தமிழ்நாடு கிராமங்களில் தலைவிரித்தாடும் ஜாதி வெறி

தமிழ்நாட்டுக்  கிராமங்கள் இன்னும் ஜாதி ஆதிக்கப் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கின்றன. தீண்டப்படாத மக்கள் என்று சொல்லப்படுகிற தலித் மக்கள் சுடுகாட்டிற்கு கூட போக முடியாத நிலை உள்ளது. நன்னிலம் அருகே ஒரு முதியவர் (தலித்) இறந்துவிட்டார். அவர் சடலத்தை ஊர் வழியாகக் கொண்டு செல்ல முடியாமல் பாய்ந்து வருகிற முழங்கால்  அளவு தண்ணீரில், சடலத்தை சுமந்து வருகிற காட்சியை ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே பேட்டை அடுத்த ராஜாநகரம் என்ற கிராமத்தில், ஆதி திராவிட வகுப்பைச் சார்ந்த 100 குடும்பங்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு இலவச வீட்டு மனைகளை வழங்கி யது. ஆனால், அரசே வழங்கிய அந்த வீட்டு மனைகளை இவர்களால் பயன் படுத்திக் கொள்ளவே முடியவில்லை. 25 ஆண்டுகளாக அருகில் உள்ள வேறு ஜாதியினர் இவர்களை குடிவைக்க விட மாட்டோம் என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே வருகின்றனர். தற்போது மனித உரிமை ஆணையம் தலையிட்டு வருவாய்த் துறைக்கு உத்தரவிட்டு, திருத்தணி கோட்டாட்சியர் அங்கே சென்று, நில அளவீடுகளை செய்து ஆதி திராவிட மக்களுக்கான வீட்டு மனை பட்டாக் களுக்கு ஒதுக்கீடுகளை செய்துள்ளார். அருகில் உள்ள ஜாதி வெறியர்கள் ஒன்று திரண்டு வந்து இங்கே இவர்கள் குடியிருக்க அனுமதிக்க முடியாது என்று எதிர்த்தனர். ஏதோ அவர்கள் வீட்டைப் பிடுங்கிக் கொண்டது போல, அரசு வழங்கிய மனைகளில் கூட குடியிருக்க விடாது மறுக்கும் அளவிற்கு ஜாதி வெறியை ‘மண்டை யில்’ ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஜாதி வெறியோடு மூன்று பேர் சாலை மறியல் செய்து கைது செய்யப்பட் டிருக்கிறார்கள். இவர்கள் மீது மிக மிகக் கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

ஒட்டு மொத்த கிராமத்தினுடைய ஜாதிய மனப்பான்மையைத் தடுக்க வேண்டும். அதற்காக ஒட்டு மொத்த கிராமத்திற்கு அரசு வழங்கக்கூடிய சலுகைகள், இத்தகைய தீண்டாமை யில் ஈடுபட்டால் நிறுத்தப்படும் என்று அந்த உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இயக்கங்களும் களமிறங்கிப் போராட வேண்டும்.

ஒரு ஆட்சியோ, அரசு இயந் திரமோ இவைகளை முழுமையாக செய்து முடித்து விடும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. எனவே, இயக் கங்களும், ஆட்சியும் கைகோர்த்துக் கொண்டு, கிராமங்களை செல்லரித்துக் கொண்டிருக்க கூடிய ஜாதி வெறிக்கு முற்றுப் புள்ளி வைக்க முன்வர வேண்டும்.

பெரியார் முழக்கம் 30062022 இதழ்

You may also like...