Category: பெரியார் முழக்கம் 2022

அரிசி, பருப்புக்கு ஜிஎஸ்டி வரி: தவறான செய்திக்கு நிதியமைச்சர் மறுப்பு

அரிசி, பருப்புக்கு ஜிஎஸ்டி வரி: தவறான செய்திக்கு நிதியமைச்சர் மறுப்பு

அரிசி, தயிர்  உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித் துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:  அரிசி உள்ளிட்ட, பேக்கிங், லேபிள்  செய்யப்பட்ட பல உணவுப்  பொருட்கள் மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்டது குறித்து பல்வேறு தவறான செய்திகள் உலவி வருகின்றன. ஆதலால் இந் நிகழ்வு குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது அவசியமாகும். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 45 வது கூட்டத்தில் முடிவு செய்தவாறு, பின்வரும் இனங்களை பரிசீலித்து, பரிந்துரைகளை அளித்திட அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. வரி விகி தங்களை எளிமைப்படுத்தி வரி  கட்டமைப்பினை சீரமைத்தல்.  தற்போதைய வரி விகிதங்களை மறு ஆய்வு செய்து வரி வருவாயினைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்தல். இக்குழுவில் கர்நாடகா மாநில முதல்வர் ஒருங்கிணைப்பாளராக வும், பீகார், கோவா, கேரளம்,...

சத்துணவில் ‘சனாதனம்’: முட்டைக்குத் தடை?

சத்துணவில் ‘சனாதனம்’: முட்டைக்குத் தடை?

வைதீக மதம் அசைவ உணவை முழுமையாக வெறுக்கிறது. அசைவ உணவை சாப்பிடாமல் இருப்பது தான் இந்து தர்மம் என்று கருதுகிறது. அதனால் தான் பார்ப்பனர்கள் அசைவ உணவை வெறுக்கிறார்கள். ஆனால், குழந்தைகளுக்கு புரதச் சத்து கண்டிப்பாக வேண்டும் என்ற அடிப்படையில் மதிய உணவுத் திட்டத்தில்  முட்டை போடப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் நடைபெற்று வருகிற பாரதிய ஜனதா கட்சி வைதீகப் பார்ப்பனியக் கொள்கையை ஏற்று, “குழந்தைகளுக்கு முட்டை போடுவது அவர்களுடைய ஆரோக்கியத்துக்கு எதிரானது, கொழுப்புச் சத்தை குழந்தைகளுக்கு உருவாக்கும், ஹார்மோன் பிரச்சனைகளை உருவாக்கும்” என்று ஒரு முடிவிற்கு வந்திருக்கிறது. கர்நாடகத்தில் பாடத்திட்டத்தை எப்படி அமைப்பது என்று உருவாக்கப்பட்ட ஒரு குழு, பாடத் திட்டத்தையும் தாண்டி மதிய உணவுத் திட்டத்திற்கும் ஒரு பரிந்துரையை வழங்கியிருக்கிறது. அதில் தரப்பட்ட பரிந்துரைதான் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தில் முட்டை போடக்கூடாது என்பதாகும். இந்த அறிக்கை கர்நாடக அரசிடமும், சூஊநுசுகூ என்று சொல்லப்படுகின்ற தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி...

மதம் மரணத்துக்கா? மனித சமூகத்துக்கா?

மதம் மரணத்துக்கா? மனித சமூகத்துக்கா?

‘அக்னி பாத்’ திட்டத்துக்கு வடமாநிலங்களில், இளைஞர்கள் பலரும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஆனாலும், எதிர்ப்புகளை புறந்தள்ளி திட்டம்நிறைவேறத் தொடங்கியுள்ளது. இந்த அக்னிபாத் திட்டத்தில் நான்காண்டுகள் பயிற்சி பெற்று வருபவர்களுக்கு அரசு வேலை உத்திரவாதம் எதையும் தராது. ஏற்கெனவே இராணுவத்தில் இருக்கின்றவர்களுக்கான சலுகைகளும் இவர்களுக்குக் கிடையாது. எனவே, அக்னிபாத் திட்டம் என்பது வேறு; இராணுவத்தில் பணியாற்றுவது என்பது வேறு. இந்த அக்னிபாத் திட்டத்திலும் இட ஒதுக்கீடு கிடையாது. இராணுவத்திலும் இட ஒதுக்கீடு கிடையாது. இட ஒதுக்கீடே கிடையாது என்கிறபோது ஜாதி, மத அடையாளங்களை ஏன் விண்ணப்பத்தில் கேட்க வேண்டும் ? அக்னிபாத் திட்டத்திற்கு ஜாதி, மத அடையாளங்கள் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளன. எதற்காக இந்த கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள்? ஒரு குறிப்பிட்ட மதத்தினரை  சேர்ப்பதற்காக கேட்கிறீர்களா ? அல்லது ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் இராணுவத்தில் சேர்வதற்காக கேட்கிறீர்களா ? என்று வட நாட்டில் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அரசு இதற்கு...

பாராட்டத்தக்க முடிவு: அரசுப் பள்ளிகளில் பெரியார் வினா-விடை

பாராட்டத்தக்க முடிவு: அரசுப் பள்ளிகளில் பெரியார் வினா-விடை

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பெரியார் 1000 வினா விடை நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது, உண்மையி லேயே பாராட்டி வரவேற்கத்தக்க வேண்டிய நிகழ்வாகும். ஆகஸ்டு 19, 20, 21 தேதிகளில் இந்தப் போட்டியை நடத்த வேண்டுமென அந்த ஆணையம் கூறியிருக்கிறது. தமிழ்நாட்டில், தமிழ்நாட்டு மாணவர்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் படித்துக் கொண் டிருந்தாலும் அதனுடைய வரலாறு அவர்களுக்குப் புரியவில்லை. எந்த இட ஒதுக்கீட்டின் கீழ் அவர்கள் படிக்கிறார்களோ, அந்த இட ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தைப் பற்றிய வரலாற்றுப் புரிதல்களும் அவர்களுக்கு இல்லை. எனவே தமிழ்நாட்டினுடைய சமூக நீதி வரலாறு, சமூக நீதிக்காக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டக் களங்கள், தமிழ்நாட்டின் சமூகச் சூழ்நிலை, தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிற வளர்ச்சி குறித்த சிந்தனைகளை  பள்ளி மாணவர்களிடத்திலே விதைக்கப்பட வேண்டியது, மிக மிக முக்கியமான ஒன்றாகும். இந்துத்துவ சக்திகள், உண்மைக்கு மாறான,...

கழகத் தோழர்களுக்கு இணையதள பயிலரங்கம்

கழகத் தோழர்களுக்கு இணையதள பயிலரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் இணையதள பயிலரங்கம் திருச்சி டான் போஸ்கோ மீடியா அரங்கில் 22.07.22 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் தொடங்கி கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  முன்னிலையிலும் நடைபெற்றது. முதல் நிகழ்வில் கழக சமூக ஊடக பொறுப்பாளர் பரிமளராசன் அறிமுக உரையாக பெரியார் காலத்தில் இருந்த பரப்புரை வடிவங்களும், காலமாற்றத்தில் பரப்புரை வடிவங்களின் மாற்றங்களும், தற்போதைய சூழலில் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் தாக்கங்கள் குறித்தும், சமூக ஊடகங்களில் கழகத் தோழர்கள் பணியாற்றுவது குறித்தும் பேசினார். பயிலரங்கின் சிறப்பு அழைப்பாளரான ‘யூடர்ன்’ வலைத்தளத்தின் உரிமை யாளரும், பத்திரிக்கையாளர், குறும்பட தயாரிப்பாளர் ‘யூ டியுபர்’ அயன் கார்த்திகேயன் அவர்கள் சிறப்புரையாற்றினார். செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பும் செய்திகளின் உண்மை தன்மைகளை எப்படி கண்டறிவது மற்றும் செய்திகளை  போலியாக உருவாக்கி எப்படி கட்டமைக்கிறார்கள் என்பது குறித்தும் இவற்றை நாம் எவ்வாறு அடையாளம் கண்டு பிரித்துப் பார்ப்பது என்பது...

மூன்று நாள்கள் திருச்சியில் விவாதங்களுடன் நடந்தன களப்பணியாளர்களுக்கு கழகம் பயிற்சி வகுப்புகள்

மூன்று நாள்கள் திருச்சியில் விவாதங்களுடன் நடந்தன களப்பணியாளர்களுக்கு கழகம் பயிற்சி வகுப்புகள்

திராவிடர் விடுதலைக் கழகத் தின் களப் பணியாளர்கள் 47 பேருக்கு பயிற்சி முகாம், திருச்சி டான்பாஸ்கோ மீடியா அரங்கில் ஜூலை 23, 24, 25 தேதிகளில் நடைபெற்றது. பல்வேறு தலைப்பு களில் வகுப்புகள் நடத்தப்பட்ட தோடு விவாதங்களுடன் நடந்தன. முதல் நாள்: கொள்கை முன்னெ டுப்பில் பெரியாரின் அணுகு முறைகள் – விடுதலை இராசேந்திரன், பெண் ணியம்/டுழுஞகூணு – ஆசிரியர் சிவகாமி, தமிழ் வளர்ச்சியில் பெரியாரின் தொண்டு – பால் பிரபாகரன், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் / போதாமைகள்/ஆணவக் கொலைகள் – திண்டிவனம் இரா.முருகப்பன். இரண்டாம் நாள் : பெரியாரும் அயோத்திதாசரும் / அம்பேத்கர்/ எம்.சி. இராஜா / இரட்டைமலை சீனிவாசன் /சகஜானந்தா ஆகியோரும் – கொளத்தூர் மணி, மக்கள் உளவிய லும் கொள்கை பரப்புரைகளும் – மருத்துவர் சிவபாலன், இந்திய ஒன்றியமும் தமிழர் தன்னாட்சியும் – ஆ.வந்தியத்தேவன் (மதிமுக), ஆர்.எஸ்.எஸ். பண்பாட்டுப் புரட்டுகள் – விடுதலை இராசேந்திரன். மூன்றாம் நாள்...

மதுரையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி

மதுரையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி

தமிழ் நாடு அரசின் உயர்கல்வித் துறையை புறக்கணித்து மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு  விழாவில் பங்கேற்க வந்த ஆர்.என். ரவியைக் கண்டித்து மதுரையில் மாவட்ட கழக ஒருங் கிணைப்பில் அனைத்து ஜனநாயக இயக்கங்களின் சார்பில், 13.7.2022 அன்று காலை 11 மணியளவில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலார் மா.பா. மணி அமுதன் தலைமை தாங்கினார். சி.பி.ஐ., சி.பி.எம்., அதிமமுக, தபெதிக, தமுமுக, தமிழ் புலிகள், ஆதித்தமிழர் பேரவை,  ஆதித்தமிழர் கட்சி,  புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட இயக்கங்களின் மாநில,  மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தோழர்களையும் காவல் துறை கைது செய்து மாலையில் விடுவித்தது. பெரியார் முழக்கம் 21072022 இதழ்

பாஜக நிர்வாகிகள் மீது கழகம் புகார் மனு

பாஜக நிர்வாகிகள் மீது கழகம் புகார் மனு

திருப்பூரில் 15.07.22 அன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முறையான அனுமதி ஏதும் இல்லாமல் செல்ஃபி வித் அண்ணாமலை என்று விளம்பரம் செய்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கல்லூரி முதல்வருக்கு மிரட்டல் விடுத்தும், கல்லூரி மாணவிகள், மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளின் மீது தக்க பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளும்படி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 16.07 22 திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு தலைமை யில் திருப்பூர் மாநகரச் செயலாளர்  மாதவன், 15 வேலம்பாளையம் பொறுப்பாளர் மாரிமுத்து, தோழர்கள் திலகவதி, பிரசாந்த் ஆகியோர் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 21072022 இதழ்

மகிழ் உணவகம் : கழகத் தலைவர் திறந்தார்

மகிழ் உணவகம் : கழகத் தலைவர் திறந்தார்

ஈரோடு வெள்ளோட்டில் மகிழ் உணவகத்தை 17.07.2022 ஞாயிறு அன்று  கழகத் தலைவர் கொளத்தூர் மணி  திறந்து வைத்தார். பெயர்ப் பலகையை திமுக வின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்  வி.சி. சந்திரகுமார் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திமுக மாநகர பகுதி செயலாளர் அக்னி சந்திரன், கொங்கு இளைஞர் பேரவை லிங்கேஸ்வரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக தலைமைக் குழு உறுப்பினர் காவலாண்டியூர் ஈஸ்வரன் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 21072022 இதழ்

மேட்டூர் – கோவையில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா

மேட்டூர் – கோவையில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா

மேட்டூர் : மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 15.07.2022 மாலை 5.00 மணி அளவில் கல்வி வள்ளல் காமராசர் 120ஆவது பிறந்தநாள் விழா  நகரத் தலைவர் செ.மார்ட்டின் தலைமையில் நடைபெற்றது. மேட்டூர் சின்ன பார்க் பகுதியில் உள்ள காமராசர் உருவச்சிலைக்கு தோழர்கள் அனிதா, கீதா, அறிவுமதி ஆகியோர் மாலை அணிவித்தனர். நகர செயலாளர் குமரப்பா முழக்கங்கள் எழுப்பினார். மேட்டூர் 16ஆவது வார்டு மஜீத் தெரு பகுதியில் காமராசர் பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம் மாலை 6.00 மணிக்கு தொடங்கியது. முதல் நிகழ்வாக பறைமுழக்கம், பகுத்தறிவு, ஜாதி ஒழிப்பு பாடல்கள் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு தோழர்களால் நடத்தப்பட்டது.  தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.  நங்கவள்ளி அன்பு, தலைமை செயற்குழு உறுப்பினர் அ. சக்திவேல் ஆகியோர் உரையாற்றினர். நங்கவள்ளி, மேட்டூர் சுளு, கொளத்தூர் ஆகிய பகுதியிலிருந்து பொறுப்பாளர் களும், தோழர்களும் கலந்து...

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை பார்ப்பனிய மதவெறியை எப்படி சந்திக்கப் போகிறோம்?

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை பார்ப்பனிய மதவெறியை எப்படி சந்திக்கப் போகிறோம்?

தடைகளைச் சந்தித்த ஆர்.எஸ்.எஸ். மீண்டும் வளர்ந்தது எப்படி? முதன்மையான எதிரியை அடையாளம் காண்பதில் தெளிவான புரிதல் வேண்டும். ஒன்றிய ஆட்சியை எதிர்ப்பதற்கு தி.மு.க.வைத் தவிர வேறு வலிமையான அரசியல் கட்சி இல்லை. மார்ச் 20, 2022 அன்று தமிழ்த் தேச நடுவம் சார்பில் ‘பாவலரேறு தமிழ்க் களத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸை தடை செய்ய வேண்டும் – ஏன்?’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் சுருக்கம்: தமிழ்த் தேச நடுவத்தின் சார்பில் ஆர்.எஸ்.எஸ்.சை தடை செய்க என்ற முழக்கத் துடன் தோழர் பொழிலன், இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல; அது பார்ப்பனியத் துக்கான கருத்தாக்கம். அமைப்பை தடை செய்தாலும் அதன் பாசிச பார்ப்பனிய கருத்தாக்கத்தை எதிர்ப்பு இயக்கங்கள் வழியாகவே தடுத்து நிறுத்த முடியும். ஏற்கனவே அவசர நிலை காலத்திலும், காந்தி கொலையின் போதும், பாபர் மசூதி இடிப்பின் போதும் தடை...

அகில இந்திய சாதி ஒழிப்பும் நாமும்

அகில இந்திய சாதி ஒழிப்பும் நாமும்

சாதி ஒழிப்புக்காக நமது கழகம் ஏன் அகில இந்திய ரீதியில் பாடுபடக்கூடாது என்று கேட்கப்படுகிறது. அகில இந்திய ரீதியில் சாதி ஒழிப்பு என்பது சுலபத்தில் சாத்தியமாயிராது. ஏனெனில் நம்மவர்களைப்போல் பெரும்பாலோருக்குள்ள மான உணர்ச்சி வடநாட்டாருக்கு இல்லை. அவர்கள் யாரும் சூத்திரன் என்பதற்காகவோ, பஞ்சமன் என்பதற்காகவோ, தாசிமகன் என்பதற்காகவோ வெட்கப்படுவதும் இல்லை. இந்து மதத்தை அவர்கள் நம்மைப்போல் வெறுத்து ஒதுக்குவதும் இல்லை. மாறாக, அதைப் பெருமையாகவே கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்நாட்டு மக்களோ ஆதிகாலந்தொட்டே சாதிபேதங்களை வருணாசிரம தர்மத்தை எதிர்க்கிறார்கள். எனவே, சாதி ஒழிப்பு நம்நாட்டில் சாத்தியமாயிருப்பது போல் வடநாட்டில் சாத்தியமாயிராது. எந்தச் சீர்திருத்தக் கருத்தும் வடநாட்டாருக்குச் சுலபத்தில் புரியவும் புரியாது. எனவேதான், தோழர் அம்பேத்கர் அவர்களால் கொண்டு வரப்படும் இந்துச் சட்ட மசோதா அங்கு பலமான எதிர்ப்புக்குள்ளாக வேண்டி இருக்கிறது. இதை எல்லாம் உணர்ந்துதான் நாம் நம் கழக முயற்சியை நம் திராவிட நாட்டோடு நிறுத்திக் கொண்டிருக் கிறோம். – ‘விடுதலை’ 22.02.1950...

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூரில் பா.ஜ.க.வினர் அரசு கல்லூரிகளின்  பெயர்களை முறைகேடாக பயன்படுத்தி துண்டறிக்கைகளை அச்சிட்டு “செல்பி வித் அண்ணாமலை” என்று விளம்பரப்படுத்தி கல்லூரி களுக்குள் அத்து மீறி நுழைய திட்டமிட்டு இருந்தார்கள். அண்ணாமலையைக் கூட்டி வந்து சாலைகளில் கூட்டமாக கூட காவல்துறையிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமலும், அனுமதியும் பெறாமலும் சட்டம் ஒழுங்கை மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வினர் பேசினால் பரப்புரையில் ஈடுபட்டால் என்ன பேசுவார்கள் என்பதை பொதுமக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது, கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் குளிர் காய்வது போன்ற  பொது அமைதியை குலைக்கும் வகையில் தான் இவர்களின் பேச்சுக்கள் இருக்கும். இச்செய்தி பரவிய உடன் திராவிடர் விடுதலை கழகத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் ராசு, திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு இந் நிகழ்விற்கு கழகத்தின் கடும் கண்டனத்தை பதிவு...

