சத்துணவில் ‘சனாதனம்’: முட்டைக்குத் தடை?
வைதீக மதம் அசைவ உணவை முழுமையாக வெறுக்கிறது. அசைவ உணவை சாப்பிடாமல் இருப்பது தான் இந்து தர்மம் என்று கருதுகிறது. அதனால் தான் பார்ப்பனர்கள் அசைவ உணவை வெறுக்கிறார்கள். ஆனால், குழந்தைகளுக்கு புரதச் சத்து கண்டிப்பாக வேண்டும் என்ற அடிப்படையில் மதிய உணவுத் திட்டத்தில் முட்டை போடப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் நடைபெற்று வருகிற பாரதிய ஜனதா கட்சி வைதீகப் பார்ப்பனியக் கொள்கையை ஏற்று, “குழந்தைகளுக்கு முட்டை போடுவது அவர்களுடைய ஆரோக்கியத்துக்கு எதிரானது, கொழுப்புச் சத்தை குழந்தைகளுக்கு உருவாக்கும், ஹார்மோன் பிரச்சனைகளை உருவாக்கும்” என்று ஒரு முடிவிற்கு வந்திருக்கிறது. கர்நாடகத்தில் பாடத்திட்டத்தை எப்படி அமைப்பது என்று உருவாக்கப்பட்ட ஒரு குழு, பாடத் திட்டத்தையும் தாண்டி மதிய உணவுத் திட்டத்திற்கும் ஒரு பரிந்துரையை வழங்கியிருக்கிறது. அதில் தரப்பட்ட பரிந்துரைதான் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தில் முட்டை போடக்கூடாது என்பதாகும். இந்த அறிக்கை கர்நாடக அரசிடமும், சூஊநுசுகூ என்று சொல்லப்படுகின்ற தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி...