அகில இந்திய சாதி ஒழிப்பும் நாமும்

சாதி ஒழிப்புக்காக நமது கழகம் ஏன் அகில இந்திய ரீதியில் பாடுபடக்கூடாது என்று கேட்கப்படுகிறது. அகில இந்திய ரீதியில் சாதி ஒழிப்பு என்பது சுலபத்தில் சாத்தியமாயிராது. ஏனெனில் நம்மவர்களைப்போல் பெரும்பாலோருக்குள்ள மான உணர்ச்சி வடநாட்டாருக்கு இல்லை. அவர்கள் யாரும் சூத்திரன் என்பதற்காகவோ, பஞ்சமன் என்பதற்காகவோ, தாசிமகன் என்பதற்காகவோ வெட்கப்படுவதும் இல்லை. இந்து மதத்தை அவர்கள் நம்மைப்போல் வெறுத்து ஒதுக்குவதும் இல்லை. மாறாக, அதைப் பெருமையாகவே கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்நாட்டு மக்களோ ஆதிகாலந்தொட்டே சாதிபேதங்களை வருணாசிரம தர்மத்தை எதிர்க்கிறார்கள். எனவே, சாதி ஒழிப்பு நம்நாட்டில் சாத்தியமாயிருப்பது போல் வடநாட்டில் சாத்தியமாயிராது. எந்தச் சீர்திருத்தக் கருத்தும் வடநாட்டாருக்குச் சுலபத்தில் புரியவும் புரியாது. எனவேதான், தோழர் அம்பேத்கர் அவர்களால் கொண்டு வரப்படும் இந்துச் சட்ட மசோதா அங்கு பலமான எதிர்ப்புக்குள்ளாக வேண்டி இருக்கிறது. இதை எல்லாம் உணர்ந்துதான் நாம் நம் கழக முயற்சியை நம் திராவிட நாட்டோடு நிறுத்திக் கொண்டிருக் கிறோம்.

– ‘விடுதலை’ 22.02.1950

பெரியார் முழக்கம் 21072022 இதழ்

You may also like...