Author: admin

இந்திய ஒன்றியம் தமிழர்களுக்கென குற்றப்பரம்பரை சட்டத்தை வைத்துள்ளதா? – திவிக தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் காட்டம்

இந்திய ஒன்றியம் தமிழர்களுக்கென குற்றப்பரம்பரை சட்டத்தை வைத்துள்ளதா? – திவிக தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் காட்டம்

தமிழ்நாடு நாள் விழாவை கொண்டாடியதாக தோழர் பொழிலன் உள்ளிட்ட 15 தோழர்களை சிறைப்படுத்திய தமிழ்நாடு அரசை கண்டிக்கின்றோம்! தமிழ்நாடு உருவான நவம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடு நாளாக அரசு விழா எடுத்து கொண்டாடி வரும் வேளையில், தமிழ்நாடு நாள் விழா மற்றும் தமிழ்நாட்டு கொடி ஏற்றியதற்காக தமிழக மக்கள் முன்னனியின் தலைவரும், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் பொழிலன், தோழர் ஜான் மண்டேலா ஆகியோர் செங்கற்பட்டு சிறையிலும் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்கள் (ஏசு) ச.குமார், சு.நாகேந்திரன், சு.செல்வம் மற்றும் வட சென்னையை சேர்ந்த தோழர்கள் சேகர் (MRF), ஆ.பாரத்குமார், அ.லோகநாதன், கு.பார்த்திபன், மு.சதிஷ், சு.சுரேஷ், சு.முரளி, இரா.அண்ணாதுரை, பு.சந்தோஷ், சி.வீரன் ஆகியோரை 124-A உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பொன்னேரி சிறையிலும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். பாஜக- அதிமுக அரசுகளின் இந்த அடக்குமுறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஒருபக்கம் தமிழ்நாடு நாள் விழாவை அரசு விழா என்று...

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் *தோழர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்க !*  – *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !*

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் *தோழர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்க !* – *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !*

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் *தோழர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்க !* – *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !* தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந்த நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு விழாவாகக் கொண்டாட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது. ஏற்கனவே தமிழ்நாடு அரசும் கடந்த ஆண்டு தனது தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு நாளைக் கொண்டாட முடிவு செய்து அரசாணை வெளியிட்டு இருந்தது. கர்நாடகம், காஷ்மீரம், ஆந்திரம் போன்ற பல மாநிலங்கள் இப்படிப்பட்ட விழாவை தங்கள் மாநிலத்திற்கு என்று தனிக்கொடி அமைத்துக்கொண்டு கொண்டாடுவதைப் போல தமிழ்நாடும் கொண்டாடவேண்டும் என்று விரும்பி அதற்கென தமிழ்நாட்டின் ‘வரைபடத்தைக் கொண்ட ஒரு தற்காலிக கொடியினையும் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அறிமுகம் செய்திருந்தது. மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை சுட்டிக்காட்டியும், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படவும், தங்கள் மாநிலத்தின் சமூகம்,...

தமிழ்நாடு விழா – கொடி

தமிழ் நாட்டுக் கொடி வென்றிருக்கிறது ! பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கிய தமிழ் நாட்டுக் கொடியை ஒட்டுமொத்த தமிழர்களும் அங்கீகரிப்பதற்கு முன் மத்திய உளவுத்துறையும், தமிழகக் காவல்துறையும் அங்கீகரித்து இருக்கின்றன. தமிழ்நாட்டுக் கொடி என இக் கொடியை ஏற்றுவது தமிழர்களுக்குத் தன்னுரிமை உணர்வையும், இனப் பற்றையும், ஓர்மையையும் கொடுத்துவிடும் என்று இந்த அரசுகள் அச்சப்படுகின்றன. அதனால் தான் நேற்று 30.10.2020 மாலை வரை அமைதியாக இருந்த தமிழகக் காவல்துறை தனித் தனியாக இரவோடு இரவாக பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள தோழர்களின் வீடுகளுக்கு சென்று ஒவ்வொருவரின் பெயரிலேயே தடை உத்தரவை வழங்கியிருக்கிறது. அதில் அவர்கள் தேசத்துரோகச் சட்டம் ஆன 124 ஏ பாய்ச்சப்படும் என அச்சுறுத்தியும் இருக்கிறார்கள். இதிலிருந்து நாம் நன்கு உணர்ந்து கொள்வது தமிழ் நாட்டுக் கொடியை பெரியாரிய உணர்வாளர்கள், மக்கள் மத்தியில் எளிமையாய் கொண்டு போய் சேர்த்து விடும் வலிமை உடையவர்கள் என்று காவல்துறை நன்கு உணர்ந்திருக்கிறது...

தமிழ்நாடு விழா – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

அனைவருக்கும் வணக்கம். ஒரு சில செய்திகளை உங்கள் அனைவரின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக இவ்வறிக்கையை  எழுதுகிறோம். தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந்த நவம்பர் ஒன்றாம் தேதியை ‘தமிழ்நாடு விழா’வாகக் கொண்டாட வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தீர்மானித்து அதன் அடிப்படையில் அதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு அரசும், கர்நாடகம் போன்ற சில மாநிலங்களில் எழுச்சியோடு கொண்டாடுவது போல தமிழ்நாட்டிலும் கொண்டாட வேண்டும் என்று கருதி அதற்கென்று தமிழ் பண்பாட்டு துறையின் சார்பில்  தமிழ்நாடு விழா நடத்துவதற்காக 10,00, 000 ரூபாய்களை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டிருந்தது. அவ்வரசாணையைக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசுக்கு, மாநில உரிமை பற்றிய சிந்தனையோடு இவ்வாறான ஆணையை பிறப்பித்ததற்கு பாராட்டுகளைத் தெரிவித்திருந்தோம். பாராட்டு தெரிவித்தும், தமிழ்நாடு விழாவை கொண்டாடுவதற்கு ஒரு தற்காலிக கொடியினை உருவாக்கி இருக்கிறோம் என்பதையும், தமிழ்நாடு அரசு ஏதேனும் ஒரு புதிய கொடியினை அறிமுகப்படுத்தினால் அதனை ஏற்று செயல்பட அணியமாய் இருக்கிறோம் என்பதையும்...

மனுசாஸ்திரத்தை தடை செய்ய வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகம் ஆதரவு !

*விடுதலை சிறுத்தைகள்* நாளை (24.10.2020) நடத்தும் *மனுசாஸ்திரத்தை தடை செய்ய வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகம் ஆதரவு !* *கழகத்தோழர்கள்* இந்த ஆர்ப்பாட்டத்தில் *கலந்து கொள்ள* வேண்டுமாய் கழகத் தலைவர் *தோழர் கொளத்தூர் மணி வேண்டுகோள் !* அன்பு தோழர்களுக்கு, வணக்கம். தற்போதைய அரசியல் சூழலில் நாம் முன்னெடுக்க வேண்டிய பல போராட்டங்களுக்கு பாரதிய ஜனதா கட்சிக்காரர்களும், பார்ப்பனிய, பார்ப்பனிய அடிமை இந்துத்துவாதிகளும் வழியமைத்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் *மதிப்பிற்குரிய தோழர் திருமாவளவன்* அவர்கள் மனுசாஸ்திரம் குறித்து ஆற்றிய உரையின் ஒரு பகுதியை வெட்டி உருவி எடுத்து, அதை வைத்துக்கொண்டு கேவலமான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள். மனு சாஸ்திரத்தில் இல்லாத எது ஒன்றையும் அவர் பேசி விடவும் இல்லை.அவர் எவ்வகையிலும் பெண்களை இழிவுபடுத்தி பேசி விடவும் இல்லை.என்றபோதிலும் இந்த ஆணவக் கூட்டம் ஆடை அவிழ்வதும் தெரியாமல் ஆட்டம் போடுகிறார்கள். இந்த ஒரு நல்வாய்ப்பை முன்வைத்து...

ஒருபோதும் பின் வாங்கக் கூடாது – தொல்.திருமாவளவன்

ஒருபோதும் பின் வாங்கக் கூடாது – தொல்.திருமாவளவன் மனுசாஸ்திர எரிப்பு மாநாட்டில் 2013 உரை 1920 களில் தந்தை பெரியார் அவர்களும் எம்.சி. இராஜா போன்றவர்களும், சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த தோழர் கண்ணப்பர் போன்றவர்களும், மனுதர்ம சாஸ்திரத்தை வேண்டிய தேவையை அன்றைக்கு எந்த அடிப்படையில் சொன்னார்களோ, அந்த அடிப்படை இன்னும் அப்படியே இருக்கிற காரணத்தால் மீண்டும் மனுதர்மத்தை எரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. மனுதர்மத்தை எரிப்பதனால் ஜாதி ஒழிந்துவிடுமா? அப்படி எரிப்பதனால் ஒழிந்து விடாது. இங்கே நிலவுகிற இந்த ஜாதிய கட்டமைப்புக்கு ஜாதிய வன்கொடுமைகளுக்கு, எது அடிப்படை என்பதை அடுத்தடுத்த புதிய தலைமுறைகளுக்கு அடையாளம் காட்டுகிற ஒரு போராட்டமாக இந்த போராட்டம் அமையும். மனுதர்மம் என்பது அன்றைய அரசியல் அமைப்பு சட்டம். இந்த நாட்டை மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் அன்றைக்கு அரசர்களுக்குத் தேவையாக இருந்த சட்ட விதிகளாகத் தான் மனுதர்மம் விளங்கியிருக்கிறது. இன்றைய அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியாவை ஆண்டு...

