா 2.0’’ பதட்டம் குறையுதோ இல்லையோ நிகழ்ச்சியின் பெயரைக் கேட்டாலே மாணவர்களுக்கு எரிச்சல் வருவது நிச்சயம். இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் நேரலையில் கண்டு பயன்பெறுவதற்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்யச் சொல்லி “மேலிட உத்தரவாம்’’. கல்லூரியின் பெரியார் கலையரங்கத்தில் ‘படம் காட்ட’ ஏற்பாடுகளை செய்திருந்தது கல்லூரி நிர்வாகம். இந்நிகழ்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு வருகைப் பதிவு கிடையாது என மிரட்டி வரவழைத்திருக் கின்றனர். இவற்றையெல்லாம் காணச் சகிக்காத முற்போக்கு மாணவர்கள் சிலர், “கல்லூரி கலையரங்கமா, மோடியின் விளம்பர இடமா’’...

மொழிப் போர் தியாகிகள் நினைவுத் தூண்களுக்கு தோழர்கள் மரியாதை

மொழிப் போர் தியாகிகள் நினைவுத் தூண்களுக்கு தோழர்கள் மரியாதை

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவுநாளில், அ.வ.அ.கல்லூரி வாயிலில் அமைந்துள்ள மொழிப்போர் ஈகி சாரங்கபாணி நினைவுதூணில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினார்கள். விசிக திருச்சி மாவட்ட நெறியாளர் வேலு.குணவேந்தன், தமிழர் உரிமை இயக்கம் சுப்பு. மகேசு கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 31012019 இதழ்

ஈழ விடுதலைப் போராளி முத்துக்குமாருக்கு தோழர்கள் வீர வணக்கம்

ஈழ விடுதலைப் போராளி முத்துக்குமாருக்கு தோழர்கள் வீர வணக்கம்

தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த முத்துக்குமார் நினைவு நாளான 29.1.2019 அன்று கொளத்தூர், சென்னை பகுதியில் அமைந்துள்ள முத்துக்குமார் நினைவிடத்தில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மாலை அணிவித்து வீர வணக்கத்தை செலுத்தினார். இதில் திராவிடர் விடுதலைக் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு  அய்யப்பன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, அருண், கன்னியப்பன், முரளி, வடசென்னை பாஸ்கர், தட்சணாமூர்த்தி ஆகியோர் வீரவணக்கம் செலுத்தினர். பெரியார் முழக்கம் 31012019 இதழ்

‘வீர சாவர்க்கார் யார்?’ நூல் விற்பனைக்குத் தயார்

‘வீர சாவர்க்கார் யார்?’ நூல் விற்பனைக்குத் தயார்

விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்’ இரண்டாம் பதிப்பாக வெளி வந்திருக்கிறது. நூலின் விலை ரூ.25. பக்கங்கள் 40. ‘நாளை விடியும்’ இதழாசிரியரும் பெரியாரியலாளருமான திருச்சி அரசெழிலன், தனது  சொந்த செலவில் இந்த நூலை அச்சிட்டு கழகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். ஏற்கனவே ‘காந்தியைத் துளைத்த கோட்சேயின் குண்டுகள்’ எனும் விடுதலை இராசேந்திரன் எழுதிய நூலை இதேபோல் தனது சொந்த செலவில் அச்சிட்டு கழகத்துக்கு வழங்கினார். கழகத்தின் இயக்கப் பணிகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் தோழர் அரசெழிலன் அவர்களுக்கு கழக சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். – ஆசிரியர், புரட்சிப் பெரியார் முழக்கம் பெரியார் முழக்கம் 31012019 இதழ்

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து மதுரையில் மோடிக்கு கருப்புக் கொடி

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து மதுரையில் மோடிக்கு கருப்புக் கொடி

மதுரை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி காட்டச் சென்ற 500க்கும் அதிகமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர். மோடியின் பார்ப்பன இந்துத்துவா கொள்கையினால் தமிழ்நாடு கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அவர் திடீரென்று அறிவித்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தமிழ்நாட்டில் நடுத்தர ஏழை மக்களும் தங்களின் வங்கிச் சேமிப்புப் பணத்தை அன்றாட செலவுக்காக எடுப்பதற்கு பல மணி நேரம் கியூவில் காத்திருந்தனர். அவரது இந்தத் திட்டம் படுதோல்வி அடைந்ததது என்பதை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பலரும் குற்றம் ச hட்டினர். செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், கருப்பு பணம் முடங்கிவிடும் என்ற மோடியின் அறிவிப்பு செல்லாத அறிவிப்பாகி 95 சதவீத கருப்புப் பணம் மீண்டும் வெள்ளைப் பணமாக வங்கிக்கே திருப்பி வந்து விட்டது. நுழைவுத் தேர்வு கிராமப்புற மக்களைப் பாதிக்கும் என்று தமிழகம் நுழைவுத் தேர்வையே இரத்து...

வாழ்க்கை இணையேற்பு விழா தேன்மொழி – மணிகண்டன் மேட்டூர் 03022019

வாழ்க்கை இணையேற்பு விழா தேன்மொழி – மணிகண்டன் மேட்டூர் 03022019

வருகின்ற 03-02-2019 ஞாயிறு காலை 11 மணியளவில் மேட்டூர் நகரில் திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் சி.கோவிந்தராசு அவர்களின் மகள் கீ.கோ.தேன்மொழிக்கும் திருப்பூர் தோழர் ப.மணிகண்டன் அவர்களுக்கும் ஜாதி – சடங்கு மறுப்பு வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா மேட்டூர் அரசப்பா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் தலைமையேற்கவும்  கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை க.இராசேந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர். தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும்.

குடி அரசு வழக்கு- முக்கிய திருப்பம்

குடி அரசு வழக்கு- முக்கிய திருப்பம்

ஏற்கனவே 21.01.2019 அன்று, கொளத்தூர் மணி மற்றும் கோவை இராமகிருட்டிணன் சார்பாக மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர்கள் பெரியாரின் எழுத்தும் பேச்சும் ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது ஆகவே யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று பல ஆவணங்களையும், உயர்நீதிமன்ற, உச்சநீதி மன்ற தீர்ப்புகளையும் காரணம் காட்டி வாதிட்டார். மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயலாளர் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் திரு கி. வீரமணி அவர்கள் சார்பாக வழக்கறிஞர் திரு வீரசேகரன் ஆஜராகி இரண்டு புதிய ஆவணங்களை நீதிபதி முன் சமர்ப்பித்தார். அதில் ஒரு ஆவணம் வரும் 31.01.2019 அன்று கோவையில் நடைபெறும் ஒரு பொதுக்கூட்டத்தில் மூவரும் அதாவது திரு கி.வீரமணி, திரு கொளத்தூர் மணி மற்றும் திரு இராமகிருட்டிணன் ஒன்றாக கலந்து கொள்கிறார்கள், அதற்கான அழைப்பிதழ் என்றும் மற்றொன்று மேற்படி அழைப்பிதழ் விடுதலை பத்திரிக்கையில் பிரசுரம் ஆகி உள்ளது என்றும்...

