அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: ஆதரவு முஸ்லீம்களை வைத்து இஸ்லாமிய படுகொலை நடத்துகிறது பா.ஜ.க.
காங்கிரஸ் கட்சியின் செய்திப் பிரிவுத் தலைவர் பவன் கேரா அளித்துள்ள அதிர்ச்சியான பேட்டி:
கன்னையா லாலை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள இருவரில் ரியாஸ் அத்தாரி பிரதான குற்றவாளியாக கருதப்படுகிறார். இவர் பாஜக சிறுபான்மை பிரிவில் இருக்கிறார். அதற்கான புகைப்பட ஆதாரம் மற்றும் முக நூல் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. பாஜக தலைவர்கள் இர்ஷத் சயின்வாலா, முகமது தாஹிர் ஆகியோருடன் ரியாஸ் அத்தாரி நெருங் கிய தொடர்பில் இருந்துள்ளார். ராஜஸ்தான் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான குலாப்சந்த் கட்டாரியாவின் நிகழ்ச்சிகளில் எல்லாம் ரியாஸ் அத்தாரி தவறாமல் கலந்து கொண்டுள்ளார்.
இர்ஷத் சயின்வாலா கடந்த 2018 நவம்பர் 30ல் பகிர்ந்த முக நூல் பதிவு, முகமது தாஹிர் 3 பிப்ரவரி 2019, 30 நவம்பர் 2018, 27 அக்டோபர் 2019, ஆகஸ்ட் 10, 2021, நவம்பர் 28, 2019 மற்றும் இன்னும் பிற பதிவுகளில் அத்தாரி பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக பழகிவந்தது அம்பலமாகியுள்ளது. உதய்பூர் சம்பவத்தில் பிரத மர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் காக்கும் மவுனம், ஒருவேளை நாட் டில் மதமோதல்களை உருவாக்க பாஜக முயல்கிறதோ என்ற எண் ணத்தை உருவாக்குகிறது. அதே போல் பாஜக தனது தலைவர்கள், செய்தித் தொடர்பாளர்கள் மூலம் நாட்டை பிரித்தாள முயற்சிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. அத்தாரிக்கும் பாஜக-வுக்கு மான தொடர்பை எல்லாம் மூடி மறைக்கவே ஒன்றிய அரசு அவசர அவசரமாக வழக்கு விசாரணை யை என்ஐஏ-க்கு மாற்றியதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு பவன் கேரா கூறி யுள்ளார். ஆனால், “பயங்கரவாதம், தேசப் பாதுகாப்பு விஷயங்களில் இது போன்ற முட்டாள் தனங்களை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று பாஜக செய்தி பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல், ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் பொது மக்களிடம் பிடிபட்ட லஷ்கர் தீவிரவாதியான உசேன் ஷா, பாஜக நிர்வாகி என விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீர், லடாக், போன்ற பகுதிகளில் தீவிரவாதிகள் போதைப் பொருட்கள் கடத்துவது, ஆயுதங்கள், வெடிபொருட்கள் கடத்துவது போன்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்முகாஷ்மீர் மாநிலம் ரியாஸி மாவட்டம் துக்சான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லஷ்கர் இதொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட பயங்கரவாதிகள் பைசல் அகமது தார் மற்றும் தாலிப் உசேன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருவரில் ஒருவர் புல்வாமாவை சேர்ந்த ஃபைசல் அகமது, இன்னொருவர் ரஜோரியை சேர்ந்த தலிப் உசேன் ஆகியோராவர். இவர்களில் தலிப் உசேன் பாஜகவில் இணைந்துள்ளார். இவர் பாஜக மூத்த தலைவர்களுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துள்ளார். இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில் பாஜகவில் நிறைய பேர் ஆன்லைன் மூலம் இணைகிறார்கள்.
இதுகுறித்து ஏடிஜிபி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ரியாஸி மாவட்டம் துக்சான் கிராமத்தில் உள்ள மக்களுக்கு பாராட்டுகள். ஆயுதங்கள் சுற்றித் திரிந்த இரு தீவிரவாதிகளை பிடித்துக் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு ரூ. 2 இலட்சம் சன்மானம் வழங்கப் படுவதாக டிஜிபி அறிவித்துள்ளார் என ஏடிஜிபி தெரிவித்துள்ளார்.
பெரியார் முழக்கம் 07072022 இதழ்