வினா – விடை

வினா – விடை

யானை மீது உட்கார்ந்து யோகா செய்து காட்டிய பதஞ்சலி அதிபர் பாபா ராம்தேவை யானை கீழே தள்ளியது. – செய்தி யானை அப்படி எல்லாம் கீழே தள்ளவில்லை; அதுவும் யோகா பயிற்சி செய்து கொண்டிருந்தது. 2018-19இல் அரசியல் கட்சிகளுக்கு கம்பெனிகள் வழங்கிய மொத்த நன் கொடை ரூ. 876 கோடியில் பா.ஜ.க.வுக்கு கிடைத்தது ரூ.700 கோடி. – செய்தி அப்படியா! 176 கோடி எந்தக் கட்சிக்குப் போனது? உடனே பறிமுதல் செய்ய அமுலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும்! மிருகக் காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டிறைச்சி போடுவதை நிறுத்தக் கோரி அசாமில் பா.ஜ.க.வின் முற்றுகைப் போராட்டம்.           – செய்தி காவிக் கொடிகளோடு காட்டுக்கே போய் புலிகளை முற்றுகையிடுங்கள்; அப்பத்தான் புலிகள் அடங்கும்! இனி எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கவே முடியாது.        – பா.ஜ.க. தலைவர் முருகன் சரி தான். பா.ஜ.க. தலைவர் முருகன், பழனி முருகனாக அவதரித்து தமிழ்நாட்டு மக்களுக்கு...

இணையம் வழியாக கழகத் தோழர்களின் மண விழாக்கள்

இணையம் வழியாக கழகத் தோழர்களின் மண விழாக்கள்

கொரோனா ஊரடங்கில் இணையதளம் வழியாக இரண்டு கழகத் தோழர்களின் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. 01-06-2020, திங்கள் காலை 11:30 மணிக்கு ஹரிஷ்குமார் – ரூபஸ்ரீ ஆகியோரின் இணையேற்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி வரவேற்புரையாற்றினார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். Team Link வாயிலாக இணையேற்பை நடத்தி வைத்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப் புரையாற்றினார். இறுதியாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தென்றல் நன்றி கூறினார். 27.08.2020 அன்று காலை 10 மணியளவில், சென்னை தலைமை அலுவலகத் தில் அருண்குமார்-சிவஜோதி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வு நடை பெற்றது. தென் சென்னை மாவட்ட செய லாளர் உமாபதி தலைமை வகித்தார். பேரா சிரியர் சரஸ்வதி இணை யேற்பை நடத்தி வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர்...

பார்ப்பன தேசிய பத்திரிகைகளால் இருட்டடிக்கப்பட்டார் வ.உ.சி.

பார்ப்பன தேசிய பத்திரிகைகளால் இருட்டடிக்கப்பட்டார் வ.உ.சி.

வரலாற்றுச் சான்றுகளுடன் கொளத்தூர் மணி உரை (3) 05.09.2020 அன்று தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைத்த வ.உ.சி. பிறந்த நாள் இணைய வழி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. இரண்டாம் பகுதி படிக்க 1929 இல் செங்கல்பட்டு முதலாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில் பெரியார் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார்,  வணங்கபடுவதற்கும், வணங்கு பவனுக்கும் இடையில் இடைத்தரகர்களோ, வட மொழியோ தேவையில்லை  என்று ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். அதை ஏற்றுக் கொண்டுதான் வ.உ.சியும்  இலஞ்சம் வாங்காத நீதிபதியிடம் தரகர் வேண்டாமே  என்று பேசுகிறார். அதனால் தான் சைவர்கள் வ.உ.சி யையும் ஒதுக்கினார்கள். சைவர்கள் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு சும்மா இருப்பார்களா அவர்களும் கிளர்ந்தெழுந்து வ.உ.சி யை எதிர்க்கிறார்கள். அதில், முத்தையாப் பிள்ளை என்ற ஒருவர், “பிடிவாதத்தால் கப்பல் விடப் போய் அதனால் கிடைக்கும் தண்டனையினால் பாடம் கற்காதவர், சர்வ வல்லமை மிக்க பிரிட்டிஷாரின் கட்டளையையே மதிக்காதவர், அதேபோலத்தான்...

வ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு – பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்

வ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு – பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்

வரலாற்றுச் சான்றுகளுடன் கொளத்தூர் மணி உரை (2) 05.09.2020 அன்று தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைத்த வ.உ.சி. பிறந்த நாள் இணைய வழி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. முதல் பகுதி படிக்க தமிழக வரலாற்றில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் வீரியம் கொண்டதற்கு சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் ஒரு காரணம். அந்த சேரன்மாதேவி குருகுலத்திற்கு 31 ஏக்கர் நிலத்தைத் தன் சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்தவர் கானாடு காத்தான் வை.சு. சண்முகம். ஆனால் குருகுலத்தில் பார்ப்பனரல்லாதார் குழந்தைகளை பாகுபடுத்தி நடத்துகிறார்கள் என்ற செய்தி தெரிந்தவுடன் கடுமையான எதிர்ப்புகள் கிளம்புகிறது. வரதராஜுலு நாயுடுவும், பெரியாரும் கடுமையாக எதிர்க்கிறார்கள். வைக்கம் போராட்டமும் சேரன்மாதேவிப் போராட்டமும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான கலந்துரை யாடல்களெல்லாம் கானாடுகாத்தான் சண்முகம் இல்லத்தில் தான் தொடந்து நடைபெற்றது.  சுயமரியாதை இயக்கத்தில் இயங்கியவரும்கூட. 1935இல் அவரது மகள் பார்வதி, அவரது திருமண மேடையிலேயே, பெரியாரிடம் நான்...

மதங்களை மறுக்கும் நியுசிலாந்து நாட்டின் மகத்தான சாதனை

மதங்களை மறுக்கும் நியுசிலாந்து நாட்டின் மகத்தான சாதனை

பசிபிக் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு – நியுசிலாந்து. 40 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அந்நாட்டின் பிரதமர் பதவிக்கு நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் ஆர்டன் ஜெசிந்தா என்ற 40 வயது  பெண், இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகில் கொரானாவை கட்டுப்படுத்தி யதில் முதல் இடத்தில் நியுசிலாந்து நாட்டைக் கொண்டு வந்த பெருமைக் குரியவர் ஜெசிந்தா. கொரானாவைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அடுத்த 102 நாட்களில் பொதுத் தேர்தலை அறிவித்தார். 1996ஆம் ஆண்டு முதல் நியுசிலாந்தில் ‘விகிதாச்சார வாக்களிப்பு முறை’ பின்பற்றப் பட்டு வருகிறது. அது முதல் தனிப் பெரும் பான்மை பெற்று எந்தக் கட்சியும் ஆட்சி அமைத்ததில்லை. முதன்முதலாக ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று சாதனை படைத்துள்ளது. வெற்றி குறித்து அவர் முன் வைத்துள்ள கருத்து ஆழ்ந்த சிந்தனைக் குரியது. “நாம் வாழும் இன்றைய உலகம் அணிகளாகப் பிரிந்து நிற்கிறது. அந்தப் போக்கு மேலும் அதிகரித்துக்...

தலையங்கம் ஆளுநரின் “சண்டித்தனம்”

தலையங்கம் ஆளுநரின் “சண்டித்தனம்”

பாஜக ஆட்சியில் ஆளுநர்களாக நியமிக்கப்படும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அனைவருமே பாஜக அல்லாத ஆட்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போடும் சட்ட விரோத செயல்பாடுகளில், கூச்ச நாச்சமின்றி செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டுள்ள இந்தியா சர்வதேச பார்வையில் அவமானப்பட்டுக் கிடக்கிறது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இப்போது பாஜக கூட்டணி கட்சியினராலேயே கடும் கன்டனத்திற்கு உள்ளாகி வருகிறார். நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில், 7.5 விழுக்காடு,  தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஒரு மாதத்திற்கும் மேலாக அதற்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார் ஆளுநர். சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசிப்பதாகக் கூறுகிறார். நீட் தேர்வு முடிவுகளும் வந்து விட்டன. சென்னை உயர்நீதிமன்றம் ஆளுநர் தரப்பு விளக்கத்தைக் கேட்டு அவரது செயலாளருக்கு ‘தாக்கீது’ அனுப்பியுள்ளது. வழக்கை விசாரிக்கும் அமர்வில்...