ஓவியர் முகிலன் அவர்களுக்கு திவிக நடத்தும் பாராட்டு விழா 01022019

ஓவியர் முகிலன் அவர்களுக்கு திவிக நடத்தும் பாராட்டு விழா 01022019

ஓவியர்.முகிலன் அவர்களுக்கு #திவிக நடத்தும் #பாராட்டு விழா. நாள் : 01.02.2019 நேரம்: மாலை 4 மணிக்கு இடம் : திவிக தலைமை அலுவலகம் பேச. : 7299230363/9962190066. அனைத்து தோழர்களும் அவசியம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தந்தை பெரியாரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட வேண்டும் மதுரை திவிக கோரிக்கை

தந்தை பெரியாரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட வேண்டும் மதுரை திவிக கோரிக்கை

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் முகப்பை ஒரு குறிப்பிட்ட மத அடையாளமான கோபுர வடிவில் அமைப்பது இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதசார்பற்ற தன்மைக்கு எதிரானது என்பதால் அந்த வடிவமைப்பை கைவிட வேண்டும் என்றும் மேம்படுத்தப்படும் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியாரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட வேண்டும் என்றும் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்துத்துவ அமைப்புகள் சார்பில் பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என மாற்றவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்த திராவிடர் விடுதலைக் கழத்தின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் மா.பா.மணியமுதன் அவர்கள் பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றினாலோ,மத அடையாள வடிவமைப்பை வைத்தாலோ தோழமை அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் அறிவிக்கப்படும் என் அறிவித்தார். தற்போது ”தந்தை பெரியார் பேருந்து நிலையம் எனும் பெயர் மாற்றப்படாது” என மதுரை மாநகராட்சி...

திருப்பூர் புத்தகத் திருவிழா – 2019  திராவிடர் விடுதலைக் கழகத்தின் “நிமிர்வோம்” புத்தக நிலைய அரங்கு

திருப்பூர் புத்தகத் திருவிழா – 2019 திராவிடர் விடுதலைக் கழகத்தின் “நிமிர்வோம்” புத்தக நிலைய அரங்கு

“திருப்பூர் புத்தகத் திருவிழா – 2019” அரங்கு எண் : 35 திராவிடர் விடுதலைக் கழகத்தின் “நிமிர்வோம்” புத்தக நிலைய அரங்கு. நாள் : ஜனவரி 31 to பிப்ரவரி 10 வரை. நேரம் : காலை 11.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை. இடம் : பத்மினி கார்டன்,காங்கேயம் சாலை, திருப்பூர். எமது அரங்கில் பெரியாரிய,அம்பேத்கரிய மார்க்சிய புத்தகங்களும், திவிக மாத இதழ், வார ஏடு ஆகியவை கிடைக்கும். தொடர்புக்கு : தோழர் முகில் ராசு 9842248174

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து  ”மதுரையில் மோடிக்கு கருப்புக் கொடி !”

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து ”மதுரையில் மோடிக்கு கருப்புக் கொடி !”

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து ”மதுரையில் மோடிக்கு கருப்புக் கொடி !” மதுரை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி காட்டச் சென்ற 500க்கும் அதிகமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர். மோடியின் பார்ப்பன இந்துத்துவா கொள்கையினால் தமிழ்நாடு கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அவர் திடீரென்று அறிவித்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தமிழ்நாட்டில் நடுத்தர ஏழை மக்களும் தங்களின் வங்கிச் சேமிப்புப் பணத்தை அன்றாட செலவுக்காக எடுப்பதற்கு பல மணி நேரம் கியூவில் காத்திருந்தனர். அவரது இந்தத் திட்டம் படுதோல்வி அடைந்ததது என்பதை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பலரும் குற்றம் ச hட்டினர். செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், கருப்பு பணம் முடங்கிவிடும் என்ற மோடியின் அறிவிப்பு செல்லாத அறிவிப்பாகி 95 சதவீத கருப்புப் பணம் மீண்டும் வெள்ளைப் பணமாக வங்கிக்கே திருப்பி வந்து விட்டது. நுழைவுத் தேர்வு...

காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் ! கோவை 31012019

காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் ! கோவை 31012019

இன்று (31.01.2019) மாலை கோவையில் காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் ! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் வீரமணி, த.பெ.தி.க.பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.ராமகிருட்டிணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு கருத்துரையாற்றுகிறார்கள். நாள் : 31.01.2019 வியாழக்கிழமை, நேரம் : மாலை 5.00 மணி இடம் : வி.கே.கே.மேனன் சாலை, புதுசித்தாப்புதூர், கோவை.

கரு. அண்ணாமலை வளர்ச்சி நிதிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கினார்

கரு. அண்ணாமலை வளர்ச்சி நிதிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கினார்

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் கரு. அண்ணாமலையின் ‘அன்பு பழச்சாறு மற்றும் தேனீர் அகத்’தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஜனவரி 11 அன்று காலை திறந்து வைத்தார். கழக வளர்ச்சிக்கு ரூ.5000/- கரு.அண்ணாமலை வழங்கினார். பெரியார் முழக்கம் 24012019 இதழ்

விழுப்புரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 19-12-2018 (தி.பி-2049- புதன்) அன்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர் செல்வம், அய்யனார், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். 2019ஆம் ஆண்டிற்கான நிகழ்வுகள் குறித்தும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மற்றும் ‘நிமிர்வோம்’ மாத இதழ் உறுப்பினர் சேர்க்கைக் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. ‘புரட்சிப் பெரியார் முழக்கத்’திற்கான 97  உறுப்பினர்களுக்கான தொகை 9400  ரூபாயை  கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கப்பட்டது. கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை கழகத் தலைவர் அறிவித்தார். விழுப்புரம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்களாக  தலைவர் – க.மதியழகன், செயலாளர் – க.இராமர், துணைச் செயலாளர்-மு.நாகராசன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட ஒருங்கிணைப் பாளர்- அ.பெரியார் தாசன், அறிவியல் மன்ற அமைப்பாளர்- வீ.முருகன், மாவட்ட அமைப்பாளர்- சி- சாமிதுரை, ரிசிவந்திய ஒன்றிய அமைப்பாளர்- இரா.கார்மேகம்,...

கழகம் எடுத்த தமிழர் திருநாள் விழாக்கள்

கழகம் எடுத்த தமிழர் திருநாள் விழாக்கள்

சென்னை : திருவல்லிக்கேணியில் 19ஆம் ஆண்டாக தமிழர் திருநாள்…பொங்கல் விழா 13.01.2019 இராயப்பேட்டை வி.எம்.தெருவில் (பெரியார் சிலை அருகே) மாலை 6 மணிக்கு புதுவை அதிர்வு கலைக்குழுவினரின் பறை யிசை முழக்கத்தோடு தொடங்கியது. கிராமிய கலை பண்பாட்டு பாடல்களோடு பகுதி பொதுமக்களின் ஆரவாரத் தோடும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தி, பேராசிரியர் சரசுவதி, மக்கள் நீதி மய்யம் சௌரிராஜன், மணிமேகலை மற்றும் திருநங்கைக்காண உரிமை மீட்பு இயக்கத்தைச் சார்ந்த அனுஸ்ரீ, ஆர்.என்.துரை (திமுக, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர்), வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர். நிகழ்வினை இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) ஒருங்கிணைத்தார். தொடர்ச்சியாக சிலம்பாட்டம், மயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் சிறுவர், சிறுமியர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இறுதியாக அருண் ரிதம்ஸின் சென்னை கானா, திரைப்படப் பாடல்களோடு மகிழ்ச்சியோடு விழா நிறைவுற்றது. திருப்பூர் : திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்...

‘பொருளாதார’ இடஒதுக்கீட்டைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

‘பொருளாதார’ இடஒதுக்கீட்டைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் சமூக நீதி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சமூகநீதியை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க அரசின் உயர்சாதிக்கான 10ரூ இட ஒதுக்கீட்டைக் கண்டித்து 11.1.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழக மாநகர மாவட்டத் தலைவர் நேருதாசு தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் வெண்மணி (திராவிடர் தமிழர் கட்சி), மலரவன் (புரட்சிகர இளைஞர் முன்னணி) வழக்கறிஞர் சேகர் பி.யு.சி.எல்., இராமசந்திரன் (திவிக), இளவேனில் (தமிழ் புலிகள்), சண்முக சுந்தரம் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), எம்.எஸ். வேல்முருகன் (சி.பி.அய். எம்.எல்.), வழக்கறிஞர் சக்திவேல் (சி.பி.அய்.), சபரி தமிழ்நாடு மாணவர் கழகம், ரமேஷ் முற்போக்கு வழக்கறிஞர் சங்கம், இனியவன் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம், தண்டபாணி சமூக நீதி கட்சி ஆகியோர் கண்டன உரையாற்றினர். கூட்டத்திற்கு திவிக தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், பாலமுருகன் (பி.யு.சி.எல்.), சிங்கை பிரபாகரன்...

மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புக் கோயில்கள்  கழக சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு

மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புக் கோயில்கள் கழக சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு

மயிலாடுதுறை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 28 நடைபாதைக் கோயில்கள் மற்றும் வழிபாட்டு இடங்களின் பட்டியலை மயிலாடுதுறை வருவாய்த் துறை அதிகாரியிடம் ஜன.21 அன்று கழகத் தோழர்கள் நேரில் பட்டியலாக  அளித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பதிவுத் அஞ்சலிலும் அனுப்பப்பட்டுள்ளது. கழகப் பொறுப்பாளர்கள் இளையராஜா, மகேஷ், செந்தில், மகாலிங்கம், விஜயராகவன், தில்லை நாதன், ராகவன் ஆகியோர் மனு  அளிக்க சென்றிருந்தனர். பெரியார் முழக்கம் 24012019 இதழ்

7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி  தமிழக முதல்வரிடம் கழகத் தலைவர்- தோழர்கள் நேரில் மனு

7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் கழகத் தலைவர்- தோழர்கள் நேரில் மனு

14-1-2019 இரவு 8-00 மணியளவில் கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இளங்கோவன், சேலம் மாவட்ட செயலாளர் மேட்டூர் கோவிந்தராசு, ஈரோடு மாவட்ட செயலாளர் பவானி வேணுகோபால், சேலம் மாநகர செயலாளர் பரமேசு ஆகியோருடன் சேலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சந்தித்து பேரறிவாளன் முதலான எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்யக் கோரியும் ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தியும் விண்ணப்பத்தைக் கையளித்தனர். முதல்வரும் தாங்களும் எழுவர் விடுதலையில் அக்கறை கொண்டிருப்பதாகவும், விரைவில் விடுதலைக்கு ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார். முதல்வரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்: திரு. இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக் குமார் ஆகிய எழுவரும் வாழ்நாள் சிறையாளர்களாக இருந்து வருவதும் அவர்கள் விடுதலைக் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளும்...

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ –  ஜனவரி 2019 இதழ்

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ – ஜனவரி 2019 இதழ்

தலையங்கம் – திசை வழிகாட்டிய திருச்சிப் பேரணி கருஞ்சட்டை – எதிர்நீச்சலின் வரலாறு பாரதியின் பார்ப்பனியம் : பெரியார் எழுப்பிய கேள்விகள் பெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் – சாஸ்திரங்கள் அய்.நா.வில் தலித் பெண்கள் சமர்ப்பித்த ஆவணம் ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்றது எப்படி? பெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்? மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvom@gmail.com பெரியார் முழக்கம் 17012019 இதழ்

கழகத் தோழர் இரா. விஜயகுமார் தாயார் மறைவு

கழகத் தோழர் இரா. விஜயகுமார் தாயார் மறைவு

சேலம் மாவட்டம் கொளத்தூர் தார்காடு கிளை கழகத் தோழர் இரா.விஜயகுமார் (இராணுவ ஓய்வு) தாயார் ஆர்.என்.காசிமதி (71) உடல் நலக்குறைவுக் காரணமாக 09.01.2019 அன்று காலை 10.00 மணிக்கு அவர்களது இல்லத்தில் முடிவெய்தினார்.  கழக மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் மறைந்த காசிமதி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பெரியாரியல் சிந்தனையாளரும் காசிமதி கணவருமான இராமசாமி (ஆசிரியர் ஓய்வு), மகன்கள் விஜயகுமார், சசிகுமார் ஆகியோர் காசிமதியின் உடலை எந்தவித சடங்குகளும் இன்றி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ மாணவர்கள் ஆய்வுக்காக  கையளித்தனர். தோழர்கள் கடந்த 2009ஆம் ஆண்டு தனது தாயாரின் உடல் கொடைக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  தோழர்களின் இச்செயல்களை  நிகழ்வுக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர். பெரியார் முழக்கம் 17012019 இதழ்

காவலாண்டியூர் கழகத் தோழர் ஈசுவரன் தந்தையார் முடிவெய்தினார்

காவலாண்டியூர் கழகத் தோழர் ஈசுவரன் தந்தையார் முடிவெய்தினார்

கழகத் தோழர் கொளத்தூர் ஒன்றிய செயலாளர் காவை ஈசுவரன் தந்தையார் பொ. கந்தசாமி, (87) (காவலாண்டியூர் கிளைச் செயலாளர் அ.தி.மு.க.), 5.1.2019 அன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் கழகத் தோழர்கள் பலரும் வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினர். எந்த சடங்குகளுமின்றி பெண்களே சுமந்து சென்றனர். 6.1.2019 அன்று காவலாண்டியூரில் பொ. கந்தசாமி உருவப்படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்து உரையாற்றினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, மேட்டூர் ஆர்.எஸ். சக்தி, ஈரோடு மாவட்டத்தலைவர் நாத்திக ஜோதி,  கொளத்தூர் பஞ்சாயத்து தலைவர் தா.செ. பழனிச்சாமி, திராவிடர் கழகப் பொறுப்பாளர் பிரகலாதன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் மனோகரன் (அதிமுக), கொளத்தூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரத்தினம், கொளத்தூர்துணைத் தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதையை செலுத்தினர். பெரியார் முழக்கம் 17012019 இதழ்

