கழக மகளிர் நடத்திய இணைய வழி நிகழ்வுகள்
பெரியார்-மணியம்மை திருமணம் குறித்த பொய் விமர்சனங்களை முறியடிக்கும் விதமாக,‘சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு’ என்ற பெரியாரின் கூற்றை உறுதியேற்று திரவிடர் விடுதலைக் கழகப் பெண் தோழர்கள் ஜூலை 9ஆம் நாளான பெரியார்-மணியம்மை திருமண நாளன்று தங்கள் பெரியாரியல் குடும்ப வாழ்வு எந்த அளவிற்கு சுயமரியாதையும், பகுத்தறிவையும் கற்றுத் தருகிறது என்பதனை விளக்கி 4-5 நிமிட காணொளிகளாக பேசி கருஞ்சட்டைப் பெண்கள் முகநூல் குழுவில் பதிவேற்றினர். மணிமொழி – பெங்களூர், இசைமதி – கோவை, சங்கீதா – மடத்துக்குளம், சுதா – கொளத்தூர், கோகிலா – வனவாசி, வீரக்கண்ணி – மதுரை. ஜோதி – சென்னிமலை, சங்கீதா – திருப்பூர். தேன்மொழி – மேட்டூர், இரண்யா – சேலம். கீதா – மேட்டூர், கவிப்பிரியா – சென்னிமலை ஆகிய தோழர்கள் காணொளிகளில் பேசினர்.
செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்தநாளையொட்டி 20.09.2020 மாலை 6 மணிக்கு’பெண்கள் மீதான கற்பிதங்களை கட்டுடைப்போம்’ என்ற தலைப்பில் சிறப்பு இணைய வழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. கோபி மணிமொழி நிகழ்வை ஒருங்கிணைத்தார். இசைமதி – கோவை, சுதா – கொளத்தூர், சிவகாமி – திருப்பூர், மணிமேகலை – ஈரோடு ஆகிய தோழர்கள் கருத்துரை வழங்கினர். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரை வழங்கினார்.
பெரியார் முழக்கம் 15102020 இதழ்