ஹத்ராஸ் படுகொலை – சூரப்பா எதேச்சாதிகாரத்தைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்கள்

ஹத்ராஸ் படுகொலை – சூரப்பா எதேச்சாதிகாரத்தைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்கள்

உ.பி. ஹத்ராஸ் தலித் பெண் படுகொலை – அண்ணா பல்கலை துணை வேந்தர் எதேச்சாதிகார நடவடிக்கை – பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் இடமாற்றத்தைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட் டங்கள் நடந்தன. இந்திய ஒன்றியத்தில் தரவரிசைப் பட்டியலில் 12 வது இடத்தைப் பெற்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகமாக அண்ணா பல்கலைக் கழகம் ஒளிவீசிக் கொண்டு இருக்கும் நிலையில், இந்தப் பல்கலைக் கழகத்தை உயர்ப் புகழ் நிறுவனமாக ஆக்குவது என்ற பெயரில் மத்திய அரசிடம் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், இதனால் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69ரூ இட ஒதுக்கீடு முறைக்கு வரும் பெரும் ஆபத்தைத் தடுக்கவும் மேலும், ‘‘உயர் புகழ் நிறுவனமாக அண்ணா பல்கலைக் கழகத்தை தரம் உயர்த்த மாநில அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டிய தில்லை” என்று பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம்...

ஆன்மிகத்துக்கே வரியா!

ஆன்மிகத்துக்கே வரியா!

“இதோ பாருங்க சூப்பர் ஸ்டார் இப்படியான வழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து எங்கள் நேரத்தை வீணடிக்கக் கூடாது. இதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டி இருக்கும்” என்று முகத்தில் அடித்துக் கூறிவிட்டது உயர்நீதிமன்றம். (‘நான் அடிச்சா தாங்கமாட்ட வீடு போயி சேர மாட்ட’ என்ற பாடல் நினைவுக்கு வந்தால் அடியேன் அதற்கு பொறுப்பு அல்ல). ‘அப்படியெல்லாம் அபராதம் போட்டுராதீங்க; இதுக்கும் ஒரு கூடுதல் செலவா ? இதோ வழக்கு வாபஸ்’ என்று கூறிவிட்டார் சூப்பர்ஸ்டார். என்ன சார் நிலைமையைப் பாத்தீங்களா ? அரசியலில் ஒரு வாய்ஸ் கொடுத்தால் ‘அப்படியே அதிரும்’, இப்போ சுருதி இறங்கிப் போச்சே என்று கேட்கக் கூடாது. பாவம் அவர் நிலை அப்படி. மண்டபத்திற்கு அவர் சூட்டியது இராகவேந்திரா பெயர். அவர் மிகப் பெரிய மகான் ஆச்சே ! மகான் பெயரை தாங்கியிருக்கும் மண்டபம் இப்படி மாநகராட்சி நோட்டீசுக்கும் நீதிமன்ற எச்சரிக்கைக்கும் உள்ளாகி விட்டதே என்று  மனம் புழுங்குகிறார்கள்...

வினா – விடை

வினா – விடை

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்கும் கட்சிகளே அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற முடியும். – அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி அதோடு நிறுத்திடாதீங்க… எடப்பாடியை முதலமைச்சராக ஏற்கும் வாக்காளர்கள் மட்டுமே இனி தமிழ் நாட்டில் இடம் பெற முடியும்னு ஒரே போடா போட்டுடுங்க! மோடி தனது வெளிநாட்டுப் பயணத்துக்காக வாங்கியுள்ள புதிய விமானத்தின் விலை ரூ.8500 கோடி.               – செய்தி விமானத்துக்குள்ளேயே யோகா நடத்தலாம்; மயிலுக்குத் தீனி போடலாம்; தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தையே கூட்டி மசோதாக்களை விவாதம் இல்லாமல் நிறைவேற்றும்  வசதி எல்லாம் இருக்கும் போலிருக்கு! யாருடன் வேண்டுமானாலும் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் என்று பேசிய பொன். ராதாகிருஷ்ணன், இரண்டே நாளில் முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமி அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி என்று குரலை மாற்றிக் கொண்டார்.                                         – செய்தி எதுக்கு இப்படி மாத்தி மாத்திப் பேசுறீங்க; எங்க கூட்டணி எப்போதுமே அந்தந்த மாநில ஆளுநர்களுடன் தான் என்று ஒரே...

கழக மகளிர் நடத்திய இணைய வழி நிகழ்வுகள்

கழக மகளிர் நடத்திய இணைய வழி நிகழ்வுகள்

பெரியார்-மணியம்மை திருமணம் குறித்த பொய் விமர்சனங்களை முறியடிக்கும் விதமாக,‘சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு’ என்ற பெரியாரின் கூற்றை உறுதியேற்று திரவிடர் விடுதலைக் கழகப் பெண் தோழர்கள் ஜூலை 9ஆம் நாளான  பெரியார்-மணியம்மை திருமண நாளன்று தங்கள் பெரியாரியல் குடும்ப வாழ்வு எந்த அளவிற்கு சுயமரியாதையும், பகுத்தறிவையும் கற்றுத் தருகிறது என்பதனை விளக்கி 4-5 நிமிட காணொளிகளாக பேசி கருஞ்சட்டைப் பெண்கள் முகநூல் குழுவில் பதிவேற்றினர். மணிமொழி – பெங்களூர், இசைமதி – கோவை, சங்கீதா –  மடத்துக்குளம், சுதா – கொளத்தூர், கோகிலா – வனவாசி, வீரக்கண்ணி – மதுரை. ஜோதி – சென்னிமலை, சங்கீதா – திருப்பூர். தேன்மொழி – மேட்டூர், இரண்யா – சேலம். கீதா – மேட்டூர், கவிப்பிரியா – சென்னிமலை ஆகிய தோழர்கள் காணொளிகளில் பேசினர். செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்தநாளையொட்டி 20.09.2020 மாலை 6 மணிக்கு’பெண்கள் மீதான கற்பிதங்களை கட்டுடைப்போம்’ என்ற தலைப்பில்...

கறுப்பர் கூட்டம் மீதான அடக்குமுறை  கருத்துரிமைக்கு எதிரானது: ‘காலச் சுவடு’ கண்டனம்

கறுப்பர் கூட்டம் மீதான அடக்குமுறை கருத்துரிமைக்கு எதிரானது: ‘காலச் சுவடு’ கண்டனம்

கறுப்பர் கூட்டம் மீதான ஒடுக்கு முறைகள் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று ‘காலச் சுவடு’ மாத இதழ் (ஆகஸ்ட்) எழுதிய தலையங்கம். கறுப்பர் கூட்டம் யூட்டியூப்’ இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துகளை வெளி யிட்டதாகவும் கந்தசஷ்டிக் கவசத்தின் வரிகளைத் திரித்துக் கூறியதாகவும் இந்து அமைப்புகள் சிலவும் பாஜகவின் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பால் கனகராஜும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மத்திய குற்றப் புலனாய்வு சைபர் க்ரைம் போலீசார் அய்ந்து பிரிவுகளின் கீழ் கறுப்பர் கூட்டம் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதன் அலுவலகமும், ஸ்டுடியோவும் முடக்கப்பட்டுள்ளன. செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். நிகழ்ச்சியை வழங்கிய நாத்திகன் என்ற சுரேந்தரும் சரண் அடைந்திருக்கிறார். கறுப்பர் கூட்டம் அலைவரிசையின் அனைத்துக் காணொளிகளும் தற்போது நீக்கப்பட்டிருக்கின்றன. கறுப்பர் கூட்டம் மீது தொடுக்கப் பட்டுள்ள புகார்களைக் கருத்துச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் ஆகிய வற்றை முடக்கும் நோக்காகவே கருத வேண்டியிருக்கிறது....

பா.ஜ.க. ஊது குழல் – ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்தும் கோஸ்வாமி நடத்திய ‘ரேட்டிங்’ மோசடி

பா.ஜ.க. ஊது குழல் – ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்தும் கோஸ்வாமி நடத்திய ‘ரேட்டிங்’ மோசடி

இந்துத்துவா பேர்வழியும், ‘ரிபப்ளிக் தொலைக்காட்சி’ முதலாளியுமான பார்ப்பன அர்னாப் கோஸ்வாமி, தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளி எனப்படும் டிஆர்பி மதிப்பை அதிகரித்துக் காட்ட இலஞ்ச முறைகேட்டில் ஈடுபட்டது அம்பல மாகி இருக்கிறது. குறிப்பாக, பொதுமக்களுக்கு லஞ்சம் கொடுத்து, அர்னாப் கோஸ்வாமி தனது டிவி நிகழ்ச்சிகளை பார்க்கச் செய்துள்ளதாக மும்பை காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. எந்தெந்த டிவி சேனல்களை, மக்கள் அதிகம் பார்க்கிறார்கள் என்பதன் அடிப்படையில் டிவி சேனல்களுக்கான செல்வாக்கு (டிஆர்பி) கணக்கிடப்படுகிறது. இதற்கேற்பவேவிளம்பர வருவாய் உள்ளிட்டவையும் கிடைக்கும் என்பதால் டிஆர்பி ரேட்டை அதிகரிக்க டிவி சேனல்கள் பல்வேறு யுக்திகளை கையாள்வது உண்டு. அந்தவகையில், அர்னாப் கோஸ்வாமியின் தலைமையில் இயங்கும் ரிபப்ளிக் தொலைக் காட்சியால், பக்த் மராத்தி மற்றும் பாக்ஸ் சினிமா ஆகியமராத்தி சேனல்களை மட்டுமே பார்க்க பொதுமக்களுக்கு ‘ஹன்சா’ என்ற நிறுவனம் மூலம் லஞ்சமாக பணம் அளிக்கப் பட்டுள்ளது.அதாவது பணத்தை பெற்றவர்கள் எந்நேரமும் தொலைக்காட்சியை ஆன்செய்து, அதில் ரிபப்ளிக், பக்த் மராத்தி, பாக்ஸ்...

தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு காவல்துறையில் பெரியாரிஸ்டுகளாக இருப்பது குற்றமா?

தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு காவல்துறையில் பெரியாரிஸ்டுகளாக இருப்பது குற்றமா?

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 காவலர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியில் அவர்கள் கருப்புச் சட்டை அணிந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சம்பவம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடலுர் மாவட்டம் கடலூர் போக்குவரத்து முதல்நிலைக் காவலர் எஸ்.ரஞ்சித், கடலூர் புதுநகர் காவல் நிலையக் காவலர் டி.ரங்கராஜன் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையக் காவலர் ஜி.அசோக் ஆகியோர் கருப்புச் சட்டை அணிந்து அண்மையில் கடலூரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் தங்கள் நண்பர்கள் குழுவில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் 3 காவலர்களையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்து கடந்த 6-ம் தேதி உத்தரவு பிறப்பித் துள்ளார். இதுகுறித்து சக காவலர்கள் மத்தியில் பல்வேறு யூகங்கள் பரிமாறப்படுவதோடு விவாதங் களும் நடைபெற்று வருகின்றன. 3 பேரையும் பணியிட மாற்றம்...

தேசிய சட்டக் கல்லூரிகளில் ‘ஓபிசி’ ஒதுக்கீடு மறுப்பு

தேசிய சட்டக் கல்லூரிகளில் ‘ஓபிசி’ ஒதுக்கீடு மறுப்பு

தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் 2020-21ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போத்தியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2006ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டுவிட்டது. பல்கலைக் கழக மான்யக் குழு, இதை துணை வேந்தர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய நிலையிலும் 13 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் அதை மீறி செயல் பட்டுள்ளன. ஏற்கனவே மருத்துவ உயர் படிப்புக்கான ‘அகில இந்திய தொகுப்பில்’ பிற்படுத்தப் பட்டோர் இடஒதுக்கீட்டை மறுத்தார்கள். இப்போது சட்டப் படிப்பிலும் கைவைத்து விட்டார்கள். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்துக்கு சட்ட அங்கீகாரம் நாங்கள் தான் கொடுத்தாம் என்று கூறும் பா.ஜ.க.வினர் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்? பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு களில் அலட்சியம் காட்டும் நடுவண்...

தலையங்கம் தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்

தலையங்கம் தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்

கிராமக் கட்டமைப்புகளில் சட்டங்களின் ஆட்சி நடப்பதில்லை. ஜாதியமே தனது அதிகாரத்தைக் கொடூரமாகத் திணித்து வருகிறது. தமிழ்நாடும் இதில் விதிவிலக்கு அல்ல. ஒப்பீட்டளவில் தமிழகத்தின் பெருமை பேசலாமே தவிர, இதை ‘கள்ள மவுனத்துடன்’ கடந்து போக முயற்சிக்கக் கூடாது, எதிர்வினைகளை முன்னெடுக்க வேண்டும். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவியாக தேர்வு செய்யப்பட்ட தலித் சமூகத்தைச் சார்ந்த ராஜேஸ்வரி சரவண குமார் என்ற பெண், பஞ்சாயத்து ஜாதிவெறி துணைத் தலைவரால், தரையில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராடசி மன்ற தலித் சமூக பெண் தலைவர், ‘சுதந்திர நாளில்’ தேசியக் கொடியை ஏற்ற ஆதிக்க ஜாதி வெறியர்களால் தடுக்கப்பட்டுள்ளார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு எதிரான இந்த ‘தீண்டாமை’யை அரசு நிர்வாகத்துக்குக் கொண்டு செல்லத் தவறிய ஊராட்சி மன்ற செயலாளராக இருந்த பெண், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் டுள்ளார். இவை...

பெரியார் சிலைக்கு கூண்டு போடாதே: சென்னை மாவட்டக் கழகம் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலைக்கு கூண்டு போடாதே: சென்னை மாவட்டக் கழகம் ஆர்ப்பாட்டம்

கிண்டி கத்திப்பாரா அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாநகராட்சி சார்பில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. பெரியாரின் சிலைக்கு கூண்டு அமைக்கப்பட்டதை அகற்றக்கூறி காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடந்தது. காவல்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், 07.10.2020 அன்று  மாலை 3 மணியளவில் கிண்டி கத்திப்பாரா பெரியார் சிலை அருகில் திராவிடர் விடுதலைக் கழகம் தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட தலைவர் வேழவேந்தன், வழக்கறிஞர் துரை அருண், வடசென்னை மாவட்ட தலைவர் ஏசுகுமார், தென்சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் தினேஷ் மற்றும் மாவட்டக் கழகத் தோழர்கள் 50 பேர் பங்கேற்றேனர். மற்றும் சென்னை கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர். வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இன்டியா அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பெரியாரின் சிலைக்கு அமைக்கப்பட்டுள்ள கூண்டு அகற்றப்படும்...

ஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்

ஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்

இந்தி, சமஸ்கிருத திணிப்புகளை ஒவ்வொரு நாளும் மோடி ஆட்சி அரங்கேற்றி வருகிறது. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன்னிடம் விமான நிலையத்தில் இந்தியில் பேசிய பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரிடம், தனக்கு இந்தி தெரியாது என்று கூறியவுடன், நீங்கள் இந்தியர் தானா என்று கேட்டார் அந்த அதிகாரி. ‘ஆயுஷ்’ மருத்துவ அமைச்சகம் நடத்திய ஒரு இணைய கருத்தரங்கில் அந்தத் துறையின் செயலாளர் இந்தி மொழியில் பேசினார். தென்னாட்டிலிருந்து பங்கேற்ற பிரதிநிதிகள் தங்களுக்கு இந்தி தெரியாது; நீங்கள் பேசுவது புரியவில்லை என்றவுடன், தனக்கு இந்தி மட்டும்தான் தெரியும்; புரியாதவர்கள் வெளியேறுங்கள் என்று திமிருடன் பேசினார் அந்த அதிகாரி. காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி மோடி ஆட்சி இணையம் வழியாக தமிழ்நாட்டில் மாணவர் மாணவிகளுக்கு நடத்திய புதிர் போட்டியை, இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தி தமிழை புறக்கணித்தனர். அரியலூர் மாவட்டத்தில் தேசியமய வங்கியின் நிர்வாகி உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டு வந்த ஓய்வு பெற்ற...

‘இப்பப் பாரு… நான் எப்படி ஓடுறேன்னு…’

‘இப்பப் பாரு… நான் எப்படி ஓடுறேன்னு…’

வீரம் பேசி விட்டு தலை தெறிக்க ஓட்டம் பிடிப்பதற்குக்கூட ஒரு ‘வீரம்’ வேண்டும்; “அடிச்சிட்டல்ல; இப்ப… நான் எப்படி வேகமாக ஓடுறேன்னு மட்டும் பாரு…” என்று வடிவேலு ஒரு படத்தில் வீரத்துடன் கூறுவார். அப்போது வடிவேலு எடுத்த ஓட்டம் கூட – “சும்மா… சாதா ரகம் தான் இப்போது நம்ம பா.ஜ.க. ‘ஜீ’க்கள் எடுக்கும் ஓட்டம் இருக்கே… அப்பப்பா… ‘இதை தலைதெறிக்க’ ஓடும் ஓட்டம் என்றும் கூறலாம். கடந்த வாரம் தான் பொன். ராதா கிருஷ்ணன், ‘நானும் அரசியலில்தான் இருக்கேன்’ என்று  அடையாளப்படுத்த, ஒரு திரியைக் கொளுத்திப் போட்டார். “நாங்கள் யாருடன் கூட்டணி வைப்போம் என்பதையெல்லாம் இப்ப சொல்ல முடியாது; அது தி.மு.க.வாகக்கூட இருக்கலாம்” என்றார். அவ்வளவுதான்; “பா.ஜ.க. – தி.மு.க. கூட்டணியா” என்று தொலைக்காட்சிகள் ‘அரட்டை கச்சேரி’களை (அதற்கு விவாதம் என்றும் பொருள் கூறலாம்) நடத்தி முடித்து விட்டன. கூட்டணியில் பா.ஜ.க.வுக்காக 60 இடங்களைப் பெறுவோம் என்றார், ஒரு ‘ஜி’;...

இணையம் வழியாக கழகத்தின் மாவட்ட கலந்துரையாடல்கள்

இணையம் வழியாக கழகத்தின் மாவட்ட கலந்துரையாடல்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத சூழ்நிலையால், தலைமைக் குழு மற்றும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் ‘Team Link’ வாயிலாகவே நடைபெற்றது.  30.06.2020 அன்று காலை 10:30 மணியளவில் தலைமைக் குழு நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்,  12.07.2020 –  ஈரோடு தெற்கு மாவட்டம், 14.07.2020 –   சேலம் கிழக்கு மற்றும் சேலம் மேற்கு மாவட்டங்கள், 19.07.2020 –  திருப்பூர் மற்றும் கோவை, 21.07.2020 –  தர்மபுரி மற்றும் கிருட்டிணகிரி, 23.07.2020 –  வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, 26.07.2020 –  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், 28.07.2020 –   திருச்சி, பெரம்பலூர், அரியலூர், 29.07.2020 –  தஞ்சாவூர், நாகை, 30.07.202 –  மதுரை, சிவகங்கை மாவட்டங்கள், 31.07.2020 –  நாமக்கல், ஈரோடு வடக்கு மாவட்டம், 02.08.2020 –   தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி, 09.08.2020 –  தென் சென்னை, வடசென்னை ஆகிய தேதிகளில் கழகத் தலைவர்,...