கடலூர் -அரியலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

கடலூர் -அரியலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

08.01.2019 திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சி வசந்தா திருமண நிலையத்தில் நடைபெற்றது.  நிகழ்வுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார்.  முதல் நிகழ்ச்சியாக கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி கழகக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகப் பெரியார் சிந்தனைப் பலகை தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. கடவுள் மறுப்பை மதன்குமார் கூறினார். அறிவழகன் வரவேற்புரையாற்றினார். துவக்க உரையாக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமிதிராவிடர் விடுதலை கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் பெரியாரியல் குறித்தும் பேசினார். தமிழ்நாடு மாணவர் கழக மாநிலச் செயலாளர் பாரி சிவக்குமார், பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம், அய்யனார், பழனிவேல் (ஆசிரியர்), முத்துகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட அமைப்பாளர் கோபால் இராவணன், நட பாபு அம்பேத்கர், கண்மணி, நட பாரதிதாசன் ஆகியோர் பேசினர். கடலூர் மாவட்ட செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டது. அடுத்த கட்ட...

சென்னையில் ‘திராவிடம்’ பயிற்சி வகுப்பு

சென்னையில் ‘திராவிடம்’ பயிற்சி வகுப்பு

‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பு சென்னையில் டிசம்பர் 14, 15 தேதிகளில் இரண்டு நாள் பயிற்சி வகுப்பை நடத்தியது. தமிழ்நாடு முழுதுமிருந்தும் 50க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்றனர். ‘சென்னை பிரஸ் கிளப்’ அரங்கில் நடந்த இந்தப் பயிற்சி வகுப்பில் டிசம்பர் 14ஆம் தேதி பகல் 11 மணியிலிருந்து ஒரு மணி வரை ‘திராவிடம்’ என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசினார். திராவிடம் தோன்றிய வரலாறு, அதன் உள்ளடக்கம், வரலாற்றுத் தொடர்ச்சி, திராவிடத்துக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் அடங்கியுள்ள குழப்பங்களை தரவுகளோடு விளக்கினார். உரையைத் தொடர்ந்து பயிற்சி யாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளித்தார் பெரியார் முழக்கம் 10012019 இதழ்

ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக கலந்தாய்வுக் கூட்டம் 30.12.18 மாலை 4 மணிக்கு,  சென்னிமலை செல்வராசு இல்லத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர்கள் மடத்துக் குளம் மோகன்,  சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்டக் கழகம் சார்பில் ஒன்றிய கிளைக் கழகக் பொறுப்பாளர்கள் நியமனத்தில் மாற்றம் செய்யப்பட்டது. எதிர்வரும் பொங்கல் விழாவை தெற்கு மாவட்டம் சார்பில் சிறப்பாகக் கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. கலந்தாய்வில் மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 10012019 இதழ்

கழக ஏட்டுக்கு மாதந்தோறும்  கழகத் தோழர் ரூ.1000 நன்கொடை

கழக ஏட்டுக்கு மாதந்தோறும் கழகத் தோழர் ரூ.1000 நன்கொடை

திருச்செங்கோட்டில் தம்பி தேனீர் விடுதி நடத்தும் கழகத் தோழர் சோமசுந்தரம், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’இதழுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000/- நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளார். தோழரின் பங்களிப்பைப் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. – ஆசிரியர் பெரியார் முழக்கம் 10012019 இதழ்

காஞ்சி, சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

காஞ்சி, சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

கழகத் தலைவர், பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர், பொருளாளர் மாவட்டம் தோறும் கழகத் தோழர்களை சந்தித்து உரையாடி வருகிறார்கள். சில பகுதிகளில் மாவட்டக் கழக அமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டன. கழக ஏடுகளுக்கு ‘சந்தா’க்களை தோழர்களிடமிருந்து பெற்று வருகின்றனர். இது குறித்து ஏற்கனவே பல மாவட்ட கலந்துரையாடல் செய்திகள் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டில் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் டிசம்பர் 20ஆம் தேதி மாலை கூடுவாஞ்சேரி தலைநகர் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. கழகப் பொறுப்பாளர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து கீழ்க்கண்ட பொறுப்பாளர் களை கழகத் தலைவர் அ றிவித்தார். மாவட்டத் தலைவர் செ.கு. தெள்ளமிழ்து; மாவட்ட செயலாளர் மு. தினேசுகுமார்; மாவட்ட அமைப்பாளர் கா. இரவிபாரதி; மாவட்ட துணைத் தலைவர் சி. சிவாஜி; மாவட்ட துணை செயலாளர் சு. செங்குட்டுவன்; மாவட்ட இளைஞரணி தலைவர் மூ. ராஜேஷ்; மாவட்ட இளைஞரணி செயலாளர் ஊமைத்துரை; மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ந. இராமஜெயம்;...

‘போலி அறிவியல்’ கும்பலுக்கு சில கேள்விகள்

‘போலி அறிவியல்’ கும்பலுக்கு சில கேள்விகள்

மகாபாரத காலத்திலேயே சோதனைக் குழாய் குழந்தை பிறப்பு முறை வந்து விட்டது என்றால் பிறகு அது ஏன் நடைமுறையில் இல்லை? வெளி நாட்டுக்காரர்கள் இந்த அறிவியல் முறையை கண்டுபிடிக்கும் வரை, ‘இந்தப் புராண அறிவியல்’ எந்தப் புற்றுக்குள் பதுங்கிக் கிடந்தது? சோதனைக் குழாய் குழந்தைகளுக்கு-பெண்-ஆண் விந்துக்களை பரிசோதிக்கும் சோதனைச் சாலைகள் இருந்தனவா? ‘ஸ்டெம் செல்’ அறிவியல் புராண காலத்திலேயே இருந்தால் அந்த ‘ஸ்டெம்செல்’ மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதா? அதற்கான மருத்துவர்கள் இருந்தார்களா? தசரதன் மனைவிக்கு குழந்தை இல்லாததால் அசுவமேத யாகம் நடத்தி ‘குதிரை’யுடன் தசரதன் மனைவி உறவு கொண்டு இராமன் பிறந்ததாக இராமாயணம் கூறுகிறதே? அப்போது ஏன் ‘சோதனைக் குழாய்’ முறை – இராமன் பிறப்புக்குப் பயன்படுத்தவில்லை? அலுமினியம் இரப்பர் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு தான் விமானக் கண்டுபிடிப்பே வந்தது? இராவணன் போர் விமானங்களைப் பயன்படுத்தினான் என்றால் – இரப்பர், அலுமினியம் இல்லாமலே விமானம் வந்து விட்டதா? இராம – இராவண யுத்தம்...

