பாஜக நிர்வாகிகள் மீது கழகம் புகார் மனு
திருப்பூரில் 15.07.22 அன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முறையான அனுமதி ஏதும் இல்லாமல் செல்ஃபி வித் அண்ணாமலை என்று விளம்பரம் செய்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கல்லூரி முதல்வருக்கு மிரட்டல் விடுத்தும், கல்லூரி மாணவிகள், மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளின் மீது தக்க பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளும்படி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 16.07 22 திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
திராவிடர் விடுதலைக் கழக திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு தலைமை யில் திருப்பூர் மாநகரச் செயலாளர் மாதவன், 15 வேலம்பாளையம் பொறுப்பாளர் மாரிமுத்து, தோழர்கள் திலகவதி, பிரசாந்த் ஆகியோர் உடன் சென்றனர்.
பெரியார் முழக்கம் 21072022 இதழ்