பாண்டேக்களே, பதில் உண்டா?

பாண்டேக்களே, பதில் உண்டா?

சங்கிகளின் கழிசடை கருத்துக்களை சுமந்து கொண்டு கூவிக் கூவி விற்பனை செய்யும் ரங்கராஜ் பாண்டே என்ற பேர் வழி, ‘ஆதன் தமிழ்’ என்ற ‘யு-டியூப்’புக்கு அளித்த பேட்டியில் மனுதர்மம் இப்போது எங்கே இருக்கிறது! அதை எல்லாம் தூக்கி வீசியாச்சு என்று கூறியிருக்கிறார். அப்படியானால் ஒரு கேள்வி! பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வர்ணப் பிரிவுகளை மனு சாஸ்திரம் கூறுகிறது. ‘பிராமண’ என்ற வர்ணத்தை மட்டும் இப்போதும் மனுதர்ம அடிப்படையில் அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மாக்கள் தங்களை  அடையாளப்படுத்திக் கொண்டு காயத்ரி மந்திரம் ஓதி, அதன் ‘கல்வெட்டு நினைவு சின்னம்’ போல் பூணூலை மாட்டிக் கொண்டு திரிவது ஏன்? மனுதர்மத்தை உயிருடன் வைத்திருப்பது தானே இதன் நோக்கம்? வேத மந்திரம் ஓதுதல், சாஸ்திர சடங்குகளை நிகழ்த்துதல், திருமணம், கருமாதி மந்திரங்களை உச்சரித்தல், கர்ப்பகிரகம் வரை நுழைந்து அர்ச்சனை செய்தல், கும்பாபிஷேகம் செய்தல், சிற்பி வடித்த கல்லுக்குள் வேத மந்திரத்தை ஓதி ‘கடவுளாக்குதல்’ போன்ற...

கழகக் களப் பணியாளர் தமிழரசு முடிவெய்தினார் நெகிழ்ச்சியுடன் நடந்த படத்திறப்பு

கழகக் களப் பணியாளர் தமிழரசு முடிவெய்தினார் நெகிழ்ச்சியுடன் நடந்த படத்திறப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயல்வீரர், பெரியார் தொண்டர், கழகக் களப் பணியாளர் கோ. தமிழரசு (44)  11.06.2020  அன்று  நள்ளிரவு உடல்நலக் குறைவால் முடிவெய்தினார். தோழர் தமிழரசு படத்திறப்பு நிகழ்வு சென்னை தலைமை அலுவலகத்தில் 17.09.2020 காலை 10 மணியளவில் நடை பெற்றது. நிகழ்விற்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை வகித்தார். தோழர்கள் சி. இலட் சுமணன், தா. சூர்யா, கோ. வீரமுத்து, தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் க.சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தோழர் தமிழரசுவின் இயக்க உணர்வையும், தோழர்களுக்கு தாமாக முன் வந்து உதவிடும் பண்பையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர். கருப்பு பிரதிகள் நீலகண்டன், ‘விரட்டு’ ஆனந்த், தலைமைக்குழு உறுப் பினர் அய்யனார் ஆகியோர் தமிழரசு அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் படத்தைத் திறந்து வைத்து  உரை யாற்றினார். மாவட்டத் தலைவர் ம.வேழவேந்தன் நன்றி...

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் இணைய வழி கருத்தரங்குகள் – நூல் வாசிப்பு நிகழ்வுகள் இளைய தலைமுறையின் எழுச்சி

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் இணைய வழி கருத்தரங்குகள் – நூல் வாசிப்பு நிகழ்வுகள் இளைய தலைமுறையின் எழுச்சி

கொரானா ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு மாணவர் கழக முகநூல் தளத்தில் மாணவர்கள், தோழர்கள் புத்தக வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், அதனை ஊக்குவிக்கும் வகையிலும் ‘நூல் அறிமுகம்’ என்னும் நிகழ்வை நடத்தினர். ஒரு நூலின் கருத்தினை காணொளியில் பேசி தொடர்ச்சியாக பதிவு செய்து வந்தனர். தோழர்கள் திருப்பூர் தேன்மொழி, திருப்பூர் பிரசாந்த்,  கொளத்தூர் கனலி, மேட்டூர் மதிவதனி, மேட்டூர் அறிவுமதி, திருப்பூர் கனல்மதி, திருப்பூர் தென்றல், திருப்பூர் சந்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர்.  மேலும் பெரியாரிய  கருத்துக்களை பாடல் களாகப் பாடியும், வாசகங்களாக பேசியும் சமூக வலைதளத்தில் குழந்தைகளும் தோழர்களும் பதிவு செய்து வந்தனர்.  ஜூன் 25ஆம் தேதி  சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் 89ஆவது பிறந்தநாளில் அவரின் சாதனைகளைப் போற்றும் வகையில் தொடர் காணொளியிலும் தோழர்கள் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்தனர். தோழர்கள் மதிவதனி, ரம்யா, பிரசாந்த், கனலி, தேன்மொழி, விஷ்ணு, வைத்தீஸ்வரி, கனல்மதி, அறிவுமதி, சந்தோஷ் ஆகியோர் காணொளியில் பேசினர். கல்வி...

வாசகர்களுக்கு

வாசகர்களுக்கு

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 19, 2020-க்குப் பிறகு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளிவர இயலவில்லை. 8.10.2020 முதல் மீண்டும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தனது பயணத்தைத் தொடங்குகிறது.                         – ஆசிரியர்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது. வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது. பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம்...

பரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி

பரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி

கான்ஷிராம் உருவாக்கிய பகுஜன் சமாஜ் கட்சிக்கு அவரது வாரிசாக தலைவராகியிருக்கும் மாயாவதி, வாக்கு வங்கி அரசியலுக்காக கான்ஷிராம் கொள்கைகளையே குழி தோண்டி புதைத்து வருகிறார். சங் பரிவாரங்கள் இராமன் கோயில் கட்டும் இயக்கத்தைத் தொடங்கியபோது கான்ஷிராம் அதற்கு எதிர்நிலைப்பாடு ஒன்றை எடுத்தார். சம்பூகன், ஏகலைவன் போன்ற விளிம்பு நிலை புராண நாயகர்களை வெகுமக்களின் அடையாளமாக்கி இயக்கம் நடத்தினார். இப்போது மாயாவதி, இராமன் கோயில் கட்டும் கட்சிகளுக்கு மாற்றாக, பார்ப்பன அவதாரமாகப் பேசப்படும் ‘பரசுராமனை’ தலையில் தூக்கி சுமக்கிறார். ஷத்திரியர்களை ஒழிப்பதற்காகவே பார்ப்பன பரசுராமன் அவதாரம் எடுத்ததாகவும் தனது கோடரியால் சத்திரியர்களை ‘பூண்டோடு’ ஒழித்ததாகவும் புராணங்கள் கதை விடுகின்றன. மாயாவதி 70 அடி உயரத்தில் அந்த பரசுராமனுக்கு சிலை வைக்கப் போவதாக அறிவித்துள்ளார். முலாயம் சிங்கின் சமாஜ் வாடி கட்சியும் தன் பங்கிற்கு மாவட்டந்தோறும் பரசுராமன் சிலைகளை வைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அதற்குப் போட்டியாக மாயாவதி வெளியிட்ட அறிவிப்பு இது? கான்ஷிராம் –...

வரலாற்றுச் சான்றுகளுடன் கொளத்தூர் மணி உரை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் – வ.உ.சிதம்பரனார்

வரலாற்றுச் சான்றுகளுடன் கொளத்தூர் மணி உரை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் – வ.உ.சிதம்பரனார்

05.09.2020 அன்று தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைத்த வ.உ.சி. பிறந்த நாள் இணைய வழி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. முதல் பகுதி நாம் தமிழ்ச் சமூகத்திற்கு நினைவூட்ட வேண்டிய ஒரு பெரும் தலைவரைப் பற்றி அவருடைய பன்முகச் செயல்பாடுகளைப் பற்றி எடுத்துரைப்பதற்கான ஒரு வாய்ப்பாக நான் இதைப் பார்க்கிறேன். அவர் தொடக்க காலத்தில் விடுதலை வீரராக, குறிப்பாக திலகரோடு சேர்ந்து பணியாற்றிய தீவிரவாத பிரிவைச் சார்ந்தவராக வாழ்க்கையைத் தொடங்கி சிறைபட்டதை, விடுதலைக்குப் பின்னர் நடந்த மாற்றங்களை பலரும் பல கோணங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். நான் ஒரு பெரியார் இயக்கத் தோழன் என்ற முறையில் பெரியார் இயக்கத்தோடும், சுயமரியாதை இயக்கத்தோடும் அவர் கொண்டிருந்த தொடர்புகளைப் பற்றி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியாவில் நடைபெற்ற முதல் தொழிற்சங்க போராட்டமானாலும், அரசியல் ரீதியாக நடந்த முதல் வேலை நிறுத்தப் போராட்ட மானாலும் அதில் குறிப்பிடத்தக்க...