நெமிலியில் மக்கள் மன்றம் நடத்திய அம்பேத்கர் நினைவு நாள்

நெமிலியில் மக்கள் மன்றம் நடத்திய அம்பேத்கர் நினைவு நாள்

மக்கள் மன்றம் சார்பில் காஞ்சி மாவட்டம் நெமிலியில் அம்பேத்கர் நினைவு நாள் கூட்டம் டிசம்பர் 17ஆம் தேதி மக்கள் மன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. காவிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக சமத்துவம்-சகோதரத்துவம் காண உறுதி ஏற்போம் என்கிற முழக்கத்தோடு நிகழ்வு நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அம்பேத்கரின் இந்து எதிர்ப்பு, இராமாயண எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்புகளையும் ஜாதி – ஜாதியமைப்பு – ஜாதி ஆணவப் படுகொலை குறித்தும் உரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நிறைவுரையாற்றினார். மக்கள் மன்றத்தில் பத்தாண்டுகளாக இணைந்துள்ள தோழர் உமாவின் தந்தையார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது அம்பேத்கர் – பெரியார் சிலைகளுக்கு பறை முழக்கத்துடன் மாலைகள் அணிவிக்கப் பட்டன. பெரியார் முழக்கம் 10012019 இதழ்

கொளத்தூர் சரவணபரத்-பிரியதர்சினி இணை அறிமுக விழா – பெண் விடுதலைக் கருத்தரங்கம்

கொளத்தூர் சரவணபரத்-பிரியதர்சினி இணை அறிமுக விழா – பெண் விடுதலைக் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் பகுதி தோழர் சரவணபரத் மற்றும் பிரியதர்சினி ஆகியோரது இணை அறிமுக விழா 30.12.2018 அன்று சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் ஒன்றியம் அய்யம் புதூர் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. முன்னதாக காலை 10 மணியளவில் அய்யம்புதூரைச் சார்ந்த  பெரியார் பெரும் தொண்டர் சி. சுப்பிரமணி அய்யம்புதூர் பகுதியில் கழகத்தின் கொடிக் கம்பத்தை நிறுவி , கொடியேற்று விழா ஏற்பாடு செய்திருந்தார். பறை முழக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கழகக் கொடியை ஏற்றினார். பின்னர் ஊர்வலமாக தோழர்கள் அனைவரும் சென்றனர். அதற்கடுத்து காலை 11 மணியளவில் பெண் விடுதலைக் கருத்தரங்கம் நடைபெற்றது. கழகப் பொருளாளர் துரைசாமி தலைமை வகித்தார் . சேலம் மாவட்ட தலைவர்  சூரியக்குமார் முன்னிலை வகித்தார்.  இரத்தினசாமி (அமைப்புச் செயலாளா) மற்றும் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) ஆகியோர் இணையர்களை வாழ்த்தி வாழ்த்துரை...

தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலியரின் துயர்துடைக்க தமிழக முதல்வரிடம் வேண்டுகோள்

தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலியரின் துயர்துடைக்க தமிழக முதல்வரிடம் வேண்டுகோள்

பெறுநர்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள், தமிழ்நாடு.  மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். பொருள்: தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலியரின் துயர்துடைக்க வேண்டுகோள்   இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறை, இன அடக்குமுறை, இனக் கொலைக் கொடுமைகளால் அங்கிருந்து உயிர்தப்பித் தஞ்சம் நாடித் தமிழகம் வரும் ஈழத் தமிழ் மக்களை ஏற்று வாழ வைக்கும் உரிமையும் கடமையும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக அரசுக்கு உண்டு.  இவ்வடிப்படையில், இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வாழ்ந்துவரும் இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) நலவுரிமைகளுக்காகத் தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் பின்வரும் கோரிக்கைகளைத்  தங்களிடம் வலியுறுத்துகிறோம்.   இலங்கைத் தமிழ் அகதிகள் எனப்படும் தமிழீழ ஏதிலியர் அனைவர்க்கும் இந்நாட்டில் இடைக்காலக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழீழ ஏதிலியரின் அரசியல், குடியியல் உரிமைகளும் பொருளியல் உரிமைகளும் சட்டத்திலும் நடைமுறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும். திபெத்துப் போன்ற...

பேரறிவாளன் முதலான தமிழர் எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்ய வேண்டி – முதல்வருக்கு விண்ணப்பம்

பேரறிவாளன் முதலான தமிழர் எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்ய வேண்டி – முதல்வருக்கு விண்ணப்பம்

கொளத்தூர் தா.செ.மணி தலைவர்: திராவிடர் விடுதலைக் கழகம்   பெறுநர்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு.  மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். பொருள்: பேரறிவாளன் முதலான தமிழர் எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்ய வேண்டி திரு இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவரும் வாழ்நாள் சிறையாளர்களாக இருந்து வருவதும் அவர்கள் விடுதலைக் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் தமிழக அரசும் கவலையோடும் அக்கறையோடும் இருப்பது தாங்கள் அறிந்ததே. அவர்கள் 27 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்துவிட்ட நிலையில் தங்கள் விடுதலை வேண்டி மத்திய மாநில அரசுகளையும், இந்திய உச்சநீதி மன்றத்தையும் முறைப்படி அணுகினார்கள். அந்தச் செயல்வழியில் இறுதியாக, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு  அவர்களை விடுதலை செய்ய செப்டம்பர் 9,2018...

நாகை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறை 09012019

நாகை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறை 09012019

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறையில் 09.01.2019 அன்று காலை 11.00 மணியளவில் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில்  நடைப்பெற்றது. கூட்டத்திற்கு தலைமை கழக பொறுப்பாளர்கள் ஈரோடு ரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் நா. இளையராஜா வரவேற்றார். கழக வார பத்திரிகை புரட்சி பெரியார் முழக்கம் மற்றும் மாத இதழ் நிமிர்வோம் சந்தா தலைவரிடம் கொடுக்கப்பட்டது. கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகளை கழக தலைவர் அறிவித்தார். மாவட்டத் தலைவர்  ம.மகாலிங்கம் மாவட்ட செயலாளர் தெ.மகேசு மாவட்ட பொருளாளர் ந.விஜயராகவன் மாவட்ட அமைப்பாளர் கு.செந்தில்குமார் மாவட்ட துணை தலைவர் தெ. ரமேஷ் மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் நன்மாறன் மயிலாடுதுறை நகரம். நகரத் தலைவர் நாஞ்சில்.சங்கர் நகர செயலாளர் நி.நடராசன் நகர அமைப்பாளர் தில்லை நாதன் நகர துணை தலைவர் ராஜராஜன் நகர துணை செயலாளர் ஜாகிர் உசேன் மயிலாடுதுறை...

