கழகத் தோழர் புதிய இல்லம்: சிற்பி ராஜன் திறந்து வைத்தார்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சாலை அனந்தபுரம் இராமநாதன் -சத்யா ஆகியோர் கட்டிய புதிய இல்லம் திறப்பு விழா 02-01-2022 அன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வுக்கு தி.வி.க தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் தலைமை வகித்தார்.
திராவிடன் அப்துல் மாலிக் வரவேற்புரையாற்றினார், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ், கழக மாவட்ட தலைவர் பூஆ.இளையரசன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சேரன், விடாது கருப்பு நாத்திகன் ஆகியோர் வாழ்த்துரைக்கு பின் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் உரையாற்றினார். தொடர்ந்து, சிற்பி இராசன் இல்லத்தை திறந்து வைத்து சாமியார் களின் மோசடிகளை அம்பலப்படுத்தும் மந்திரமா? தந்திராமா? நடத்தி சிறப்புரை யாற்றினார்கள் இறுதியில் இராமநாதன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
இல்லத்திறப்பு நிழகழ்சியையொட்டி பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பரப்புரை செயலாளர் விஜி, எழுச்சி திராவிடர்கள் அமைப்பாளர் விஜயகுமார், அனந்தபுரம் திமுக நகர செயலாளர் டாக்டர் த.கல்யாணகுமார், விடுதலை சிறுத்தை கட்சியின் நகர செயலாளர் காத்தமுத்து மற்றும் சென்னை தோழர்கள் கிருத்திகா, அசுரன், செஞ்சி தோழர் நந்தகுமார், ஜாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட பெரியாரிய தோழர் கண்டமங்கலம் பூபதி- ரூபா, பெரியபாபு சமுத்திரம் முருகையன், பாக்கம் பகுதி தோழர் இளையபெருமாள் மற்றும் உறவினர்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கருத்துகளை கேட்டனர்.
நிகழ்ச்சி நிறைவுக்குப் பிறகு திராவிடன் அப்துல்மாலிக், தோழர்கள் அனைவரையும் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று தோழர்களுக்கு நினைவாக பிரேம் செய்யப்பட்ட பெரியார் படம் கொடுத்து மதியம் அனைவருக்கும் இறைச்சி உணவு வழங்கி சிறப்பித்தார்.
பெரியார் முழக்கம் 13012022 இதழ்