பா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்

பா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்

தமிழக பா.ஜ.க.வில் என்ன நடக்கிறது? தலித் சமூகத்தைச் சார்ந்த அக்கட்சித் தலைவர் முருகனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த துணைத் தலைவர் அண்ணாமலை என்ற முன்னாள் அய்.பி.எஸ். அதிகாரியும், “பெரியார் சமூக சீர்திருத்தவாதி; சமூக நீதிக்கு பாடுபட்டவர்; அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறோம். பெரியாரின் இந்துமத எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு கொள்கைகளையே எதிர்க்கிறோம்” என்று பேட்டிகளில் கூற, அந்த முகாமில் உள்ள மனுவாத பார்ப்பனர்களுக்கு ஆத்திரம் பீறிட்டுக் கிளம்பி விட்டது. நாராயணன் திருப்பதி, கோலாகல சீனிவாஸ், ரங்கராஜ் பாண்டே போன்ற பார்ப்பனர்கள், பெரியாரைப் பேசினால் பா.ஜ.க. ஓட்டு வங்கி ஒழிந்து விடும்; ஆர்.எஸ்.எஸ். பாரம்பர்யம் வேறு; பெரியார் பாரம்பர்யம் வேறு; பெரியார் தனிநாடு கேட்டவர் என்றெல்லாம் வெளிப்படையாக கட்சித் தலைவர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டில் பெரியார் போன்ற தலைவர்களையெல்லாம் எதிர்த்துக் கொண்டு பா.ஜ.க.வை வளர்க்க முடியாது என்று டெல்லியில் கட்சி மேலிடம் கருதுவதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு செய்தி...

தலையங்கம் ‘ஹத்ராசு’ம் அயோத்தியும்

தலையங்கம் ‘ஹத்ராசு’ம் அயோத்தியும்

உ.பி. ஹத்ராஸ் மாவட்டம் இப்போது நாடு முழுவதும் உச்சரிக்கப்படும் பெயராகி விட்டது. அயோத்தியில் ‘இராமனு’க்கு கோயில் கட்டும் வேலையும் தீவிரமாக நடக்கிறது. ‘ஹத்ராசில்’ 18 வயது தலித் பெண், உயர் ஜாதி தாக்கூர்  வெறியர்களால் கடத்தப்பட்டு கொடூரமான சித்திரவதை, பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிரிழந்து விட்டார். காவல்துறை பெற்றோர்களுக்கு பெண்ணின் சடலத்தைக் காட்டாமலேயே நள்ளிரவில் எரியூட்டும் வேலையை முடித்ததோடு மாவட்ட ஆட்சித் தலைவர் பெண்ணின் பெற்றோர்களை மிரட்டியுள்ளார். வீடியோ ஆதாரங்கள் வெளி வந்திருக்கின்றன. ‘எங்கள் மகளை எவரும் வல்லுறவு செய்யவில்லை’ என்று ஒப்புதல் வாக்குமூலம் தர, பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார். நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு ஆளும் பா.ஜ.க.விலிருந்தே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதை சான்றாகக் கூறலாம். பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜ்வீர் தைலர், “இரவோடு இரவாக உடலை எரியூட்ட வேண்டாம் என்று மன்றாடினேன்; மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்கவில்லை. ஒரு எம்.பி.யாக இந்தக் கொடுமைக்கு வெட்கப்படுகின்றேன். நீதி கிடைக்கவில்லையெனில் எம்.பி. பதவியையும் துறந்து...

கொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை 80 இணைய வழி கருத்தரங்குகள்

கொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை 80 இணைய வழி கருத்தரங்குகள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இணையக் கருத்தரங்கங்கள் ‘Team Link’ மற்றும் முகநூல் வழியாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. 01.04.2020 அன்று ‘Team Link’ வழியாக தொடங்கப்பட்ட கருத்தரங்கங்கள் 31.05.2020 அன்று வரை நடைபெற்ற கருத்தரங்கம் தினமும் காலை 11:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. ‘தோழர் பெரியாரின் சமதர்மம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி – ஏப் 1 அன்றும், ‘இடஒதுக்கீடு சிக்கல்கள்’ என்ற தலைப்பில் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் – ஏப் 2 அன்றும், ‘நாத்திகமும் அறிவியல் மனப்பான்மையும்’ என்ற தலைப்பில் எட்வின் பிரபாகரன் – ஏப் 3 அன்றும்,  ‘மருத்துவத் துறையில் திராவிட இயக்கத்தின் சாதனை’ என்ற தலைப்பில் தமிழ்நாடு மாணவர் கழகம் பிரசாந்த் ஏப் 4 அன்றும்,  ‘கொளுத்துவோம் மனுதர்மத்தை’ என்ற தலைப்பில் – தஞ்சை மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன் ஏப் 5...

“சமூக விரோதிகள்”

“சமூக விரோதிகள்”

‘மாப்பிள்ளை இவருதான்; ஆனா, அவரு போட்டிருக்கிற சட்டை என்னுடையதல்ல” என்று நடிகர் செந்திலை, ரஜினிகாந்த் கலாய்ப்பார். அந்தக் கதை இப்போது நீதிமன்றத் தீர்ப்புகளாகவே வரத் தொடங்கி விட்டன. கரசேவகர்களாக அத்வானி, ஜோஷி என்று 32 பேர் கொண்ட ஒரு கும்பலே அயோத்தியில் கூடியிருந்திருக்கலாம். ஆனால், இவர்கள் இராமன் ‘சத்தியமாக’ மசூதியை இடித்தவர்கள் அல்ல – லக்னோ சிறப்பு நீதிமன்றமே கூறிவிட்டது. இது என்ன புதுக் கதை? அப்படின்னா, மசூதியை இடிச்சது யாரு பாஸ்? அதுவா, அவர்களுக்கு லக்னோ நீதிமன்றம் ஒரு கவுரவப் பட்டத்தையே வழங்கி யிருக்கிறது. ‘சமூக விரோதிகள்’ என்ற நாட்டின் மிக உயர்ந்த பட்டம்! இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக் கணக்கில் இரயில் ஏறி அயோத்திக்கு கடப்பாறை, இரும்புத் தடிகளோடு வந்து சேர்ந்த இராம பக்தர்கள் – சமூக விரோதிகளா?   இராம பக்தர்களை இப்படியா புண்படுத்துவது? என்று ராம பக்தர்கள் கொந்தளிக்க மாட்டார்கள் என்று நாம் நிச்சயம் நம்பலாம். நீதிமன்ற அவமதிப்பு...

சுயமரியாதை வீரர் கோபி வெங்கிடு அவர்கள் முடிவெய்தினார் !*  *திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

சுயமரியாதை வீரர் கோபி வெங்கிடு அவர்கள் முடிவெய்தினார் !* *திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

*சுயமரியாதை வீரர் கோபி வெங்கிடு அவர்கள் முடிவெய்தினார் !* *திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !* கோபி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிநாள் தொண்டரும், அழுத்தமான சுயமரியாதைக்காரருமாகிய மதிப்பிற்குரிய *அண்ணன் கோபி வெங்கிடு அவர்கள் முடிவெய்தினார்* என்ற செய்தி தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றின்மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் வேதனை தரும் ஒன்றாகும். தன்னுடைய நகைச்சுவை நிறைந்த பேச்சுக்களாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையை வெளிப்படுத்தும் உரைகளாலும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்களை இசை தவறாமல் பாடும் ஆற்றலினாலும் திராவிட இயக்கக் கொள்கைகளை தமிழகமெங்கும் பரப்பிய சிறப்பு அவருக்கு உண்டு. தனது சட்டமன்ற உறுப்பினர் பதவிக் காலம் முடிந்த பின்னால் தன்னுடைய சிறிய கடையில் அமர்ந்து வணிகம் செய்யவும் தயங்காத ஒரு மாமனிதர், எளிமையின் அடையாளமான அம் மானமிகு சுயமரியாதைக்காரருக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புகழ் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம். தனது அனைத்து குடும்ப...

விநாயகர்சதுர்த்தி – தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும் தடையை மீறும்இந்து முன்னணி ! தடுத்து நிறுத்த கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி வேண்டுகோள்!

#விநாயகர்_சதுர்த்தி – தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும் #தடையை_மீறும்_இந்து_முன்னணி ! #தடுத்து_நிறுத்த கழகத் தலைவர் தோழர் #கொளத்தூர்_மணி_வேண்டுகோள்! —————————————————– அன்பு தோழர்களுக்கு, வணக்கம். நம் முன் உள்ள ஒரு உடனடிக் கடமையினை சுட்டிக்காட்டவே இந்த அறிக்கையை எழுதலானேன். கடந்த 13.08.2020 அன்று அரசின் செய்தி வெளியீடு 583 இன் வழியாக நாட்டில் நிலவும் கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டும், தடுப்பு நடவடிக்கையாய் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டியும் 22.08.2020 சனிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி எனும் நிகழ்வையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதையோ, விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்துவதையோ, நீர்நிலைகளில் கரைப்பதையோ அனுமதிக்க இயலாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளதோடு, வீடுகளிலேயே இந்நிகழ்வினை நிகழ்த்திக் கொள்ளுமாறு தமிழக அரசு சமூக அக்கறையோடு அறிவித்திருந்தது. ஆனால் அறிவிப்பு வந்தவுடன் அதற்கு எதிர்வினையாக இந்து முன்னணியின் காடேஸ்வரா சுப்பிரமணியம் என்பவர் “நாங்கள் தடை ஆணையை மீறி ஒன்றரை இலட்சம் சிலைகளை...

முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் !

முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் !

முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் ! ___________________________________ அன்பார்ந்த தோழர்களே! வணக்கம். நேற்று (22-7-2020) கோவை மாவட்டம், அன்னூரில் பெரியாரிய இயக்கத் தோழர்களும், ஜனாயக சக்திகளும் இணைந்து முன்னெடுத்த ஒரு போராட்டம், நம்மைப் போன்ற முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்த தோழர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது. என்னதான் நடந்தது? அன்னூருக்கு அருகிலுள்ள நல்லி செட்டிப் பாளையம் எனும் ஊரைச் சேர்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் சண்முகநாதன் என்பவர் மோடி குறித்தும் கந்தசஷ்டிக் கவச சிக்கல் குறித்தும் முகநூலில் பதிவிட்டிருந்தார் என்பதற்காக இந்து அமைப்பினர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடனே, அன்னூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்றினைப் பதிவு செய்து 21.07. 2020 அன்று மாலை அத்தோழரைக் கைது செய்துள்ளனர். அதேவேளையில் பெரியார் குறித்து மிகக்கேவலமாக முகநூலில் பதிவுகளைப் போட்டுள்ள அன்னூர்...

கறுப்பர் கூட்டம் கைது குறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

கறுப்பர் கூட்டம் கைது குறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

கறுப்பர் கூட்டம் கைது குறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை ! கருத்துரிமைக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் ! இந்துத்துவவாதிகள்,கருத்துரிமைக்கு எதிராக தொடர்ந்து நடத்திவரும் ஆபத்தான அராஜகப் போக்கை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் ! திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை ! இந்திய ஒன்றியத்தின் ஆட்சிப் பொறுப்பில் பாஜக அமர்ந்த பின்பு பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவும் ஒரே நோக்கோடு பல்வேறு வகைகளில் மாநில உரிமைகளைப் பறிப்பது, பார்ப்பனரல்லாத மக்களின் கல்வி உரிமை வேலைவாய்ப்புரிமை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டு உரிமை என ஒவ்வொன்றாக பறித்து வருகிறது. அந்தவகையில் மிக முக்கியமாக கருத்துரிமைக்கு எதிராக இந்துத்துவவாதிகளின் கடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய அரசியல் சட்டப் பிரிவு 51A (h) வழியாக அடிப்படை கடமையாகக் கூறியுள்ள அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், ஆய்வு...

பெரியார் சிலை அவமதிப்பு -கழகத் தலைவர் நாளிதழ் பேட்டி

பெரியார் சிலை அவமதிப்பு -கழகத் தலைவர் நாளிதழ் பேட்டி

பெரியார்_சிலை_அவமதிப்பு, #கந்த_சஷ்டி_கவசம் குறித்த சர்ச்சை குறித்து கழகத் தலைவர் #தோழர்_கொளத்தூர்_மணி அவர்கள் 18.07.2020 அன்று நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள #பேட்டி : “தமிழகத்தில் அண்மைக்காலங்களில் திருவள்ளுவர் சிலைக்கு காவி துணி கட்டுவது, பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பத்திரிக்கையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தி பேசுவது, ஹைகோர்ட்டாவது மயிராவது என்று கோர்ட்டை அவமதிப்பது ஆகியவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இவர்கள் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்வதில்லை; செய்தாலும் கைது செய்வதில்லை. ஆனால் கடந்த ஜனவரி மாதம் கந்தசஷ்டி கவசத்தில் எழுதப்பட்டுள்ள வாசகத்தை படித்து வீடியோ பதிவிட்ட வரை ஆறு மாதங்கள் கழித்து தேடிப்பிடித்து கைது செய்கிறார்கள். இதன் நோக்கம்தான் என்ன? நடவடிக்கை எடுத்தால் அனைவர் மீதும் சரிசமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்த சஷ்டியைப் படித்தவர் ஒன்றும் அதில் இல்லாததை படிக்கவில்லையே? அதிலுள்ள ஆபாச வார்த்தைகளை மதம் என்ற பெயரில் மக்கள் மீது திணிக்கப்படுவதைத்...

இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக!

இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக!

18-7-2020 இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக! ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை கொரோனாவின் வருகை. வரலாற்று வளர்ச்சிப் போக்கை விரைவுபடுத்தியுள்ளது. அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டியவர்களாக தமிழ் மக்களாகிய நாமும் உள்ளோம். கொரோனா ஏற்படுத்தும் அரசியல் பொருளியல் சங்கிலித் தொடர் நிகழ்வுகளால் எழப்போகும் போராட்டங்களும் கொரோனா போலவே உலகெங்கும் பரவுவது திண்ணம். மென்மேலும் மக்கள்திரளின் காலமாக எதிர்காலம் விரிகிறது. ஆயினும் அந்த மக்கள்திரளின் கருத்தை அறிவதற்குத் தேர்தல் வழியாக அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பெயராளர்களின் கருத்தையே இன்றைய பன்னாட்டுலக அரசுகள் கோரி நிற்கின்றன. இது அரசியலில் ஒரு குடியாட்சிய மரபாக வளர்ந்து வந்திருக்கக் காண்கிறோம். ஒற்றையாட்சி அரசமைப்புக்கு உட்பட்ட நாடாளுமன்றத்திற்கான இடங்களைப் பிடிப்பதால் இலங்கைத் தீவுக்குள் ஈழத் தமிழர்களுக்கு பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், இலங்கைத் தீவுக்கு வெளியே பன்னாட்டரங்கில் தமிழர்களின் வேணவாக்களை...

நாடார் வரலாறு கறுப்பா? காவியா? – நூல் மதிப்பீட்டு உரை

நாடார் வரலாறு கறுப்பா? காவியா? – நூல் மதிப்பீட்டு உரை

‘#நாடார் வரலாறு கறுப்பா? காவியா?’ என்ற நூலை சமூக வரலாற்றுச் சான்றுகளுடன் எழுதியிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய். தடைகள் எதிர்ப்புகளைக் கடந்து நீதிமன்ற அனுமதி பெற்று வந்திருக்கும் இந்த நூல் நாடார் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களின் சமூக வரலாறுகளை விவரிக்கிறது. இந்திய நிலப்பரப்பில் ஒடுக்கப்பட்டோர் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். இடுப்பில் குடம் வைத்துக் கொள்ளக்கூடாது; நகைகள் அணியக்கூடாது; ஆதிக்கவாதிகள் புதிதாக கோயில் கட்டினால், அதில் ஒடுக்கப்பட்டோர் குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட வேண்டும்; தலைப்பாகை அணியக்கூடாது; மீசை வைத்துக் கொள்ளக்கூடாது; ஓட்டு வீடுகளை கட்ட தடை; கோயிலுக்குள் நுழைய தடை; மார்பை மறைக்கத் தடை என்று இன்னும் எவ்வளவோ கொடுமைகளை ஒடுக்கப்பட்டோர் சந்தித்துள்ளனர். “ஆதிக்கவாதிகள், ஒடுக்கப்பட்டோர்” போன்ற பதங்கள் #துல்லியமில்லாதவை. ஒடுக்கப்பட்டோருள் ஆதிக்கவாதிகளும் உண்டு; ஆதிக்கவாதிகளுள் ஒடுக்கப்பட்டோரும் உண்டு. நாடார்களும் மேலே கண்ட ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகினர்; பிறரை ஒடுக்கவும் செய்தனர். 1931இல் திருவிதாங்கூர் சமஸ்தான ஒடுக்கப்பட்டோர் (Depressed Classes) பட்டியலில் “நாடார்” பெயர் உள்ளது....

ஆனைமலை யில் தி.வி.க. தோழர் சிவா கைது

ஆனைமலை யில் தி.வி.க. தோழர் சிவா கைது

#திவிக_தோழர்_ஆனைமலை_சிவா_கைது தோழர்ஆனைமலை யில் தி.வி.க. தோழர் சிவா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் அவரின் வீட்டின் அருகிலுள்ள கறையான் புற்றில் மக்கள் வழிபாடு செய்வது வழக்கம் அதனை இடித்து விட்டதாக பொய்யான வழக்கு. கொரானாவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்க கூடாது என்று அரசு அறிவித்து இருக்கும் வேலையில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை கண்டு நாம் சொன்னால் தவறாக போய்விடும் என்று காவல்துறை, வருவாய் துறைக்கு தகவல் கொடுத்து உள்ளார். அந்த துறையினரும் அந்த இடத்திற்கு வந்து மக்களை கண்டித்தும் அறிவுரையும் வழங்கி உள்ளனர். கடந்த 10. 7. 2020 அன்று இரவு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மது போதையில் தோழர் சிவா வீட்டின் அருகில் வந்து நின்று கொண்டு காவல்துறைக்கும் ஆர் ஐ .க்கு தகவல் சொன்னவன் யார் என்று எங்களுக்கு தெரியும். தைரியம் இருந்தால் வெளியே வா என்று கடுமையான கெட்ட வார்த்தைகள்...

