75 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு மா.பா. மணிகண்டன் விடுதலை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் கடந்த மே 22ந் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து மதுரையில் நடைபெற்ற போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைக்கு மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் மா.பா. மணிகண்டன் தான் காரணம் என காவல்துறை பொய் வழக்கு போட்டு கடந்த 2018ஆகஸ்ட் 23ந் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது அவர் வெளியில் வரக்கூடாது என்பதற்காக முதலில் போடப்பட்ட வழக்கில் பிணை கிடைத்தும் மேலும் பொய் வழக்குகளை போட்டு வெளியில் வரவிடாமல் தடுத்தது காவல்துறை. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றம் வரை சென்று காவல்துறையின் பொய் வழக்குகளை முறியடித்து நவம்பர் 9ந் தேதி காலை 7.மணிக்கு மதுரை மாவட்ட செயலாளர் மா.பா. மணிகண்டன் 75 நாள் சிறையிலிருந்து விடுதலையானார்.
மா.பா. மணிகண்டனை அமைப்பு செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறை வாசலில் வரவேற்றனர். மா.பா. மணிகண்டன் சிறைபட்டதிலிருந்து அவரது விடுதலைக்காக மதுரை மாவட்ட பொறுப்பாளர் காமாட்சி பாண்டி, அழகர் பிரபாகர், மாப்பிள்ளை சாமி, செந்தில், கணேஷ், மீ.த. பாண்டியன், மேரி, மருத்துவர் ஆனந்தி ஆகியோர் நீதிமன்ற பணிகளுக்கு உதவியாக பணியாற்றினர். நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிருஷ்ணன் மற்றும் திருமுருகன் ஆகியோர் இவ்வழக்குகளுக்காக வாதாடி பிணையில் விடுதலை செய்ய உதவி புரிந்தனர். விடுதலையான மா.பா.மணிகண்டன், விடுதலையானதும் பெரியார், அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்தார். அதன் பின் பிணை கிடைக்க உதவிய முத்துராகு இல்லத்திற்கு சென்று சந்தித்து நன்றி தெரிவித்து விட்டு மா.பா. இல்லத்துக்கு அழைத்துச் சென்று குடும்பத்தினரை சந்தித்து அளவளாவி விட்டு கழக பொறுப்பாளர்கள் விடை பெற்றனர்.
பெரியார் முழக்கம் 06122018 இதழ்