திருப்பூர் அவினாசி பழங்கரை – ஆர் எஸ் எஸ் மாவட்ட தலைவர் வன்கொடுமை – திவிக உள்ளிட்ட அமைப்புகள் புகார்

திராவிடர் விடுதலைக்கழகம்

உள்ளிட்ட அனைத்து முற்போக்கு அமைப்புகள் இனைந்து ஜாதி ஒழிப்பு கூட்டியக்கம் தொடங்கி அதன் வாயிலாக போராடி அவினாசி ஒன்றியம் பழங்கரை கிராமம் தேவம்பாளையம் அருந்ததிய பகுதியில் வசித்து வரும் ஜாதிய ஒடுக்குமுறைக்கு ஆளான லோகநாதன், த/பெ.முருகன்
மாலதி ,த | பெ. முருகன் (இருவரும் அண்ணன் தங்கை) ஆகியோர் மீது ஜாதிய வன்மத்தை நடத்திய ஆதிக்க ஜாதியினர் மீது முதல் தகவல் அறிக்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது
~~~~~~~~~~~~~~~~~
16.5.2020
~~~~~~~~
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா பழங்கரை கிராமம் தேவம்பாளையம் அருந்ததியர் பகுதியில் வசித்துவரும் முருகன் என்பவர் மகன் லோகநாதன், மகள் மாலதி,
அவர்களது வீட்டில் இருந்து அருகில் உள்ள கல்லாங்காடு தோட்டத்தில் லோகநாதன் ஆட்டுக்குட்டி சென்று விட்டது, என்று சொல்லி கல்லாங்காடு தோட்டத்தின் உரிமையாளர் மூர்த்தியின் மகன் பிரவீன் என்பவர், ஆட்டுக்குட்டியை பிடித்துச் சென்று விட்டு ,கொடுக்க மறுத்திருக்கிறார்

லோகநாதன் மாலதியும் இருவரும் நேரில் தோட்டத்திற்குள் சென்று ஆட்க்குட்டியை கேட்டதற்காக பிரவீன் அவரது தாயார் அவரது பாட்டி அனைவரும் சேர்ந்து, சக்கிலி முண்ட, சக்கிலி தாயோலி,
எங்க தோட்டத்தில் வந்து திமிராக பேசிறீங்களா, என்று இழிவு படுத்தி பேசியுள்ளனர், இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான லோகநாதன் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் ஊர்க்கூட்டம் என்ற பெயரில் பழங்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில்
கட்டபஞ்சாயத்து செய்துள்ளார்.

அதில் லோகநாதன் தந்தை முருகன் மன்னிப்புக் கேட்டதும், போதுமானதல்ல என்று மறுநாள் மீண்டும் ஊர்க்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, தேவம்பாளையம் பூர்வீகமாக கொண்ட
ஆர். எஸ்.எஸ் மாவட்ட தலைவர் திரு. ஆம்ஸ்டிராங் பழனிச்சாமி மற்றும் தேவம்பாளையம் ஊர் ஆதிக்க ஜாதியின் தலைவர் சுதாமா கோபால், ஆகியோர் தலைமையில் ஊர்க் கூட்டம் நடைபெற்றது

அக்கூட்டத்தில் அருந்ததியர்களின் தலைவர் காளிமுத்து ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட லோகநாதன் குடும்பத்தாரை அதாவது (லோகநாதன், லோகநாதன் தாயார், சகோதரி மாலதி தந்தை முருகன் ) அனைவரையும், இரு சமூக மக்கள் கூடி இருக்கும் போதே ஆதிக்க ஜாதியினர் காலில் விழுந்து மன்னிப்புக் கேள் என வற்புறுத்தியுள்ளார்