கருப்பர் கூட்டத்தின் மீது பாஜக கொடுத்த வழக்கு

கருப்பர் கூட்டத்தின் மீது பாஜக கொடுத்த வழக்கு

“கருப்பர் கூட்டத்தின் மீது பாஜக கொடுத்த வழக்கு பற்றி #திராவிடர்_விடுதலைக்_கழகப் #பொதுச்செயலாளர் #விடுதலை_இராசேந்திரன்” “YouTube channel ஒன்றின் மீது, பாஜக காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறது. “இந்த channel ஹிந்து கடவுள்களின் புனிதத்தை கெடுக்கிறது; கடவுள்களுக்கு பாலியல் விளக்கங்களை அளிக்கிறது; இது மதத்தின் பல்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குகிறது” என்று அந்த புகார் கூறுகிறது. தமிழ்நாடு காவல்துறையின் cyber crime, இது குறித்து விசாரித்து, 5 பிரிவுகளின் கீழ், அந்த youtube channel மீது வழக்குகளை பதிவு செய்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஜாதி, மதம், இனம், மொழி சம்மந்தமாக விரோத உணர்வை தூண்டுகின்ற 5 பிரிவுகள் இந்த வழக்குகளாகும். உண்மையில் இந்த youtube channel என்ன செய்திருக்கிறது? ஹிந்து கடவுள்களுக்கான பல்வேறு புராணங்களில், 1. ஹிந்து கடவுள்களின் பிறப்புகள், 2. அவர்களின் அவதார மகிமைகள், 3. சடங்கு ஆச்சாரங்களுக்கு ஹிந்து புராண நூல்களில் கூறப்படுகின்ற விளக்கங்கள் இவற்றை அந்த நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி...

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் இணையவழி கருத்தரங்குகள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் இணையவழி கருத்தரங்குகள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் இணையவழி கருத்தரங்குகள்… – – – – – – – – – – – – – முதல் அமர்வு – – – – – – – – – – – – – சூலை 17, 18, 19 (வெள்ளி, காரி, ஞாயிறு – மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 வரை) கருத்தரங்கம் 1 (சூலை 17) ————————- தலைப்பு: மநு நூலும் வேத புராண சாஸ்திரங்களும் தமிழருக்கு எதிரானவை.. தலைமை: தோழர் கோவை கு. இராமக்கிருட்டிணன் கருத்துரையாளர்கள்: பேராசிரியர் வீ அரசு தோழர் குடந்தை அரசன் தோழர் நிலவழகன் கருத்தரங்கம் 2 (சூலை 18) ————————- தலைப்பு: ஆரியப் பார்ப்பனியம் ஏன் எதிர்க்கப்பட வேண்டியது.. தலைமை: தோழர் வாலாசா வல்லவன் கருத்துரையாளர்கள்: தோழர் இரா.அதியமான் பேராசிரியர் கருணானந்தம் வழக்கறிஞர் அருள்மொழி கருத்தரங்கம் 3...

ஊடகத்துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்! #SaveJournalismfromBrahmanism

ஊடகத்துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்! தமிழ்நாட்டு வரலாற்றில் பல நூற்றாண்டுகால இடைவெளிக்குப் பிறகு பார்ப்பன ஆதிக்கத்தோடு மிகக் கடுமையான போராட்டத்தைத் தொடங்கியவர் தோழர் பெரியார். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர்கழகம் என பல இயக்கங்களின் தலைவராக இயங்கினாலும், அவரது பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரின் தொடக்கம் “குடிஅரசு” எனும் ஊடகம் தான். வடநாடுகளில் பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரைத் தொடங்கிய தோழர் அம்பேத்கரின் தொடக்கமும் “மூக்நாயக்” எனும் ஊடகம் ஏடுதான்.  பார்ப்பனப் பத்திரிகைகளின் நிலைபற்றிய தோழர் அம்பேத்கரின் வரிகள்…. “வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவைப் பற்றிய செய்திகளைப் பார்த்தால், காங்கிரஸ் கட்சி தான் ஒட்டுமொத்த இந்திய மக்களின் பிரதிநிதியாகத் திகழ்கிறது என்று தான் எண்ணுவார்கள். தலித் மக்கள் உட்பட அனைவரின் பிரதிநிதியாக காங்கிரஸ் கட்சியைத்தான் கருதுவார்கள். இதற்கு முக்கியக் காரணம் தலித் மக்களுக்கென்று தனியாக ஒரு ஊடகம் இல்லை. காங்கிரஸின் கருத்துக்களுக்கு மாற்றான உண்மைகளை எழுத பட்டியலின மக்களிடம் பத்திரிகைகள் எதுவுமே...

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார் நூல் ஒரு பார்வை  –   மா.பொழிலன்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார் நூல் ஒரு பார்வை – மா.பொழிலன்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார் நூல் ஒரு பார்வை  –   மா.பொழிலன் மா. பொழிலன்:  pozhilantamizh@gmail.com பாவலரேறு  ஐயா பெருஞ்சித்திரனார்  அவர்களின்  எழுத்தாற்றல், நூலாக்கங்கள் குறித்தெல்லாம் மணிக்கணக்காக, நாள் கணக்காகப் பேசிக் கொண்டிருக்கவும், எழுதிடவும் இயலும். அதே போல் மறு அச்சாக்கம் செய்யப்பெற்று அண்மையில் வெளிவந்துள்ள ஐயா அவர்களின் நான்கு நூல்களுள் செயலும் செயல் திறனும், ஓ…ஓ.. தமிழர்களே!, சாதி ஒழிப்பு  குறித்தெல்லாம் விரிவாக, அறிந்திட ஏராளமான செய்திகள் உள்ளன. இந்நிலையில், ஐயா அவர்கள் ‘பெரியார்’ குறித்து எழுதிய கட்டுரைகள், பாடல்களின் தொகுப்பாகவே இந்நூல் வெளி வந்துள்ளது. அண்மையில் பெரியார்  படத்தைத் தீயிட்டுக் கொளுத்தவும், அவர் படத்தின் மீது சிறுநீர் பெய்து இழிவுபடுத்தியதுமான நிகழ்வுகள் நடைபெற்ற சூழலில் பெரியார் குறித்து அறிய வேண்டுவதும், ஆய்வு செய்ய வேண்டுவதும், இன்றியமையாததாகவே எண்ணுகிறோம். பெரியாரின் படத்தைச் சில நாள்களுக்கு முன்னர் எரித்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்களோ வைதீகக் கருத்துடைய வர்களோ மட்டும் அல்லர்; தமிழ்த்தேசம் தேவை என்பதாகக்...

பெரியார் என்ன பெருங்கேடரா….?  – தென்மொழிச் செல்வன் கொழுமம் ஆதி

பெரியார் என்ன பெருங்கேடரா….? – தென்மொழிச் செல்வன் கொழுமம் ஆதி

பெரியார் என்ன பெருங்கேடரா….?                                                    – தென்மொழிச் செல்வன் கொழுமம் ஆதி கடந்த மார்ச்சுத் திங்களில் சென்னையில் நிகழ்ந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு பாடல்தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். அங்கு நிகழ்வரங்கின் நுழைவாயிலில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நூல்களுள் நாம் வெளியிட்ட தூயதமிழ்ப்பெயர்கள் – நூலினையும் விற்பனைக்கு வைத்திருந்தோம்.  மேற்பார்வைக்கு எம்முடன் வந்த சிறுவன் ஒருவனை அமர்த்தியிருந்தேன்.  அந்தத் தூயதமிழ்ப் பெயர்கள் நூலின் முன்அட்டையில் திருவள்ளுவர் படமும் பின்அட்டையில் பாவாணர், பாவேந்தர், பாவலரேறு படங்களுடன் பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் படமும் அச்சிட்டிருந்தோம்.  அந்த நூலைப் பார்த்த தோழர் ஒருவர், அதிலிருந்த பெரியாரின் படத்தைப் பார்த்து, “இவனைப் போட்டிருப்பதால் தான் இதை வாங்க யோசிக்கிறேன்…” என்றாராம்.  நிகழ்வின் இறுதியில் நாங்கள் புறப்படும்போதுதான் இதை அந்தச் சிறுவன் எங்களிடம்...

திவிக தலைமைக் குழு கூட்டம் 30062020

திவிக தலைமைக் குழு கூட்டம் 30062020

*திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு தீர்மானங்கள் :* திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக்குழுக் கூட்டம் 30.06.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் டீம் லிங்க் செயலி வழியாக நடைபெற்றது. தலைமைக் குழுக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமைக் குழுக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி.குமரன், அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராஜன், அன்பு தனசேகர், சூலூர் பன்னீர்செல்வம், உமாபதி, மடத்துக்குளம் மோகன், அய்யனார், இளையராஜா, காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமைக் குழுக் கூட்டம் காலை 10.30 மணி அளவில் துவங்கி மதியம் 2 30 மணி வரை நடைபெற்றது. கழக அமைப்பின் இணையதள செயல்பாடுகள், கருத்தரங்குகள், கொரோனா பேரிடர் காலத்தில்...