Category: Thalamai arikai

கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள் தமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்

கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள் தமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்

தமிழ்நாட்டை உ.பி., ம.பி., இராஜஸ்தான் போன்ற மற்றொரு மாநிலமாக்க பா.ஜ.க. சூழ்ச்சிகரமான திட்டங்களை தேர்தல் களத்தில் உருவாக்கி வருவதை கழகத் தலைமைக் குழு கவலையுடன் பரிசீலித்தது. உள்ளூர் மட்டத்தில் மக்களை நேரடியாக சந்தித்தும் துண்டறிக்கை வெளியீடுகள் வழியாக கருத்துகளைப் பரப்புவதுமான பரப்புரைத் திட்டங்களை வகுப்பது குறித்தும் தலைமைக்குழு பரிசீலித்தது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக தலைமைக் குழுக்கூட்டம் 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ஈஸ்வரி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர்  கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். இயக்கத்தின் ஏடுகள், போராட்ட திட்டங்கள், அரசியல் நிலவரங்கள், துணை அமைப்புகளின் செயல் பாடுகள், மாவட்ட நிர்வாக அமைப்புகளில மாறுதல்கள், கழகத் தோழர்களை சந்திக்கும் நிகழ்வுகள், சமூக வலைத் தளங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது. 1)    கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் காரணமாக வேறு வழியின்றி இடைநிறுத்தம்...

மண்ணின் மைந்தர்கள் உரிமைகளைப் பறிக்காதே! ஆக. 26-31 வரை கழகத்தின் பரப்புரை 5 முனைகளிலிருந்து தொடங்குகிறது கழகத்தின் தலைமைக் குழு முடிவு

மண்ணின் மைந்தர்கள் உரிமைகளைப் பறிக்காதே! ஆக. 26-31 வரை கழகத்தின் பரப்புரை 5 முனைகளிலிருந்து தொடங்குகிறது கழகத்தின் தலைமைக் குழு முடிவு

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு, ஜூலை 13, 2019 பிற்பகல் 2.30 மணியளவில் மேட்டூரில் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நிகழ்ந்த குழுவின் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, முகநூல் பதிவு பொறுப்பாளர் பரிமள ராசன், இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், சென்னை இரா. உமாபதி, விழுப்புரம் அய்யனார், மடத்துக்குளம் மோகன், மேட்டூர் சக்திவேல், காவலாண்டியூர் ஈசுவரன், சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கழகக் கட்டமைப்பு நிதி வரவு குறித்து நன்கொடையாளர்கள் அளித்த நிதி விவரங்களை தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன் விரிவாக எடுத்துரைத்தார். தலைமைக் கழகக் கட்டிடத்தை மறு சீரமைப்பு...

காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரன்,எச்.ராஜா ஆகியோர் தமிழை அவமதித்ததற்காக திருவள்ளுவர் சிலை முன்பு நின்று மன்னிப்பு கேட்க வேண்டும் ! – கொளத்தூர் மணி அறிவிப்பு

காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரன்,எச்.ராஜா ஆகியோர் தமிழை அவமதித்ததற்காக திருவள்ளுவர் சிலை முன்பு நின்று மன்னிப்பு கேட்க வேண்டும் ! – கொளத்தூர் மணி அறிவிப்பு. இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை ! தமிழை அவமதித்த காஞ்சி விஜயேந்திரனுக்கு கடும் கண்டனம் ! சென்னையில் எச்.ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மா என்பவர் எழுதிய தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவை எச்.ராஜா நடத்தினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நூலை வெளியிட்டார். விழாவின் போது தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். ஆனால் விழாவில் பங்கேற்ற காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது பார்பனத் திமிருடன் எழுந்து நிற்காமல் அமர்ந்தபடியே இருந்தார்.இதனை எச்.ராஜாவும் கண்டும் காணாமல் இருந்து தமிழர்களை அவமதித்துள்ளார். அது போலவே நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்கள் அமர்ந்திருந்த மேடையிலேயே காஞ்சி விஜயேந்திரனுக்கு மட்டும்...

சமூக நீதி சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்கள் திருச்செங்கோடு 12082017

மாநாட்டு தீர்மானங்கள்: இழந்துவரும் உரிமைகளை மீட்போம்! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 12-08-2017 அன்று நடைபெற்ற, சமூகநீதி – சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்… தீர்மானம் : 1 ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு, மதுரை, சேலம் மாவட்டங்களில் காவல் துறையில் தனிப்பிரிவு ஒன்றை, உயர் நீதிமன்ற ஆணையை ஏற்று, தமிழக அரசு நியமித்திருப்பது, காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய தனிப் பிரிவுகள் அமைக்கப்படுவதோடு, அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், இந்த தனிப்பிரிவு காவல் துறையை தீண்டாமை ஒழிப்புப் பிரிவினைப் போல சடங்குத்தனமான பிரிவாக்கிவிடாமல் உண்மையில் செயல்படக் கூடிய அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும் என்றும் திராவிடர் விடுதலைக்...

இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் !  சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம்  கழக தலைமைக் குழுவின் முடிவுகள்

இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் ! சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம் கழக தலைமைக் குழுவின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 2017 ஜூலை 10ஆம் தேதி காலை சென்னை கழகத் தலைமை நிலையத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம், மாலை 7 மணி வரை நீடித்தது. தமிழ்நாட்டில் குறுக்கு வழியில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காலூன்ற துடிக்கும் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். மதவாத சக்திகளின் ஆபத்துகளை முறியடிப்பது குறித்தும் தமிழ்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் பரப்புரை இயக்கங்களை முன்னெடுப் பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாடு மதக்கலவரங்கள் இல்லாத சமூகநீதி கோட்பாடுகளைப் பின்பற்றி ஏனைய மாநிலங் களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருவதை சீர்குலைக்கும் சதிகள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருவதை கவலையுடன் தலைமைக்குழு பரிசீலித்தது. குறிப்பாக கல்வித் துறையில் மோடியின் குறுக்கீடு, தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்கல்விக்கு உருவாக்கி வரும் தடைகள், நீட் தேர்வால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள...

பாஜகவின் மாட்டிறைச்சி தடைச் சட்டம் – கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ! பசுவதை தடைச்சட்டம் இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்படவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மோடி ஆட்சிக்கு பிறப்பித்த ஆணையை அப்படியே ஏற்று மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமலேயே மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை வழியாக சந்தைகளில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை போட்டு விட்டது. பசு மாடு மட்டுமல்லகாளை,எருமை,கன்றுக்குட்டி, கறைவை ஒட்டகம் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் இறைச்சிக்காக இனி சந்தைகளில் இந்தியா முழுவதும் விற்க்கக்கூடாதாம். சந்தைகளில் கால்நடைகளை விற்றால் விவசாயிகள் இறைச்சிக்காக விற்கவில்லை என்று எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி தரவேண்டுமாம். வாங்குவோர் விற்போர் இருவரும் நிலத்தின் உரிமைப்பத்திரம்,விவசாயி என்பதற்கான அடையாள சான்றுபௌள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.அப்படி வாங்கிய கால்நடைகளையும் அடுத்த 6 மாதத்திற்கு வேறு எவருக்கும் விற்கக்கூடாதாம்.இப்படி கூறுகிறது மோடி ஆட்சியின் சட்டம். இனி ஒவ்வொரு வீட்டிலும் இறைச்சி சமைத்தால் சமைத்த உணவை கண்காணிப்புக்குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தி சமைக்கப்பட்டது மாட்டிறைச்சி அல்ல என்று உள்ளூர்...

ஜூன் 25இல் மேட்டூரில் கழக செயலவை கூடுகிறது

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு 12.6.2016 காலை 10 மணியளவில் சென்னையில் கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் முன்னிலையில் கூடியது. கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 24.1.2016 அன்று திருச்சியில் கூடிய கழகச் செயலவை கூட்டத்துக்குப் பிறகு கழக அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் கழகம் அறிவித்த போராட்டங்களை நடத்திய – நடத்தாத கழக அமைப்புகள் குறித்தும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா சேர்ப்பு பணிகளில் கழகத்தினர் செயல்பாடுகள் குறித்தும் அடுத்த செயல் திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஜூன் 25ஆம் தேதி மேட்டூரில் கழக செயலவைக் கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

செயல்படாத தீண்டாமை ஒழிப்பு பிரிவை முற்றுகையிட வாரீர்

செயல்படாத தீண்டாமை ஒழிப்பு பிரிவை முற்றுகையிட வாரீர்

ஜாதி வெறிக்கு எதிராக தொடர்ந்து சமரசமின்றி போராடிவரும் திராவிடர் விடுதலைக் கழகம் களத்தில் பல இன்னல்கள் இழப்புகளை சந்தித்து சிறிதும் தொய்வின்றி தொடர்ந்து துணிவுடன் போராடிவருகிறது. உடுமலையில் நடைபெற்ற ஜாதிவெறிப்படுகொலை தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. இது போன்ற ஜாதிய வன்கொடுமைகளை தடுப்பதற்க்காகவே காவல்துறையில் தீண்டாமை ஒழிப்புப்பிரிவு என்றொரு தனிப்பிரிவு இயங்கிக் கொண்டிருக்கிறது. தனிப் பிரிவாக செயல்படவேண்டி உருவாக்கப்பட்ட இந்த பிரிவு செயல்பாடுகள் இன்றி,தங்கள் கடமைகளை செய்யாமல் கோமா நிலையில் கிடக்கிறது. ஜாதி வெறிப்படுகொலைகளை தடுக்க அரசு எந்த முயற்சிகளையும் எடுக்காத நிலையில் தமிழக அரசின் காவல்துறையில் உள்ள தீண்டாமை ஒழிப்பு பிரிவு அலுவலகங்களை நாளை 16.03.2016 அன்று காலை திராவிடர் விடுதலைக் கழகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறது. சென்னையில் கழக பொதுச்செயலாளர் ”தோழர் விடுதலை ராஜேந்திரன்” தலைமையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள மாநில தீண்டாமை ஒழிப்பு பிரிவு தலைமை அலுவகமும், திருப்பூரில் கழக தலைவர் ”தோழர் கொளத்தூர் மணி”...