திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டம்: கொளத்தூர் மணி பங்கேற்பு

NPR-NRC-CAA -க்கு எதிரான தொடர் மக்கள் தர்ணா போராட் டத்தில் 22.02.2020 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று சிறப்புரை யாற்றினார். திருப்பூர் இளைஞர்களின் கூட்டமைப்பு, குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் திருப்பூர் காங்கேயம் ரோடு CTC டிப்போ பின்புறம் உள்ள அறிவொளி சாலையில் பாஜக மோடிஅரசால் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், NRC NPR-ஐயும் திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து நடந்து வரும் தொடர் மக்கள் தர்ணா போராட்டத்தின் 7ஆவது நாளான 21.02.202 அன்று மாலை 6.00 மணிக்கு கழகத் தலைவர் CAA – NRC- NRP இன் அபாயம் குறித்து சிறப்புரையாற்றினார். இப்போராட்டத்தில் ஆயிரக் கணக்கான இசுலாமிய சகோதரர்களும், சகோதரிகளும், குழந்தைகளுடன் பங்கேற்று போராடி வருகிறார்கள்.

கழகத் தலைவருடன் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத்த லைவர் முகில்ராசு, இணைய தள பொறுப்பாளர் விஜய குமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக நிர்வாகிகள் அகிலன், தனபால், சங்கீதா, மாதவன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடான ‘இந்திய நாட்டினருக்கும் எதிரானதுதான் குடியுரிமை திருத்தச் சட்டம்’ – கொளத்தூர் மணி, ‘குடியுரிமைச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம் ?’ விடுதலை ராசேந்திரன் ஆகிய இந்த இரண்டு நூல்கள் இந்த போராட்டக்களத்தில் போராட்ட குழுவினரால் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மேலும், இந்திய விடுதலைப் போராட்டத்தில்  முஸ்லீம்களின் பங்கு எனும் நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு திருப்பூர் ஷாஹின் பாஃக் போராட்ட குழுவினர் வழங்கினர்.

பெரியார் முழக்கம் 27022020 இதழ்

You may also like...