மூன்று நாள்கள் திருச்சியில் விவாதங்களுடன் நடந்தன களப்பணியாளர்களுக்கு கழகம் பயிற்சி வகுப்புகள்
திராவிடர் விடுதலைக் கழகத் தின் களப் பணியாளர்கள் 47 பேருக்கு பயிற்சி முகாம், திருச்சி டான்பாஸ்கோ மீடியா அரங்கில் ஜூலை 23, 24, 25 தேதிகளில் நடைபெற்றது. பல்வேறு தலைப்பு களில் வகுப்புகள் நடத்தப்பட்ட தோடு விவாதங்களுடன் நடந்தன.
முதல் நாள்: கொள்கை முன்னெ டுப்பில் பெரியாரின் அணுகு முறைகள் – விடுதலை இராசேந்திரன், பெண் ணியம்/டுழுஞகூணு – ஆசிரியர் சிவகாமி, தமிழ் வளர்ச்சியில் பெரியாரின் தொண்டு – பால் பிரபாகரன், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் / போதாமைகள்/ஆணவக் கொலைகள் – திண்டிவனம் இரா.முருகப்பன்.
இரண்டாம் நாள் : பெரியாரும் அயோத்திதாசரும் / அம்பேத்கர்/ எம்.சி. இராஜா / இரட்டைமலை சீனிவாசன் /சகஜானந்தா ஆகியோரும் – கொளத்தூர் மணி, மக்கள் உளவிய லும் கொள்கை பரப்புரைகளும் – மருத்துவர் சிவபாலன், இந்திய ஒன்றியமும் தமிழர் தன்னாட்சியும் – ஆ.வந்தியத்தேவன் (மதிமுக), ஆர்.எஸ்.எஸ். பண்பாட்டுப் புரட்டுகள் – விடுதலை இராசேந்திரன்.
மூன்றாம் நாள் : பாஜக எட்டு ஆண்டுகளின் குளறுபடிகள் – இளந் தமிழகம் செந்தில், தமிழ்த்தேசியர்கள் பொய்யுரைகள்/ கற்பிதங்கள் – வாலாசா வல்லவன்(மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி), தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் திராவிட இயக்கத்தின் தாக்கம் – வெற்றிச் செல்வன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
– என, மூன்று நாட்களும் வகுப்புகள் குறித்த நேரத்தில் நடைபெற்றன.
ஒவ்வொரு நாளும் வகுப்புகள் முடிந்த பின், இரவில் தோழர்களின் விவாதங்கள் நடைபெற்றன.
பெரியார் முழக்கம் 28072022 இதழ்