பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள கோயிலில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தைப் பயன்படுத்தக் கோரி செப்.13 இல் கழகம் ஆர்ப்பாட்டம் தலைமை செயற்குழு முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழக தலைமை செயற்குழுக் கூட்டம், செப். 2 ஆம் தேதி பகல் 11 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் சங்க கருத்தரங்க மண்டபத்தில் செய லவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் ரத்தினசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கழகத்தின் அடுத்த செயல் திட்டங்கள், பரப்புரைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

மராட்டியத்தில் மத வெறியர் களால் சுட்டுக் கொல்லப்பட்ட பகுத்தறிவுப் போராளி தபோல்கர் வீரமரணத்துக்கு இரங்கல் தெரி விக்கப்பட்டது.

சென்னை மண்டல திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய நாத்திகர் விழா, மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிக்கு காவல்துறை தடைவிதித்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொ டர்ந்து தெளி வான தீர்ப்பு கிடைக்காத நிலை யில் அதே நாளில் மேல் முறையீடு செய்து விடுமுறை நாள் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கான முயற்சிகளில் இறங்கி அதில் வெற்றி பெற்று தீர்ப்பின் வழியாக பகுத்தறிவுப் பரப்புரை பேரணிக்கு சட்டம் வழங்கிய உரிமையை நிலைநாட்டி, திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு பெருமைச் சேர்த்த மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் மற்றும் கழக வழக்கறிஞர்கள் ஆர். திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோரை பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது.

நவம்பர், டிசம்பர் மாதம் முழுதும் கிராமப் பரப்புரை இயக்கங்களை நடத்த முடிவெடுக்கப்பட்டது. நவம்பர் 15 இல் தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை சேலம் (மேற்கு) மாவட்டத்திலும், நவம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை திருவாரூர் மாவட்டத்திலும், டிசம்பர் முதல் 15 நாட்கள் ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இரண்டாவது 15 நாட்கள் தெற்கு மாவட்டத்திலும், செப்டம்பர் 17 தொடங்கி 25 வரை திண்டுக்கல் மாவட்டத்திலும் கிராமம் கிராம மாக பரப்புரை இயக்கங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. கீழ்க்கண்ட கோரிக்கைகள் பரப்புரையில் முன் வைத்து விளக்கப்பட வேண்டிய கருத்துகளாக வரையறுக்கப்பட்டது.

  • ஜாதி மறுப்பு திருமணங்களை அச்சுறுத்தி, மிரட்டி தடுக்கும் ஜாதி பஞ்சாயத்துகள் அதில் பங்கேற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடிய தனிச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.
  • மகாராஷ்டிரா மாநில அரசு கொண்டு வந்ததைப் போல் தமிழக அரசு மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.
  • தனியார் துறையில் தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
  • ஜாதி மறுப்பு திருமணம் புரிந் தோருக்காக ஜாதியற்றோர் பட்டி யலை உருவாக்கி, அவர்களின் வாரிசுகளுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
  • நாட்டின் பொருளாதார நெருக்கடி களிலிருந்து மீட்க பன்னாட்டு நிறு வனங்கள் பெரு முதலாளிகளுக் கான வரிச் சலுகைகளை ரத்து செய்வதோடு, கோயிலுக்குள் முடங்கிக் கிடக்கும் தங்கத்தையும் பயன்படுத்த வேண்டும்.

– என்ற கோரிக்கைகளை முன் வைத்து பரப்புரை நடத்துவது என முடிவெடுக் கப்பட்டது.

செப்டம்பர் 13 ஆம் நாள் கோயில் களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க பயன்படுத்திட வலி யுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் கழக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத் துவது என முடிவெடுக்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 05092013 இதழ்

You may also like...