இந்நூல் எழுதுவதற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல்கள்

இந்நூல் எழுதுவதற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல்கள்

தந்தை பெரியார் எழுதிய ராமாயணப் பாத்திரங்கள்.

கடலங்குடி பண்டித நடேச சாஸ்திரியாரின் வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு.

C.R. ஸ்ரீனிவாச அய்யங்கார் B.A., எழுதிய வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு.

A.V. நரசிம்ம ஆச்சாரியாரின் வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு

கோவிந்த ஆச்சாரியாரின் வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு.

பண்டித மன்மதநாத்தத்தர் எழுதிய வங்களா & ஆங்கில ராமாயண ஆராய்ச்சி ஆகியவையாகும்.

சுமித்திரை, கோசலை, கைகேயி என்ற தசரதன் மனைவியர்கள் முறையே ஹோதா, அத்வர்யூ. உத்காதர என்ற ரிஷிகளுக்குப் பெற்ற பிள்ளைகளே ராம. பரத லஷ்மண சத்துருக்கணர்கள்.”

– மன்மதநாத்தத்தர்

ராமன் சீதையை பட்டமகிஷியாக மணம் புரிந்து கொண்டிருந்தாலும் போகத்துக்கா ஸ்ரீதாமா, சுதாமா, ரதினிபா, பிரபாவதி போன்ற பல பெண்களை வைத்துக் கொண்டிருந்தான்.

வால்மீகி ராமாயணம் அயோத்தியாகாண்டம் 3-ம் சருக்கம்; By C.R. சீனிவாச அய்யங்கார் B.A.

 

திரு ஸ்ரீனிவாச அய்யங்கார் தனது ராமாயண ஆராய்ச்சியில் மேலும் கூறுபவை

(a) இராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போகும் போதும் அவளது அங்கங்களை வர்ணிக்கும்போதும் சீதை கூச்சமில்லாது மகிழ்ச்சியுடனேயே இருந்தாள்.

(b) ராமன் மிகுந்த சந்தேகத்தோடு கேட்கும் போதும் இராவணன் தன்னை அனுபவிக்கவில்லை என்றே சொல்லவில்லை; ஏதோ தெய்வசங்கல்பம் அப்படி நடந்து விட்டது என்னை மன்னித்துவிடு என்றே சொல்கிறாள்.

(c) தன் தன் தங்கையை மானபங்கப்படுத்திய நாடோடிகளுக்கு அவமானத்தையுண்டாக்கவே சீதையை இராவணன் எடுத்து வந்தானே தவிர – சீதை மீது மோகங் கொண்டு அல்ல; ராமனும் அரசனாக இருந்து அவனிடமும் நாடும் படைபட்டாளங்களும் இருந்திருந்தால் இராவணன் நிச்சயம் போர் தொடுத்தே இருப்பான்.

ஜவஹர்லால் நேரு (தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள்)

(a) ஆரிய திராவிட போராட்டத்தை விளக்குவதே ராமாயணக் கதை; திராவிடர்கள் என்பவர்கள் இப்போது சென்னை ராஜ்யம் என்று வழங்கும் பகுதியில் வாழ்பவர்களின் மூதாதையர்களே அவர்கள் நாகரீகத்தில் மிகவும் சிறந்தவர்கள்.

(b) உலகில் தென் இந்தியா மிக உயர்ந்த ஸ்தானத்தை ஒரு காலத்தில் வகித்து வந்தது – அது திராவிடர்களால் ஆளப்பட்டு வந்தது – பின்னர் அது நாடோடிகளான ஆரியர்கள் வசமாயிற்று.

(உலக சரித்திரம் முதல்பாகம் 202, 203-ம் பக்கம்)

(c) இந்திய சரித்திரத்தைப் பார்த்தால் பார்ப்பன மதம் பௌத்த மதத்தை எதிர்த்துத் தாக்கி பிறந்த நாட்டை விட்டே ஓட்டி இருக்கிறது.

(உலக சரித்திரம் முதல்பாகம் 197, 198-ம் பக்கம்)

பாலி நாட்டிலும், இந்திய நாட்டின் வடபாகத்திலும் உள்ள ஆரியர்கள் இன்றைக்கும் மதுவும் மாமிசமும் உண்கின்றனர்; தென்னாடு வந்த ஆரியர்கள் மட்டும் சமணர்களைப் பின்பற்றி புலால் உண்பதை நிறுத்தி இருக்கின்றனர்.

(வரலாற்று ஆராய்ச்சி)

கல்கத்தா சர்வகலாசாலை முன்னாள் சரித்திரப் பேராசிரியர் T.R. பந்தர்கார்

(a) விந்தியத்திற்கு அப்பால் உள்ள திராவிட நாட்டை ஆரிய ரிஷிகள் அய்ந்தாம் படையினராகச் சென்று வேள்வி செய்வது போன்ற வம்பு வேலைகளைச் செய்து கொண்டு, தங்கள் ஆரிய அரசர்களுக்கு ஒற்றர்களாக இருந்து கொண்டு கைப்பற்ற உதவி இருக்கிறார்கள்.

