வள்ளலார் வரலாறு திரும்புகிறது
சிதம்பரத்துக்கு அருகில் உள்ள மருதூர் கிராமத்தில் 1823 அக்டோபரில் கருணீகர் (கணக்குப் பிள்ளை) மரபில் பிறந்தவர் இராமலிங்கனார். அவர் முதலில் பாடிய ‘பாமாலை’யில் “பெருநெறி பிடித் தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்று எழுதினார். உருவ வழிபாடு, வேதம், ஆகமங்களைக் கடுமையாக எதிர்த்தார். 1872 ஜன. 25இல் வடலூரில் உருவ வழிபாடு இல்லாமல் ஒளியை மட்டுமே வணங்கும் ‘ஞான சபை’யைத் தொடங்கினார். இது எல்லா மதங்களுக்கும் பொதுவானது என்று அறிவித்தார். தில்லை நடராசன் பக்தராக இருந்தவர் தான்; அங்கே வழிபடச் சென்றபோது தீட்சதர்கள் அனுமதிக்கவில்லை. சினமடைந்த அவர், “இந்தக் கோயிலுக்கு எதிராக ஒரு தலத்தை உண்டாக்கி அங்கே நடராசனை அழைத்துக் கொள்ளப் போகிறேன்” என்று அறிவித்தார். (ஆதாரம்: 1904இல் பு. பாலசுந்தர நாயகர் எழுதிய “இராமலிங்க பிள்ளை பாடல்) 50 ஆண்டுகாலம் வாழ்ந்த வள்ளலார், கடைசி 10 ஆண்டு காலத்தில் தனது சைவம், முருகன், ஆகம பக்திகளைத் துறந்தார்....
