சுயமரியாதை வீரர் கோபி வெங்கிடு அவர்கள் முடிவெய்தினார் !* *திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

*சுயமரியாதை வீரர் கோபி வெங்கிடு அவர்கள் முடிவெய்தினார் !*

*திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !*

கோபி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிநாள் தொண்டரும், அழுத்தமான சுயமரியாதைக்காரருமாகிய மதிப்பிற்குரிய *அண்ணன் கோபி வெங்கிடு அவர்கள் முடிவெய்தினார்* என்ற செய்தி தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றின்மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் வேதனை தரும் ஒன்றாகும்.

தன்னுடைய நகைச்சுவை நிறைந்த பேச்சுக்களாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையை வெளிப்படுத்தும் உரைகளாலும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்களை இசை தவறாமல் பாடும் ஆற்றலினாலும் திராவிட இயக்கக் கொள்கைகளை தமிழகமெங்கும் பரப்பிய சிறப்பு அவருக்கு உண்டு. தனது சட்டமன்ற உறுப்பினர் பதவிக் காலம் முடிந்த பின்னால் தன்னுடைய சிறிய கடையில் அமர்ந்து வணிகம் செய்யவும் தயங்காத ஒரு மாமனிதர்,
எளிமையின் அடையாளமான அம் மானமிகு சுயமரியாதைக்காரருக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புகழ் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தனது அனைத்து குடும்ப வாரிசுகளையும் தன்மான பகுத்தறிவு வழியில் உருவாக்கிய அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும்,
இழப்பால் ஓர் அப்பழுக்கற்ற வழிகாட்டியை இழந்து நிற்கிற ஈரோடு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் *திராவிடர் விடுதலைக்கழகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.*

*கொளத்தூர் மணி,*
*தலைவர்,*
*திராவிடர் விடுதலைக் கழகம்*
23.10.2020

You may also like...