மேட்டூர் – கோவையில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா
மேட்டூர் : மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 15.07.2022 மாலை 5.00 மணி அளவில் கல்வி வள்ளல் காமராசர் 120ஆவது பிறந்தநாள் விழா நகரத் தலைவர் செ.மார்ட்டின் தலைமையில் நடைபெற்றது.
மேட்டூர் சின்ன பார்க் பகுதியில் உள்ள காமராசர் உருவச்சிலைக்கு தோழர்கள் அனிதா, கீதா, அறிவுமதி ஆகியோர் மாலை அணிவித்தனர். நகர செயலாளர் குமரப்பா முழக்கங்கள் எழுப்பினார்.
மேட்டூர் 16ஆவது வார்டு மஜீத் தெரு பகுதியில் காமராசர் பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம் மாலை 6.00 மணிக்கு தொடங்கியது.
முதல் நிகழ்வாக பறைமுழக்கம், பகுத்தறிவு, ஜாதி ஒழிப்பு பாடல்கள் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு தோழர்களால் நடத்தப்பட்டது. தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. நங்கவள்ளி அன்பு, தலைமை செயற்குழு உறுப்பினர் அ. சக்திவேல் ஆகியோர் உரையாற்றினர்.
நங்கவள்ளி, மேட்டூர் சுளு, கொளத்தூர் ஆகிய பகுதியிலிருந்து பொறுப்பாளர் களும், தோழர்களும் கலந்து கொண்டனர்.
பொதுமக்களிடையே துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. நிறைவாக மேட்டூர் நகரத் தலைவர் செ. மார்ட்டின் நன்றி கூற இரவு 8.00 மணி அளவில் தெருமுனைக் கூட்டம் நிறைவடைந்தது.
கோவையில் : கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 16.07.2022 அன்று நடைபெற்ற கல்வி வள்ளல் காமராசர் 120ஆவது பிறந்த நாள் விழா தெருமுனை கூட்டங்கள் செஞ்சேரிமலை – சுல்தான்பேட்டை – காமநாயக்கன் பாளையத்தில் நடந்தன.
செஞ்சேரிமலை பகுதியில் 16.07.2022 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் தெருமுனைக் கூட்டம் நடைப்பெற்றது. தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
மாவட்டத் தலைவர் பா.இராமச்சந்திரன், விசிக பொறுப்பாளர் விடுதலை செல்வன், மாணவர் கழகம் விஷ்ணு தொடக்கவுரையாற்றினார். மாவட்ட கழகச் செயலாளர் யாழ்.வெள்ளியங்கிரி, மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கோவை மாநகர துணைத் தலைவர் வெங்கட் நன்றியுரை கூறினார்.
சுல்தான் பேட்டை : 16.07.2022 சனி மாலை 6 மணியளவில் சுல்தான்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி தொடக்கமாக தோழர் கிருஷ்ணன் காமராசர் நினைவுப் பாடலை பாடினார்.
கோவை மாநகரச் செயலாளர் நிர்மல், சிவராசு, மாணவர் கழகத் தோழர் சபரிகிரி ஆகியோர் தொடக்கவுரையாற்றினர். நிறைவாக மாவட்ட கழகச் செயலாளர் யாழ்.வெள்ளிங்கிரி சிறப்புரையாற்றினார். ஆனந்த் நன்றி உரையாற்றினார். தோழர்கள் சூலூர் தமிழ்ச்செல்வி, சூலூர் நாகலட்சுமி புத்தக விற்பனை செய்தனர்.
தெருமுனைக் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற இறுதிவரை உதவியாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி விடுதலை செல்வன், காமநாயக்கன்பாளையம் பகுதி திமுக ஒன்றியச் செயலாளர் முத்துமாணிக்கம், திமுகவைச் சேர்ந்த மின்னல் இனிப்புக்கடை உரிமையாளர் ஆகியோருக்கு கழகம் நன்றி கூறுகிறது.
காமநாயக்கன்பாளையம் : திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்ற கல்வி வள்ளல் காமராசர் 120ஆவது பிறந்தநாள் விழா தெருமுனை கூட்டம் 16.07.2022 சனி இரவு 8 மணியளவில் காமநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.
நிகழ்ச்சி தொடக்கமாக கிருஷ்ணன் கல்வி உரிமை மீட்பு பாடலை பாடினார். மாணவர் கழகத் தோழர் மகிழவன் தொடக்கவுரையாற்றினர். மாவட்ட கழகச் செயலாளர் யாழ்.வெள்ளிங்கிரி, கழகப் பொருளாளர் சு.துரைசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
காமநாயக்கன்பாளையம் திமுக ஒன்றிய செயலாளர் முத்து மாணிக்கம் தோழர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்தார். விரைவில் ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சூலூர் பன்னீர்செல்வம் நன்றி உரையாற்றினார்..
தோழர்கள் அனைவருக்கும் மின்னல் பலகாரம் கடை தோழர் அனைவருக்கும் தேநீர் வழங்கினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவை தோழர்கள் அனுப்பட்டி பிரகாஷ், சுபா உணவு வழங்கினார்கள். தோழர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
பெரியார் முழக்கம் 21072022 இதழ்