மகிழ் உணவகம் : கழகத் தலைவர் திறந்தார்
ஈரோடு வெள்ளோட்டில் மகிழ் உணவகத்தை 17.07.2022 ஞாயிறு அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். பெயர்ப் பலகையை திமுக வின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திமுக மாநகர பகுதி செயலாளர் அக்னி சந்திரன், கொங்கு இளைஞர் பேரவை லிங்கேஸ்வரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக தலைமைக் குழு உறுப்பினர் காவலாண்டியூர் ஈஸ்வரன் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 21072022 இதழ்