தலையங்கம் பாராட்டுகிறோம், தர்மபுரி ‘எம்.பி.’யை!

தலையங்கம் பாராட்டுகிறோம், தர்மபுரி ‘எம்.பி.’யை!

அரசு கட்டிடம் கட்டும் நிகழ்வைத் தொடங்க முஸ்லீம் மத சடங்குகளை மட்டுமோ அல்லது கிறிஸ்துவ மத சடங்குகளை மட்டுமோ செய்திருந்தால் அதை ஏற்பார்களா? கலவரம் நடத்தி சூறையாடப்பட்ட ‘சக்தி’ இன்டர்நேஷனல் பள்ளி, ‘செயின்ட் ஜான்’ பள்ளியாக இருந்திருந்தால், ஒன்றிய அரசின் மகளிர் ஆணையம் அடுத்த சில மணி நேரத்திலே விசாரணைக்கு வந்திருக்கும்! பா.ஜ.க.வும் இந்து முன்னணியும் இப்போது மவுனம் காப்பதுபோல இருந்திருப்பார்களா? ஆனால், அரசு நிகழ்ச்சிகளில் புரோகிதர்களை மட்டும் வைத்து சடங்கு செய்தால் அது இயல்பானதாக கடந்து போய் விடுகிறார்கள். பொதுப் புததி அவ்வாறு வடிவமைக்கப் பட்டுள்ளது. அரசும் – மதமும் விலக்கி வைக்கப்பட வேண்டும். அதுவே மதச் சார்பின்மை என்று சொன்னால் மதத்தை விலக்குவது கூடாது; அனைத்து மதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்று பதில் கூறுகிறார்கள். அப்படித்தான் நடக்கிறதா? 1968இல் அண்ணா முதலமைச்சராக வந்தவுடன் தலைமைச் செயலாளராக இருந்த சி.ஏ. இராமகிருட்டிணன், அரசு  அலுவலகங்களில் படிப்படியாகக் கடவுள் படங்களை...

‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத்தின் வரலாறு

‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத்தின் வரலாறு

தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று முதலமைச்சர் அண்ணா பெயர் சூட்டிய நாள் 18.07.1967. அன்று சட்டமன்றத்தில் அண்ணா, தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதை தமிழ்நாடு நாள் என்று தமிழ்நாடு அரசு கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஒருமனதுடன் நிறைவேற்ற வேண்டும் என்று அண்ணா மிகுந்த கவலையுடன் செயல்பட்டார். இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பு, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்குப் பிறகு, அரசியல் சட்டத்திலே மாற்றங்களை செய்ய முடியுமா என்பது குறித்து, இந்திய அரசியல் உயர் மட்டத் தலைவர்களிடம் அவர் கலந்து ஆலோசித்தார். அதில் எந்த தடையும் இருக்காது என்று உறுதியைப் பெற்று அவர் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். குறிப்பாக அவர் ஒரு நிகழ்வையும் சுட்டிக்காட்டினார். “பத்து நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் இந்த மாநிலத்தைப் பற்றி பேச வேண்டிய வாய்ப்பு கிடைத்த நேரத்தில், அங்குள்ள உள்த்துறை அமைச்சர் சவான் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்று கூறியே...

‘கருவறைத் தீட்டை’ நியாயப்படுத்தும்  ஆகம விதிகளுக்குத் தடை போட வேண்டும்

‘கருவறைத் தீட்டை’ நியாயப்படுத்தும் ஆகம விதிகளுக்குத் தடை போட வேண்டும்

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், அனைத்து ஜாதி இந்துக்களும் அர்ச்சகராகும் பிரச்சனையை கையில் எடுத்து உரிய முறைப்படி அவர்களுக்கு அர்ச்சனை செய்யும் நியமனங்களை வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் இதை வெளிப்படையாக எதிர்க்க முடியாத நிலையில், இப்போது வெளி மாநிலத்தி லிருந்து ஆட்களைப் பிடித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கின்றனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜெகத்குரு இராமநாத ஆச்சாரியார் சுவாமி என்பவரும் டெல்லி, உத்திர பிரதேசம், பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 8 பேரும் தமிழ்நாட்டைச் சாராதவர்கள் இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் தமிழ்நாடு அரசு நியமித்த ஒரு உத்தரவுக்கு எதிராக வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழக்குத் தொடர உரிமையில்லை, எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியதை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஏற்க தயாராக இல்லை. ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும். அந்த நீதிபதி ஆகம விதிகளை...

காமராசர் திராவிட மாடலின் முன்னோடி

காமராசர் திராவிட மாடலின் முன்னோடி

காமராசரின் 120 ஆவது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட உத்தரவிட்டுள்ளது. கல்விக் கண் திறந்த கல்வி வள்ளல் காமராசர். கடவுள் வாழ்த்துகளை கைவிட்டுவிட்டு, ‘காமராசர் வாழ்த்துப் பாடலை பாட வேண்டும்’ என்று சொன்னத் தலைவர் பெரியார். அவருக்கு மிகப் பொருத்தமாக இந்த நாளில் தமிழ்நாடு அரசு ஒரு திட்டத்தை துவக்கியிருக்கிறது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராமப்புற வளர்ச்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு துவக்கி இருக்கிறது. இந்தியை எதிர்த்தார் காமராசர். மத்திய அரசு, மாநில அரசு வேலைத் தேர்வுகளில் இந்தி கட்டாயமான ஒரு பாடமாக இருக்கக் கூடாது என்று 1955இல் நேருவை சந்தித்து ஆலோசித்து விட்டு அவர் அறிவித்தார். அதற்கு காரணம், பெரியார் இந்தியை எதிர்த்து தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை அறிவித்தது தான். 1966இல் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 10...

களப்பணியாளர் பயிற்சி; இடம் மாற்றப்பட்டுள்ளது

களப்பணியாளர் பயிற்சி; இடம் மாற்றப்பட்டுள்ளது

திருச்சியில் வருகிற ஜூலை 22,23,24,25 ஆகிய தேதிகளில் முதல் நாளில் இணையதள பயிற்சி வகுப்பும், மற்ற மூன்று நாள் களப்பணியாளர்கள் பயிற்சி வகுப்பும் நடைபெறவுள்ளது. கடந்த வாரம் அறிவித்த இடம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. திருச்சி காருண்யா நகர் “டான் பாஸ்கோ மீடியா” என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. தலைமைக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட தோழர்கள் மட்டுமே பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வார்கள். குறிப்பு : பேருந்து எண் 13, 45, 125 ஆகிய நகரப் பேருந்துகளில் (திருச்சி மத்திய பேருந்து நிலையம் – விராலிமலை செல்லும் பேருந்துகள்) 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, செல்லும் திசையின் வலதுபுறம் சுமார் 200,300 மீட்டரில் ‘டான் போஸ்கோ’ நிறுவனம் உள்ளது. பெரியார் முழக்கம் 14072022 இதழ்

தொல் தமிழ் அடையாளங்களைப் புறக்கணிக்கும் ஒன்றிய ஆட்சி!

தொல் தமிழ் அடையாளங்களைப் புறக்கணிக்கும் ஒன்றிய ஆட்சி!

நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.  “உலகத்தின் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம்” என்று ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் குறைந்தது  இரு அமைச்சர்களாவது எங்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து இந்தக் கேள்வியை எதிர் கொண்ட படியே இருக்கிறோம். எனவே இந்தக் கேள்விக்கு தொடர்ந்து பதில் சொல்கிறோம். சமஸ்கிருதத்தின் முதல் கல்வெட்டு கிடைத்தது கிபி 300இல். தமிழில் முதல் கல்வெட்டு கிடைத்தது அதற்கு 600 வருடத்திற்கு முன்னால். பாட்டி தான் வயதில் மூத்தவள் என்று நான் சொல்கிறேன். பேத்தி தான் மூத்த ஆள் என்று அவர்கள் சொல்கிறார்கள். நான் சொல்வது அறிவியல். நான் சொல்றது ஆறாவது அறிவு. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் தங்க ஆபரணம் கிடைத்தது.  இது மிக முக்கியமான கண்டுபிடிப்பு. அந்த அகழாய்வினை செய்தது தமிழக தொல்லியல் துறை அல்ல, ஒன்றிய அரசினுடைய தொல்லியல் துறை.  ஆனால் அகழாய்வின் மூலம் 3000 ஆண்டுகள் பழமையான தங்க ஆபரணம் கிடைத்ததை பிறகு கடந்த...

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா விளக்கம் (2)  அரசியல் சட்டத்தில் மாநில சுயாட்சி இடம் பெறாமல் போனது ஏன்?

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா விளக்கம் (2) அரசியல் சட்டத்தில் மாநில சுயாட்சி இடம் பெறாமல் போனது ஏன்?