சமூக நீதிக்கு எதிரான10% இடஒதுக்கீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு 12012019

சமூக நீதிக்கு எதிரான10% இடஒதுக்கீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு 12012019

சமூக நீதிக்கு எதிரான 10% பொருளாதார ரீதியான இட ஒதுக்கிட்டைக் கண்டித்தும்பாசிச பாஜக அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகமும் தமிழ்நாடு மாணவர் கழகம் தெற்கு மாவட்டம் சார்பாக 12.01.2019. பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தில் மாலை 4.30க்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் மாநில அமைப்பாளர் ப.இரத்தினசாமி தலைமை தாங்கினார்.. முன்னிலை: அ.கிருஷ்ணமூர்த்தி திவிக மாவட்ட அமைப்பாளர் இதை சீ.ரா.சௌந்தர் தமிழ்நாடு மாணவர் கழகம் மாவட்ட அமைப்பாளர் அவர்கள் ஒருங்கிணைத்தார்.. வெங்கட் அவர்களின் முழுக்கத்துடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியாது.. தொடக்க உரை: ப.இரத்தினசாமி திவிக ஆர்ப்பாட்ட விளக்க உரை: சீ.ரா.சௌந்தர் (தமாக) இடஒதுக்கிடு விளக்க பாடல் :ச.இந்தியப்பிரியன்..(தமாக) இதில் தோழமை அமைப்புகளின் தோழர்களின் கண்டன உரைகள்: கணகுறிஞ்சி, தலைவர்.மக்கள் சிவில் உரிமைக் கழகம்.. இரா.தமிழ்இன்பன், நிறுவனர். விடுதலை வேங்கைகள் கட்சி.. ரவி , புரட்சிகர இளைஞர் முண்ணனி.. ஆறுமுகம், தலைவர்ஜனநாயக மக்கள் கழகம். மற்றும் இந்த நிகழ்வில் பங்குபெற்ற திவிக...

உயர்சாதிக்கான 10% இட ஒதுக்கீட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கோவை 11012019

உயர்சாதிக்கான 10% இட ஒதுக்கீட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கோவை 11012019

சமூகநீதியை சீர்குலைக்கும்* மத்திய பா.ச.க அரசின் உயர்சாதிக்கான 10% இட ஒதுக்கீட்டை கண்டித்து *கண்டன ஆர்ப்பாட்டம்* திராவிடர் விடுதலைக் கழக மாநகர மாவட்டத்தலைவர் தோழர் நேருதாசு தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் கண்டன உரை தோழர்கள் வெண்மணி திராவிடர் தமிழர் கட்சி மலரவன் புரட்சிகர இளைஞர் முன்னணி வழக்கறிஞர் சேகர் Pucl இராமசந்திரன் திவிக இளவேனில் தமிழ்புலிகள் சண்முக சுந்திரம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் MS. வேல்முருகன் CPI ML வழக்கறிஞர் சக்திவேல் Cpi சபரி தமிழ்நாடு மாணவர் கழகமஃ ரமேஷ் முற்போக்கு வழக்கறிஞர் சங்கம் இனியவன் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் தண்டபாணி சமூக நீதி கட்சி வழக்றிஞர் கார்கி வழக்கறிஞர் சத்தியபாலன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர் கூட்டத்திற்கு திவிக தலைமை செய்ற்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம் Pucl பாலமுருகன் திமுக சிங்கை பிரபாகரன் உட்பட 80 திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் நன்றியுரை நிர்மல்குமார் மாநகர மாவட்ட செயலாளர் (11.1.2019)*...

தோழர் விஜயகுமார் தாயார் படத்திறப்பு நிகழ்வு 14012019 கொளத்தூர்

தோழர் விஜயகுமார் தாயார் படத்திறப்பு நிகழ்வு 14012019 கொளத்தூர்

படத்திறப்பு நிகழ்வு தோழர்களுக்கு வணக்கம். 09.01.2019 அன்று மறைவுற்ற பெரியாரியல் சிந்தனையாளர் திரு.இராமசாமி ( ஆசிரியர் ஓய்வு ) அவர்களின் மனைவியும் எனது தாயார் திருமதி ஆர்.என்.காசிமதி அவர்களின் படத்திறப்பு வரும் 14.01.2019 திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெற உள்ளதால் அனைத்து தோழர்களும் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொள்ள அழைக்கின்றேன். எனது தாயார் விருப்பத்திற்கு ஏற்ப உடலை மருத்துவ மாணவர்கள் ஆய்வுக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரிக்கு உடல்தானம் அளிக்கப்பட்டது. இடம் தார்காடு (தபால் நிலையம் அருகில்) கொளத்தூர், சேலம் மாவட்டம். தலைமை தோழர் கு.சூரியகுமார் தி.வி.க. சேலம் மேற்கு மாவட்ட தலைவர். படத்திறப்பாளர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி தலைவர் தி.வி.க. இவண் இரா.விஜயகுமார் ( இராணுவ ஒய்வு ) இரா.சசிகுமார் சன் டிராவல்ஸ் தார்காடு. 94430 30791

தோழர் பொழிலன் அவர்களின் “தமிழ் தேசம்” நூல் வெளியீடு 11012019 சென்னை

தோழர் பொழிலன் அவர்களின் “தமிழ் தேசம்” நூல் வெளியீடு 11012019 சென்னை

மாலை 7.30 மணியளவில் சென்னை புத்தக கண்காட்சி 300 அரங்கில் தோழர் பொழிலன் முன்னிலையில் {“அருவி புத்தக உலகம்”} கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘தமிழ் தேசம்” என்ற நூலை வெளியிட்டார். இந் நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல் முருகன், மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி டைசன் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பை சார்ந்த பலர் கலந்து கொண்டனர். பிறகு அரங்கு 222 {பொதுமை பதிப்பகத்தில்} தோழர் வேல் முருகன் வெளியிட கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி பெற்று கொண்டு உரையாற்றினார்கள். செய்தி குகன்

கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி 08012019

கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி 08012019

08.01.2019 *திராவிடர் விடுதலைக் கழகம்* சார்பாக கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சி வசந்தா திருமண நிலையத்தில் நடைபெற்றது நிகழ்வுக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி  தலைமை ஏற்றார் முதல் நிகழ்ச்சியாக கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி அவர்களால் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டது!!! அதனைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழக பெரியார் சிந்தனை பலகை தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது கடவுள் மறுப்பு தோழர் மதன்குமார் கூற, தோழர் அறிவழகன் வரவேற்புரையாற்றினார்!!! துவக்க உரையாக தோழர் ஈரோடு இரத்தினசாமி திராவிடர் விடுதலை கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் பெரியாரியல் குறித்தும் பேசினார்!!! தமிழ்நாடு மாணவர் கழக மாநில செயலாளர் தோழர் பாரி சிவக்குமார் கருத்துரையாற்றினார்!!! அதனை தொடர்ந்து கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி உரையாற்றினார்!!! பின் தோழர் சூலூர் பன்னீர்செல்வம், தோழர் அய்யனார், தோழர் பழனிவேல் ஆசிரியர், தோழர் முத்துகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் கோபால் ராவணன், தோழர் நட பாபு அம்பேத்கர், தோழர்...

