மதுரையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி
தமிழ் நாடு அரசின் உயர்கல்வித் துறையை புறக்கணித்து மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த ஆர்.என். ரவியைக் கண்டித்து மதுரையில் மாவட்ட கழக ஒருங் கிணைப்பில் அனைத்து ஜனநாயக இயக்கங்களின் சார்பில், 13.7.2022 அன்று காலை 11 மணியளவில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலார் மா.பா. மணி அமுதன் தலைமை தாங்கினார்.
சி.பி.ஐ., சி.பி.எம்., அதிமமுக, தபெதிக, தமுமுக, தமிழ் புலிகள், ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட இயக்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தோழர்களையும் காவல் துறை கைது செய்து மாலையில் விடுவித்தது.
பெரியார் முழக்கம் 21072022 இதழ்