பாதிக்கப்பட்ட லோகநாதன் நான் எந்த தவறும் செய்யவில்லை நான் யார் காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அவர் மறுத்துவிட்டதன் காரணமாக அவர்களை தேவம்பாளையத்தைச் சார்ந்த
அனைத்து அருந்ததியர் மக்களும் சேர்ந்து ஆதிக்க ஜாதியினரை எதிர்த்துப் பேசிய ஒரே காரணத்துக்காக நீ உடனே ஊரை விட்டு காலி செய்ய வேண்டும் என்று கூறி மிகப்பெரிய துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.,

லோகநாதன் குடும்பத்தாரை நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்பட்டதன் இதன் விளைவாக அவர்கள் ஊரை
விட்டு வெளியேறி
தனது உறவினர்களின் வீடுகளில்
வசிக்க தொடங்கி எங்கு செல்வதென்று தெரியாமல் தவித்தது வந்த சூழ்நிலையில தெரிந்தவர்கள் மூலம் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ்சியவாதிகளை நாடினார் உடனடியாக

திராவிடர் விடுதலைக்கழகம்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
ஆதித்தமிழர் பேரவை
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
புரட்சிகர இளைஞர் முன்னணி
மக்கள் அதிகாரம்
திராவிடர் தளம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
தமிழ் புலிகள் கட்சி
தலித் விடுதலை கட்சி
திராவிடர் தமிழர் கட்சி
சமூக நீதி கட்சி
அம்பேத்கர் சட்ட ஆதார மையம்
தோழர்.ஆறுமுகம்
உள்ளிட்ட தோழமை அமைப்புகளை
உள்ளடக்கி ஜாதி ஒழிப்பு கூட்டியக்கம் வாயிலாக அனைவரும் ஒருங்கிணைந்து நடந்த ஜாதிய வன்முறை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது அதன் பிறகே விசாரனை துரிதப்படுத்தப்பட்டது அவிநாசி காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் விசாரணைக்கு தொடங்கப்பட்டது

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்து முன்னணி விஷ்வ ஹிந்து பரிஷத் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிபிஐ உள்ளிட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது

நடந்த சம்பவங்களை பாதிக்கப்பட்ட லோகநாதன் , அவரது சகோதரி மாலதி ஆகியோர் நேரடியாக துணை கண்காணிப்பாளர் இடத்தில் நடந்த சம்பவங்களை பதிவு செய்ததார் அதன் பிறகு வழங்கப்பட்ட புகார் மனு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது

குறிப்பாக விசாரணையின்போது மாலதி அவர்கள் தனக்கு நடந்த கொடுமையை தெளிவாக எடுத்துரைத்தார் நான் பிகாம் சிஏ படித்துக்கொண்டிருக்கிறேன் என்னைப் பார்த்து என் சாதியை சொல்லி முண்டச்சி என்று சொல்லுகிறார்.அவர் என் தாயைப் போல் உள்ளார் ,என் பாட்டியை போல் உள்ளார், அவருக்கு தெரியாதா முண்டச்சி என்பது கணவன் இறந்து விட்டால் அவர்களுக்கு வைத்திருக்கக்கூடிய பெயர் என்று
என தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் அதுபோக என்னையும் என் குடும்பத்தாரையும் காலில் விழு என்று அனைரின் முன்னால் சொன்னது எங்களுக்கு நடுக்கத்தையும் ,பயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது என்று அவர் கூறும்போது நமக்கு கண்கள் கசிந்தன .

அறிவுசார்ந்த சமூகமே நாம் எவ்வளவு உயர் கல்வி கற்றாலும் , உயர்பதவி அடைந்தாலும் இப்படி தரம் தாழ்ந்து நடந்து கொள்வதால் என்ன பயன் ?நோய்த்தொற்று ஏற்பட்டபோது காலிலும் கழுத்திலும் மாலைகளை அணிவித்து நீங்கள் எங்கள் உயிர் காக்கும் உறவு என்று கொண்டாடினீர்கள் இன்று எங்கே போனது உங்கள் உறவு சிந்திப்போம்

முகில் இராசு
மாவட்டத் தலைவர்
திராவிடர் விடுதலைக்கழகம்.
திருப்பூர் .

You may also like...