மதுரையில் கல்வி உரிமை மீட்பு தெருமுனைக் கூட்டம்

மதுரை திவிக சார்பில் காமராசர் பிறந்த நாளையொட்டி புதூர் பேருந்து நிலையத்தில் 9.8.19 அன்று மாலை “கல்வி உரிமை மீட்பு தெருமுனைக் கூட்டம்” மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி தலைமையில் நடைபெற்றது. பேராசிரியர் முரளி (பி.யு.சி.எல்.), பேரறிவாளன் (பொதுச் செயலாளர், தமிழ் புலிகள் கட்சி), கபீர்நகர் கார்த்தீ, (துணைப் பொதுச் செயலாளர், ஆதித்தமிழர் பேரவை), மெய்யப்பன் (மே 17), குமரன், (புரட்சிகர இளைஞர் முன்னணி), பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்), ஆரோக்கிய மேரி, வழக்கறிஞர் கிருஷ்ணன் உள்ளிட்ட தோழமை அமைப்பு தோழர்கள் சிறப்புரையாற்றினர்.  பேருந்து நிலையத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் பங்கேற்று தானாக முன் வந்து நிதியளித்தனர்.

பெரியார் முழக்கம் 15082019 இதழ்

You may also like...