75 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு மா.பா. மணிகண்டன் விடுதலை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் கடந்த மே 22ந் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து மதுரையில் நடைபெற்ற போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைக்கு மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் மா.பா. மணிகண்டன் தான் காரணம் என காவல்துறை பொய் வழக்கு போட்டு கடந்த 2018ஆகஸ்ட் 23ந் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது அவர் வெளியில் வரக்கூடாது என்பதற்காக முதலில் போடப்பட்ட வழக்கில் பிணை கிடைத்தும் மேலும் பொய் வழக்குகளை போட்டு வெளியில் வரவிடாமல் தடுத்தது காவல்துறை. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றம் வரை சென்று காவல்துறையின் பொய் வழக்குகளை முறியடித்து நவம்பர் 9ந் தேதி காலை 7.மணிக்கு மதுரை மாவட்ட செயலாளர் மா.பா. மணிகண்டன் 75 நாள் சிறையிலிருந்து விடுதலையானார். மா.பா. மணிகண்டனை அமைப்பு செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் சூலூர்...