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நாகை 09012019

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நாகை 09012019

நாகை மாவட்டத்தில் 09.01,2019 புதன்காலை 11 மணியளவில் மயிலாடுதுரை கூறை நாடு பகுதியில் உள்ள மினி ஹாலில் கலந்துரையாடல் கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது தோழர் இளையராசா அவர்கள் கடவுள் மறுப்பு கூறி தொடங்கியது

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 10012019

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 10012019

திராவிடர் விடுதலைக் கழகம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் பேராவூரணியில் நடைபெற்றது. கூட்டத்தில், இயக்க பணிகள் கிராமங்கள் தோறும் எடுத்து சென்று மக்களை இயக்கமாக்குவது குறித்து ஆலோசித்து அதற்கான செயல் வரைவுகள் முன்வைக்கப்பட்டது, புரட்சி பெரியார் முழக்கம் ஏடு, நிமிர்வோம் இதழ் சந்தா சேர்ப்பு அதிகப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் பதிவு செய்யபட்டன. கூட்டத்தில் தலைமைக் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய கழக தோழர்கள் தவறாது வந்திருந்து பெரியார், அம்பேத்கர் கொள்கையினை ஒவ்வரிடத்திலும் கொண்டு செல்வோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டு கூட்டத்தினை நிறைவு செய்தார்கள்.

இணை அறிமுக விழா , கழக கொடியேற்று விழா, மற்றும் பெண்விடுதலைக் கருத்தரங்கம் கொளத்தூர் 30122018

இணை அறிமுக விழா , கழக கொடியேற்று விழா, மற்றும் பெண்விடுதலைக் கருத்தரங்கம் கொளத்தூர் 30122018

இணை அறிமுக விழா , கழக கொடியேற்று விழா, மற்றும் பெண்விடுதலைக் கருத்தரங்கம். திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் பகுதி தோழர் சரவணபரத் மற்றும் பிரியதர்சினி ஆகியோரது இணை அறிமுக விழா 30.12.2018 அன்று சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் , கொளத்தூர் ஒன்றியம் அய்யம்புதூர் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணியளவில் அய்யம்புதூரைச் சார்ந்த பெரியார் பெரும் தொண்டர் தோழர்.சி.சுப்பிரமணி அவர்கள் அய்யம்புதூர் பகுதியில் அமைப்பின் கொடிகம்பத்தை நிறுவி , கொடியேற்று விழா ஏற்பாடு செய்திருந்தார். பறை முழக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் .தோழர்.விடுதலை.இராசேந்திரன் அமைப்புக் கொடியை ஏற்றினார். பின்னர் ஊர்வலமாக தோழர்கள் அனைவரும் சென்றனர். அதற்கடுத்து காலை 11 மணியளவில் பெண்விடுதலைக் கருத்தரங்கம் நடைபெற்றது. திவிக பொருளாளர். தோழர்.துரைசாமி தலைமை வகித்தார் . சேலம் மாவட்ட தலைவர் தோழர்.சூரியக்குமார் முன்னிலை வகித்தார். தோழர்.ரத்தினசாமி மற்றும் தோழர்.சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) ஆகியோர்...

தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும்  விளையாட்டுப்போட்டிகள் திருப்பூர் 15012019

தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள் திருப்பூர் 15012019

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள் ! இசை நிகழ்ச்சி ! நாள் : தை1 (15.01.2019) செவ்வாய்க்கிழமை. நேரம் : காலை 8.00 மணி முதல் மாலை வரை. இடம் : பெரியார் திடல்,பெரியார் படிப்பகம்,வீரபாண்டி பிரிவு திருப்பூர். அனைவரும் வருக

19ஆம் ஆண்டு தமிழர் திருநாள். பொங்கல் விழா சென்னை 13012019

19ஆம் ஆண்டு தமிழர் திருநாள். பொங்கல் விழா சென்னை 13012019

*திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் பொங்கல் விழாக் குழு சார்பில்….* *திருவல்லிக்கேணியில் 19ஆம் ஆண்டு தமிழர் திருநாள்., பொங்கல் விழா…வரும் (13.01.2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வி.எம்.தெரு, இராயப்பேட்டை (பெரியார் சிலை அருகில்)* *புதுவை பிரகாசின் “அதிர்வு” கலைக்குழுவினரின்* பறையிசை, சிலம்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் மற்றும் *அருண் ரிதம்ஸ்* வழங்கும் சென்னை கானா, நாட்புறப் பாடல்கள் நிகழ்ச்சிகளோடு நடைபெறும் *கடந்த 06.01.2019 அன்று நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்* பரிசளிப்பு வாழ்த்துரை : *விடுதலை இராசேந்திரன்* பொதுச் செயலாளர், திவிக *திருமுருகன் காந்தி* ஒருங்கிணைப்பாளர்., மே17 இயக்கம் *ஆர்.என்.துரை* சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர், திமுக *பேராசிரியர்.சரசுவதி* *அனுஸ்ரீ* திருநர்காண உரிமை மீட்பு இயக்கம் தொடர்புக்கு : 7299230363

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து… “ஜனவரி 2019” மாத இதழ் வெளிவந்துவிட்டது

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து… “ஜனவரி 2019” மாத இதழ் வெளிவந்துவிட்டது

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் “ஜனவரி 2019” மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 🚸 தலையங்கம் – திசை வழிகாட்டிய திருச்சி பேரணி 🗞 கருஞ்சட்டை – எதிர்நீச்சலின் வரலாறு 🗣🏴பாரதியின் பார்ப்பனியம் : பெரியார் எழுப்பிய கேள்விகள் 🚩🙅‍♀ பெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் – சாஸ்திரங்கள் 🙋‍♀ அய்.நா.வில் தலித் பெண்கள் சமர்ப்பித்த ஆவணம் 💯 ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்றது எப்படி? 📲 பெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்? இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰அஞ்சல் வழியாக பெற – ₹ 300/- 💰 ஆண்டு சந்தா – ₹ 240/- 💰 இதழ் விலை – ₹ 20/- திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

பெரியார்  தொண்டர் உணவகத்தில் நெகிழிப் பயன்பாடு நிறுத்தம்

பெரியார் தொண்டர் உணவகத்தில் நெகிழிப் பயன்பாடு நிறுத்தம்

நெகிழி பொருட்கள் (பிளாஸ்டிக்), நெகிழி பைகள் ஜனவரி 1, 2019 முதல் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மந்தைவெளி பகுதியில் பெரியாரிய தொண்டர் சுரேஷ் நடத்தி வரும் ‘அய்யா உணவகத்தில்’ டிசம்பர் 31 முதல் வாழை இலை, துணிப்பை, பாக்குமட்டை தட்டு போன்றவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் மாரிமுத்து மற்றும் கழகத் தோழர்கள் நேரில்  சென்று வாழ்த்தி வரவேற்றனர். பெரியார் முழக்கம் 03012019 இதழ்