அரசியல் சட்டத்தை சுயாட்சி அடிப்படையில் உருவாக்க விரும்பி யவர்கள் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு தங்களது நிலையை தலைகீழாக மாற்றிக் கொண்டார்கள். அரசியல் சட்டத்தில் மாநிலங்கள் உரிமைகளைத் தடுத்தது வரலாற்றுப் பின்னணியை விளக்கி ஆ. ராசா நிகழ்த்திய உரை. கடந்த இதழ் தொடர்ச்சி. 1974இல் கலைஞர் முதலமைச்சர். மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றி பிறகு, இராஜபாளையத்தில் திமுக மாவட்ட மாநாடு நடைபெறுகிறது. திமுகவின் தலைவராக, ஆட்சியின் தலைவராக கலைஞர் அங்கே போகிறார். போகிற வழியில் அவருடைய படம், முஜிபூர் ரகுமானுடைய படம் இரண்டு படத்தையும் வைத்து வருக வருக என்று சுவரொட்டி, பதாகைகள் வைத்தார்கள். உடனே கம்யூனிஸ்ட் கட்சி உட்பட காங்கிரசும் கூறினார்கள், கலைஞர் பிரிவினைவாதியாக மாறி விட்டார். ஏன் அண்ணா படம் அங்கே இல்லை? ஏன் பெரியார் படம் அங்கே இல்லை ? ஏன் அங்கே முஜிபூர் இரகுமான் படம் ? ஏனென்றால் முஜிபுர் ரகுமான் தான் கிழக்கு பாகிஸ்தானை பிரித்தவர்....

சமுதாயத்துக்குப் பயன் தரும் வாழ்வே சிறந்த இலட்சியம்

சமுதாயத்துக்குப் பயன் தரும் வாழ்வே சிறந்த இலட்சியம்

என்னைப் பொறுத்தவரை நான் கூறுவேனாகில், மனிதப் பிறவியானது ஒரு இலட்சியமற்றப் பிறவி என்றே கூறுவேன். மனிதன் பிறக்கிறான் ; பற்பல எண்ணங்களை எண்ணுகிறான்; பல வகைகளை இச்சிக்கிறான்; எவ்வளவோ காரியங்களில் விருப்பம் கொண்டு அவைகளை நிறைவேற்ற முற்படுகிறான்; ஒரு சிலவற்றில் ஆசை நிறைவேறுகிறது; மற்றவைகளில் ஏமாற்றம் அடைகிறான் ; இறுதியில் செத்துப் போகிறான். மனிதன் பிறந்தது முதல் செத்துப்போகும்வரை இடையில் நடைபெறுகிறவைகள் எல்லாம் அவனின் சுற்றுச்சார்பு, பழக்கவழக்கம் இவைகளைப் பொறுத்து நடக்கின்றன. எனவே, மனித வாழ்வு இலட்சியமற்ற வாழ்வு என்பது என் கருத்து. சமுதாயத்துக்குப் பயன்தரும் வாழ்க்கையே சிறந்த இலட்சியம். மனிதன் பிறந்து இறக்கும் வரை இடையில் உள்ள காலத்தில் ஏதாவது பயனுள்ள காரியம் செய்ய வேண்டும். அவன் வாழ்க்கை மற்றவர் நலனுக்கும், சமுதாயத்தின் சுகத்திற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஒருவன் வாழ்வதென்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகம் கண்டார்கள் என்று அமைய வேண்டும். இது முக்கியமானதாகும், இதுவே...

ரிக்வேதம் – வேதக் கணிதப் பெருமை: கருநாடக அரசின் மதவெறி பாடத் திட்டம்

ரிக்வேதம் – வேதக் கணிதப் பெருமை: கருநாடக அரசின் மதவெறி பாடத் திட்டம்

மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவும், இந்துத்துவா அடிப்படையில் பாடத்திட்டங்களை உருவாக்கவும் கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றது.  அண்மையில், மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேரு  பற்றிய பாடங்களை நீக்கி விட்டு, ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளான கே.பி. ஹெட்கேவார் மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆகியோர் பற்றிய பாடங்களை அது சேர்த்தது. இந்நிலையில்தான், கிரேக்கக் கணித வியலுக்குப் பதிலாக, இந்தியாவில் தோன்றிய வேதக்கணிதத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், நியூட்டன் மற்றும் பிதாகரஸ் ஆகியோரின் கண்டு பிடிப்புக்கள் என்று கூறப்படுபவை இந்தியாவில் வேதக் காலத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது என்றும் புதிய சர்ச்சை யை கர்நாடக பாஜக அரசு கிளப்பியுள்ளது. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கர்நாடக மாநில பாஜக அரசு 26 கல்விக்கொள்கைக் குழுக்களை அமைத்தது. வாரணாசியில் உள்ள ஐஐடி-யின் பேராசிரியர் வி. ராமநாதன் தலைமையிலான இந்தக் குழுக்கள், தேசியக்...

தலையங்கம் ஆன்மீகத்துக்குள் பதுங்கி நிற்கும் ஆரியம்!

தலையங்கம் ஆன்மீகத்துக்குள் பதுங்கி நிற்கும் ஆரியம்!

‘ஆன்மீகம்’ என்ற சொல் சனாதன வாதிகளால், மதவாதிகளால், மக்களை கூறுபோடுகின்ற ஜாதியவாதிகளால் பயன்படுத்தப் படுகின்ற ஒரு சொல்லாக மாறிப்போய் இருக்கிறது. உண்மையில் ஆன்மீகம் என்றால் என்ன என்பது பற்றி திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு தெளிவான விளக்கத்தை தந்திருக்கிறார். “ஆன்மீகம் என்ற சொல்லை இன்றைக்கு அரசியலுக்குப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். ஜாதியைக் காட்டி, மதத்தைக் காட்டி மக்களைப் பிளவு படுத்துவதற்கு ஆன்மீகத்தை பயன்படுத்துகிறார்கள். நாங்கள் ஆன்மீகத்துக்கு எதிரிகள் அல்ல, ஆனால் இப்படி மக்களை பிளவுபடுத்த ஆன்மீகத்தை பயன்படுத்துகிறவர்களுக்கு நாங்கள் எதிரிகள் என்று அவர் கூறியிருப்பதோடு ஆன்மீகம் என்ற சொல்லுக்கு அறநெறி என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார். முதலில் ஆன்மீகம் என்பது தனிமனிதர் சார்ந்ததா? சமூகம் சார்ந்ததா?  என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். உறுதியாக தனி மனிதன் சார்ந்தது தான். ஒரு மனிதர் (ஆணோ அல்லது பெண்ணோ) தன்னுடைய அறநெறி வாழ்க்கையை தனக்குள் உருவாக்கிக் கொள்ள...

இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும்  மோடியின் ‘இந்துத்துவ’ இந்தியா

இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும் மோடியின் ‘இந்துத்துவ’ இந்தியா

பக்ரீத்துக்கு வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடி, இந்தியாவில் மதவேறுபாடின்றி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருப்பதாகப் பேசியிருக்கிறார். இஸ்லாமியர் என்றாலே அவர்களை ‘தேச விரோதி’களாகப் பார்க்கும் வெறுப்பை வளர்ப்பதே ஒன்றிய – மாநில  பா.ஜ.க. ஆட்சிகளின் முதன்மை இலட்சியமாக இருக்கிறது என்பதை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் முஸ்லீம் ஒருவரைக்கூட பா.ஜ.க உறுப்பினராக்கவில்லை. அண்மையில் மாநிலங்களவையில் பதவிகள் முடிந்த நிலையில் ஒருவர்கூட இஸ்லாமியர் இல்லை என்ற நிலையில் பா.ஜ.க. ஒரு இஸ்லாமியரைக்கூட நியமன உறுப்பினராக்கத் தயாராக இல்லை. இந்தியாவில் முஸ்லீம்கள்  மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர். ஆனால் மத்திய மாநில அரசுப் பணிகளில் பணியாற்றுவோர் 4.9 சதவீதம் பேர் மட்டுமே. துணை இராணுவப் பிரிவுகளில் 4.6 சதவீதம்; அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பதவிகளில் 3.2 சதவீதம்; வெளிநாட்டுத் துறை, இந்தியன் போலீஸ் சர்வீஸ் போன்ற துறைகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு. மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி முஸ்லீம்கள் நாடாளுமன்றத்தில் 74 பேர் இடம்...

உயர்கல்வி அமைச்சர் பொன்முடி- பாராட்டத்தக்க அறிவிப்பு ஆளுநர் பட்டமளிப்பு விழா – அரசு புறக்கணிப்பு

உயர்கல்வி அமைச்சர் பொன்முடி- பாராட்டத்தக்க அறிவிப்பு ஆளுநர் பட்டமளிப்பு விழா – அரசு புறக்கணிப்பு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அரசியல் பரப்புரை செய்து வருகிறார். அவர் பாஜகவின் பிரச்சார செயலாளராகவே மாறிவிட்டார் போல் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு திரியைக் கொளுத்தி போடுகிறார். குறிப்பாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அவர் அரசியல் மேடையாக்கி வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை காமராஜர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளப் போவது இல்லை என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பைப் பாராட்டி வரவேற் கிறோம். தமிழ்நாடு அரசு ஒரு முதுகெலும்புள்ள அரசு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது. அண்மையில் ஆளுநர் கொளுத்திப் போட்டத் தீ, திராவிடம் என்பது பிரிட்டிஷார் கண்டுபிடித்த சொல் என்பதாகும். பிரிட்டிஷார் கண்டுபிடித்ததினாலேயே திராவிடம் என்பது கெட்ட சொல் ஆகிவிடுமா? அதற்கு ஒரு கோட்பாடு இல்லையா? பிரிட்டிஷார் கண்டுபிடித்தார் என்பதற்காக அவர் எல்லாவற்றையும் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்கிறாரா? இந்தியா என்ற ஒரு நாட்டை...

ஆளுநர் தமிழிசைக்கு – தீட்சதர்களின் அவமதிப்பு

ஆளுநர் தமிழிசைக்கு – தீட்சதர்களின் அவமதிப்பு

தில்லை நடராசர் தரிசனத்திற்கு ஆளுநர் தமிழிசை சென்றிருக்கிறார். அங்கே கோவில் படிக்கட்டில் அவர் அமர்ந்திருக்கிறார். தீட்சதர் ஒருவர் வந்து நீங்களெல்லாம் இங்கே உட்காரக் கூடாது என்று அவரை அவமானப்படுத்தி இருக்கிறார். இதை தமிழிசையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ‘அப்படி ஒரு தீட்சதர் கூறியது உண்மைதான். ஆனால் அந்த இடத்தை விட்டு நான் நகரவில்லை, அங்கே தான் அமர்ந்திருந்தேன். தீட்சதர்கள் பிரச்சனையை தீர்க்கப்போனால் அவர்கள் பிரச்சனையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்’ என்று ஒரு பேட்டியிலே கூறியிருக்கிறார். வந்தவர் ஒரு ஆளுநர். ஆனால் தில்லைக் கோவிலில் ஆளுநரை விட அதிகாரம் படைத்தவர்கள் தீட்சதப் பார்ப்பனர்கள். கோவிலுக்குள் எந்த சட்டமும் செல்லாது என்று உச்சநீதிமன்றத்திலே அவர்கள் தீர்ப்பை வாங்கி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவராக இருக்கக் கூடிய அண்ணாமலை, தமிழிசைக்கு ஏற்பட்டிருக்கிற இந்த அவமானம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக இதிலும் தமிழ்நாடு அரசை குறை கூறி ‘சம்பவம் நடந்தது உண்மையா என்று விசாரிக்க...

திருச்சியில் ஒரு நாள் இணையதள பயிலரங்கம்!

திருச்சியில் ஒரு நாள் இணையதள பயிலரங்கம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத் தோழர்களுக்கான ஒருநாள் இணையதள பயிலரங்கம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்  முன்னிலையிலும் நடைபெறுகிறது. நாள் : 22.07.2022 வெள்ளிக்கிழமை நேரம் : காலை 9:30 முதல் மாலை வரை இடம் : கூஆளுளுளு நிறுவன பயிற்சி அரங்கம், திருச்சி. சமூக வலைத்தளங்களில் இயங்கும் மற்றும் இயங்க ஆர்வம் உள்ள திராவிடர் விடுதலை கழகத் தோழர்களுக்கு மட்டுமான ஒருநாள் பயிலரங்கம். இணையதளம், சமூக வலைத்தளங்கள் குறித்த அறிமுகம், அவை இயங்கும் விதங்கள், எளிமையாக பயன்படுத்துவதற்கான வழிகள், தொழில் நுட்பம் சார்ந்த விளக்கங்கள் ஆகியவை குறித்து கழகத்தின் இணையதள செயல் பாட்டாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் விளக்கம் அளிக்க உள்ளார்கள். நுழைவுக் கட்டணம் ரூபாய் 100/- (நூறு ரூபாய் மட்டும்) முன் பதிவிற்கு : பரிமளராசன் – 7871962024 சமூக ஊடக பொறுப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம். விஜயகுமார் இணையதள பொறுப்பாளர்,...

களப்பணியாளர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம்: முக்கிய அறிவிப்பு

களப்பணியாளர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம்: முக்கிய அறிவிப்பு

திராவிடர் விடுதலைக் கழகக் களப்பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் ஜூலை 23, 24, 25 தேதிகளில் திருச்சி ‘டி.எம்.எஸ்.எஸ்.’ பயிற்சி மய்யத்தில் (தொடர் வண்டி நிலையம் அருகில்) நடைபெறுகிறது. சமூக நீதி – மதவாதம் – பெண்ணுரிமை – மாநில சுயாட்சி, சமூகம், உளவியல் எனும் பல்வேறு தலைப்புகளில் பயிற்சியளிக்கப் படும். தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்டோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். பயிற்சியாளர்கள் ஜூலை 22 இரவே மய்யத்திற்கு வந்து சேர வேண்டும். – கொளத்தூர் மணி (தலைவர்) விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர்) பெரியார் முழக்கம் 07072022 இதழ்

அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: ஆதரவு முஸ்லீம்களை வைத்து இஸ்லாமிய படுகொலை நடத்துகிறது பா.ஜ.க.

அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: ஆதரவு முஸ்லீம்களை வைத்து இஸ்லாமிய படுகொலை நடத்துகிறது பா.ஜ.க.

காங்கிரஸ் கட்சியின் செய்திப் பிரிவுத் தலைவர் பவன் கேரா அளித்துள்ள அதிர்ச்சியான பேட்டி: கன்னையா லாலை கொலை  செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள இருவரில் ரியாஸ் அத்தாரி  பிரதான குற்றவாளியாக கருதப்படுகிறார். இவர் பாஜக சிறுபான்மை பிரிவில் இருக்கிறார். அதற்கான புகைப்பட ஆதாரம் மற்றும் முக நூல் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.  பாஜக தலைவர்கள் இர்ஷத்  சயின்வாலா, முகமது தாஹிர் ஆகியோருடன் ரியாஸ் அத்தாரி நெருங் கிய தொடர்பில் இருந்துள்ளார். ராஜஸ்தான் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான குலாப்சந்த் கட்டாரியாவின் நிகழ்ச்சிகளில் எல்லாம் ரியாஸ் அத்தாரி தவறாமல் கலந்து கொண்டுள்ளார். இர்ஷத் சயின்வாலா கடந்த 2018 நவம்பர் 30ல் பகிர்ந்த முக நூல் பதிவு, முகமது தாஹிர் 3 பிப்ரவரி 2019, 30 நவம்பர் 2018, 27 அக்டோபர் 2019, ஆகஸ்ட் 10, 2021, நவம்பர் 28, 2019 மற்றும் இன்னும் பிற பதிவுகளில் அத்தாரி பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக பழகிவந்தது...

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா விளக்கம்  மாநில சுயாட்சியை ஏற்ற காங்கிரஸ், பிறகு சுதந்திர இந்தியாவில் கைவிட்டது ஏன்?  நாமக்கல்லில் ஜூலை 3இல் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் நிகழ்த்திய உரை:

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா விளக்கம் மாநில சுயாட்சியை ஏற்ற காங்கிரஸ், பிறகு சுதந்திர இந்தியாவில் கைவிட்டது ஏன்? நாமக்கல்லில் ஜூலை 3இல் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் நிகழ்த்திய உரை:

ஒரு நீண்ட தலைப்பை ஒரு குறுகிய நேரத்தில் உரையாற்ற வேண்டும் என்ற நெருக்கடியோடு உங்கள் முன்னால் நான் நிற்கின்றேன். ஒரு அரை நூற்றாண்டாக “மாநில சுயாட்சி”யைப் பேசுகின்ற ஒரு இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் இருந்து கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இப்போது ஏன் நடத்த வேண்டும் ? ஒரு மாதத்திற்கு முன்பாக இந்திய நாட்டின் பிரதமர் வந்தார்.  அவரை வைத்துக் கொண்டு ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இப்படி பேச முடியுமா? என்று கூறுகிற அளவிற்கு நம்முடைய தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அன்றைக்கு பேசினார். அதன் சுருக்கம் இதுதான். “பிரதமர் அவர்களே தமிழ்நாட்டின் சார்பில் நாங்கள் உங்களுக்கு மொத்த வருமானத்தில் 10ரூ தருகிறோம். வரி என்று எடுத்துக் கொண்டால் 6.5ரூ. ஆனால் நீங்கள் எங்களுக்கு தருவதோ வெறும் 1.5ரூ தான். இது கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது. என்று அன்றைக்கு பிரதமர் முன் பேச திராணி உள்ள ஒரே முதலமைச்சர் என்பதை நிரூபித்துவிட்டு, ...

நீதிமன்றங்களில் தமிழ் வர வேண்டும்!

நீதிமன்றங்களில் தமிழ் வர வேண்டும்!

நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடப்பதை விரைவு படுத்த வேண்டியது ஆட்சியாளர் கடமையாகும். அதற்கு முன்னணி வேலையாக , ஒவ்வொரு சட்டப் புத்தகத்தையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பொறுப்பையும் செலவையும் ஆட்சியாளர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்ப் புலவர்களாய் உள்ள சட்ட நிபுணர்கள் தமிழ்நாட்டில் பலரிருக்கின்றனர். இவர்களைக் கொண்டு ஆட்சியாளர் இக்காரியத்தைச் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடிக்கலாம். இதேபோல் ஆட்சி நிர்வாகத் துறையிலும், இங்கிலீஷ் இன்றுள்ளது, போலவே தமிழும் இயங்க வேண்டுமானால், இங்கிலீஷ் படித்த தமிழ்ப் புலமைப் பட்டதாரிகளையெல்லாம் சர்க்கார் பணிமனைகளிலெல்லாம் ஏராளமாக நியமிக்க வேண்டும். இவர்களுக்குக் கொடுத்தவை போக மீதி இடங்களைத்தான் மற்ற பட்டதாரிகளுக்குக் கொடுக்க வேண்டும். நல்ல இங்கிலீஷ் படிப்புள்ள தமிழாசிரியர்களையும் சர்க்கார் பணிமனைகளில் பொறுப்புள்ள பதவிகளில் அமர்த்த வேண்டும். ‘விடுதலை’ 01.09.1956 பெரியார் முழக்கம் 07072022 இதழ்

