சென்னை கல்லூரி நடத்தும் கண்டிக்கத்தக்க கருத்தரங்கு

சென்னையிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை கருத்தரங்கம், நாட்டிய செயல்முறை நிகழ்ச்சி ஒன்றை நடத்தப் போவதாக அறிவிப்பு வெளி வந்துள்ளது. இதற்கான தலைப்பு ‘தேவதாசி மரபும் பரதநாட்டியமும்’ என்ப தாகும். சொர்ணமாலயா என்ற பார்ப்பனப் பெண் இதை நடத்து கிறாராம்! பெண்களை கோயிலுக்கு ‘பொட்டுக் கட்டி’ விடும் தேவதாசி இழிவு, சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டப் பிறகு, அதில் ஏதோ பெருமை மிக்க மரபுகள் இருப்பது போலவும், பரத கலையோடு தேவதாசி முறைக்கு தொடர்புகள் தொடருவது போலவும் கருத்தரங்குகள் நடத்தப்படுவது பச்சைப் பார்ப்பனியப் போக்கையே காட்டுகிறது.

ஒரு சமூகத்துப் பெண்களை இழிவுபடுத்திய முறையை மரபுப் பெருமையாக்கி விவாதிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பார்ப்பனப் பெண்களை நிர்வாண மாக ஓடவிட்டு, அவர்கள் ஓடும் தூரம் வரை நிலத்தை தானமாக வழங்கும் ‘கண்ணாடி மான்யம்’ என்ற முறைகூட இந்த நாட்டில் இருந்தது. அதன் மரபுப் பெருமைக்கு கருத்தரங்கம் நடத்துவார்களா?

‘உடன்கட்டை’ இருந்தது என்பதற் காக அதன் மரபுப் பெருமை பேசுவார்களா? கல்லூரி நிர்வாகம் இதைக் கைவிட வேண்டும்!

பெரியார் முழக்கம் 25072013 இதழ்

 

You may also like...