திருப்பூரில் ‘பிரியாணிபாளையம்’ உணவகம் திறப்பு
திருப்பூரில் பிரியாணிபாளையம் ரெஸ்ட்டாரெண்ட் அண்ட் கேட்டரிங் திறப்பு விழா பல்லடம் ரோடு, ஹோட்டல் டி.ஆர்.ஜி. பில்டிங்கில் 17.06.2022 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உணவகத்தை திறந்து வைத்தார். உணவகத்தின் முதல் விற்பனையைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி துவங்கி வைத்தார்.
முதல் விற்பனையை திருப்பூர் மாநகர மேயர் தினேஷ் குமார் பெற்றுக் கொண்டார். அடுத்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கிட்ஸ் கிளப்குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ் சேர்மன் மோகன் கார்த்திக், கழகப் பொருளாளர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, திருப்பூர் மாவட்ட திவிக தலைவர் முகில் ராசு, கூநுமுஞஹ தலைவர் ஸ்ரீகாந்த் மற்றும் செயலவை உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்.
பெரியார் முழக்கம் 23062022 இதழ்