நுபுர் சர்மா வெறிப் பேச்சுக்கு வெளியுறவு அமைச்சர் ஆதரவு

நுபுர் சர்மா வெறிப் பேச்சுக்கு வெளியுறவு அமைச்சர் ஆதரவு

நாடு முழுவதும் மதவெறியைப் பற்ற வைத்து, கலவரத்தை உருவாக்கிய பாஜகவின் முன்னாள் பேச்சாளர் நுபுர் சர்மா, தேசத்தின் முன்னால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் கண்டிப்பாக கூறியிருக்கிறது. இத்தனை கலவரங்களுக்கும் அந்த ஒரு பெண் தான் காரணம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதோடு, நாட்டில் நடைபெறுகிற வீடுகள் இடிப்பு, தீ வைப்பு கலவரம் என அத்தனைக்கும் காரணம், அவர் ஒருவர்தான் என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. தன் மீது பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் என்று அவர் வைத்த கோரிக்கையையும், உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் இவ்வளவு கடுமையான கருத்துக்களை தெரிவித்ததற்குப் பிறகும் கூட, நுபுர் சர்மா மீது பாஜக இதுவரை எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. கைது செய்யவும் இல்லை. இந்த நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், “முஸ்லிம் நாடுகள் இந்தப் பிரச்சனையை எதிர்மறையாக பிரச்சாரம் செய்கின்றன” என்று கூறினாரே தவிர...

வடலூர் வள்ளலார் சபை வைதீகத்துக்கு எதிரானது: உயர்நீதிமன்றத் தீர்ப்பு

வடலூர் வள்ளலார் சபை வைதீகத்துக்கு எதிரானது: உயர்நீதிமன்றத் தீர்ப்பு

வைதீக வேத மரபை எதிர்த்து வள்ளலார் உருவாக்கியது தான் வடலூர் சத்திய ஞான சபை. சத்திய ஞான சபையிலும் சிவன் சிலையை வைத்து அதை வைதீகத் தலமாக மாற்றுவதற்கான சதிச் செயலில் பார்ப்பனர்கள் ஈடுபட்டார்கள். குறிப்பாக சபாநாத ஒளி சிவாச்சாரியார் என்ற ஒரு வேத பண்டிதர், அங்கு சிவலிங்கம் போன்ற சிலைகளை வைத்து வழிபட துவங்கியபோது, 2006ஆம் ஆண்டு அதை எதிர்த்து, தொண்டர் குலப் பெருமான். என்ற ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில், வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிக்குமாறு அறநிலையத் துறையை விசாரிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அப்போது அறநிலையத்துறை கொடுத்த விளக்கம் மிகவும் முக்கியமானது. 1882 ஆம் ஆண்டு வகுத்த வழிபாட்டு விதிகளின் படி, உருவ வழிபாடு வள்ளலார் சத்திய ஞான சபையில் கூடாது. ஒளி மட்டுமே ஏற்றப்பட வேண்டும். ‘அருட்பெரும் ஜோதி, தனிப் பெரும் கருணை’ என்ற தாரக மந்திரத்தை மட்டுமே ஒலிக்க வேண்டும். வேதம், இதிகாசம்,...

தலையங்கம் மொழி – மதம் குறித்த முதல்வரின் தெளிவான பார்வை

தலையங்கம் மொழி – மதம் குறித்த முதல்வரின் தெளிவான பார்வை

நியூயார்க் நகரில் நிகழும் வடஅமெரிக்க தமிழ்ச் சங்க மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி வழியாக நிகழ்த்திய உரை மிகவும்  ஆழமானது; குறிப்பிடத் தக்கது. மொழி – மதம் குறித்து அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் உரை அது. மொழி – உலகம் முழுதும் வாழும் தமிழர்களை இணைக்கும் ஒரே கருவி என்று கூறியுள்ள முதலமைச்சர், தமிழர்கள் ஒற்றுமையை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்துவதை ஏற்க முடியாது. அத்தகைய முயற்சிகள் தீவிரம் பெற்று வருகின்றன என்று சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார். மொழியின் பெருமை – இனப் பெருமை பேசுவது தவறு இல்லை. அத்தகைய வரலாறும் பெருமையும் நமக்கு இருக்கிறது. அந்த வரலாறு இல்லாதவர்களால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை. திராவிட இயக்கம் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கிறது. திராவிட மாடல் ஒரு கருத்தியல் கோட்பாடாக நாம் வளர்த்தெடுக்கிறோம். இதை எதிர்க்கிறவர்கள், கடந்த ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்து வருவோர் தான்; அவர்கள் கற்பனைகளை வரலாறுகளாக எழுத முயலுகிறார்கள்...

பெரியாரின் கனவு நனவாகும் மாட்சி!

பெரியாரின் கனவு நனவாகும் மாட்சி!

உற்பத்தி சேவைத் துறைகளில் பணியாற்றும் பெண்களில் தமிழ் நாடே முதலிடம் வேலைக்குப் போகும் பெண்களில் இந்தியாவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ந்திருக்கிறது. இந்தியா முழுமைக்கும் மொத்தம் 15.93 சதவீதப் பெண்கள் வேலைக்குப் போகும் நிலையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது 7.08 இலட்சம் பெண்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இரண்டா வது இடத்தில் கருநாடகம் இருந்தாலும் கருநாடகத்தைவிட மூன்று மடங்கு தமிழ்நாட்டில் அதிகம். 2017-2018ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலைகளுக்கான ஆண்டறிக்கை இத்தகவலைத் தெரிவித்துள்ளது. பெண்களையும் உள்ளடக்கிய தொழில் கொள்கைகளை தமிழ்நாடு அரசு உருவாக்கி அமுல்படுத்துவதே இதற்குக் காரணம். இரவு நேரப் பணிகளுக்கு அனுமதி; அதற்கான பாதுகாப்பு; உயர் தொழில் நுட்பத் திறன் பயிற்சி பயிற்சி; குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் (இதற்கு ஒன்றிய ஆட்சி 10 கோடி மான்யம் வழங்குகிறது); பெண்கள் தங்கும் விடுதி வசதிகள்; உதிரி பாகங்கள் தயாரிப்புப் பூங்கா போன்ற திட்டங்களால் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தமிழ்நாட்டில் பெண்களின் பங்கேற்பு அதிகமாக இருக்கிறது....

பா.ஜ.க. வேட்பாளரை பா.ம.க. ஆதரிப்பது சமூக நீதியா?

பா.ஜ.க. வேட்பாளரை பா.ம.க. ஆதரிப்பது சமூக நீதியா?

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு திரௌபதி முர்மு என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண். இது சமூக நீதியின் வெளிப்பாடு என்று சிலர் பேசத் துவங்கியிருக்கிறார்கள். இந்த வாதத்தில் நேர்மை இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. இதற்கு முன் குடியரசுத் தலைவராக நிறுத்தப்பட்டவரும் தலித் தான். ஆனால் அவர் குடியரசுத் தலைவராக இருந்து சமூக நீதியைக் காப்பாற்றினாரா? சொல்லப் போனால் கோவிலுக்குள் செல்லக்கூட அவரை சனாதானம் அனுமதிக்கவில்லை என்பது தான் சோகமான வரலாறு. இந்தத் தேர்தலை எப்படிப் பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ள கருத்து மிகச் சரியானது, ஆழமானது. இந்தியாவில் அரசியல் சட்டம் சீர்குலைக்கப்பட்டு, ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் படுகொலைக்குள்ளாக் கப்பட்டு, மதத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிற நேரத்தில், இதை எதிர்த்து நான் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன், அந்த போராட்டத்தின் ஒரு...

எங்கள் தத்துவ பிதாமகன் பெரியார் காட்டிய வழியில் எங்களை தனிநாடு கேட்கத் தள்ளி விடாதீர்கள்! எச்சரிக்கிறார் ஆ. இராசா

எங்கள் தத்துவ பிதாமகன் பெரியார் காட்டிய வழியில் எங்களை தனிநாடு கேட்கத் தள்ளி விடாதீர்கள்! எச்சரிக்கிறார் ஆ. இராசா

திமுகவின் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு 03.07.2022 அன்று காலை தொடங்கி நடைபெற்றது. மாநாட்டு நிகழ்வில், கருத்தரங்கில் ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ தலைப்பில் திமுக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா பேச்சு. தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு விட்டு திராவிட முன்னேற்றக் கழகம் “மாநில சுயாட்சி” கொள்கைக்கு வந்து விட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருக்கக் கூடிய தந்தை பெரியார் சாகும் வரை தனித் தமிழ்நாடு கேட்டார். அவர் இறப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்னால், செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்தநாளன்று ‘விடுதலை’யில் ஒரு அறிக்கை எழுதினார். அதில் கூறினார்: “இந்தியாவில் இருக்கும் வரை இந்து மதம் என்னை சூத்திரனாக வைத்திருக்கும். இந்தியா வில் இருக்கும் வரை இந்து மதம் என்னை பஞ்சமனாக வைத்திருக்கும். அது மட்டுமில்லை இந்தியாவில் இருக்கும் வரை என்னுடைய தமிழனுக்கு பொருளாதார வளர்ச்சி வராது,  உத்தியோகத்தில் பங்கு கிடைக்காது, எந்த ஏற்றமும்...