பெரியார் நினைவு நாள் நிகழ்வு

பெரியார் நினைவு நாள் நிகழ்வு

இராசிபுரத்தில் : தந்தைபெரியாரின் 45 வது நினைவேந்தல் நிகழ்வு இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்  இராசிபுரம் ஜபாரதிதாசன் சாலையில் உள்ள தி.வி.கழக அலுவலகம்முன் நடைபெற்றது. பகுத்தறிவு பகலவனுக்கு முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்திய நிகழ்வில்  ர. சுமதிமதிவதனி  (தி.வி.க.), திலகா (இராசிபுரம்) வரவேற்புரையாற்றினார். இரா. பிடல்சேகுவேரா (நகரஅமைப்பாளர் தி.வி.க) தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டவர்கள் : வி.பாலு  நுஒ. ஆஊ, தி.மு.க.முன்னாள் மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர், தலைவர், இராசிபுரம் நகரவளர்ச்சி மன்றம். முன்னிலை: மணிமாறன் (நகர செயலாளர் சி.பி.ஐ.), ஜி.கே. வைகறை சேகர் (மாநில துணைச் செயலாளர் விவசாயஅணி, வி.சி.க.),  கண்ணன் (மாவட்டச் செயலாளர், ஆதித் தமிழர் பேரவை), தட்சிணாமூர்த்தி (மாவட்டத் தலைவர், தமிழர் தேசிய முன்னணி), நாணற்காடன் (மாநிலதுணைசெயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்), சுமன் (மா.துணை செயலாளர், ஆதி தமிழர்பேரவை), அண்ணாதுரை (ஒ.செயலாளர், ஆதிதமிழர் பேரவை), பாலகிருட்டிணன் (புரட்சிகர இளைஞர் முன்னணி), கீதாலட்சுமி...

திருச்சிப் பேரணி : மூத்த கருஞ்சட்டைத் தோழரின் உணர்வு

திருச்சிப் பேரணி : மூத்த கருஞ்சட்டைத் தோழரின் உணர்வு

23.12.2018 அன்று திருச்சியில் நடைபெற்ற பெரியார் கருஞ்சட்டைப் பேரணி மாநாடு குறித்து பொது மக்கள் மற்றும் பெரியார் உணர்வாளர்கள், பெரியார் இயக்கத்தினரிடையே மிகுந்த பேரெழுச்சியும், மகிழ்ச்சி யும் ஒரு புதிய செயல் வேகமும் ஏற்பட்டிருக்கிறது. உணர்வாளர்களிடம் பேசிய போது பெரியார் பெருந்தொண்டர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் வணிகம் நடத்தி வரும் கம்பரசம் பேட்டையைச் சேர்ந்த பெரியவர் இருளாண்டி கூறிய கருத்து: “நான் சிறுவயதிலிருந்தே பெரியார் கொள்கைகளைப் பின்பற்று பவனாகவே இருந்தேன். எனது 18ஆவது வயதில் 1957இல் பெரியார் கூட்டிய தஞ்சை மாநாட் டிற்குப் பிறகு இப்பொழுதுதான் இவ்வளவு பெரும் கருஞ்சட்டைத் தோழர்களைப் பார்க்க முடிந்தது. உணர்ச்சி பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் வடித்தேன். எங்களுக்குப் பிறகு இந்த பெரியார் இயக்கத்தை வழி நடத்த, மக்களிடையே கொண்டு செல்ல யார் இருக்கிறார்கள் என்று நினைத்த வேளையில் பல ஆயிரக்கணக்கில் குறிப்பாக இளைஞர்களும் இளம் பெண்களும் பேரணியில் ஆட்டம் பாட்டம் முழக்கத்துடன் வந்தது...

பரப்புரை இயக்கங்கள்; போராட்டங்கள்; மாநாடுகள் 2018: கழகத்தின் தொடர் களப்பணிகள்

பரப்புரை இயக்கங்கள்; போராட்டங்கள்; மாநாடுகள் 2018: கழகத்தின் தொடர் களப்பணிகள்

2018இல் திராவிடர் விடுதலைக் கழகத்தில் செயலாற்றல் கொண்ட தோழர்கள் தொடர்ச்சியான களப்பணிகளை செய்து முடித்துள்ளனர். வழமையான பொதுக் கூட்டங்கள், பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் ஆகிய வற்றைத் தவிர்த்து மாநாடு, பரப்புரை, போராட்டம் மற்றும் பயிலரங்க நிகழ்வு களை மட்டும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் இடம் பெற்றுள்ள பதிவுகளிலிருந்து தொகுத்துள்ளோம். ஜனவரி: கல்வி – வேலை வாய்ப்பில் – தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள் பறிக்கப்படுவதை விளக்கும் துண்டறிக்கைகளை பல்லாயிரக்கணக்கில் தயாரித்து கழக முன்னணி அமைப்பினர் – தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கல்லூரி, பள்ளி வாயில்களில் மாணவ மாணவிகளிடம் தோழர்கள் வழங்கினர். பா.ஜ.க. பார்ப்பனர் எச். ராஜா நடத்திய ஒரு சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காஞ்சிபுரம் சங்கராச்சாரி விஜயேந்திரன் ‘தமிழ்த் தாய்’ வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க மறுத்ததைக் கண்டித்து சேலம், மேட்டூர், பள்ளிப் பாளையம், ஈரோடு, மார்த்தாண்டம், மதுரை உள்ளிட்ட நகரங்களில்...

திராவிடர் விடுதலைக் கழக மாத நாள் காட்டி !

திராவிடர் விடுதலைக் கழக மாத நாள் காட்டி !

”நாள்காட்டி” திராவிடர் விடுதலைக் கழக மாத நாள் காட்டி ! விலை : ரூபாய் 70.00 மட்டும்.(ரூபாய் எழுபது மட்டும்) பெரியார், அண்ணல் அம்பேத்கர், மேதகு பிரபாகரன், கலைஞர்,  அறிஞர்அண்ணா, காமராஜர், எம்.ஆர்.ராதா, புரட்சிக்கவிஞர் படங்களுடன் அழகிய வடிமைப்பில்,வரலாற்று குறிப்புகளுடன் உள்ள மாத நாள்காட்டி. குறைந்த அளவே அச்சிடப்பட்டு உள்ளது. நாள்காட்டி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவேண்டிய எண் : தோழர் தபசி குமரன், அலைபேசி எண் : 9941759641 தலைமை நிலையச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். (திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட நிர்வாகிகளிடமும் நாள்காட்டி கிடைக்கும்

இராவண காவியம் தொடர் சொற்பொழிவு !

இராவண காவியம் தொடர் சொற்பொழிவு !

இராவண காவியம் தொடர் சொற்பொழிவு ! சொற்பொழிவு : ”புலவர் செந்தலை கெளதமன்” கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, த,பெ,தி,க பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள். நாள் : 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.00 மணி. இடம் : கெளரி திருமண மண்டபம்,சென்டெக்ஸ் அருகில்,சென்னிமலை.

தோழர் பிரியதர்சினி – தோழர் சரவணபரத் இணையேற்பு அறிமுக விழா !

தோழர் பிரியதர்சினி – தோழர் சரவணபரத் இணையேற்பு அறிமுக விழா !

தோழர் பிரியதர்சினி – தோழர் சரவணபரத் இணையேற்பு அறிமுக விழா ! இருசக்கர பேரணி,பெரியார் முழக்கம் நிமிர்வோம் சந்தா வழங்கும் விழா ! நாள் 30.12.2018 ஞாயிறு நேரம் : காலை 9.00 மணி பேரணி துவங்கும் இடம் : பெரியார் படிப்பகம், சோதனைச்சாவடி,கொளத்தூர். கருத்துரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம்.