தமிழ்நாடு மாணவர் கழகத்தின் இணைய வழி கருத்தரங்குகள் – நூல் வாசிப்பு நிகழ்வுகள் இளைய தலைமுறையின் எழுச்சி
கொரானா ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு மாணவர் கழக முகநூல் தளத்தில் மாணவர்கள், தோழர்கள் புத்தக வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், அதனை ஊக்குவிக்கும் வகையிலும் ‘நூல் அறிமுகம்’ என்னும் நிகழ்வை நடத்தினர். ஒரு நூலின் கருத்தினை காணொளியில் பேசி தொடர்ச்சியாக பதிவு செய்து வந்தனர்.
தோழர்கள் திருப்பூர் தேன்மொழி, திருப்பூர் பிரசாந்த், கொளத்தூர் கனலி, மேட்டூர் மதிவதனி, மேட்டூர் அறிவுமதி, திருப்பூர் கனல்மதி, திருப்பூர் தென்றல், திருப்பூர் சந்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் பெரியாரிய கருத்துக்களை பாடல் களாகப் பாடியும், வாசகங்களாக பேசியும் சமூக வலைதளத்தில் குழந்தைகளும் தோழர்களும் பதிவு செய்து வந்தனர். ஜூன் 25ஆம் தேதி சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் 89ஆவது பிறந்தநாளில் அவரின் சாதனைகளைப் போற்றும் வகையில் தொடர் காணொளியிலும் தோழர்கள் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்தனர்.
தோழர்கள் மதிவதனி, ரம்யா, பிரசாந்த், கனலி, தேன்மொழி, விஷ்ணு, வைத்தீஸ்வரி, கனல்மதி, அறிவுமதி, சந்தோஷ் ஆகியோர் காணொளியில் பேசினர்.
கல்வி வள்ளல் காமராசரின் பிறந்தநாள் சிறப்புக் கருத்தரங்கம் 15.07.2020 மாலை 6.30 மணிக்கு நடை பெற்றது. மேட்டூர் அருள்மொழி, திருப்பூர் நஜ்முன்னிசா பகுத்தறிவு பாடல்களை பாடினர். தோழர்கள் மதிவதனி, கனலி, விஷ்ணு, சந்தோஷ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார். நிகழ்வை மேட்டூர் இரம்யா ஒருங் கிணைப்பு செய்தார். கலைஞர் நினைவு நாளையொட்டி ‘இழந்து வரும் மாநில சுயாட்சி’ என்ற தலைப்பில் மாணவர் கழகத் தோழர்கள் நான்கு முதல் 5 நிமிட காணொளி உரைகள் பதிவேற்றப் பட்டது.
பெரியாரின் 142ஆவது பிறந்த நாளை யொட்டி, 27.09.2020 மாலை 6 மணிக்கு, ‘திராவிடம் தந்த கல்விக் கொடை! அதை சிதைக்க விடாது நம் பெரியார் படை’ என்ற முழக்கத்தின் அடிப்படையில் கருத்தரங்கம் நடை பெற்றது. மேட்டூர் அருள்மொழி பகுத்தறிவுப் பாடல்களை பாடினார். நுழைவுத் தேர்வுகள் தகுதிக்கா ? தற்கொலைக்கா? என்ற தலைப்பில் மேட்டூர் மதிவதனி, சமத்துவத்தைப் புதைக்கும் தேசிய கல்விக் கொள்கை என்ற தலைப்பில், சேலம் யாழினி, திராவிடத்தின் அடையாளம் மொழிப் போர், என்ற தலைப்பில் திருப்பூர் கனல்மதி, மாணவர்களின் உரிமை காக்கும் மாநிலப்பட்டியலில் கல்வி, என்ற தலைப்பில், பொள்ளாச்சி சபரி ஆகியோர் கருத்துரை வழங்கினர். இறுதியாக கழகப் பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் நிறை வுரை வழங்கினார். கோவை விஷ்ணு நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்தார். நிகழ்வுகள் அனைத்தும் ‘தமிழ்நாடு மாணவர் கழகம்’ முகநூல் பக்கத்தில் நேரலை மற்றும் காணொளிகளாக பதிவேற்றப்பட்டுள்ளது.
பெரியார் முழக்கம் 08102020 இதழ்