திருப்பூர் பெரியார் படிப்பகத்தில் ஜாதி மறுப்பு மண விழா

திருப்பூர் பெரியார் படிப்பகத்தில் ஜாதி மறுப்பு மண விழா

கிறிஸ்டினா – மகாதேவன் சாதி மறுப்பு  இணையேற்பு நிகழ்வு, திருப்பூர் அம்மாபாளையம்  தந்தை பெரியார் படிப்பகத்தில்  28.06.2022 அன்று  மாலை 6.00 அளவில் நடைபெற்றது . திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் இராசு தலைமை வகித்தார். திருப்பூர் மாநகரத் தலைவர் தனபால்  வரவேற்பு கூறினார். மாநகர அமைப்பாளர் முத்து,வேலம்பாளையம் பகுதி பொறுப்பாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் மன்றம் தலைவர் சிவகாமி, ஆதித் தமிழர் பேரவை வழக்கறிஞர் அணி  கனகசபை,  தமிழ்நாடு மாணவர் கழகம் திருப்பூர் மகிழவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க,  யாழினி தமிழ்நாடு மாணவர் கழகம், மாதவன் நகர செயலாளர் திவிக, திலகவதி அம்மாபாளையம், மணிகண்டன், ஸ்ரீஜா, சண்முகம், சூப்பர் ஸ்டார் மக்கள் முன்னேற்ற கழகம் திருப்பூர் ஆகியோர் உட்பட தோழர்கள் மற்றும் மணமகன் உறவினர்கள் வாழ்த்தினார்கள். இணையர், கிறிஸ்டினா – சகாதேவன் நன்றி கூறினர். இறுதியாக இணையர், கழக வளர்ச்சி நிதியாக ரூபாய் இரண்டாயிரம் மாவட்டத்...

களப்பணியாளர் பயிலரங்கம்: ஒரு வேண்டுகோள்

களப்பணியாளர் பயிலரங்கம்: ஒரு வேண்டுகோள்

2022 ஜூலை 23, 24, 25 ஆகிய மூன்று தினங்கள் கழகக் களப்பணி யாளர்களுக்கான பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் களப்பணியாற்றும் தோழர்கள் பங்கு பெறலாம். தோழர்கள் மாவட்ட பொறுப்பாளர்களின் ஒப்புதலுடன் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மாவட்டப் பொறுப்பாளர்கள் 07.07.2022 தேதிக்குள் தங்கள் மாவட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் தோழர்கள் பட்டியலை 97894 56485 என்ற எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்புங்கள். குறைந்த அளவில் தோழர்களை வைத்து விரிவாக இப் பயிலரங்கம் நடத்திட தலைவர்,பொதுச் செயலாளர் இருவரும் திட்டமிட்டுள்ளதால் விரைவாக பெயர் பட்டியல் அனுப்பவும். அதிக தோழர்கள் இருப்பின் தலைமைக் குழு தேர்வு செய்யும் தோழர்கள் பயிலரங்கத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். பயிலரங்கம் திருச்சியில் ‘டி.எம்.எஸ்.எஸ்.’ நிறுவனத்துக்கான பயிற்சி அரங்கில் நடைபெறும். – பால்.பிரபாகரன்,  பரப்புரைச் செயலாளர்,  திராவிடர் விடுதலைக்கழகம்   பெரியார் முழக்கம் 30062022 இதழ்

சனாதனம் : ஆளுநர் ரவியின் முரண்பாடு

சனாதனம் : ஆளுநர் ரவியின் முரண்பாடு

‘சனாதன தர்மத்தை’ப் பரப்பி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அந்த தர்மம், “வேதங்களை ஆழ்ந்து படித்த ரிஷிகள், முனிவர்கள் தந்தது” என்று பேசினார். ஆளுநர் இதற்காக நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். இப்போது, “சனாதன தர்மம் மதத்தோடு தொடர் புடையது அல்ல; அது பாரத தேசத்தின் முதுகெலும்பு” என்று குரலை மாற்றியிருக்கிறார். பெரியார் மண் இப்படி அவரை மாற்றிப் பேச வைத்திருக்கிறது. பெரியார் முழக்கம் 30062022 இதழ்

அன்று குலக் கல்வி; இன்று தேசியக் கல்வி (2) குலக் கல்வியை முறியடிக்க பெரியார் தொண்டர்கள் போட்ட இரத்தக் கையெழுத்து – மு. செந்திலதிபன்

அன்று குலக் கல்வி; இன்று தேசியக் கல்வி (2) குலக் கல்வியை முறியடிக்க பெரியார் தொண்டர்கள் போட்ட இரத்தக் கையெழுத்து – மு. செந்திலதிபன்

கோவை காரமடையில் தேசியக் கல்வியையும் குலக் கல்வியையும் ஒப்பிட்டும் குலக் கல்வி எதிர்ப்பு வரலாற்றை விளக்கியும் பொறியாளர் மு. செந்தி லதிபன் ஆற்றிய உரை. இராஜகோபாலாச்சாரி – தன்னிச்சையாகக் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த போராட்ட வரலாறு மற்றும் அரசியல் சூழலை விளக்கு கிறார். (சென்ற இதழ்த் தொடர்ச்சி) கம்யூனிஸ்ட் கட்சியின் துரோகம் : சட்ட மன்றத்தில் குலக்கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து ஒரு நிபுணர் குழு அமைத்து பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வரப் பட்டது. தீர்மானத் திற்கு ஆதரவாக 139 வாக்குகள் பதிவாகின. எதிராக 137 வாக்குகள் எதிராக விழுந்தன. 2 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜாஜி அரசு தோல்வி அடைந்தது. எனவே ராஜாஜி அரசு பதவி விலக வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் குரல் கொடுத்தன. அந்த நேரத்தில் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி...

கடவுளைக் காப்பாற்றிக் கொண்டு ஏழ்மையை ஒழிக்க முடியுமா?

கடவுளைக் காப்பாற்றிக் கொண்டு ஏழ்மையை ஒழிக்க முடியுமா?

பொருளாதார ஏழைமை, செல்வ பேதம் ஒழிய வேண்டுமானால் அவைகளின் உற்பத்தி ஸ்தானம், அதாவது தோன்றுமிடமும், காப்பு இடமும் ஒழிக்கப்பட வேண்டும். ஏழைமைக்கும் செல்வத்திற்கும் கர்த்தாவும், காவலும் கடவுளாய் இருக்கிறது. அப்படிப்பட்ட கடவுளைக் காப்பாற்றிக் கொண்டு, அல்லது அக் கடவுள் ஆணைக்கு அடங்கினவனாய் இருந்து கொண்டு, கடவுள் தன்மையை – செயலை – கட்டளையை நீ எப்படி மீற, சமாளிக்க, தாண்ட முடியும் என்று சிந்தித்துப் பார். அதனால்தான் மனித சமுதாய சமத்துவத்திற்கும் மதம் ஒழிக்கப்பட வேண்டியது எப்படி அவசியமோ, அதுபோல் பொருளாதார சமத்துவத்திற்கும், அதாவது பொருளாதாரச் சமத்துவம் வேண்டுமானால் பொருளாதாரப் பேதத்துக்கும் பேதத் தன்மைக் காப்புக்கும் ஆதாரமாய் இருக்கின்ற கடவுள் தன்மை ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும். ‘குடி அரசு’ – 10.03.1945 பெரியார் முழக்கம் 30062022 இதழ்

பக்தர்களை ஏமாற்றி ரூ. 20 கோடி கொள்ளை; அப்சல்பூர் அர்ச்சகர்கள் தலைமறைவு

பக்தர்களை ஏமாற்றி ரூ. 20 கோடி கொள்ளை; அப்சல்பூர் அர்ச்சகர்கள் தலைமறைவு

அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில் பெயரில், அந்தக் கோயிலின் அர்ச்சகர்களே போலி இணையதள முக வரிகளை உருவாக்கி பக்தர்களிடமி ருந்து ரூ. 20 கோடி அளவுக்கு கொள்ளை யடித்த சம்பவம் நடந்துள்ளது. கல்புர்கி மாவட்டம் அப்சல்பூரில் இருக்கும் தாத்தரேயா கோயில் தென் னிந்தியாவில் பிரசித்தி பெற்ற கோயில் களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்தக் கோயிலில் இளம் அர்ச்சகர்களாக பணிபுரிந்து வந்த வல்லப் பூஜாரி, அன்குர் பூஜாரி, பிரதிக் பூஜாரி, கங்காதர் பூஜாரி மற்றும் சரத் பட் ஆகிய 5 பேர், சிறப்பு பூஜைக்கு ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் இதற்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த  வேண்டும் என்றும் கூறி பக்தர்களிடம் பணவசூல் செய்து வந்துள்ளனர்.  கோயிலுக்கு என்று இருக்கும் அதிகாரப் பூர்வ இணையதளத்தின் ‘லிங்கை’ப் பகிராமல், தாங்கள் தனியாக உருவாக்கிய இணையதளத்தின் ‘லிங்கை’ப்  பகிர்ந்துள்ளனர். இந்த வகையில்...

உட்கட்சி மோதல் : அ.தி.மு.க. பாடம் கற்குமா?

உட்கட்சி மோதல் : அ.தி.மு.க. பாடம் கற்குமா?

