அனுமானுக்கு ‘கம்யூனிட்டி’ சான்றிதழ்
இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்குப் போன உ.பி. முதல்வர் ஆதித்யநாத் – ஹனுமான் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்று பேசியிருக்கிறார். இதற்கு இராஜஸ்தான் ‘சர்வ பிராமண மகாசபை’ என்ற பார்ப்பன அமைப்பின் தலைவர் சுரேஷ் மிஸ்ரா என்பவர் ஹனுமான் ஒரு ‘பிராமணன்’ அவனை எப்படி ‘தலித்’ என்று கூறலாம் என்று எதிர்ப்பு தெரிவித்து, 3 நாட்களுக்குள் ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ‘அனுமானுக்கு’ உ.பி. அரசும், ‘பிராமண’ மகாசபையும் ‘ஜாதிச் சான்றிதழ்’களை தயாரித்து வைத்திருக்கின்றன போலும். தேர்தல் பிரச்சாரத்தில் மத அடிப்படையில் வாக்கு கேட்கக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. ‘அனுமானை’யும் ‘இராமனை’யும் கூறி உ.பி. முதல்வரே ‘இந்து’க்கள் வாக்குகளை வாங்கி விடலாம் என்று பேசி வருவதற்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ, நமக்குத் தெரியாது. இதற்கிடையே உ.பி. மாநிலத்தில் ‘பீம்சேனை’ என்ற தலித் அமைப்பின் தலைவர் சந்திரசேகர், உ.பி....
