வினாக்கள்… விடைகள்…
வினா: பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாயாவதி, ‘பிராமணர்கள்’ மாநாடு நடத்தினார்! – செய்தி
விடை: மகிழ்ச்சி; தலித் மக்களுக்காக ‘பிரா மணர்கள்’ எப்போது மாநாடு நடத்தப் போகிறார்கள்?
வினா: சென்னை செங் குன்றத்தில் இலவசமாக வழங்கப்பட வேண்டிய ஆடுகள் நீண்ட தூரம் பயணித்ததால் இறந்து விட்டன. – செய்தி
விடை: ஹெலிகாப்டரில் அழைத்து வந்திருக்கக் கூடாதா?
வினா: இளவரசன் உடல் ‘போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு அது வீடியோ படமாக்கப் பட்டது. – செய்தி
விடை: அதில், ஜாதி அடையாளம் இருந்ததா, டாக்டர்?
வினா: ராஜீவ்-ஜெய வர்த்தனா ஒப்பந்தப்படி தமிழர்களுக்கு வழங்கப் பட்ட உரிமைகளை பறிக்க இலங்கை அரசு முடிவு. – செய்தி
விடை:தமிழர்களின் உரிமை களை மட்டுமா? ஒப்பந்தம் போட்ட இந்தி யாவின் மானத்தையும் சேர்த்துத்தான்!
வினா: தேர்தல் அறிக்கை யில் இலவசங்களை வழங்குவதாக உறுதி யளிப்பது, நேர்மை யான, சுதந்திரமான தேர்தல்கள் நடப்பதை கேள்விக்குரியாக்கிவிடும். – உச்சநீதிமன்றம்
விடை: அப்படியானால், தேர்தல் அறிக்கையில் அறிவிக்காமலே, தொழிலதிபர்களுக்கு கோடி கோடியாக வரி தள்ளு படி செய்வது….?
வினா: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை விற்பது என்பது மத்திய அரசின் முடிவு அல்ல. அது ‘மத்திய பங்கு வாரியம்’ என்ற ‘செபி’ அமைபபு எடுத்த முடிவு. அதைத் தான் செயல்படுத்து கிறோம்! – அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்
விடை : அப்படியா சார்? ‘செபி’ எங்கே சார் இருக்குது? அமெரிக்கா விலா?
பெரியார் முழக்கம் 11072013 இதழ்