ஊடகங்கள் நான்கு நாட்களாக கொண்டாடி மகிழ்கின்றன. ஈபிஸ், ஓபிஎஸ் – ஓபிஎஸ், ஈபிஎஸ். இந்த மோதல் செய்தி தான் தமிழ்நாட்டு மக்களின் ஆதார சுருதியான பிரச்சனைப் போல் சித்தரிக்கப்பட்டு வருகின்றன. இரண்டு தரப்பினரும் ஒரே கருத்தைக் கூறிக்கொண்டு வருகின்றன. “இது புரட்சித் தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டிருக்கிற இயக்கம், தொண்டர்கள் தான் முடிவெடுப்பார்கள், இதை யாராலும் அசைக்கவோ, ஆட்டவோ முடியாது” இது இரு தரப்பும் பேசுகிற வசனம். ஊடகங்கள் இதையே திருப்பித் திருப்பி பரப்புகின்றன. தவிர, இதனுடைய வரலாற்றுப் பின்னணியைப் பற்றி ஆராய்வதற்குத் தயாராக இல்லை. சரி பார்ப்போம். புரட்சித் தலைவிகளின் விசுவாசிகள் என்று இரண்டு பேரும் கூறுகிறார்கள். அந்த புரட்சித் தலைவி ஜெயலலிதா கூட கடைசி காலத்தில், எம்.ஜி.ஆர். படத்தை போடுவதற்குக் கூட எதிர்ப்புத் தெரிவித்தவர் தான். எம்ஜிஆரை ஓரம் கட்டியவர் தான். அதற்குப் பிறகு புரட்சித் தலைவியின் தலைமையின் கீழ் கட்சியை...

சனாதனவாதிகள் அப்படி பெரியாரிஸ்ட்டுகள் இப்படி

சனாதனவாதிகள் அப்படி பெரியாரிஸ்ட்டுகள் இப்படி

“மதம் மாறுவது தேச விரோதம், ஆனால், வாக்காளர்களுக்கு துரோகம் செய்து விட்டு கட்சி மாறுவது மட்டும் தேச பக்தியா?” என்று ஒரு பா.ஜ.க. ‘ஜீ’யிடம் கேட்டேன். அவரிடம் பதில் இல்லை. “‘சனாதன தர்மம்’ என்கிறீர்கள், அதற்கு என்ன அர்த்தம்” என்று கேட்டேன்; “என்றும் மாறாதது, நிலையானது” என்றார். “அப்படி யானால் ஆட்சிகள் மாறுவதே சனாதனத்துக்கு எதிரானதா” என்று கேட்டேன்; “இது என்ன விதண்டாவாதம்?” என்றார். “சரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளைக் கவிழ்க்கலாம்; அதற்கு எம்.எல்.ஏ.க்களை விலை பேசலாம்; சொகுசு ஓட்டல்களில் அடைத்து வைக்கலாம்; இதுவே பாரத பண்பு என்று உங்களது வேதமும் முனிவர் களும் ரிஷிகளும், எந்த புனித நூலிலாவது பறை சாற்றியிருக்கிறார்களா?” என்று கேட்டேன். “இதுக்குப் போய் அவுங்களையெல்லாம் இழுக்காதீங்கன்னு” கொஞ்சம் ஆவேசமாகவே கேட்டார். “ரிஷிகளும் முனிவர்களும் காட்டிய ஆன்மீகப் பாதையில்  தான் உங்க பா.ஜ.க. நடைபோடு கிறதா” என்று  கேட்டேன்; கோபம் கொப் பளித்தது; “ஆமாம். அதில் என்ன...

தமிழ்நாடு கிராமங்களில் தலைவிரித்தாடும் ஜாதி வெறி

தமிழ்நாடு கிராமங்களில் தலைவிரித்தாடும் ஜாதி வெறி

தமிழ்நாட்டுக்  கிராமங்கள் இன்னும் ஜாதி ஆதிக்கப் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கின்றன. தீண்டப்படாத மக்கள் என்று சொல்லப்படுகிற தலித் மக்கள் சுடுகாட்டிற்கு கூட போக முடியாத நிலை உள்ளது. நன்னிலம் அருகே ஒரு முதியவர் (தலித்) இறந்துவிட்டார். அவர் சடலத்தை ஊர் வழியாகக் கொண்டு செல்ல முடியாமல் பாய்ந்து வருகிற முழங்கால்  அளவு தண்ணீரில், சடலத்தை சுமந்து வருகிற காட்சியை ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே பேட்டை அடுத்த ராஜாநகரம் என்ற கிராமத்தில், ஆதி திராவிட வகுப்பைச் சார்ந்த 100 குடும்பங்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு இலவச வீட்டு மனைகளை வழங்கி யது. ஆனால், அரசே வழங்கிய அந்த வீட்டு மனைகளை இவர்களால் பயன் படுத்திக் கொள்ளவே முடியவில்லை. 25 ஆண்டுகளாக அருகில் உள்ள வேறு ஜாதியினர் இவர்களை குடிவைக்க விட மாட்டோம் என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே வருகின்றனர். தற்போது மனித உரிமை...

நடிகர் மாதவனின் பஞ்சாங்க உளறலுக்கு விஞ்ஞானி பதிலடி

நடிகர் மாதவனின் பஞ்சாங்க உளறலுக்கு விஞ்ஞானி பதிலடி

பொய்யான வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பி  நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்டு “ராக்கெட்ரி – நம்பி விளைவு”  என்ற படத்தை நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ளார். இந்தப்  படம், ஜூலை 1ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி, சென்னையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய நடிகர்  மாதவன், “அமெரிக்கா, ரஷ்யா, சீனா  மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலகோடி  செலவழித்து செவ்வாய்க் கிரகத்துக்கு செயற்கைக் கோளை அனுப்பி வெற்றி பெற்றன. ஆனால், இந்தியா 2014ஆம் ஆண்டு சிறிய எஞ்சினை வைத்துக்கொண்டு செவ்வாய்க்கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பியது. செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பிய களம் 32ஆவது முறையில்தான் வெற்றி பெற்றது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தவும், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைய வும் நமது முன்னோர்கள் உருவாக்கிய பஞ்சாங்கத்தின்படியான நட்சத்திர மற்றும் கோள்களின் வரைபடம்தான் (ஊநடநளவயைட ஆயயீ) இந்தியக் குழுவுக்கு உதவியது” என்று கூறியிருந்தார். இந்தத் தகவலை “விஞ்ஞானி நம்பி ...

பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஜாதியே! – முனைவர் கலையரசன்

பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஜாதியே! – முனைவர் கலையரசன்

ஜாதியின் மூன்று தடைகள் பொருளாதார வளர்ச்சியை அனைவருக்கும் கொண்டு செல்லக்கூடிய மாற்றத்துக்கு மூன்று அம்சங்கள் தடையாக இருக்கின்றன. ஒன்று நில உரிமைகளில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள்; இது உற்பத்தியையும் பாதிக்கிறது. இரண்டாவது உயர்கல்வியை வரலாற்று ரீதியாக ஒரு பிரிவினர் மட்டும் தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டு அனைவருக்கும் கிடைத்து விடாமல் மறுத்து வருதல்; மூன்றாவது நவீன தொழில் மற்றும் அறிவியல் துறைகளில் நிகழும் ஜாதியப் பாகுபாடு; இப்போது ‘உயர் ஜாதி’ அறிவுஜீவி வர்க்கம் தங்களுக்கான ‘உறவுத் தொடர்புகளை’ வலிமையாக்கிக் கொண்டு மேற்குறிப்பிட்டத் துறைகளை தங்கள் பிடிக்குள் வைத்திருக்கிறது. – ‘கலையரசன்-ஏ’ கட்டுரையிலிருந்து இந்தியாவில் பொருளாதாரம், வேலை வாய்ப்பு களில் வளர்ச்சியை நோக்கி முன்னேறிச் செல்வதில், ஜாதி தடையாக நிற்கிறது என்பதை விளக்கி ‘கூhந னுசயஎனையைn ஆடினநட’ புத்தகத்தை எழுதிய முனைவர் கலையரசன் ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஜூன் 23, 2022) ஓர் ஆய்வு கட்டுரையை எழுதியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக பொருளாதார...

நன்கொடை

நன்கொடை

மேட்டூர் புதுச்சாம் பள்ளி கழகத் தோழர் செந்தில் குமார், கழகத் தலைவரை சந்தித்து கழக வளர்ச்சி நிதிக்காக ரூ.2500/- வழங்கினார். பெரியார் முழக்கம் 23062022 இதழ்

திருப்பூரில் ‘பிரியாணிபாளையம்’ உணவகம் திறப்பு

திருப்பூரில் ‘பிரியாணிபாளையம்’ உணவகம் திறப்பு

திருப்பூரில் பிரியாணிபாளையம் ரெஸ்ட்டாரெண்ட் அண்ட் கேட்டரிங் திறப்பு விழா பல்லடம் ரோடு, ஹோட்டல் டி.ஆர்.ஜி. பில்டிங்கில் 17.06.2022 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உணவகத்தை திறந்து வைத்தார். உணவகத்தின் முதல் விற்பனையைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி துவங்கி வைத்தார். முதல் விற்பனையை திருப்பூர் மாநகர மேயர் தினேஷ் குமார் பெற்றுக் கொண்டார். அடுத்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கிட்ஸ் கிளப்குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ் சேர்மன் மோகன் கார்த்திக், கழகப் பொருளாளர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, திருப்பூர் மாவட்ட திவிக தலைவர் முகில் ராசு, கூநுமுஞஹ தலைவர் ஸ்ரீகாந்த் மற்றும் செயலவை உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்....