(1918 – ஆண்டு பட்டமளிப்பு விழா சொற்பொழிவு)

(b) ஆரியர்கள் வருகைக்கு, முன்னர் இந்த உபகண்டம் முழுதும் பேசப்பட்ட மொழி தமிழே! இராவணன் பேசியதும் தமிழே! சீதையிடம் அனுமான் பேசியதும் தமிழே! ஆரிய ரிஷிகளும் ராம லக்ஷ்மணர்களும் இங்கு வந்த பின்னர் தமிழ் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

(க்ஷ சொற்பொழிவு)

  1. சக்ரவர்த்தி நாயனார், M.A., I.C.S.. சமண ராமாயண ஆராய்ச்சி

(a) கிஷ்கிந்தையை ஆண்டவர்களும், அங்குள்ள மக்களும் கலை ஆராய்ச்சிகளில் மிகவும் மேம்பட்டவர்கள்.

(b) வானர சேனை என்று பெயர்வரக் காரணம் அவர்கள் கொடியின் சின்னம் குரங்கு.

(c) இராவணன் சமண சமயத்தவன், கொல்லாமை விரதம் பூண்டவன், அவன் தழுவி இருந்த சமண சமயத்தையே பின்னர் சைவமென்று மாற்றி இருக்கின்றனர் – விருஷபர் என்ற முதல் சமண சமய தீர்த்தங்காரையே சிவபெருமான் என்று அழைத்திருக்கின்றனர்.

(d) விரோதத்தின் காரணமாகவே, வால்மீகியும் ராமனும் தங்கள் பகைவர்களுக்கு, இரட்சதர்கள், குரங்குகள் என்ற பொருந்தாப் பட்டங்களைச் சூட்டி இருக்கின்றனர்.

  1. பூர்ணலிங்கம் பிள்ளை , Ex. Ex-Com. Travancore Ravana the great’ இராவணப் பெரியார் என்ற நூலில்

(a) தேசத் துரோகியான விபீஷணனுக்கு ஆழ்வார் பட்டம் கட்டியது விந்தையிலும் விந்தை

(b) ராமலக்ஷ்மணர்கள் சீதையுடன் தண்டகாரண்யம் வந்தது ரிஷிகள் உதவியுடன் அதைக் கைப்பற்றி ஆள்வதற்கே.

(c) ஆக்ரமிப்புக்காகவே ரிஷிகள் தண்டகாரண்யம் வந்தனர்.

(d) பேரழகு வாய்ந்த சூர்ப்பநகையைக் (காமவல்லி) கண்டதுமே ராமன் காதல் கொண்டுவிட்டான்.

(e) ஆரியர்கள் போரில் தங்களைத் தோற்கடித்தவர்களை ராட்சதர்கள் என்றனர்.

 

பிர்ம விளக்கம்

ஆர்ய ரிஷிகள் = ஒற்றர்கள்

தேவர்கள் = தவவலிமை மிக்கவர்கள்

அசுரர்கள் = புயவலிமை மிக்கவர்கள்

ராட்சதர்கள் = இயற்கையை வணங்கியவர்கள்.

அசுரர்கள் = ஆரிய வேதங்களையும், கடவுளர்களையும் எதிர்த்தவர்கள்

ராக்ஷசன் = ரக்ஷகன்.

திராவிட வீரர்களை; பயங்கர உருவினர்கள், மாயாவிகள், கோரகிருத்தியங்களைச் செய்பவர்கள், ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்கள் என்று கதை கட்டிவிட்டவர்கள் ஆரியர்களே.

(வேதகால இந்தியா 296-ம் பக்கம்)

வீரம்மிக்க ஒரு மரபினர் தென் இந்தியாவை ஆண்டு வந்தது மறுக்க முடியாத உண்மை .

(கிரிபித் எழுதிய ஆங்கில ராமாயணம்)

“ராமாயணம் ஒரு கற்பனை”

பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார்

(இலங்கை சொற்பொழிவு)

தென் இந்தியாவில் இருந்த மக்களே தான் ராமாயணத்தில் அரக்கர்கள் என்றும் குரங்குகள் என்றும் அமைக்கப் பட்டிருக்கிறார்கள்.

விவேகானந்தர், (சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்)

ராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். ராமாயணத்தில் காணப்படும் குரங்குகள் கரடிகள் என்பவைகள்; தென் இந்தியாவில் உள்ளவர்கள் – ஆரியர் அல்லாதவர்களைக் குறிப்பதாகும்.

(பண்டைய இந்திய நாகரீகம் பக்கம் 139-141) By ரொமேஷ் சந்திரதத்

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் கீழ்த்திசை நாடுகளின் வரலாற்று துறை ஆராய்ச்சிப் பேராசிரியை *(Paula Richman) பவுலா ரிச்மான் தொகுத்துள்ள “Many Ramayanas”

* மேற்கண்ட ஆசிரியை தற்போது அந்தப் பல்கலைக் கழக உதவியுடன் நமது ராமாயண நாடக நூலையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

You may also like...