கடவுளைக் காப்பாற்றிக் கொண்டு ஏழ்மையை ஒழிக்க முடியுமா?

பொருளாதார ஏழைமை, செல்வ பேதம் ஒழிய வேண்டுமானால் அவைகளின் உற்பத்தி ஸ்தானம், அதாவது தோன்றுமிடமும், காப்பு இடமும் ஒழிக்கப்பட வேண்டும். ஏழைமைக்கும் செல்வத்திற்கும் கர்த்தாவும், காவலும் கடவுளாய் இருக்கிறது. அப்படிப்பட்ட கடவுளைக் காப்பாற்றிக் கொண்டு, அல்லது அக் கடவுள் ஆணைக்கு அடங்கினவனாய் இருந்து கொண்டு, கடவுள் தன்மையை – செயலை – கட்டளையை நீ எப்படி மீற, சமாளிக்க, தாண்ட முடியும் என்று சிந்தித்துப் பார்.

அதனால்தான் மனித சமுதாய சமத்துவத்திற்கும் மதம் ஒழிக்கப்பட வேண்டியது எப்படி அவசியமோ, அதுபோல் பொருளாதார சமத்துவத்திற்கும், அதாவது பொருளாதாரச் சமத்துவம் வேண்டுமானால் பொருளாதாரப் பேதத்துக்கும் பேதத் தன்மைக் காப்புக்கும் ஆதாரமாய் இருக்கின்ற கடவுள் தன்மை ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

‘குடி அரசு’ – 10.03.1945

பெரியார் முழக்கம் 30062022 இதழ்

You may also like...