உலகத் தாய்மொழி நாள் – ஈரோடு பொதுக்கூட்டம்
21.02.2020 அன்று உலகத் தாய் மொழி நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு, வடக்கு மற்றும் நாமக்கல் மாவட்ட கழகங்கள் ஒருங்கிணைப் பில் 23.02.2020 அன்று ஈரோடு திருநகர் காலனி பகுதியில் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது,
நிகழ்வின் தொடக்கத்தில் தோழர் சித்திக், தமுமுக மாவட்டத் தலைவர் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ச்சி யாக இணைய தள பொறுப்பாளர் விஜய்குமார், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் முத்து பாண்டி குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சிற்றுரை ஆற்றினர்.
அடுத்ததாக ‘நாடு எங்கே போய்க் கொண்டுள்ளது‘ என்ற தலைப்பில் புதுகை பூபாளம் குழுவினர் பல்வேறு பகுத்தறிவு கருத்துக்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கருத்துக்களையும் காண்பவர் கேட்பவர் மகிழ்ந்து பின் சிந்திக்கும் வண்ணம் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக பாடல், இசையோடு கலை நிகழ்ச்சி நடத்தினர். மக்கள் அனை வரும் ஆரவாரமிட்டு, கைத்தட்டி உற் சாகப்படுத்தி மகிழ்ந்து செவிமடுத்தனர்
கழகத் தலைவர் அவர்களின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான உரையை ‘இந்திய நாட்டினருக்கும் எதிரானது தான் குடியுரிமைத் திருத்தச் சட்டம்‘ என்ற புத்தகத்தை கஸ்தூரி (மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர்) அறிமுகப் படுத்தினார். மேலும் கழகப் பொதுச் செயலாளரின் உரையான ‘குடியுரிமைச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்’ என்ற புத்தகத்தை ரியா (கருவேப்பம் பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்) அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் காஞ்சி ஜெய்னுலாப்தீன், அஸ்ஸாம் உயர்நீதிமன்றத்தில் தற்போது வெளி யாகியுள்ள ஜுபைதா பேகத்தின் குடியுரிமை வழக்கினை எடுத்துக் கூறி பல்வேறு சான்றிதழ்களை தாக்கல் செய்த போதும் குடியுரிமை மறுக்கப் பட்டுள்ளதை விளக்கி, இந்த திருத்தச் சட்டம் எவ்வாறெல்லாம் இந்த நாட்டின் குடிமக்களை அலை கழிக்கிறது என்பதை எடுத்துரைத்தார்.
இறுதியாக கழகத் தலைவர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பல்வேறு இன்னல்களை எடுத்துக் கூறினார்.
குறிப்பாக அசாம் உயர்நீதி மன்றத்தில் பிப்ரவரி, 12 ஆம் தேதி வந்த ஒரு தீர்ப்பில், முனீந்திர பிஸ்வாஸ் என்கின்ற இந்துக்கு குடியரிமை இல்லை என்று தீர்ப்பில் சொல் கிறார்கள். அவர் அப்பா இந்திர மோகன் பிஸ்வாஸ் இராணுவத்தில் பணியாற்றியவர். அவருடைய தாத்தா துர்கா சரண் பிஸ்வாஸ், அவரும் இராணுவத்தில் பணியாற்றியவர். இராணுவத்தில் பணியாற்றியவரின் பேரனுக்கு குடியுரிமை இல்லை யென்று கூறிவிட்டார்கள். நிராகரித்து விட்டார்கள்.
குடியுரிமை மறுக்கப்படுவது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களுக்கும் இதன் ஆபத்து உள்ளது என்று எடுத் துரைத்து அனைவரும் போராட்டக் களத்திற்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தார்
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திருநங்கை ரியாவுக்கு பயனாடை அணிவித்து கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘திராவிட பெரியார் யாருக்கு எதிரி?’ என்ற புத்தகம் பரிசளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட செயலாளர் எழில் சுந்தரம் நன்றியுரை நவின்றார்.
நிகழ்வில் நிமிர்வோம் மற்றும் பெரியார் முழக்க சந்தாவினை 20 நபர்களுக்கு 10,000 ரூபாய் கழகத் தலை வரிடம் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் வேணுகோபால் வழங்கினார்.
பெரும் எழுச்சியோடு நடந்த நிகழ்விற்கு ஈரோடு வடக்கு, தெற்கு, மற்றும் நாமக்கல் மாவட்ட தோழர்கள் வந்திருந்தனர்.
செய்தி: விஜய்குமார்
பெரியார் முழக்கம் 27022020 இதழ்